News In Tamil : கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாகக் கேரளாவிலிருந்து கோழி, வாத்து உள்ளிட்டவற்றைத் தமிழகம் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் கால்நடைத்துறை இயக்குநர் உத்தரவுவளித்துள்ளார். கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களை திருப்பியனுப்பவும் ஆணை.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 4 மணிநேரத்திற்கு தொடர் மழை இருக்கும் என்றும் நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51-க்கும், டீசல் ரூ.79.21-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Tamil News Updates : அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையில் எங்களுடன் இணைந்திருங்கள்.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆண்டு சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலை +0.29 டிகிரி செல்சியஸ். இது இயல்பை விட அதிகம். 1901ம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட கணக்குப்படி, இது 8வது அதிக வெப்ப ஆண்டு. ஆனால் கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்டதை விட (+0.71 டிகிரி செல்சியஸ்) குறைவு.
2020ம் ஆண்டு நாட்டின் மழைப் பொழிவு, நீண்ட கால சராசரி அடிப்படையில் (1961-2010) 109 சதவீதம். இதுவும் இயல்பை விட அதிகம்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான பணிகளை தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்.1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜனவரி 29-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
எம்.பி. எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி விவரங்களை தாக்கல் செய்ய கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபக் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு .இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம். மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் கருத்து. தமிழக அரசு பதிலளிக்க 15 நாள் அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மோசடி வழக்கில் கைது .மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி என புகார் .சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.கைது செய்யப்பட்ட ஹேம்நாத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
திரையரங்குகளில் 100% இருக்கைக்குத் தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து திரைத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், எதிர்ப்புக் குரலும் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த நேரத்தில் 100 சதவீத பார்வையாளர்களைவிட 50 சதவீத பார்வையாளர்கள் இருப்பதே சிறந்தது” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகப் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
வெள்ளை ஜெர்சி அணிய பெருமைமிக்க தருணம். அடுத்த சவால்களுக்குத் தயாராக இருக்கிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
A proud moment to wear the white jersey 🇮🇳 Ready for the next set of challenges 👍🏽#TeamIndia @BCCI pic.twitter.com/TInWJ9rYpU
— Natarajan (@Natarajan_91) January 5, 2021
டெல்லி மாநில எல்லைகளில் கடும் குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் 41-வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நேற்று நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights