News In Tamil : புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் சிங்கு, டிக்ரி, காஜிப்பூர் பகுதிகளில் 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதை தொடர்ந்து, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. நண்பகல் முதல் மாலை 4 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். இதுதொடர்பாக பட்டாசு ஆலை குத்தகைக்காரர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தனமாரியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐ.பி.எல் தொடரின் 14-வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் நிம்திதா ரயில் நிலையத்தில் நடந்து சென்ற அமைச்சர் ஜாகீர் உசைன் மீது வெடிகுண்டு வீசப்பட்டு பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் கொல்கத்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
மதுரையில் நடைபெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, “வரும் தேர்தல் முடிவுகளை பிரதமர் மோடி யூகித்துவிட்டார். அதனால்தான் தேர்தல் நடக்கும் இடங்களுக்கு எல்லாம் அடிக்கடி சென்று மக்களை சந்திக்கிறார். இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் எனில் பாஜக, அதிமுகவை வீழ்த்த வேண்டும்” என்று கூறினார்.
டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்ச் 15ம் தேதி முதல் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். டீசல் விலை உயர்வு, டீசல் மீதான மாநில அரசின் வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி: “நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்பவர்கள் விவசாயிகள். கிராமப்புறத்தில் 2.5 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அஞ்சல்துறை வாகனங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த கட்டண விலக்கு தற்போது கட்டண விதிகள் திருத்தத்தின் போது வழங்கப்படவில்லை.
எனவே மீண்டும் சுங்கச்சாவடிகளில் செலுத்த வேண்டிய கட்டணங்களிலிருந்து அளிக்கப்பட்ட கட்டணவிலக்கு வழங்கப்பட வேண்டும் என்று மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்தக் குழு பேச்சுவார்த்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஐயபாஸ்கர் தலைமையில், இன்று பிற்பகல் 2.30 மணியளவில், குரோம்பேட்டையிலுள்ள, மாநகர போக்குவரத்துக் கழக பயற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை களையும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் http://mygov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
Update from RMC, Chennai: Some places in Tamil Nadu and Puducherry likely to get light to moderate rains for the next five days. #Rainfall #WeatherForecast pic.twitter.com/eciB4Q3hs2
— Janardhan Koushik (@koushiktweets) February 18, 2021
அடுத்த 24 மணி நேரத்துக்குள் தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், கோவை, நீலகிரியில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
தலித் சமூகம் மட்டுமல்ல, பெண் உரிமைகளையும், மனித உரிமைகளையும் உத்திர பிரதேச அரசு நசுக்குகிறது. நானும், ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக நிற்கிறோம். நீதி கிடைக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
முன்னதாக, உத்திர பிரதேச உன்னாவ் பகுதியில் 3 தலித் சிறுமிகள் மீதான துன்புறுத்தலில் இருவர் கொலை, ஒருவர் உயிருக்கு போராடுகிறார். 12,16 வயது குழந்தைகள் இறந்துபோயினர்.
பஞ்சாப் விவசாயிகளுக்கு வாக்குரிமை இருக்கிறது என்பதை மத்திய அரசு மறந்து விட்டது. நாங்கள் இருக்கிறோம், வாக்களிக்போம் என்று மோடி அரசுக்கு நினைவுபடு்த்திய பஞ்சாப் வாக்காளர்களுக்கு நன்றி!
இளஞர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வாக்குரிமை இருக்கிறது. திஷா ரவி, நிகிடா ஜேகப் மற்றும் JNU, AMU மாணவர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக எதிர்வரும் எந்தத் தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும் என ப. சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்ய புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார் தமிழிசை செளந்தரராஜன். துணைநிலை ஆளுநராக பெறுப்பேற்று கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் மக்களுக்கு துணைபுரியும் சகோதரியாக புதுச்சேரிக்கு வந்துள்ளதாகவும் தமிழில் உறுதிமொழி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பகிர்ந்துகொண்டார். மேலும், தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களை இரட்டை குழந்தையாக கருதி கவனம் செலுத்தப்போவதாக தமிழிசை சௌந்தரராஜன் உறுதியளித்தார்.
சட்டப்பேரவைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 25-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளுக்கு ரூ.15 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights