Tamil News Today : தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் தளர்வுடன் கூடிய 6-ம் கட்ட ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்வு. ஒரு சவரன் தங்கம் ரூ.41 ஆயிரத்துக்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.5,125க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போதைக்காக கிருமி நாசினியை குடித்த 10 பேர் உயிரிழப்பு. ஆந்திர மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை போதைக்காக கிருமி நாசினி அருந்தினர். இவர்கள் அனைவரும் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் சமீபத்திய தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம், ஏராளமான கல்லூரிகள் 20 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது., ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத கல்லூரிகளும், 20 சதவீதத்திற்கு கிழ் தேர்ச்சி விகிதம் உள்ள கல்லூரிகளின் பட்டியலும் அதில் இடம் பெற்றுள்ளன.
11-ம் வகுப்பு தேர்வில் 98.10 % தேர்ச்சியுடன் கோவை முதலிடம்!
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என பெயர் மாற்றம் செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
News Today Live: இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் பழனிசாமி .திருக்குரான் போதிக்கும் உயரிய நெறிமுறைகளை பின்பற்றி அன்புடனும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் அது சரி செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும்" சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
Web Title:Tamil news today live chennai lockdown today gold rate plus one result sakandaswamy
"சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்களை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.பின்னர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஜய் (19), வசந்த குமார் (19), பிரவின் குமார் (23), செல்வகுமார் (27) ஆகிய நான்கு பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா, ஒரு ஆட்டோ மற்றும் ரூ.6000 பணத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் சைபர் பிரிவுகள் நாளை முதல் தொடக்கம். சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் 12 காவல் துணை ஆணையர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். சைபர் குற்றம் தொடர்பாக புகார் அளிக்கும் வசதியை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.சைபர்புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமையும் சைபர் பிரிவுகளில் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதுடன் நிபுணர்கள் ஆலோசனை அளிப்பர் முக்கியமான,சிக்கலான புகாரை இந்த பிரிவிலிருந்து மத்திய குற்ற பிரிவின் சைபர் பிரிவுக்கு பரிந்துரை செய்வர் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் வகுப்பு சிக்கல்களை நீக்க வேண்டும். ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்கித்தர முடியாத விவசாயியின் மகன் தற்கொலை செய்த சம்பவம் வேதனையளிக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையைக் கொண்ட புதிய கல்வி கொள்கையை அதிமுக எதிர்க்காதது ஏன் என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ரயில்களின் சேவை ஆகஸ்ட் 15ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர், சில வியாபாரிகளுக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நாளை மீன் விற்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்குள் வருபவர்களுக்கும், வெளியே செல்பவர்களுக்கும் இ - பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகரங்களை உருவாக்கும் மசோதாவுக்கு அம்மாநில கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை வரவேற்கிறேன். அதேநேரத்தில் தாய் வழிக்கல்வி திட்டத்தினை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் டுவி்டடர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் தலைமை இஞ்ஜினியர் உள்ளிட்ட 35 பொஇஞ்ஜினியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 5 நாட்களாக கொரோனா தடுப்புபணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வால், மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் அச்சம் நிலவிவருகிறது.
தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.
கந்த சஷ்டி கவசம் மற்றும் இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவித்த இயக்குனர் வேலு பிரபாகரனை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமுடக்கம் அனுசரிக்கப்பட இருப்பதால், அந்த நாள்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக காங்கிரஸ் கொறடா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
இந்தியாவில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவை ரத்து
- விமான போக்குவரத்து இயக்குநரகம்
இந்தியர்களை அழைத்து வர மட்டுமே வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும்
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார்
பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் இசைக்கருவிகள், இசைக் குறிப்புகள் திருடு போனதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்
இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு 32 ரூபாய் உயர்ந்து 5ஆயிரத்து 125 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 256 ரூபாய் உயர்ந்து 41 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்துகாந்த கசாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது
சித்த மருத்துவம், ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆயுர்வேத சிகிச்சையும் நடைமுறையில் உள்ளது.
- அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் உள்ளிட்ட 35 பொறியாளர்களுக்கு கொரோனா
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 35 பேருக்கு பாதிப்பு உறுதி
மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் அச்சம்
”12 ம் வகுப்பு மறுவாய்ப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது”
- அமைச்சர் செங்கோட்டையன்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, சீமான் மீது முதலமைச்சர் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகேயன், முதலமைச்சர். குறித்து சீமான் கடுமையாக வார்த்தைகள் கொண்டு அவதூறாக பேசியதாக வாதிட்டார்.இதையடுத்து, சீமானின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 493 பேருக்கு கொரோனா பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9097 ஆக உயர்வு - சுகாதார துறை துணை இயக்குனர் பழனி தகவல்.
புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்தது. இதனை, வரவேற்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் , நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, தெரிவித்திருந்தார். குஷ்புவின் திடீர் கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரசில் கருத்து சுதந்திரம் உண்டு என்றும், காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றுக்கருத்து கூறினால் வரவேற்போம் என கூறியுள்ளார். ஆனால், பொதுவெளியில் கூறுவது முதிர்ச்சியின்மையை காட்டுவது என்றும், ஏதோ லாபம் எதிர்பார்ப்பது போல் கருத்து சொல்லக் கூடாது என்றும், கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசுவது விரக்தியின் வெளிப்பாடு என கூறியுள்ள அழகிரி, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆதிக்க சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவது போல் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது என்றும் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் 203 நபர்களுக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8541ஆக உயர்வு
5 பெண் செவிலியர்கள், 5 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா
கடந்த 5 நாட்களில் மட்டும் கொரோனாவால் பலி எண்ணிக்கை
'நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக மகாராஷ்டிர காவல்துறை இதுவரை யார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை, விசாரணை மட்டுமே செய்கிறார்கள்; காவல்துறை மீது இனி நம்பிக்கையில்லை'
- நடிகர் சுஷாந்தின் உறவினரும், பாஜக எம்.எல்.ஏவுமான நீரஜ் குமார் சிங் பப்லு
மகாராஷ்டிர காவல்துறையை சேர்ந்த மேலும் 121 காவலர்களுக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இருவர் உயிரிழந்ததால் காவல்துறையில் பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது.
இதுவரை மகாராஷ்டிர காவல்துறையில் 9,217 காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு.
புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது. மும்மொழிக் கொள்கை மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ள நிலையில் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது
- அமைச்சர் காமராஜ்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,557 ஆக உயர்வு
செங்கல்பட்டில் இன்று மேலும் 360 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி
சிகிச்சை பெறுவோர் - 3,471, குணமடைந்தோர் - 10,480, உயிரிழப்பு - 246
பி.எஸ்.4 ரக வாகனங்களின் பதிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 இன்ஜின் ரக வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது,
கடந்த மார்ச் மாதத்தில் அதிக அளவு பிஎஸ்.4 இன்ஜின் ரக வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதில் ஏமாற்று வேலை நடந்துள்ளது என நீதிபதி அருண் மிஸ்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தென்காசியை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்
நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து உடலை பெற்றுக் கொள்கிறோம் - விவசாயி மகள் வசந்தி
எட்டு நாட்களுக்குப் பிறகு உடலை வாங்கிக் கொள்ள உறவினர்கள் ஒப்புதல்
கடந்த 22ம் தேதி வனத்துறை விசாரணைக்கு சென்ற விவசாயி அணைக்கரை முத்து உயிரிழப்பு
உயிரிழப்பிற்கு வனத்துறை அதிகாரிகள் காரணம் என குற்றச்சாட்டு
மதுரை உயர்நீதிமன்ற கிளை மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட நிலையில் உடலை வாங்க சம்மதம்
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிப்பதாக புகார்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் அரசு வழக்கறிஞர் முறையீடு
முழு கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகள் குறித்து ஆகஸ்ட் 17ல் அறிக்கை அளிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு
முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை
சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவில், இணைப்பு கல்லூரிகளில் இளநிலை இரண்டாவது மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் எம்சிஏ இரண்டாமாண்டு, முதுகலை வகுப்புகள் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அதேசமயம் மாணவர் சேர்க்கையை செடம்பர் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிகளை பேராசிரியர்கள் பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டும் என சென்னை பல்கலைக் கழக பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்ததற்காக தமன்னா, விராட் கோலியை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
யூ-டியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சமூக வலை தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆன்-லைன் கல்வி திட்டத்திற்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெற்றோர் உரிமைகள், மனநலன், உடல் நலன் பாதிக்கும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்று மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது.
பி.எஸ்.-4 ரக வாகனங்களை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை பதிவு செய்ய தடை நீதிபதி அருண் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். மார்ச் மாதம் விற்கப்பட்ட பி.எஸ்.-4 வாகன விற்பனையில் மோசடி நடைபெற்றிருக்கலாம் என குற்றச்சாட்டு. இதனால் இந்த உத்தரவை நீதிபதி பிற்பித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் . நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்க உள்ளார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்.
மீஞ்சூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வந்த புகாரையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது மீஞ்சூர் பகுதியை சுற்றியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை இனி விண்ணில் செலுத்தலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை.அவரின் 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவு வெளியாகியுள்ளது. மறுதேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் 63 பேர் மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு என்று தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு, வெளியில் பேசினால் அதன் பெயர் முதிற்சியின்மை எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கையை காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு வரவேற்றுள்ளார். புதிய கல்வி கொள்கை வரவேற்கப்பட வேண்டிய ஒரு நகர்வு என அவர் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது . மதுரை மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,073ஆக உயர்ந்துள்ளது.