Tamil News Today Live: கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று முதல் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தங்கி வேலை செய்து வந்த பிற மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி திரும்பினர். பொதுமுடக்கத்தை முன்னிட்டு சென்னையில் தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
வாகனங்களைப் பயன்படுத்தினால் பறிமுதல், 2 கிமீ தாண்டி செல்லத் தடை: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி
மருத்துவச் சேவை, அவசிய காரியம் தவிர ரயில் நிலையம், விமான நிலையம் செல்வதற்கு மட்டும் ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு அனுமதி உள்ளது. அதைத் தவிர அனுமதி இல்லாமல் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மத்திய, மாநில அரசு மற்ற தனியார் அலுவலகங்களுக்கு 33 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2-வது நாளாக கொரோனா தொற்று எண்ணிக்கை 2000-ஐ கடந்தது. தமிழகத்தில் இந்த மாதம் இதுவரை மட்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30000-ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 49 பேர் பலியாகியுள்ளார்கள். இதில் 40 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மருத்துவ இடங்களில் 69% அடிப்படையில் 50% இடஒதுக்கீடு பெற திமுக போராடும் . திமுகவின் நீண்ட போராட்டத்தால் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஊடுருவ முயற்சித்த சீன ராணுவத்திற்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை, ராணுவ நிலையையும் கைப்பற்றவில்லை.நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத அளவுக்கு பலமாக உள்ளோம் என்று பிரதமர் மோடி, அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் மேலும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 54,449 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 1322 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரேநாளில் 98 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 350 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் இதுவரை 495 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில், அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 3 மாதங்களில் சென்னையில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
வீடு வீடாக வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் மக்கள் தங்களுக்குள்ள அறிகுறிகளை கூற வேண்டும்
மாநகராட்சி நடத்தும் மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
எல்லா மண்டலத்திலும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையர்
சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசி கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் காசியின் நண்பர் டேசன் ஜினோவிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே காசியின் பெற்றோரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் காசியுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்றுடன் காசியின் போலீஸ் காவல் முடிய உள்ள நிலையில் மேலும் காவலை நீட்டிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் உள்ள குறைகளை களைய நிபுணர் குழு பார்வையிட வேண்டும். மருத்துவமனைகளில் அனைத்து வார்டுகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு நாடு முழுவதும் நியாயமான ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கண்ணியமாக கையாளுவதில் உள்ள குறைகளை களைய வேண்டும்"
- கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல்துறை தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
* ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சை மறுத்தால் அவரது குரல் மாதிரியை ஆய்வு செய்ய வேண்டும் - காவல்துறை வாதம்
அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதால் ஜாமீனை ரத்து செய்ய எந்த காரணமும் இல்லை - ஆர்.எஸ். பாரதி வாதம்
* இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததால் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி" - தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு
* உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவு
எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை ஃபோனில் தொடர்புக்கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் திரு @KPAnbalaganoffl அவர்கள் #Covid19 -ல் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற வர வேண்டும்; பொதுவாழ்வில் இருப்பவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) June 19, 2020
பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறர. சீன விவகாரம் குறித்து இன்று மாலை அனைத்து கட்சி தலைவர்களுடன், காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார். அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
சென்னையில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் வீடு உள்ள கிரீன்வேஸ் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உறுதியான நிலையில் அமைச்சர்கள் வீட்டு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வியடைந்துள்ளதாக தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..! ஜம்மு - காஷ்மீர் புல்வாமாவில் மசூதிக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் 2 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 3 பயங்கரவாதிகள் மீஜ் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் காவல்துறை அதிரடி.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக, செய்திகள் பரவின. இந்நிலையில், “எனக்கு கொரோனா இல்லை. நான் மருத்துவமனையிலும் இல்லை. தனிமைப்படுத்தபடவும் இல்லை. எனக்கு காய்ச்சல் சரியாகி விட்டது” என முன்னணி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights