Chennai News Updates: இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 25 சதவீத உயர்வு இன்று முதல் அமல்

Tamil Nadu Latest Live News Update in Tamil 31 July 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 31 July 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi trump tarrif

Today Latest Live News Update in Tamil 31 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Aug 01, 2025 07:04 IST

    இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 25 சதவீத உயர்வு இன்று முதல் அமல்

    இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 25 சதவீத உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. வரி விதிப்பால் இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • Aug 01, 2025 00:23 IST

    பாமகவுக்கு அன்புமணி தலைமையில் சென்னையில் இயங்கும் அலுவலகம் முகவரி

    பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், பாமகவுக்கு அன்புமணி தலைமையில் சென்னையில் இயங்கும் அலுவலகம் முகவரியாக தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Advertisment
  • Aug 01, 2025 00:22 IST

    அண்ணா பல்கலை. முன்னாள் துணை வேந்தர் சஸ்பெண்ட்

    அண்ணா பல்கலை. முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ், இன்றுடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  துணை வேந்தராவதற்கு முன்பாக, அங்குள்ள எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் அவர் பணியாற்றிய போது நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



  • Jul 31, 2025 20:44 IST

    அவருக்கும் தன்மானம் என்று ஒன்று இருக்கிறது: ஓ.பி.எஸ். குறித்து சீமான் கருத்து

    ஓ.பி.எஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டார். ஆனால் கொடுக்கவில்லை. நீண்ட காலமாக அவர் அரசியலில் இருக்கிறார். 2 முறை முதல்வராக இருந்திருக்கிறார். அவருக்கும் தன்மானம் என்று ஒன்று இருக்கிறது. அதனால் தான் பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியில் வந்திருப்பார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Jul 31, 2025 20:18 IST

    முதல்வர் நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ - மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். 



  • Jul 31, 2025 20:10 IST

    சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் - அறநிலையத்துறைக்கு  ஐகோர்ட் உத்தரவு

    சிதம்பரம் கோயிலில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தீட்சிதர்கள் ஏற்பாட்டின்படி அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா? என ஆய்வு செய்து அறிக்கை தர இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து பிறப்பித்த அரசாணைக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது.



  • Jul 31, 2025 19:52 IST

    உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி - ஸ்டாலின் பதிவு 

    சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இந்தநிலையில், 'உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி' எனக் குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Jul 31, 2025 19:38 IST

    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருக்கு பிடிவாரண்ட் 

    ரூ.26 கோடி காசோலை மோசடி வழக்கில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் என்.ராமசாமிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அக்டோபர் 3ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவு அளித்துள்ளது

     



  • Jul 31, 2025 19:37 IST

    அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.நண்பனும் இல்லை - ஓ.பி.எஸ்

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அரசியல் பேசவில்லை.மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அரசியலில் எனக்கு சுயமரியாதை மிகவும் முக்கியம். பா.ஜ.வு-டன் கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க-வுக்கு எனது வாழ்த்துகள்" என்று  ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

    விஜய் உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு "த.வெ.க எங்களுடன் பேசவில்லை நாங்களும் பேசவில்லை" என்று  ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 



  • Jul 31, 2025 18:39 IST

    முதல்வருடன் ஓபிஎஸ் சந்திப்பு

    பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்த நிலையில் சென்னை - ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் ஓபிஎஸ் சந்தித்தார்.மக்களை நல்வழியில் கொண்டுசெல்லும் கட்சிகளுடன் கூட்டணி என அறிவித்திருந்த நிலையில் முதல்வரை சந்தித்தார்.



  • Jul 31, 2025 18:35 IST

    ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

    திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு எதுவும் நடக்கலாம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். உடல் நலம் பற்றி விசாரிக்கவே இந்த சந்திப்பு நடைபெற்றது, அரசியல்நிமித்தமாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி  அளித்துள்ளார்.



  • Jul 31, 2025 18:12 IST

    அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் விசிக, நாம் தமிழர்

    மாநில தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் விசிக, நாம் தமிழர் இணைந்தது. தமிழக வெற்றிக் கழகம், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. 



  • Jul 31, 2025 18:10 IST

    முதலமைச்சர் இல்லத்தில் ஓபிஎஸ்!

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க வந்த ஓ.பி.எஸ் ஐ வாசல்வரை வந்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.



  • Jul 31, 2025 17:56 IST

    ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். 



  • Jul 31, 2025 17:45 IST

    மகளுக்காக 2026-ல் பிரச்சாரம்

    ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜ் மகளுமான திவ்யா, திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் பதவியில் உள்ளார். இந்நிலையில், 2026 தேர்தலில் மகளுக்காக நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்ய உள்ளார். 



  • Jul 31, 2025 17:33 IST

    ஸ்டாலினை சந்திக்க உள்ள ஓபிஎஸ்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கிறார். இன்று காலை ஏற்கனவே நடைபயிற்சியின் போது முதலமைச்சரிடம் அவர் நலம் விசாரித்த நிலையில், தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு செல்கிறார்.



  • Jul 31, 2025 17:23 IST

    ரிதன்யா தற்கொலை வழக்கில் சட்டப்பிரிவை மாற்றக் கோரி மனு

    திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில் சட்டப்பிரிவை மாற்றக் கோரி டிஜிபி அலுவலகத்தில் ரிதன்யாவின் தந்தை மனு தாக்கல் செய்துள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினரை கைது செய்ய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. தனது மகளின் சந்தேக மரண வழக்கின் பிரிவை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் ரிதன்யா தந்தை அண்ணாதுரை கோரிக்கை வைத்தார். தனது மகள் இல்லாமல், இருந்தும் இறந்தது போல வாழ்ந்து வருவதாக ரிதன்யாவின் தந்தை உருக்கம் தெரிவித்தார்.



  • Jul 31, 2025 17:02 IST

    பா.ஜ.க கூட்டணி வென்றாலும் இ.பி.எஸ்.-க்கு முதல்வர் வாய்ப்பில்லை - அன்வர் ராஜா பேச்சு

    "2026 தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஈ.பி.எஸ்.-க்கு முதல்வர் வாய்ப்பில்லை. செங்கோட்டையன் அல்லது வேலுமணிக்கு முதல்வர் வாய்ப்பு இருக்கலாம். பாஜக கூட்டணி முதல்வராக, பா.ஜ.க சொல்வதை அப்படியே கேட்கும் ஒருவராகவே இருக்க முடியும். அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வர் என்கிறார் அமித்ஷா...ஈபிஎஸ் பெயரை சொல்லவில்லை. முதல்வர் யார்? என்பதை அதிமுக தான் முடிவு செய்ய வேண்டும்...பா.ஜ.க அல்ல" என்று  அன்வர் ராஜா கூறியுள்ளார். 



  • Jul 31, 2025 16:55 IST

    அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை: சசிதரூர் கருத்து

    அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை என்று வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். வர்த்தகம் பற்றிய அமெரிக்காவுடனான பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை எனில் நாம் விலகலாம். இந்தியாவுக்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை வைத்தால் நாம் மற்ற சந்தைகளுக்கு திரும்ப வேண்டியிருக்கும். நாம் சீனா போல ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் அல்ல; நமக்கு வலுவான உள்நாட்டு சந்தை உள்ளது என்று தெரிவித்தார்.



  • Jul 31, 2025 16:55 IST

    டிரம்ப் 25% வரி விதித்தது குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்..!!

    டிரம்ப் 25% வரி விதித்தது குறித்து ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். மே 29ம் தேதி அமெரிக்கா – இந்தியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்திய-அமெரிக்க அதிகாரிகளின் இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பான கூட்டம் 4 முறை நடத்தப்பட்டுள்ளன. நம் நாட்டு விவசாயிகள், தொழில்முனைவோரின் நலனை பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. தேசிய நலனை கருத்தில் கொண்டே அனைத்துவகையான முடிவுகளும் எடுக்கப்படும். இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் தேசிய நலனுக்கே முதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கனவே இந்தியா செய்துள்ளது. 2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதே அரசின் இலக்கு என தெரிவித்தார்.



  • Jul 31, 2025 16:55 IST

    இறந்த நிலையில் இந்தியா பொருளாதாரம்; இது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி

    இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்; இது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது; வெளியுறவு கொள்கையை கீழ் நிலைக்கு கொண்டு சென்றது. கவுதம் அதானிக்கு ஏற்ப உதவி செய்து இந்திய பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் எம்.பிக்கள் குழுவை அனுப்புனீர்கள்; எந்த நாடாவது பாக்.கை கண்டித்ததா?. இந்தியாவை எப்படி நடத்திச் செல்வது என்று ஆளும் பாஜக அரசுக்கு தெரியவில்லை என ராகுல் தெரிவித்தார்.



  • Jul 31, 2025 16:36 IST

    ரூ.10,000 கோடியைக் கடந்த TVS Motor நிறுவனத்தின் வருமானம்!

    நடப்பு நிதி ஆண்டின் (2025-26) முதல் காலாண்டில் 20% வளர்ச்சியுடன் ரூ.10,081 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக TVS Motor நிறுவனம் அறிக்கை. ஏற்றுமதி உட்பட ஒட்டுமொத்த வாகன விற்பனையில் 17% வளர்ச்சியும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையில் 35% வளர்ச்சி கண்டுள்ளதாகவும் பெருமிதம் அடைந்துள்ளது நிறுவனம். 



  • Jul 31, 2025 16:35 IST

    நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சரிடம் கலாநிதி வீராசாமி எம்.பி. கேள்வி

    அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது என்பதை அரசு அறிந்துள்ளதா? விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது? குறிப்பாக நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த பணவீக்கத்தை தடுக்கும் திட்டங்கள் என்ன? விலையை நிலைப்படுத்த பஃபர் கையிருப்பில் உள்ள பொருட்களை கூடுதல் அளவில் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதா? என்று நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சரிடம் கலாநிதி வீராசாமி எம்.பி. கேட்டுள்ளார். 



  • Jul 31, 2025 16:22 IST

    ஹஜ் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

    2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்வோர், விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. ஜூலை 30-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. 



  • Jul 31, 2025 15:43 IST

    ரிதன்யா வழக்கில் முழுமையான உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட் உத்தரவு

    ரிதன்யா வழக்கில் முழுமையான உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக உடற்கூராய்வு அறிக்கையில், ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குறிப்பிடவில்லையே? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் ஜாமின் கோரிய வழக்கில், காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.



  • Jul 31, 2025 15:04 IST

    தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதி பொறுப்பேற்பு

    தென்னிந்திய பகுதிகளுக்கான புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் வி. ஸ்ரீஹரி பொறுப்பேற்றார். கேரளாவைச் சேர்ந்த இவர், கடந்த 1987-ஆம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார். அதன் பின்னர், பல்வேறு படைப்பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Jul 31, 2025 14:46 IST

    11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பிரசாந்த், ராஜ கோபால் சுன்கரா, இரா. கஜலட்சுமி, முரளீதரன் உள்ளிட்ட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



  • Jul 31, 2025 13:53 IST

    பா.ஜ.க கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் விலகல் 

    பா.ஜ.க கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்துள்ளார். ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தீர்மானம் நிறைவேற்றபட்டதாகக் கூறினார். மேலும், இனி  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம் பெறாது என்று கூறினார்.



  • Jul 31, 2025 13:47 IST

    ஓ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம், பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலக கோரிக்கை

    சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்தக் கூட்டத்தில், பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்த, அதற்கு எதிராக மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.



  • Jul 31, 2025 13:44 IST

    கிராமங்களில் சிறு, குறு கடைகளுக்கு உரிமம் தேவையில்லை - தமிழ்நாடு அரசு

    வணிகர்களின் கோரிக்கையை ஏற்று கிராமப்புற சிறு, குறு வணிகர்களுக்கு தொழில் தொடங்க உரிமம் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.



  • Jul 31, 2025 12:40 IST

    நட்பு ரீதியாக சந்தித்தேன்; ஸ்டாலினை நலம் விசாரித்த பிரேமலதா

    தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு, இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான நட்பின் அடிப்படையில் அமைந்தது என்றும், இதில் எந்தவிதமான அரசியல் நோக்கங்களும் இல்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.



  • Jul 31, 2025 11:50 IST

    மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுவிப்பு

    நாட்டை உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்



  • Jul 31, 2025 11:44 IST

    கூட்டணி நிலைப்பாடு – ஓ.பி.எஸ் முக்கிய ஆலோசனை

    சென்னை ஆழ்வார்பேட்டையில் முக்கிய நிர்வாகிகளோடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஓபிஎஸ்ஸின் 2வது மகன் ஜெய் பிரதீப், தர்மர், பண்ருட்டி ராமச்சந்திரன், கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, ஐயப்பன், எம்.எம்.பாபு ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்



  • Jul 31, 2025 11:19 IST

    என்.டி.ஏ கூட்டணியில் நீடிப்பது குறித்து நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் முடிவு - ஓ.பன்னீர்செல்வம்

    தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பது குறித்து நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவு எடுக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்



  • Jul 31, 2025 11:14 IST

    மருத்துவ கல்வி; புதிய கட்டணங்களை அறிவித்த தமிழக அரசு

    தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு விடுதி, உணவு, போக்குவரத்து, இதர வகை கட்டணம் என 4 பிரிவுகளின் கீழ் புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு கட்டணம்- ரூ.70,000 முதல் ரூ.1.35 லட்சம் வரை, போக்குவரத்து கட்டணம் - ரூ.50,000 முதல் 1.75 லட்சம் வரை, இதர கட்டணம் - ரூ.36,000 முதல் 3 லட்சம் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணம் சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது



  • Jul 31, 2025 11:12 IST

    ஸ்டாலினுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு

    முதலமைச்சர் ஸ்டாலினை தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்



  • Jul 31, 2025 10:51 IST

    F-35 போர் விமானம் தரையில் விழுந்து விபத்து

    அமெரிக்காவின் 5ம் தலைமுறை போர் விமானமான F-35 தரையில் விழுந்து நொறுங்கியது. "ரஃப் ரைடர்ஸ்" என்று அழைக்கப்படும் ஸ்ட்ரைக் ஃபைட்டர் ஸ்குவாட்ரான் VF-125க்கு ஒதுக்கப்பட்ட பயிற்சி விமானம் ஆகும். விபத்திற்குள்ளான விமானத்தின் காக்பிட்-ல் இருந்து தூக்கி வீசப்பட்ட விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசரகால குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்



  • Jul 31, 2025 10:50 IST

    பூவிருந்தவல்லி அருகே தண்ணீர் லாரி மோதியதில் இருவர் மரணம்

    பூவிருந்தவல்லி அருகே தாறுமாறாக ஓடிய தண்ணீர் லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். நடந்த சென்ற இளைஞர் தனபால் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவி என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்



  • Jul 31, 2025 09:40 IST

    நடிகை ராதிகா சரத்குமாருக்கு டெங்கு காய்ச்சல்

    நடிகை ராதிகா சரத்குமார் டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் 5 நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மீண்டும் இல்லம் திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.



  • Jul 31, 2025 09:39 IST

    பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்றுப் புரட்சி: ஓபிஎஸ்

    பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது வரலாற்று பிழை அல்ல அது ஒரு வரலாற்றுப் புரட்சி என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • Jul 31, 2025 09:17 IST

    கார் ஏற்றி மாணவர் கொலை: 3 பேருக்கு ஆக.13 வரை சிறை

    சென்னை அண்ணா நகரில் மாணவர் நிதின் சாய் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சந்துரு, ஆரோன், யஷ்வந்த் ஆகிய 3 இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மூவரையும் ஆகஸ்ட் 13 வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.



  • Jul 31, 2025 09:13 IST

    ஜெயலலிதா குறித்த கடம்பூர் ராஜு பேச்சு- ஓபிஎஸ் கண்டனம்

    ஜெயலலிதா குறித்த கடம்பூர் ராஜு பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது மிகப் பெரிய துரோகம் என்றும், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.



  • Jul 31, 2025 08:49 IST

    ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் பெற்றோருக்கு அமைச்சர் நேரு, எம்.பி. கனிமொழி ஆறுதல்

    ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்குச் சென்று அவரது பெற்றோருக்கு அமைச்சர் நேரு, எம்.பி. கனிமொழி ஆறுதல் தெரிவித்தனர். குற்றம் செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என கவின் பெற்றோரிடம் கனிமொழி நம்பிக்கை தெரிவித்தார். 



  • Jul 31, 2025 08:24 IST

    ஆகஸ்ட் மாதத்தில் நல்ல மழைப்பொழிவு பதிவாகும்: வெதர்மேன் கணிப்பு

    கடல் சார்ந்த அலைவுகளின் தாக்கம் இந்தியப் பெருங்கடலில் காணப்படுகிறது. குறிப்பாக ராஸ்பி அலைவின் காரணமாக தெற்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்று சுழற்சி உருவாகக் கூடும். இச்சுழற்சி மிகமெதுவாக வடதமிழ்நாடு & தெற்கு ஆந்திர கடலோரம் நோக்கி நகரக் கூடும்.

    இதன் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், டெல்டா, மத்திய உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என ஒட்டுமொத்த மாநிலத்திலும் பரவலாக வெப்பச்சலன இடி மழை தீவிரமடைந்து மழைப் பொழிவைக் கொடுக்கும்

    ஹேமச்சந்திரன், டெல்டா வெதர்மேன் 



  • Jul 31, 2025 08:09 IST

    4 லட்சத்தை கடந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை: அன்பில் மகேஸ் பெருமிதம்



  • Jul 31, 2025 07:44 IST

    ஆடிப் பெருக்கை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு

    ஆக.2 (சனி) ஆக.3 (ஆடிப் பெருக்கு- ஞாயிறு) விடுமுறை என்பதால் சென்னை, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆக.1,2 தேதிகளில் 690 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 40 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்



  • Jul 31, 2025 07:35 IST

    அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று அறிவிக்கிறார் ஓ.பி.எஸ்.

    பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி தொடர்ந்து நீடிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அனைத்து கேள்விகளுக்கும் இன்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க உள்ளார்.

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தனது ஆதரவாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஓபிஸ் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்திக்க உள்ள அவர், கூட்டணி குறித்த நிலைப்பாடு மற்றும் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Jul 31, 2025 07:34 IST

    ஓய்வுக்கு பின்னர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகை

    உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பிய நிலையில், ஓய்வுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகம் வருகிறார். இன்று முதல் அவர் வழக்கமான பணிகளைத் தொடர்வார் என்றும், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: