/indian-express-tamil/media/media_files/2025/03/09/fMoEPrpsgKvn2k3RCNPP.jpg)
Today Latest Live News Update in Tamil 18 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
சிஎன்ஜி ஒரு கிலோ ரூ.91.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 19, 2025 00:41 IST
சென்னையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்சேவை பாதிப்பு
வியாசர்பாடி அருகே ரயில்வே உயர் அழுத்த மின் கம்பத்தில் பழுது - ரயில்சேவை பாதிப்பு 2 மணி நேரத்திற்கும் மேலாக அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி
-
Jul 18, 2025 21:31 IST
மின் இணைப்புக் கம்பி க்ளிப் உடைப்பு: சென்னையில் ரயில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை வியாசர்பாடியில், மின்சார ரயிலையும் மின் இணைப்புக் கம்பியையும் இணைக்கக்கூடிய க்ளிப் உடைந்ததால் ரயில் போக்குவரத்து பாதிப்பு. பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
Jul 18, 2025 20:36 IST
கனவில் வந்த அம்மன் - மடிப்பிச்சை எடுக்கும் நடிகை
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலில் மடிப்பிச்சை ஏந்திய நடிகை நளினி. அம்மன் தனது கனவில் வந்து எனக்காக என்ன
செய்யப் போகிறாய் என கேட்டதால் மடிப்பிச்சை ஏந்தி அதில் வரும் காணிக்கையை செலுத்துவதாக விளக்கம் அளித்துள்ளார். -
Jul 18, 2025 20:27 IST
மேற்கு வங்காளத்தில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு
மேற்கு வங்காளத்தில் உள்ள பஸ்தோலா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் மோதி 3 யானைகள் உயிரிழந்தன. உயிரிழந்த யானைகளின் அருகே மேலும் நான்கு யானைகள் இருந்தன எனவும், அந்த யானைகள் மேற்கு வங்காளத்தின் கரக்பூரில் உள்ள ஜார்கிராம் காட்டில் இருந்து வந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Jul 18, 2025 19:49 IST
இலங்கை தமிழர் திருமண பதிவு - சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை உத்தரவு
இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிப்போர் திருமண பதிவு தொடர்பாக சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஆணை பிறப்பித்துள்ளது. திருணமங்கள் பதிவு செய்ய சம்பந்தபட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை 26ம் தேதி செயல்பாட்டில் வைக்க வேண்டும். நிலுவையில் உள்ள 898 இலங்கை தமிழர் திருமணங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க அயலக தமிழர் மற்றும் மறுவாழ்வுதுறை சார்பில் பதிவுத்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. திருமணங்களை பதிவு செய்வது தொடர்பாக அனைத்து சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
Jul 18, 2025 19:35 IST
கேரளா - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளாவில் தீவிரமடையும் பருவமழையால் வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Jul 18, 2025 19:14 IST
மல்லை சத்யாவுக்கு துரோகி பட்டம் - கட்சியிலிருந்து விலகிய ம.தி.மு.க நிர்வாகிகள்
மல்லை சத்யாவை துரோகி எனக் கூறிய வைகோவை கண்டித்து, மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த ம.தி.மு.க நிர்வாகிகள் தங்கள் கார்களில் இருந்த மதிமுக கொடி, கட்சி சின்னம், வைகோ படம் உள்ளிட்டவற்றை அகற்றி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
-
Jul 18, 2025 19:00 IST
கோயில் கட்டுமானத்தை அகற்றிய ராணுவத்தினர் - சென்னை மீனம்பாக்கத்தில் பரபரப்பு!
சென்னை மீனம்பாக்கத்தில் கோயில் கட்டுமானத்தை ராணுவத்தினர் இடித்து அகற்றியதால் ஜிஎஸ்டி சாலையில் பரபரப்பு நிலவியது. சென்னை மீனம்பாக்கத்தில் குளத்துமேடு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் புதிதாக வீடு கட்டவோ, மாற்றி அமைக்கவோ ராணுவத்தினர் அனுமதியை பெற வேண்டும்.
இந்நிலையில் குளத்துமேடு பகுதியில் 1975ஆம் ஆண்டு கட்டப்பட்ட கருமாரியம்மன் கோயிலில் விரிவாக்கம் செய்யும் வகையில் கான்கிரீட் கட்டடம் எழுப்பதற்கான பணி நடைபெற்று வந்தது. இதையடுத்து திடீரென துப்பாக்கியுடன் அங்கு வந்த 20க்கு மேற்பட்ட ராணுவத்தினர் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை செய்யக்கூடாது என்று கூறி, சிமெண்ட் கான்கிரீட் போடப்பட்ட கம்பிகளையும், அடித்தளத்தையும் அகற்றினர். இதுகுறித்து கேள்வி கேட்க வந்த பொதுமக்களையும் அவர்கள் மிரட்டினர். அங்க வந்த மீனம்பாக்கம் போலீசாரும் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
-
Jul 18, 2025 18:46 IST
டிரம்புக்கு கால்களில் ரத்த நாளப் பிரச்சனை - வெள்ளை மாளிகை தகவல்
டிரம்புக்கு கால்களில் ரத்த நாளப் பிரச்சனை என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். நின்று கொண்டே பணிபுரிபவர்களுக்கு கால்களில் ரத்த நாளங்கள் சுருண்டு வளைந்து காணப்படும். கால்களுக்கு செல்லும் ரத்தம் மீண்டும் இதயத்துக்கு செல்ல முடியாமல் ரத்த நாளங்கள் பலவீனமாகிவிடும். ரத்த நாளங்கள் பலவீனம் காரணமாக டிரம்புக்கு கால்களில் வீக்கம் ஏற்பட்டதாக அதிகாரி விளக்கமளித்துள்ளார். டிரம்புக்கு கால் ரத்த நாளப் பிரச்சனை கட்டுப்பாட்டில் உள்ளது என அதிபர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 18, 2025 18:36 IST
தமிழ்நாடு மாநிலத்திற்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு
ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்வதுடன், நீதித்துறையிலும் ஏராளமான பெண்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு மாநிலத்திற்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்-க்கு உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. அதில் பேசிய தலைமை நீதிபதி ஸ்ரீராம், புகழ்மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்பது மாத பதவிக் காலத்தில் அதிகளவில் கற்றுக் கொண்டுள்ளதாகவும், முழு திருப்தியுடன் விடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதேபோல் ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். தமிழ்நாடு நீதித்துறையிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 213 நீதிபதிகளில் 130 நீதிபதிகள் பெண்கள். இதற்கு மாநிலத்தை பாராட்டுவதாகவும் கூறி, கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குறளையும் குறிப்பிட்டுப் பேசினார்.
தலைமை நீதிபதியின் பிரிவு உபச்சார விழாவில், பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றபோதும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் நிர்வாகிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Jul 18, 2025 17:56 IST
இலங்கை தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்ய உத்தரவு
தமிழ்நாட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமண பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவற்றை பதிவு செய்ய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 898 தம்பதியின் திருமணங்களை பதிவு செய்ய, வரும் 26-ஆம் தேதியன்று சார்பாதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jul 18, 2025 17:36 IST
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர் பலகை இருந்ததால் சர்ச்சை
சென்னை, அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்ததால், சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு விமர்சனம் எழுந்த நிலையில், இந்தி எழுத்துகளை மறைத்தனர். மேலும், வேறு மெட்ரோ நிலையங்களில் இந்தி பெயர் பலகை வைக்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
Jul 18, 2025 17:13 IST
புதிய காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் பயிற்சியை முடித்த நிலையில், புதிய காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணியில் சேர்கின்றனர். அந்த வகையில் புதிதாக பணியில் சேரும் போலீசார், மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
Jul 18, 2025 16:29 IST
பெரம்பூர் - அம்பத்தூர் இடையே இரு ரயில் பாதைகள் அமைக்க பரிந்துரை
சென்னையில், பெரம்பூர் - அம்பத்தூர் இடையே இரு ரயில் பாதைகள் அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது. இதற்காக ரூ. 182.01 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, சென்ட்ரலில் கூட்ட நெரிசலை தவிர்க்க, பெரம்பூரில் புதிய ரயில் முனையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Jul 18, 2025 15:31 IST
"கொடநாடு பங்களாவை நீதிபதி ஆய்வு செய்யலாம்"
கொலை, கொள்ளை நடைபெற்ற கொடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை. உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக மனுத்தாக்கல் செய்துள்ளார். அரசு தரப்பு மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
Jul 18, 2025 15:26 IST
ஒரே நிதியாண்டில் ரூ.9,742 கோடியை அள்ளிய பிசிசிஐ
2023 - 24 நிதியாண்டில் ரூ.9742 கோடியை வருமானமாக பிசிசிஐ ஈட்டியுள்ளது. இதில் ஐபிஎல் மூலமாக ரூ. 5761 கோடி(59%) பெரும் பங்கு வருமானம் கிடைத்துள்ளது. சர்வதேச போட்டிகள், ஐபிஎல் அல்லாத உள்நாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தின்மூலம் ரூ.361 கோடியை பிசிசியை ஈட்டியுள்ளது.
-
Jul 18, 2025 15:05 IST
2340 ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை; 2340 ஆசிரியர் பனியிடங்களுக்கு ஸ்டாலின் ஆணைகளை வழங்குவார். பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து ஒரு நல்ல முடிவு வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
Jul 18, 2025 15:03 IST
மழை நிலவரம்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 20 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
Jul 18, 2025 14:34 IST
எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடரில் தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை எடுத்து வைத்து நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை, கூட்டாட்சி உரிமை ஆகியவற்றைப் பாதுகாத்திட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
Jul 18, 2025 14:07 IST
ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவிய நடிகர் அக்ஷய் குமார்!
வேட்டுவம் படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்ததையடுத்து 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு நடிகர் அக்ஷ கார் இன்சூரென்ஸ் எடுத்து கொடுத்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டருக்கு விபத்து நேரிடும் பட்சத்தில் இந்த இன்சூரன்ஸ் மூலம் ரூ.5.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும்
-
Jul 18, 2025 14:04 IST
"காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிந்துபோனது; முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது"
காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிந்துபோனது; முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது; ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட வேண்டாம்; டெல்லியில் காமராஜரை கொலை செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ் இதில் வேஷம் போடுகிறது என முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பிற்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார்.
-
Jul 18, 2025 13:52 IST
தமிழக காவல் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் - அண்ணாமலை விமர்சனம்
திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி: “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துவிட்டதற்கு இது ஓர் உதாரணம்; தமிழக காவல் துறை மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 18, 2025 13:31 IST
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் முழு விவரம்; 12 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் உள்ள முன்னாள் மற்றும் தற்போதைய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது உள்ள ஊழல் வழக்குகளின் விவரங்களை வழங்குமாறு அளித்த மனு மீது 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு, தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஆதித்ய சோழன் தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்படுள்ளது.
-
Jul 18, 2025 13:25 IST
பௌத்தம், சீக்கிய மதங்களைத் தவிர வேறு மதத்தவர்களின் SC சான்றிதழ் ரத்து - தேவேந்திர ஃபட்னாவிஸ்
மகாராஷ்டிராவில் இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
-
Jul 18, 2025 13:21 IST
ஸ்விகி ஜொமேட்டோ டெலிவரி ஊழியர்களுக்கு பாண்டி பஜாரில் ஓய்வறை திறப்பு
சென்னை அண்ணா நகரை தொடர்ந்து ஸ்விகி, ஜொமேட்டோ உள்ளிட்ட டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஓய்வு அறை, பாண்டி பஜார் பகுதியிலும் இன்று திறக்கப்பட்டுள்ளது. ஏசி, கழிவறை, சார்ஜிங் வசதியுடன் 25 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வுதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, மதுரவாயில், அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் இது போன்ற ஓய்வறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
-
Jul 18, 2025 13:18 IST
பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; தீவிர சோதனை
பெங்களூருவில் வெள்ளிக்கிழமை காலை குறைந்தது 40 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததால் பெற்றோர், மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். மின்னஞ்சல்களில் வகுப்பறைகளில் வெடிகுண்டுகள் வைத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ராஜராஜேஸ்வரி நகர், கேங்கேரி, மத்திய மற்றும் கிழக்கு பெங்களூரு பகுதிகளில் உள்ள பள்ளிகள் இந்த மின்னஞ்சல் மிரட்டலுக்குள்ளாகியுள்ளன. போலீசார், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் குண்டு நீக்க குழுக்களுடன் நாய் படைகளும் பள்ளி வளாகங்களில் விரைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது வரை எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனினும் தேடுதல் நடவடிக்கைகள் தொடருகின்றன. -
Jul 18, 2025 13:14 IST
கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா? பதில் சொல்ல மாட்டேன் - தமிழிசை சௌந்தரராஜன்
பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி: “அ.தி.மு.க - பா.ஜ.க இடையே எந்தவொரு விரிசலும் இல்லை. கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா? என்பதை பெரிய தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள். டெல்லியில் உள்ள தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் பதில் சொல்லமாட்டேன்,” என கூறினார்.
-
Jul 18, 2025 12:44 IST
மோடி இல்லாவிட்டால் பா.ஜ.க 150 இடங்களில்கூட வெற்றி பெறாது - பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “மோடி இல்லாவிட்டால் பாஜக 150 இடங்களிலும் கூட வெற்றி பெற முடியாது. பா.ஜ.க என்றாலே அடுத்த 20 வருடங்களுக்கு மோடிதான் நினைவிற்கு வருகிறார். அவரது பெயரால் தான் மக்கள் ஓட்டு போடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 18, 2025 12:40 IST
ராபர்ட் வதேரா மீது குற்றப்பத்திரிகை: ராகுல் காந்தி விமர்சனம்
குருகிராம் நில விவகார வழக்கில் ராபர்ட் வதேரா மீது இ.டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “என்னுடைய மைத்துனர் ராபர்ட் வதேராவுக்கு கடந்த 10 வருடங்களாக பா.ஜ.க அரசு பல்வேறு தொல்லைகளை அளித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 18, 2025 12:37 IST
ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பி.க்கள் ஆலோசனை; கல்வி – நீதித் துறைகளில் உரிமைகளை நிலைநாட்ட தீர்மானம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவாரூர் மாவட்டம் சார்ந்த தி.மு.க மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க அரசின் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி – நீதித் துறைகளில் உள்ள உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Jul 18, 2025 12:14 IST
பா.ஜ.க-வுக்கு எதிராக சீமான் இதுவரை போராட்டமோ, மாநாடோ நடத்தியதில்லை - வன்னி அரசு விமர்சனம்
வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, “ஆடு மக்களுக்கான மாநாட்டை அடுத்து, மரங்களுக்கான மாநாட்டை நடத்துவது போல் சீமான் அறிவித்துள்ளார். ஆனால், இது ஒரு மாறுபட்ட நிகழ்வு. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வுக்கு எதிராக இதுவரை போராட்டமோ, மாநாடோ நடத்தியதில்லை. பா.ஜ.க-வின் அத்துமீறல்களை செயல்திட்டங்களையும் ஆதரித்து கள்ள மவுனம் சாதித்து வருகிறார்” எனக் குற்றம்சாட்டினார்.
-
Jul 18, 2025 12:07 IST
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: எம்.பி.க்களுடன் ஸ்டாலின் ஆலோசனை
தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அக்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் திமுக எம்.பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, மழைக்கால கூட்டத் தொடரில் தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சனைகளை உறுதியாக முன்வைத்து பேசியிட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார்.
-
Jul 18, 2025 11:23 IST
பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் - இந்தியா வரவேற்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்திய தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்தது. அந்த அமைப்பை வரையறுக்கப்பட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்த நிலையில் இந்தியா அதனை வரவேற்றுள்ளது. இது இந்தியா - அமெரிக்கா பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுவாக உறுதிப்படுத்துகிறது என அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
-
Jul 18, 2025 11:20 IST
நாளை மறுநாள் த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
விஜய் தலைமையில் நாளை மறுநாள் த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இரண்டாவது மாநில மாநாடு மற்றும் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
-
Jul 18, 2025 10:47 IST
பணம் பறிமுதல் விவகாரம் - நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு
அலகாபாத் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில், 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை அறிக்கையை வெளியிட்டது. இந்தநிலையில், நீதிபதிகள் குழுவின் பதவி நீக்க பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
-
Jul 18, 2025 10:27 IST
விஜய் கட்சியுடன் கூட்டணி? இ.பி.எஸ் பதில்
விஜய் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, 'யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது' என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்
-
Jul 18, 2025 10:25 IST
‘இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம்
‘இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம், நாளை (ஜூலை 19) மாலை காணொலி மூலம் நடைபெறுகிறது
-
Jul 18, 2025 09:54 IST
நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என நேட்டோ விடுத்த எச்சரிக்கையை நிராகரித்தது இந்தியா. இந்திய மக்களின் எரிசக்தி தேவையை பாதுகாப்பதற்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும்
வெளியுறவுத்துறை தகவல்
-
Jul 18, 2025 09:53 IST
தமிழ்நாடு நாள் - ஸ்டாலின் X பக்கத்தில் பதிவு
#தமிழ்நாடு_நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்!
— M.K.Stalin (@mkstalin) July 18, 2025
ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது.
தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த… pic.twitter.com/ja5fC8zRQ0 -
Jul 18, 2025 09:17 IST
புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ
உக்ரைன் நாட்டின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்
-
Jul 18, 2025 08:51 IST
ப வடிவ வகுப்பறை கட்டாயம் என்று சொல்லவில்லை: அன்பில் மகேஸ்
பள்ளியில் ப வடிவில் வகுப்பறை குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ப வடிவ வகுப்பறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை, ப வடிவத்தில் நடத்திப் பாருங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருக்கிறோம்.
அன்பில் மகேஸ் பேட்டி
-
Jul 18, 2025 08:27 IST
காசாவில் தினமும் 28 குழந்தைகள் கொலை
கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் தினமும் சராசரியாக 28 குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் கவலை தெரிவித்துள்ளது.
-
Jul 18, 2025 08:12 IST
ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: 12 பேர் படுகாயம்
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை கடக்க முயன்ற ஜேசிபி வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து. 12 பேர் படுகாயம்.
இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 18, 2025 08:08 IST
ரயில்வே பொறியாளர் வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை
சென்னை - நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள ரயில்வே தலைமை பொறியாளர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள நிலையில், வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள் யாரேனும் திருட்டில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 18, 2025 08:06 IST
இயக்குனர் வேலு பிரபாகரன் (68) உடல்நல குறைவால் காலமானார்
இயக்குனர் வேலு பிரபாகரன் (68) உடல்நல குறைவால் காலமானார். வேலு பிரபாகரனுக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,பத்து நாட்களாக கொட்டிவாக்கத்தில் உள்ள பிரமோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணிக்கு காலமானார்.
-
Jul 18, 2025 07:40 IST
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தினர்.
-
Jul 18, 2025 07:35 IST
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயர்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Jul 18, 2025 07:35 IST
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங் கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. -
Jul 18, 2025 07:34 IST
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பழைய டயர்கள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.