News In Tamil : கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் காரணமாகக் கேரளாவிலிருந்து கோழி, வாத்து உள்ளிட்டவற்றைத் தமிழகம் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் கால்நடைத்துறை இயக்குநர் உத்தரவுவளித்துள்ளார். கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங்களைக் கொண்டு வரும் வாகனங்களை திருப்பியனுப்பவும் ஆணை.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 4 மணிநேரத்திற்கு தொடர் மழை இருக்கும் என்றும் நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.51-க்கும், டீசல் ரூ.79.21-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Latest Tamil News : இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான, துணை கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட் நாவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்னில் உள்ள உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது. இதனால் இந்த 5 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் சிட்னியில் நடக்கும் 3 வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் இந்த 5 வீரர்களும் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Web Title:Tamil news today live chennai rain tamil nadu politics weather corona eps stalin farmers
இங்கிலாந்தில் ஏற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸால், இந்தியாவில் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆண்டு சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலை +0.29 டிகிரி செல்சியஸ். இது இயல்பை விட அதிகம். 1901ம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட கணக்குப்படி, இது 8வது அதிக வெப்ப ஆண்டு. ஆனால் கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்டதை விட (+0.71 டிகிரி செல்சியஸ்) குறைவு.
2020ம் ஆண்டு நாட்டின் மழைப் பொழிவு, நீண்ட கால சராசரி அடிப்படையில் (1961-2010) 109 சதவீதம். இதுவும் இயல்பை விட அதிகம்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான பணிகளை தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் இளைஞர்களின் கட்சி "எங்கள் எம்.எல்.ஏ.க்கள் வாக்குறுதிகளை செய்யாவிட்டால், ராஜினாமா செய்வர்" என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தெரிவித்துள்ளார்.
வரும் குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இந்தியா வர இருந்த இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தற்போது தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியானியுள்ளது.
இலக்கிய சுவடுகள் நூலுக்காக 2015-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் மாதவன் திருவனந்தபுரத்தில் இன்று காலமானார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிப்.1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜனவரி 29-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
எம்.பி. எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ1200-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ பரிசோதனை கட்டணம் ரூ 800ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஜனவரி 13-முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனமத்திய அரசு அறிவித்துள்ளது.
பீகாரில் முன்கள பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் அறிவியல் புதுமைக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது பெருமையளிக்கிறது என உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
கோட்டயம், ஆலப்புழா பகுதிகளில் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு
பீகாரில் முன்கள பணியாளர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் என வ்தலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு.
நாம் தமிழர் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு நன்றி
காஞ்சிபுரம் உத்திரமேரூரில் 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது .4 அடி உயரமும், 2 அடி அகலமும், 8 கரங்களையும் கொண்ட கொற்றவை சிலையை கைப்பற்றி தொல்லியல்துறை ஆய்வு
வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்க கோரி திமுக வழக்கு .கோரிக்கையை பரிசீலித்து 2 வாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு .
கொச்சி - மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 450 கி.மீ தொலைவிற்கு கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை இத்திட்டம் இணைக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி விவரங்களை தாக்கல் செய்ய கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபக் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திமுக எம்.பி., கனிமொழி தனது 53 ஆவது பிறந்தநாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முதற்கட்டமாக 500 கனஅடி உபரி நீர் பிற்பகலில் வெளியேற்றப்பட உள்ளது உபரிநீர் திறப்பின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் மினி கிளினிக்கிற்கு தனியார் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதை எதிர்த்து வழக்கு .தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு .
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு .இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம். மாணவர் சேர்க்கை நடைமுறைகளில் இடையூறு ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் கருத்து. தமிழக அரசு பதிலளிக்க 15 நாள் அவகாசம் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் மோசடி வழக்கில் கைது .மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி என புகார் .சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.கைது செய்யப்பட்ட ஹேம்நாத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
தமிழகம் முழுவதும் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு
தேமதுரத் தமிழுக்குத் தலைநகர் டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்க ஆவண செய்த நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி என கமல்ஹாசன் ட்வீட்.
சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல் . சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனவும் தகவல்.
தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு. இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்த்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
திரையரங்குகளில் 100% இருக்கைக்குத் தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து திரைத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், எதிர்ப்புக் குரலும் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த நேரத்தில் 100 சதவீத பார்வையாளர்களைவிட 50 சதவீத பார்வையாளர்கள் இருப்பதே சிறந்தது” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு ஆதரவாகப் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
திமுக எம்.பி. கனிமொழியின் 53-வது பிறந்தநாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். நடிகை குஷ்பு உட்படப் பல பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை ஜெர்சி அணிய பெருமைமிக்க தருணம். அடுத்த சவால்களுக்குத் தயாராக இருக்கிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பயிற்சியின் போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகல் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
உருமாறிய கொரோனாவின் தீவிர பரவல் காரணமாக பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்படுத்த அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி மாநில எல்லைகளில் கடும் குளிர் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் விவசாயிகள் 41-வது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடன் நேற்று நடைபெற்ற 7-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
நாட்டின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பரஸ்பர மற்றும் இருதரப்பு நலன்களைப் பற்றி விவாதிக்க இலங்கைக்கு மூன்று நாள் பயணம் செய்யவுள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.