Chennai News Updates: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

Tamil Nadu Latest Live News Update in Tamil 29 September 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 29 September 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Secretariate x

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

Today Latest Live News Update in Tamil 26 September 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Sep 29, 2025 21:45 IST

    அக்.2-ல் நடைபெறும் கிராமசபைக் கூட்டம் ஒத்திவைப்பு

    காந்தி ஜெயந்தி நாளில் நடைபெறும் கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. "காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையால் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை குறையும் என்ற கணிப்பால், அக்-2.க்கு பதில் அக்-11 ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



  • Sep 29, 2025 20:29 IST

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம்: அரசு உத்தரவு

    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி இணை ஆணையராக க‌ற்பகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநராக அண்ணாதுரை நியமனம், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையரத்தின் ஆணையராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Sep 29, 2025 20:21 IST

    எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி

    கரூர் த.வெ.க. கூட்டநெரிசல் குறித்து சமூக வலைதளத்தில் எந்த மாதிரி சதிக் கோட்பாட்டுக் கதைகள் பரவி வருகின்றன என எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? அதிமுக ஐ.டி. விங்கிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார். ஜெயலலிதா பொம்மையை வைத்து பரப்புரை செய்த வரலாற்றை எழுதியது நீங்கள். இதுபோன்ற நாடகங்களை நடத்தி பழக்கப்பட்ட உங்களுக்கு எல்லாமே போட்டோஷூட்டாகத்தான் தெரியும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார். 



  • Sep 29, 2025 20:17 IST

    சென்னையில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்

    கம்போடியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3.5 கிலோ கொக்கைன் பறிமுதல், இதன் மதிப்பு ரூ.35 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி, மும்பையைச் சேர்ந்த இருவரை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



  • Sep 29, 2025 20:07 IST

    மேக் இன் இந்தியா பொருட்கள் - மோடி வலியுறுத்தல்

    ஒவ்வொரு கடையின் முன்பும் இந்திய தயாரிப்பு பொருட்கள் குறித்த அறிவிப்பு பலகை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெளிநாட்டுப் பொருட்களைச் சார்ந்திருப்பது குறையும் போது நாட்டிற்கு நல்லது. வணிகர்கள், பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • Sep 29, 2025 20:06 IST

    “காந்தாரா சாப்டர் 1” படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ரத்து

    சென்னையில் நாளை நடைபெற இருந்த ‘காந்தாரா சாப்டர்-1’ பட புரமோஷன் நிகழ்ச்சியை படக்குழு ரத்து செய்துள்ளது. கரூர் துயர சம்பவத்தை அடுத்து ‘காந்தாரா சாப்டர்-1’ பட புரமோஷன் நிகழ்ச்சி ரத்து செய்துள்ளது. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. உரிய நேரத்தில் தமிழக ரசிகர்களை சந்திப்போம் என 'காந்தாரா' படக்குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



  • Sep 29, 2025 20:06 IST

    9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி, தென்காசி, நெல்லை மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 29, 2025 19:17 IST

    அக்.1 முதல் ஸ்பீடு போஸ்ட் கட்டணம் உயர்வு: அஞ்சல்துறை

    அக்.1ம் தேதி முதல் ஸ்பீடு போஸ்ட் கட்டணம் உயர்த்தப்படுவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது. நடைமுறைச் செலவுகள் அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்படுவதாக அஞ்சல்துறை விளக்கம் அளித்துள்ளது. உள்ளூர் தபாலுக்கு இதுவரை ரூ.15ஆக இருந்த கட்டணம் அக்.1 முதல் ரூ.19ஆக உயர்த்தப்படுகிறது



  • Sep 29, 2025 19:13 IST

    கரூர் கூட்ட நெரிசல்: புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்படுகிறாரா?

    கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்குப்பதிவான நிலையில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணைக்கு வராவிட்டால் 3 பேரையும் கைது செய்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு த.வெ.க.வினர் இதுதொடர்பான வழக்கில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Sep 29, 2025 19:07 IST

    தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

    பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இன்று இரவு 7.45, 8.10 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. விடுமுறைக்காக சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்வோர் வசதிக்காக ரயில் இயக்கப்படுகிறது.



  • Sep 29, 2025 19:05 IST

    கரூர் த.வெ.க. கூட்டத்தில் சிக்கி காயமடைந்த 51 பேர் டிஸ்சார்ஜ்

    கரூர் விஜய் கூட்ட நெரிசலில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 110 பேரில் 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள 51 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் மூன்று தனியார் மருத்துவமனைகளிலும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 29, 2025 19:03 IST

    கரூர் சம்பவம் - வதந்தி பரப்பிய 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு

    கரூர் த.வெ.க. பிரச்சார கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த சகாயம், த.வெ.க. நிர்வாகிகள் சிவநேசன், சரத்குமார் ஆகிய மூவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 29, 2025 18:47 IST

    சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது



  • Sep 29, 2025 18:45 IST

    பா.ஜ.க.,வின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் மோடி

    டெல்லியில் அமைக்கப்பட்ட பா.ஜ.க.,வின் புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். புதிய கட்டிட திறப்பு விழாவில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்



  • Sep 29, 2025 18:24 IST

    சென்னை மண்டலங்களில் 50 கோயில்களுக்கு குடமுழுக்கு – சேகர்பாபு

    சென்னை மண்டலங்களில் 50 கோயில்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்



  • Sep 29, 2025 18:23 IST

    அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை - பியூஸ் கோயல்

    அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள கத்தார், பஹ்ரான் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்



  • Sep 29, 2025 17:57 IST

    கரூர் சம்பவம் – ஆண்ட்ரியா இரங்கல்

    கரூரில் நடத்த விபத்தில் குழந்தைகள் பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தது பெருந்துயர் அளிக்கிறது. உறவுகளை இழந்து வாடும் அவர்களது உற்றார் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்து கொள்வதோடு, படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் முழுவதும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இயற்கையை வேண்டுகிறோம் என மாஸ்க் படக்குழுவினருடன் இணைந்து நடிகை ஆண்ட்ரியா இரங்கல் தெரிவித்துள்ளார்



  • Sep 29, 2025 17:48 IST

    கரூர் சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு

    கரூர் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்ட நெரிசல் விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது



  • Sep 29, 2025 17:42 IST

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து க்றிஸ் வோக்ஸ் ஓய்வு

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் க்றிஸ் வோக்ஸ் அறிவித்துள்ளார்.



  • Sep 29, 2025 17:24 IST

    தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,140 உயர்வு

    தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது. தற்போது ஓரு கிராம் தங்கம் 10770 ரூபாய்க்கும், சவரன் 86160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது



  • Sep 29, 2025 17:11 IST

    பிரதமரே கரூருக்கு வந்து ஒவ்வொருவரிடம் பேச விரும்பினார் - நிர்மலா சீதாராமன்

    பிரதமரே கரூருக்கு வந்து ஒவ்வொருவரிடம் பேச விரும்பினார். ஆனால் அவர் வரமுடியாத காரணத்தினால் நான் வந்திருக்கிறேன் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்



  • Sep 29, 2025 16:57 IST

    கூடுவாஞ்சேரிக்கு இரு சிறப்பு மின்சார ரயில்கள்

    ஆயுதப் பூஜையை ஒட்டி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் வசதிக்காக இன்று இரவு தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும்

    -தெற்கு ரயில்வே அறிவிப்பு



  • Sep 29, 2025 16:56 IST

    கரூர் துயர சம்பவம்: உடற்கூராய்வில் அதிர்ச்சி தகவல்

    கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் அறிக்கையின்படி, உயிரிழந்தவர்களில் 25 பேர் மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு விலா எலும்புகள் கடுமையாக உடைந்து, அதன் காரணமாக உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு மரணம் நிகழ்ந்திருக்கிறது. 2 முதல் 3 நிமிடங்களுக்கு மேல் மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டதே அதிக உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



  • Sep 29, 2025 16:32 IST

    எதிர்ப்பு

    வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பான தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறியது. பீகாரைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் செய்ய ஆணையம் திட்டமிட்டுள்ளது. 



  • Sep 29, 2025 16:20 IST

    கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர், பாதித்தோரை விஜய் சந்திக்காதது வருத்தம்- சனம் ஷெட்டி

    கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டோரை தவெக தலைவர் விஜய் சந்திக்காதது வருத்தம் அளிக்கிறது. தவெக பரப்புரைத் திட்டத்தை மாற்றி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.

    - நடிகை சனம் ஷெட்டி



  • Sep 29, 2025 15:47 IST

    கரூர் கூட்ட நெரிசல்: ஹேமமாலினி தலைமையில் குழு அமைத்தது தே. ஜ. கூட்டணி

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தைப் பார்வையிடவும், பாதிக்கப்பட்டோரைச் சந்தித்து விசாரிக்கவும், அறிக்கை அளிக்கவும் பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையில் குழு அமைத்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி. தே.ஜ.கூ. எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.



  • Sep 29, 2025 15:45 IST

    தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு

    கரூர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் தாக்கப்பட்டது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஈஸ்வரமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    மயங்கி விழுந்தவர்களைச் செல்லவே வந்தேன் எனத் தெரிவித்திருக்கும் ஓட்டுநர், 10-க்கும் மேற்பட்டவர்கள் தன்னைத் தாக்கியதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.



  • Sep 29, 2025 15:39 IST

    கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

    "என்னையும், அமைச்சர் எல்.முருகனையும் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் மோடி அனுப்பி வைத்தார். அவர் வர விருப்பப்பட்டாலும், வர முடியாத சூழலால் எங்களை அனுப்பி வைத்துள்ளார்
    வேதனையை கூறி அழுபவர்களிடம் ஆறுதல் கூற வார்த்தைகளே இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் கூறியதை பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் தெரிவிப்பேன்.

    நான் இங்கே வந்தது மாநில அரசு என்ன செய்தது? விசாரணை ஆணையம் என்ன சொல்கிறது? என்று பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அல்ல. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து வருமாறு பிரதமர் மோடி சொன்னார். அதற்காக வந்துள்ளோம். இதில் வேறு எதுவும் இல்லை"

    - கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி



  • Sep 29, 2025 15:38 IST

    விஜய்யுடன் சந்திப்பா? - குருமூர்த்தி மறுப்பு

    நடிகர் விஜய்யும் தானும் சுமார் 3 மணி நேரம் ரகசியமாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என்று ஆடிட்டர் குருமூர்த்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.



  • Sep 29, 2025 15:23 IST

    பத்திரப்பதிவு பாதிப்பு

    தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறை இணையதளம் முடங்கியது



  • Sep 29, 2025 15:22 IST

    விஜய் வருகையில் தாமதம் இல்லை- த.வெ.க. வழக்கறிஞர்

    "விஜய் வந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து வந்தவர்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதால்தான், விஜய் மெதுவாக வந்தார். அது ஒரு பிரச்சினையே இல்லை"


    கரூர் கூட்டத்திற்கு விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்தது குறித்த கேள்விக்கு, த.வெ.க. வழக்கறிஞர் அறிவழகன் பதில்.



  • Sep 29, 2025 15:18 IST

    கரூர் நெரிசல்: சமூக வலைதள பதிவுகளை ஆராயும் போலீஸ்

    கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சமூக வலைதள பதிவுகள், பதிவிட்டவர்களின் காணொளிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தேவைப்பட்டால் கரூர் அசம்பாவிதம் குறித்து பதிவிட்டவர்களையும் விசாரிக்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது. 

     - தமிழ்நாடு அரசு



  • Sep 29, 2025 14:44 IST

    பிரசார கூட்டம் - புதிய விதிகள் வகுக்கப்படும்: ஸ்டாலின் 

    "அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த விதிகள் வகுக்கப்படும். பிரசார கூட்டங்களுக்கான விதிகள் வகுக்கப்படும் அனைவரும் மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டும். தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Sep 29, 2025 14:34 IST

    அமைச்சருக்கு ஆஸ்கர் தரலாம்; சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல் 

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் , "கரூர் கூட்ட  நெரிசல் உயிரிழப்புகள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களே விசாரிக்கக்கூடாது: சிபி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

    கரூரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற  பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி  40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, இந்த பரிதாப மரணங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களை குழி தோண்டி புதைக்க சதி நடக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. அப்பாவி மக்கள் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  அதன் பின்னணியில் உள்ள மரமங்களை மறைக்கத் துடிப்பது  கண்டிக்கத்தக்கது.

    கரூர் நெரிசல் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணம் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், அந்த பரப்புரைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்,  காவல்துறையினர், பரப்புரைக் கூட்டத்திற்கு வந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடமைகளை மறந்து பொறுப்பின்றி செயல்பட்டது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக காவல்துறை மீது தான் அதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

    காவல்துறையினர் நினைத்திருந்தால் கரூரில் நடிகர் விஜய் பரப்புரை செய்வதற்கு கூடுதல் பரப்பளவுள்ள  இடத்தை ஒதுக்கியிருக்கலாம்;  எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கூட்டம் கூடிய நிலையில் கூடுதலாக வருபவர்களை நகரத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து அனுப்பியிருக்கலாம். ஆனால், இவை எதையும்  காவல்துறை செய்யாதது தான் விபத்துக்கு வழி வகுத்ததாகக் கூறப்படுகிறது. கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு  தொடர்பே  இல்லாமல் அவசர ஊர்திகள் வந்தது போன்று கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்குப் பின்னணியில் சில சதிகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள்  எழுப்பப்பட்டுள்ளன.

    இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா? என்பது புலன் விசாரணையில் தான் தெரியவரும். ஆனால், விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே கரூரில்  செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர், காவல்துறை மீது எந்தத் தவறும் இல்லை; அனைத்துத் தவறுகளும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள்  மீது தான் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

    தமிழக காவல்துறையின் உயர்பதவியில் இருப்பவரே இவ்வாறு கூறிவிட்ட நிலையில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள  விசாரணை அதிகாரியால் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வாறு நியாயமான விசாரணை நடத்த முடியும். காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் என்ன கூறினாரோ, அதை வலுப்படுத்தும் வகையில் தான்  விசாரணை நகரும். அப்படி நடந்தால் இந்த பரிதாப மரணங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களும், ஏதேனும் சதி இருந்தால் அதுவும் மூடி மறைக்கப்படும். அது நல்லதல்ல.

    ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும்  உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.  அதற்கு இந்த நிகழ்வில் குற்றச்சாட்டப்பட்டுள்ள தமிழகக் காவல்துறையினரே இந்த வழக்கின் புலன் விசார்ணையை நடத்தக் கூடாது. எனவே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்து  சி.பி.ஐ.  விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்." என்று தெரிவித்துள்ளர்.  



  • Sep 29, 2025 13:49 IST

    உயிரிழந்தவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், அவர்கள் நம் தமிழ் உறவுகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    உயிரிழந்தவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள். விசாரணை ஆணைய அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



  • Sep 29, 2025 13:39 IST

    விரக்தியில் பாக்கிஸ்தான் கேப்டன் செய்த செயல்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் ரன்னர் அப் பரிசுத் தொகைக்கான காசோலை மாதிரியை பாகிஸ்தான் அணியின் கேப்டன் தூக்கி வீசி சென்றார்.



  • Sep 29, 2025 13:08 IST

    உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த நிர்மலா சீதாராமன் - எல்.முருகன்

    கரூரில் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 வயது சிறுவன் கிருத்திகின் குடும்பத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர் 



  • Sep 29, 2025 12:33 IST

    த.வெ.க மனுவை இன்று ஏற்க நீதிமன்றம் மறுப்பு

    கரூரில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் த.வெ.க. மனுவை இன்று ஏற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மனுவை நாளை தாக்கல் செய்ய அறிவுறுத்திய நிலையில் வெள்ளிக் கிழமை தான் விசாரணை நடத்தப்படும் என்று பதிவாளர் கூறியுள்ளார்.



  • Sep 29, 2025 12:25 IST

    பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு சென்ற த.வெ.க தலைவர் விஜய்

    நீலாங்கரை இல்லத்தில் இருந்து பட்டினம்பாக்கம் இல்லத்திற்கு சென்ற த.வெ.க தலைவர் விஜய்யின் பாதுகாப்பிற்காக போலீசார் வருகை தந்தனர்.

     

     

     



  • Sep 29, 2025 12:09 IST

    கரூரில் த.வெ.க கூட்டம் நடைபெற்ற இடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

    கரூரில் நடைபெற்ற த.வெ.க பரப்புரையின் போது 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், த.வெ.க கூட்டம் நடைபெற்ற இடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு.



  • Sep 29, 2025 11:52 IST

    ராகுலுக்கு கொலை மிரட்டல்: மகாதேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம்

    ராகுல் காந்தி நெஞ்சில் சுட்டுக் கொல்லப்படுவார் என்ற பாஜக நிர்வாகியின் மிரட்டல் பற்றி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.வி. நிகழ்ச்சியில் பாஜக செய்தித் தொடர்பாளர் பின்டு மகாதேவ் நேரடியாகவே ராகுலுக்கு மிரட்டல் விடுத்தார். வாய் தவறியோ, உணர்ச்சி வேகத்திலோ மகாதேவ் பேசவில்லை, திட்டமிட்ட மிரட்டல் அது என காங்கிரஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. கொலை மிரட்டல் விடுத்த மகாதேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமித் ஷாவுக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியது.



  • Sep 29, 2025 11:41 IST

    கரூர் துயரம்: வெள்ளியன்று ஐகோர்ட் விசாரணை

    கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக வெள்ளியன்று ஐகோர்ட் கிளை விசாரணை நடத்த உள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு விசாரணை நடத்துகிறது.



  • Sep 29, 2025 11:40 IST

    தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு

    தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு மேற்கொண்டார். சி.வி.சண்முகம் அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணன் மகனின் திருமண அழைப்பிதழ் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது.



  • Sep 29, 2025 11:28 IST

    முதல்வரை சந்திக்கிறார் பொறுப்பு டிஜிபி

    கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்திக்கிறார் பொறுப்பு டிஜிபி. விசாரணை நிலை குறித்து முதல்வரிடம் டிஜிபி விளக்கம் அளிக்கிறார்



  • Sep 29, 2025 11:21 IST

    ஐ டி துறையில் தொடரும் பணிநீக்கம்

    பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆக்ஸெஞ்சேர் கடந்த 3 மாதத்தில் உலகம் முழுவதிலும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஏ ஐ -யின் தாக்கம், நிறுவன மறுசீரமைப்பு ஆகியவை இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.



  • Sep 29, 2025 10:33 IST

    ராகுல் காந்தி - விஜய் தொலைபேசியில் பேச்சு

    கரூரில் பிரசார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானது குறித்து விஜயிடம் கேட்டறிந்தார் ராகுல் காந்தி. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸின் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Sep 29, 2025 10:12 IST

    வீட்டை விட்டு வெளியே வந்தார் விஜய்

    கரூர் துயர சம்பவம் நடந்து 34 மணி நேரத்துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தார் தவெக தலைவர் விஜய்! சனிக்கிழமை இரவு வீட்டிற்குள் சென்ற விஜய் இன்று வெளியே வந்துள்ளார்.



  • Sep 29, 2025 10:04 IST

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விசாரணை அதிகாரி மாற்றம்

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக கூடுதல் எஸ்.பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவெ டி.எஸ்.பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட நிலையில், தற்போது டி.எஸ்.பியை விட கூடுதல் அதிகாரியான எஸ்.பி.விசாரணை அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



  • Sep 29, 2025 09:39 IST

    சென்னை ஓட்டேரியில் போலீஸ் கீழே தள்ளியதில் வங்கி அதிகாரி உயிரிழப்பு என புகார்

    சென்னை ஓட்டேரியில் காரில் சென்ற வங்கி அதிகாரியை போலீசார் நிறுத்தியபோது த‌கராறு ஏற்பட்டதில், போலீஸ்கார‌ர் கீழே தள்ளியதில் வங்கி அதிகாரி மரணமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குடிபோதையில் மயங்கி கிடந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Sep 29, 2025 08:35 IST

    டாஸ்மாக் கடை ஷட்டரில் துளையிட்டு கொள்ளை முயற்சி

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தச்சூரில் டாஸ்மாக் கடை ஷட்டரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வினோத்(30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை ரோந்து பணியின் போது டாஸ்மாக் கடையில் திருட முயன்ற வினோத்தை பிடித்து  கவரைப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: