/indian-express-tamil/media/media_files/kQDRK5LBQN249lgDk2Et.jpg)
Tamil news live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் பழுது; தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சிக்னல் பழுது காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் சென்னை புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது
சென்னையில் பா.ஜ.க கொடிக்கம்பத்தை அகற்ற வந்த ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில், தலைமறைவாக இருந்த பா.ஜ.க நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி குரோம்பேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்
நாப்கினில் வைத்து கடத்திவரப்பட்ட தங்கப் பசை பறிமுதல்
நாப்கினில் வைத்து கடத்திவரப்பட்ட ரூ.37.58 லட்சம் மதிப்பிலான தங்கப் பசை திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்துள்ளது. வரும் 23ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இதற்கு முன்னதாக, 2012ம் ஆண்டு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.
போலி ஜாதிச் சான்றிதழ்: கவுன்சிலராக பதவியில் நீடிக்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் நம்மை ஒரு படி மேலே கொண்டு செல்லும்; இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திரமோடி
கொடிக்கம்பம் அகற்றம்: காவல்துறை விளக்கம்
பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய விவகாரம் - தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம். மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு கொடிக்கம்பத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பாஜகவினர் போராட்டம். பாஜகவினர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்தனர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 5 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் காவல்துறை விளக்கம்
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் முதல்கட்டமாக 33 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் முதல்கட்டமாக 33 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; முதலமைச்சர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியிலும், சச்சின் பைலட் டோங்க் தொகுதியிலும் போட்டி
பாஜகவின் 83 பெயர்களைக் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலுக்கான, பாஜகவின் 83 பெயர்களைக் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு; ஜல்ரபாதன் தொகுதியில், முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே போட்டி
ஆம்னி பேருந்துகளில் விதிமீறலை கண்டித்து அபராதம் விதிப்பு
அதிக கட்டண வசூலுத்துள்ளதாக சுமார் 4,917 ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிரடி சோதனை 900க்கும் அதிகமான ஆம்னி பேருந்துகளில் விதிமீறலை கண்டித்து அபராதம் விதிப்பு.
முட்டையை காட்டி விமர்சித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
முட்டை பெர்செண்டைல் எடுத்தா போதும் டாக்டர் ஆகிவிடலாம். நீட் PG தேர்வில் ‘0’ பெர்சண்டைல் எடுத்தாலும் முதுகலை மருத்துவ படிப்பில் சேரலாம் என ஒன்றிய அரசு அறிவித்ததை, முட்டையை காட்டி விமர்சித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு . கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு . சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நவ.1-ல் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு
நவ.1 உள்ளாட்சி தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு. கிராம சபைக் கூட்டம் மதசார்புள்ள எந்த வொரு இடத்திலும் நடக்கக் கூடாது என அறிவுறுத்தல்
இயக்குநர் ஹரியின் தந்தை மரணம்
இயக்குநர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன்(88) காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலாமானார்.
தேவர் குருபூஜையில் பங்கேற்கிறார் இபிஎஸ்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் மற்றும் 61-வது குருபூஜையில் பங்கேற்கிறார் எடப்பாடி பழனிசாமி. பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அக்.30ல் இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
100 நாட்களுக்கு 100 பா.ஜ.க கொடிக் கம்பம்
தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.
நவ.1 முதல் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
சென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே, பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெர்வித்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்
அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது - பாலச்சந்திரன். அடுத்த 3 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும். கன்னியாக்குமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு - பாலச்சந்திரன்
எதிரிகளுக்கு கண்ணியமாக பதில் தரவேண்டும் - ஸ்டாலின்
சமூக வலைதளங்களில் நாம் பதிவிடும் கருத்துக்கள் சில நொடியில் மக்களிடம் சேர்ந்து விடுகிறது - முதல்வர். நமது கருத்துகள் தமிழகத்தை தாண்டி இந்தியா முழுமைக்கும் ஒலிக்க வேண்டும். எதிரிகள் நம்மை இழிவு செய்தாலும் கண்ணியமாக பதில் தரவேண்டும் - ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழை தொடக்கம்
தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
விண்கலனை கப்பலில் சென்று மீட்ட கடற்படையினர்
ககன்யான் திட்டத்தின் மாதிரி கலனை கப்பலில் சென்று மீட்ட கடற்படையினர்
டிவி-டி1 ராக்கெட் மூலம் ககன்யான் மாதிரி கலன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
ராக்கெட்டில் இருந்து பிரிந்த மாதிரி கலன் வங்கக்கடலில் பாராசூட் மூலம் இறக்கப்பட்டது
கடலில் இறக்கப்பட்ட மாதிரி கலனை கப்பலில் சென்று கடற்படையினர் மீட்டனர்
நீட் விலக்கு இயக்கம் - ஸ்டாலின் கையெழுத்து
நீட் விலக்குக்காக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார் முதல்வர். துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆரியத்துக்கு தான் நாங்கள் எதிரி, ஆன்மிகத்திற்கு அல்ல/ கோயிலை இடித்து விட்டோம் என பொய் பரப்புகிறார்கள், 1000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி உள்ளோம் - முதல்வர்
ககன்யான் மாதிரி விண்கலத்தின் சோதனை வெற்றி
#WATCH | Sriharikota: TV D1 test flight mission director S Sivakumar says, "This is like a never before attempt. It is like a bouquet of three experiments put together. We have now seen the characteristics of all three systems with what we wanted to test through this experiment… pic.twitter.com/q0W7NUcDeF
— ANI (@ANI) October 21, 2023
டிவி- டி1 என்ற ஒற்றை பூஸ்டர் திறன் கொண்ட ராக்கெட் மூலம் மாதிரி விண்கலம் விண்ணில் 17 கி. மீ தூரத்துக்கு ஏவப்பட்டு, பின்னர் பாராசூட் மூலம் பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது.
கடலில் விழுந்த ககன்யான் பயணிகள் கலன் (Crew module) கப்பல் படையால் மீட்கப்பட்டது- இஸ்ரோ தலைவர் சோம்நாத்
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ககன்யான் TV- D1 மிஷன் ராக்கெட்
#WATCH | Sriharikota: ISRO launches test flight for Gaganyaan mission
— ANI (@ANI) October 21, 2023
ISRO says "Mission going as planned" pic.twitter.com/2mWyLYAVCS
சாதிவாரி கணக்கெடுப்பு: மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்த பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தென்மேற்கு அரபிக் கடலில் உருவானது ‘தேஜ்’ புயல்
தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் வலுப்பெறக் கூடும். 25ஆம் தேதி அதிகாலை ஓமன் – ஏமன் இடையே புயல் கரையைக் கடக்கும்.
ககன்யான் திட்டம்
Reason for the launch hold is identified and corrected.
— ISRO (@isro) October 21, 2023
The launch is planned at 10:00 Hrs. today.
ககன்யான் திட்டத்திற்கான சோதனை காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கப்படும். விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டறியப்பட்டு, சரி செய்யப்பட்டது- இஸ்ரோ அறிவிப்பு
ககன்யான் திட்டம- சோதனை ஓட்டம் ஒத்திவைப்பு
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சோதனை ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை
தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைந்த தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.
அடுத்த 3 மணி நேரத்தில் மழை
சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குகிறது. அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ககன்யான் திட்டம் தாமதம்
The lift-off is rescheduled at 08:30 Hrs. IST
— ISRO (@isro) October 21, 2023
Live streaming starts at 08:00 Hrs. IST
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட முக்கிய சோதனை ஓட்டம், வானிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கும். இதற்கான கவுன்டவுனில் 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது -இஸ்ரோ!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன்மூலம் புள்ளிப் பட்டியலில், ஆஸ்திரேலியா பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறியது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, அடுத்தடுத்த 2 போட்டிகளை வென்று முன்னேறி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.