Tamil News Today Live Updates: 7.5% ஒதுக்கீடு அரசாணையை முன்பே செய்திருக்கலாமே? இதற்கு ஏன் 45 நாள் தாமதம்? என திமுக தலைவர் ஸ்டாலின் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். பாஜக.வுடன் அதிமுக அரசுக்கு இருக்கும் தொடர்பை பயன்படுத்தி ஆளுனர் ஒப்புதல் பெறாதது ஏன்? என்றும் கேட்டிருக்கிறார்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதாக, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் இன்று கூடுகிறது காவிரி மேலாண்மை வாரியம். இதில் மேகதாது பிரச்னையைப் எழுப்ப தமிழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே விங் கமாண்டர் அபிநந்தனை விடுவித்ததாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் எம்.பி தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர் குழு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வல்லுநர் குழு அறிக்கையின் படி திரையரங்குகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 5,000 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது?
அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்கிடுக என்று மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.
சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது என்று முதலவர் தெரிவித்தார்.
தமிழக அரசுக்கு நன்றி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீட்டினை அரசாணை மூலமாகவே வழங்கலாம் என்ற எமது ஆலோசனையை ஏற்று அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி ! 🙏 pic.twitter.com/Rw5InNObTR
— Dr Ravikumar M P (@WriterRavikumar) October 29, 2020
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீட்டினை அரசாணை மூலமாகவே வழங்கலாம் என்ற எமது ஆலோசனையை ஏற்று அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி என்று எம். பி ரவிக்குமார் தெரிவித்தார்.
பாஜகவின் வெற்றிவேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அரசியல் ஆதாயத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தி மோதலை உருவாக்கும் பாஜகவின் சதித் திட்டத்துக்கு தமிழக அரசு துணை போகக் கூடாது, உடனடியாக வேல் யாத்திரையைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் " என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக வருகிற 1-ம்தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை 151 நாட்களுக்கு தண்ணீர் திறந்தவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது 40 ஆக குறைக்கப்பட்டது குறித்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொது மக்கள் விடுத்துள்ள கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சபரிமலை கோயிலில் மண்டல பூஜை மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை கோயில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26ம் தேதி வரை நடை திறக்கப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை நடை திறக்கப்படும். வாரத்தின் முதல் 5 நாட்கள் 1000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மூலம் 2 ஆம் கட்டம், 3 ஆம் கட்டமாக நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு, செயல்திறன் மேம்படுத்தப்படும்.
ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஏப்ரல் 2021 முதல், மார்ச் 2031-க்குள்செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் போதை மருந்து வழக்கில் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள நிலையில், குற்றவாளி முகமது அனிப்புடன் தொடர்பு உள்ளதாகக் கூறி கேரள மாநில மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினிஷை கைது போலீசார் செய்துள்ளனர். கைதான பினிஷிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் 4 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிப்பதற்காக காத்திருக்கிறது. இந்த உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நடப்பு ஆண்டிலேயே சட்ட மசோதாவை நிறைவேற்றி 400 மாணவர்கள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர வேண்டும். சட்ட மசோதா இந்த வருடம் நிறைவேறாவிட்டால் நீட் தேர்வு எழுதிய 8 மாணவர்கள் மட்டுமே சேர வாய்ப்பு ஏற்படும். ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியமில்லை. ஆனால், பொறுப்புள்ள அதிகாரிகள் சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடுதான் விதிகள் வகுக்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்கள் நலன் கருதி விரைவில் நல்ல முடிவெடுக்க வேண்டும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீலாதுன் நபி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது மனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்நன்னாளில் நபிகள் அருளிய போதனைகளை கடைபிடித்து இன்புற்று வாழ்வோம்!” என்று தெரிவித்துள்ளார்.
மனித நேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவர்கள் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்நன்னாளில் நபிகள் அருளிய போதனைகளை கடைபிடித்து இன்புற்று வாழ்வோம்! #EidMiladUnNabiﷺ pic.twitter.com/S8vsY8NMH3
— O Panneerselvam (@OfficeOfOPS) October 29, 2020
சேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில், மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்பட 37 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் 35 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
திமுக சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு பொதுக் கூட்டங்களுக்கான தேதிகளை அறிவித்துள்ளது. "தமிழகம் மீட்போம்" என்ற தலைப்பில் நவம்பர் 1 முதல் ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலம் தாழ்த்திவரும் நிலையில், இந்த உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் நடைபெற்றது. அப்போது, உயர்நீதிமன்றம் 7.5 % உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தன் பெயரில் வெளியாகியிருக்கும் அறிக்கை பொய்யென்றும், அதில் இருக்கும் விஷயங்கள் உண்மையென்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயணம் குறித்து ட்வீட் செய்திருக்கிறார்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2020
சென்னை மக்கள் வடகிழக்கு பருவமழை குறித்த புகார்கள் தெரிவிக்க அவசர எண்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. 044 2538 4530, 044 2538 4540 என்ற எண்களில் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.
24/7 இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு மையத்தினையும் (1913) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
கல்லூரி கல்வி இயக்குநராக பூர்ண சந்திரனை நியமித்த அரசின் உத்தரவு ரத்து. பணிமூப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என பேராசிரியை கீதா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றி 3 மாதங்களில் கல்லூரி கல்வி இயக்குநரை நியமிக்க அரசுக்கு உத்தரவு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights