Chennai News Updates: ஒரே ஆசிரியர் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே நேரத்தில் எப்படி பாடம் நடத்த முடியும்? - அன்புமணி கேள்வி

Tamil Nadu Latest Live News Update in Tamil 26 September 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 26 September 2025: இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PMK removes Anbumani photo from membership forms and ID cards Tamil News

Today Latest Live News Update in Tamil 26 September 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சி.என்.ஜி. ஒரு கிலோ கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

TNSET- 2024 தேர்வு முடிவுகள் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உதவி பேராசிரியர் தகுதித் தேர்வாக தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான செட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மொத்தம் 43 பாடங்களுக்கான தேர்வு முடிவுகள், இறுதி விடைக்குறிப்பு, பாடவாரியாக கட்-ஆஃப் மதிப்பெண்கள், தகுதிப் பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஆகியவை வெளியாகியுள்ளது. தேர்வர்கள் டி.ஆர்.பி. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

  • Sep 26, 2025 22:14 IST

    தமிழக அரசின் மினி பஸ் திட்டத்தை எதிர்த்த வழக்குகள் தள்ளுபடி

    தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கிராமப்புறங்களில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. கிராம மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவே மினி பஸ் திட்டம். மினி பஸ் திட்டத்துக்கு மனுதாரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய மினி பஸ் திட்டத்தால் ஏற்கனவே பஸ்கள் இயக்குபவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • Sep 26, 2025 22:13 IST

    ஜிஎஸ்டி சீர்திருத்தம் - தெலுங்கானா, கேரளா நிதியமைச்சர்கள் குற்றச்சாட்டு!

    ஜி.எஸ்.டிசீர்திருத்தத்தால்மாநிலங்களுக்குஏற்படும்வருவாய்இழப்பைஈடுசெய்யும்பிரச்சனைபற்றிசமீபத்தில்நடந்தஜி.எஸ்.டிகவுன்சில்கூட்டத்தில்விவாதிக்கப்படவேஇல்லைஎனதெலங்கானாமற்றும்கேரளமாநிலநிதியமைச்சர்கள்குற்றம்சாட்டியுள்ளனர். மாநிலஅரசுகள்ஒன்றியஅரசைசார்ந்திருப்பதைஜி.எஸ்.டிமுறைகணிசமாகஅதிகரித்துள்ளதாகவும்கூறியுள்ளனர்.

     



  • Advertisment
    Advertisements
  • Sep 26, 2025 21:51 IST

    ரஷ்யா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம்!

    ஈரானில்சுமார் 25 பில்லியன்டாலர்மதிப்பில்புதியஅணுமின்நிலையத்தைஅமைக்கரஷ்யா - ஈரான்இடையேஒப்பந்தம்போடப்பட்டுள்ளது. நீண்டகாலமாககடும்மின்சாரப்பற்றாக்குறையைஎதிர்கொண்டுவரும்ஈரானுக்குஇத்திட்டம்பெரும்உதவியாகஇருக்கும்எனகூறப்படுகிறது.

     



  • Sep 26, 2025 21:48 IST

    அருகருகே அமர்ந்திருக்கும் ஓ.பி.எஸ் மற்றும் தினகரன்

    நந்தனம் ஒய்.எம்.சி.ஏவில் நடைபெற்ற விஐடி குழும குடும்ப நிகழ்வில் அருகருகே  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் அமர்ந்து பேசினர்.



  • Sep 26, 2025 21:31 IST

    காசாவில் பிணைக் கைதிகளை ஒப்படைத்தால், போர் முடிவுக்கு வரும் - டிரம்ப்

    காசாவில் பிணைக் கைதிகளை ஒப்படைத்தால் போர் முடிவுபெறும். காசாவில் பிணைக் கைதிகளை ஒப்படைத்தால், உடனே போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



  • Sep 26, 2025 21:26 IST

    சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

    சிங்கப்பூரில்போதைப்பொருள்கடத்தல்வழக்கில்மலேசியதமிழந்தட்சிணாமூர்த்தைகாத்தையாதூக்கிலிடப்பட்டார். 45 கிராம்ஹெராயின்போதைப்பொருளுடன 2011யில்அவர்கைதுசெய்யப்பட்டார். சிங்கப்பூர்சட்டத்தின்படி 15 கிராமுக்குமேல்ஹெராயினுடன்ஒருவர்பிடிபட்டாலேஅவருக்குமரணதண்டனைவிதிக்கமுடியும்.

     



  • Sep 26, 2025 20:58 IST

    தமிழ்நாடு கல்வித் துறை மிக மோசமாக உள்ளது - அன்புமணி

    தமிழ்நாடுகல்வித்துறைமிகமோசமாகஉள்ளது. தொடக்கப்பள்ளிகளில்ஒருஆசிரியரே 5 வகுப்புகளுக்கும்பாடம்நடத்தும்சூழல்உள்ளதுஎனஅன்புமணிதெரிவித்துள்ளார்.

     



  • Sep 26, 2025 20:41 IST

    புதுச்சேரியில் தீபாவளி பரிசுத் தொகுப்பு அறிவிப்பு

    புதுச்சேரியில் 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 2 கிலோ சர்க்கரை, 1கிலோ க.பருப்பு, 2 கிலோ சமையல் எண்ணெய், அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா வழங்கப்படும். கௌரவ அட்டைதாரர்கள், அரசு ஊழியர்கள் தவிர அனைத்து அட்டைதார‌ர்களுக்கும் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.



  • Sep 26, 2025 20:34 IST

    பாலத்தை திறந்து வைத்த உதயநிதி

    சென்னை வளசரவாக்கம் மண்டலத்தில் பூந்தமல்லி சாலை மற்றும் நொளம்பூர் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 



  • Sep 26, 2025 20:03 IST

    “பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது முட்டாள்தனம்“

    பிணை கைதிகளை மீட்கும் வரை இஸ்ரேல் ஓயாது. ஹமாஸை அழிக்கும் வரை காசாவில் போர் தொடரும். காசாவில் பஞ்சத்திற்கு ஹமாஸ் உணவை திருடுவதே காரணம் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 



  • Sep 26, 2025 19:28 IST

    அரசின் ஒவ்வொரு திட்டமும் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது - ஸ்டாலின்

    நமதுஅரசின்ஒவ்வொருதிட்டமும்எத்தனைபேரின்வாழ்க்கையைமாற்றியுள்ளதுஎனநேரில்கண்டுமலைத்துப்போனேன். கலை, விளையாட்டுஎனப்பலதுறையிலும்பலசாதனையாளர்களைவாழ்த்தி, வழிகாட்டியஇந்தமேலேஏறிவாறோம்எனத்தமிழ்நாட்டின்வெற்றியைஅனைவருக்கும்பறைசாற்றியிருக்கிறதுஎனகல்வியில்சிறந்ததமிழ்நாடுவிழாகுறித்துஸ்டாலின்எக்ஸ்தளத்தில்பதிவிட்டுள்ளார்.

     



  • Sep 26, 2025 18:48 IST

    கல்வி நிதி தொடர்பான வழக்கு; தமிழக அரசு என்றும் அடிபணியாது என மத்திய அரசுக்கு பதில்

    கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டணத்தை வழங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில், அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார். அதில், தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசின் மிரட்டலுக்கு தமிழக அரசு என்றும் அடிபணியாது என்று கூறியுள்ளார்.



  • Sep 26, 2025 18:42 IST

    போரை முடிப்பதே எனது நோக்கம், மீண்டும் தேர்தலில் போட்டி இல்லை: உக்ரைன் அதிபர்

    ரஷ்யா உடனான போர் முடிந்தவுடன் தான் பதவி விலக தயாராக இருப்பதாக அறிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பதவி விலகினாலும் மீண்டும் தேர்தலில் நிற்கப்போவது இல்லை. போரை முடிப்பதே எனது நோக்கம் என்று கூறியுள்ளார்.



  • Sep 26, 2025 17:38 IST

    இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

    கோயம்புத்தூர், திருநெல்வேலி, நிலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Sep 26, 2025 17:07 IST

    2 மாதங்களில் தகுதி வாய்ந்த அதிக மகளிருக்கு கலைஞர் உரிமை தொகை- உதயநிதி

    இன்னும் 2 மாதங்களில் கூடுதலான தகுதி வாய்ந்த அதிக மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் நிச்சயம் கொடுப்பார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Sep 26, 2025 16:28 IST

    விஜய்யின் பேச்சு கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும் - நடிகர் எஸ்.வி.சேகர்


    சினிமாவில் டூயட் பாடிவிட்டு நேரடியாக எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார் என்று விஜய் நினைத்தால் விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும். அங்கிள் என்றெல்லாம் பேசுவது கைத்தட்டலுக்கு மட்டும் தான் உதவும். வாக்காக மாறாது.



  • Sep 26, 2025 16:25 IST

    ஆட்சி மாற்றம் விரும்புவோர் வரலாம் - தலைவர் ஜி.கே.வாசன்

    தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான போட்டி முன்கூட்டியே தொடங்கிவிட்டது. தமிழக மக்கள் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர். ஆட்சி மாற்றத்தை விரும்பும் யாராக இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம்.



  • Sep 26, 2025 15:57 IST

    “நாடகக் கம்பெனியின் நடிப்பு எரிச்சலூட்டுகிறது” - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

    திமுக எனும் நாடகக் கம்பெனியின் நடிப்பு எல்லை கடந்து நம்மை எரிச்சலூட்டுகிறது திரைப் பிரபலங்களை வைத்து விழா எடுத்தால் நிர்வாகத் தோல்வியை மக்கள் மறந்துவிடுவார்களா?; திராவிட மாடல் எனும் போலி பிம்பத்திற்குள் அடைத்து தமிழகத்தை அழிவை நோக்கி இழுக்க முயற்சி என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். 



  • Sep 26, 2025 15:56 IST

    "நான் சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆளில்லை" - துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின்

    நான் சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆளில்லை. பல மாவட்டங்களுக்குச் செல்கிறேன்; வாரத்திற்கு 4, 5 நாட்கள் வெளியூரில்தான் இருக்கிறேன் என்று துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Sep 26, 2025 15:30 IST

    நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு: பிரதமர் சுசிலா கார்கி அறிவிப்பு

    நேபாளத்தில் வாக்களிக்கும் வயது 18ல் இருந்து 16ஆக குறைக்கப்படுவதாக இடைக்கால பிரதமர் சுசிலா அறிவித்துள்ளார். ஊழல் அதிகரித்துவிட்டதாக ஜென் சி இளைஞர்கள் நடத்திய கிளர்ச்சியால் கே.பி.சர்மா ஒலி ஆட்சி கவிழ்ந்த நிலையில், 2026 மார்ச் மாதம் நேபாளத்தில் தேர்தல் நடைபெறுகிறது.



  • Sep 26, 2025 15:29 IST

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லை

    அமைதிக்கான நோபல் பரிசை விரும்பும் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தாண்டு பரிசு இல்லை. ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ளும், ஏதேனும் ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வரும் அக்.10 அன்று அறிவிக்கப்பட உள்ளது.



  • Sep 26, 2025 14:58 IST

    “விஜய் பெரிய நடிகர்தான்; ஆனால் அவருக்கு அனுபவம் இல்லை” - நடிகர் எஸ்.வி.சேகர்

    திமுக-வை விமர்சிக்கிறாரே தவிர, தான் என்ன செய்யப்போகிறேன் என விஜய் சொல்வதே இல்லை. அதை முதலில் சொல்ல வேண்டும். சினிமாவில் விஜய் பெரிய நடிகர்தான்; ஆனால் அரசியலில் அவருக்கு அனுபவம் இல்லை. கேரவனில் அமர்ந்துகொண்டு சிக்கன் சாப்பிடுவோருக்கு, குழந்தைகளின் பசியையாற்றும் காலை, மதிய உணவுத்திட்டங்கள் தெரியாது. முதலில் விஜய் கார் வரியை கட்டட்டும்; பின் குடும்ப ஊழல் பற்றி பேசட்டும். சினிமாவில் இருப்பவர்களெல்லாம், ஊழல் பற்றி பேசக்கூடாது என்று நடிகர் எஸ்.வி,சேகர் கூறியுள்ளார். 



  • Sep 26, 2025 14:51 IST

    “சாகும்வரை உதவுவதை நிறுத்த மாட்டேன்” – KPY பாலா

    "நான் செய்து வரும் உதவியை சாகும் வரை நிறுத்த மாட்டேன். என்னுடைய வேலையே, என்னிடம் இருப்பதை கடைசி வரை கொடுத்துக்கொண்டே இருப்பதுதான்; அது தொடர்ந்து கொண்டே இருக்கும். முடிவே இல்லை என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் கொடுப்பேன்” என்று கேபிவை பாலா தெரிவித்துள்ளார். 



  • Sep 26, 2025 14:39 IST

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. திட்டங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சீமான் கருத்து தெரிவித்த விவகாரத்தில், 2018ல் கூட்டத்தில் தமிழ் ஈழம், நீயூட்ரினோ, சேலம் 8 வழிச் சாலை திட்டம் அரசுக்கு எதிராக சீமான் கருத்து தெரிவித்திருந்தார். சீமானின் பேச்சு கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக கூறி துணை காவல் ஆய்வாளர் புகார் தெரிவித்து இருந்தார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரியும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சைதை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



  • Sep 26, 2025 14:27 IST

    6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.  அடுத்த 24 மணி நேரத்தில், ஒடிசா, ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் 27ம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். கோவை, நெல்லை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி,  தென்காசி, குமரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.  27ம் தேதி கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Sep 26, 2025 14:19 IST

    மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கிடைக்கும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

    மகளிர் உரிமைத் தொகை இன்னும் அதிகப்பேருக்கு கிடைக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை சென்றடைய விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை அதிகம் பேருக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத் தொகையை 90% சதவீதம் மக்கள் மருத்துவத்துக்கு பயன்படுத்துகின்றனர் என அவர் தெரிவித்தார்.



  • Sep 26, 2025 13:59 IST

    இளையராஜாவின் காப்புரிமை வழக்கு: வருமான விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

    “இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    "சென்னை உயர்நீதிமன்ற தடை உத்தரவை மதிக்காமல் தன்னுடைய பாடல் படைப்புகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவதாகவும் தனது அனுமதி இன்றி தன்னுடைய பாடல்களை பல்வேறு வடிவங்களில் மாற்றி பயன்படுத்தி வருவதாகவும் இளையராஜா குற்றம்சாட்டியுள்ளார். 

    சோனி நிறுவனம் தனது பாடல்களை தவறாக பயன்படுத்தி வருமானம் ஈட்டி வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இளையராஜா பாடல்களை வணிகரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்த விவரங்கள், வரவு செலவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணை அக்டோபர் 22ம் தேதிக்கு  தள்ளி வைத்தது.



  • Sep 26, 2025 13:59 IST

    த.வெ.க கொடிக்கு தடை கோரி மேல்முறையீட்டு மனு; விஜய் 6 வாரங்களில் பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் 

    த.வெ.க கொடிக்கு தடை கோரும் மேல்முறையீட்டு மனு மீது விஜய் 6 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. த.வெ.க கொடிக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மனு தாக்கல் செய்துள்ளது; கோரிக்கைகளை தனி நீதிபதி முறையாக பரிசீலிக்காமல் த.வெ.க கொடிக்கு தடை விதிக்காமல் உத்தரவு பிறப்பித்தார் என மனுதாரர் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுடைய கொடியைப் போல் இருப்பதால் விஜய் கட்சிக் கொடுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



  • Sep 26, 2025 13:16 IST

    தமிழ்நாட்டின் அடுத்த டி.ஜி.பி யார்? யு.பி.எஸ்.சி உறுப்பினருடன் ஆலோசனை

    தமிழ்நாட்டின் டி.ஜி.பி-யாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31 ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த டி.ஜி.பி யார் என்பது குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆலோசனை நடத்தினர்.

    முன்னதாக, பொறுப்பு டி.ஜி.பி-யாக காவல்துறை அதிகாரி வெங்கட்ராமன் தமிழ்நாட்டு அரசு நியமித்திருந்த நிலையில், அந்த நியமனம் உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மீறுவதாக கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.



  • Sep 26, 2025 13:13 IST

    ‘டூயட் பாடிவிட்டு அரசியலுக்கு வரவில்லை எம்.ஜி.ஆர்’; விஜய் மீது நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சனம்

    நடிகர் எஸ்.வி. சேகர், “கோடம்பாக்கத்திலிருந்து நேரடியாக கோட்டைக்கு வந்தவர் இல்லை எம்.ஜி.ஆர். தி.மு.க-வின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து, பின் சிறு பிரச்னையால் தனிக் கட்சி ஆரம்பித்தவர். சினிமாவில் டூயட் பாடிவிட்டு, நேரடியாக எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார் என விஜய் நினைத்தால் விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனப்பாடம் செய்து பேசுவது  ‘அங்கிள்’ என்றெல்லாம் பேசுவது கைத்தட்டலுக்கு மட்டுமே உதவும். வாக்காக மாறாது” என்று விமர்சித்தார். 



  • Sep 26, 2025 12:21 IST

    அரசின் கல்வி விழா இசை வெளியீட்டு விழா போல நடந்துள்ளது -சீமான் விமர்சனம்

    சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “கல்வியில் சிறந்த தமிழ்நாட்டு நிகழ்ச்சியில், கல்வியில் சிறந்த பேரறிஞர்களா பங்கேற்றனர்? கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் பேச வைக்கப்படாதது ஏன்? நேற்று நடைபெற்ற விழா, கல்வி விழா போன்று இல்லாமல், ஒரு இசை வெளியீட்டு விழா போன்று நடத்தப்பட்டுள்ளது.

    பள்ளி ஆண்டு விழாவில் மாறுவேடம் போட்டுப் பேசுவது போல, நேற்று நாடகம் நடத்தியுள்ளனர். இது திராவிட மாடல் அல்ல, வெறும் விளம்பர மாடல்” என்று விமர்சித்தார்.



  • Sep 26, 2025 11:53 IST

    இன்றுடன் மிக்-21 போர் விமானம் ஓய்வு

    60 ஆண்டு சேவைக்கு பின் மிக்-21 போர் விமானம் இன்றுடன் ஓய்வு பெறுகிறது. சண்டிகர் விமானப்படை தளத்தில் பிரியாவிடை நிகழ்வு நடைபெறுகிறது. 1963ல் விமானப்படையில் சேர்க்கப்பட்டதில் இருந்து ராணுவ நடவடிக்கைகளில் மிக்-21 முக்கிய பங்கு வகித்தது. மிக்-21 ரக போர் விமானங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கியதால் இன்றுடன் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது



  • Sep 26, 2025 11:11 IST

    விடுமுறை நாட்களில் பள்ளி நடத்தினால் நடவடிக்கை - தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை

    பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மேலும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை 9 நாள்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 6 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்கும். இதனிடையே விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது



  • Sep 26, 2025 10:49 IST

    சென்னை ஐகோர்ட், டி.ஜி.பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னையில் உயர் நீதிமன்றம், டி.ஜி.பி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பொதுமக்களும் அலுவலர்களும் பீதி அடைந்துள்ளனர்



  • Sep 26, 2025 10:05 IST

    தபாங் டெல்லி வெற்றி!

    புரோ கபடி லீக்: பெங்களூரு புல்ஸ் - யூபி யோத்தாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 36-36 என்ற புள்ளிக் கணக்கில் டிராவில் முடிந்த நிலையில், கோல்டன் ரைடில் யூபி யோத்தாஸ் வெற்றி; மற்றொரு ஆட்டத்தில் 47 - 26 என்ற புள்ளிக் கணக்கில் யூ மும்பாவை வீழ்த்தியது தபாங் டெல்லி.



  • Sep 26, 2025 09:54 IST

    தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பால் கொள்முதல்

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 1.68 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரிப்பு. ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு ரூ.636 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆவினில் தயாரிக்கும் இனிப்பு வகைகளின் தீபாவளி விற்பனையை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 

    - சென்னையில் நடந்த ஆய்வு கூடத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு.



  • Sep 26, 2025 09:40 IST

    நிரந்தர நீதிபதிகள் இன்று பதவியேற்பு

    சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார், அருண்முருகன் இன்று பதவியேற்கின்றனர். ஐகோர்ட் நிரந்தர நீதிபதிகளாக இருவருக்கும் தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸவா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.



  • Sep 26, 2025 09:33 IST

    மன்மோகன் சிங் பிறந்ததினம்- மோடி அஞ்சலி

    மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறேன். நீண்ட ஆண்டுகள் மன்மோகன்சிங் நமது நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பை நினைவு கூறவேண்டும்.

    - பிரதமர் மோடி



  • Sep 26, 2025 09:14 IST

    வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது

    மத்திய வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. 

    நாளை (27ம் தேதி) காலையில் தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கக்கூடும். 

    -வானிலை ஆய்வு மையம் கணிப்பு.



  • Sep 26, 2025 09:03 IST

    சந்திப்பு

    வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிப் முனீர் சந்தித்து பேசினர்.



  • Sep 26, 2025 08:48 IST

    மருந்து பொருட்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

    அக்டோபர் 1ஆம் தேதி முதல், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்

    - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.



  • Sep 26, 2025 08:48 IST

    இன்றுடன் விடைபெறும் மிக்-21 ரக போர் விமானங்கள்

    60 ஆண்டுகளாக இந்திய விமானப்படையின் முக்கிய இடம் வகித்த மிக் 21 ரக போர் விமானங்களுக்கு இன்றுடன் ஓய்வு பெறுகின்றன. பாகிஸ்தான் போர் முதல், கார்கில் போர், ஆபரேஷன் சிந்தார் வரை 'வானின் காவலன்' (மிக் 21) ரக விமானங்கள் அனைத்திலும் பங்காயற்றியவை.



  • Sep 26, 2025 08:27 IST

    திறந்து இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடிய 3 பேர் கைது

    சென்னை கண்ணகி நகர் பகுதியில் இரவு நேரத்தில் திறந்து இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடிய அதே பகுதியை சேர்ந்த கௌதம், ராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



  • Sep 26, 2025 08:15 IST

    இன்று 3 மணி நேரம் மின்சார ரயில்கள் ரத்து

    பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - விழுப்புரம் வழித்தடத்தில் இன்று காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மூன்று மணி நேரத்திற்கு 12 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

    -தெற்கு ரயில்வே அறிவிப்பு



  • Sep 26, 2025 07:48 IST

    குமரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 



  • Sep 26, 2025 07:46 IST

    ஆசிய கோப்பை: இந்தியா Vs இலங்கை மோதல்

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. தொடரில் இதுவரை தோல்வியே காணாத இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது. 



  • Sep 26, 2025 07:32 IST

    இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்

    ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

    ஆசிய கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. நடப்பு தொடரில் பாகிஸ்தானை இருமுறை இந்தியா வென்ற நிலையில், வரும் 28-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.



  • Sep 26, 2025 07:31 IST

    தமிழகத்தில் அக்.1 வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (செப்.26) முதல் அக்.1ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (செப்.27-ம் தேதி) கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Sep 26, 2025 07:30 IST

    பயத்தை ஏற்படுத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின்

    கல்வியில் தமிழ்நாடு பெற்றிருக்கும் எழுச்சியை இந்தியாவின் பல மாநிலங்கள் திரும்பிப் பார்க்கிறது; நம் திட்டங்களை பிற மாநிலத்தில் செயல்படுத்த ஆய்வு செய்கின்றனர்; இந்த எழுச்சியை பொறுக்க முடியாமல் கல்விக்கு தடை ஏற்படுத்த மத்தியில் நினைக்கிறார்கள்; நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும்; நம் திட்டங்களாலும் மாணவர்களின் சாதனையாலும் அது நடக்கும் - கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் மு.க. ஸ்டாலின் பேச்சு



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: