Chennai News Live Updates: மதுவிலக்கு கோரி தீர்மானம் இயற்றுங்கள் - அன்புமணி

Tamil Nadu Latest Live News Update in Tamil 30 September 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 30 September 2025: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PMK removes Anbumani photo from membership forms and ID cards Tamil News

Today Latest Live News Update in Tamil 30 September 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

லண்டனில் காந்தி சிலை சேதம் - இந்திய தூதரகம் கண்டனம்

லண்டனின் டேவிஸ்டாக் சதுக்கத்தில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அங்கு காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்க இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது,

  • Sep 30, 2025 10:58 IST

    விஜய்குமார் மல்ஹோத்ரா காலமானார்

    பாஜக மூத்த தலைவரான விஜய்குமார் மல்ஹோத்ரா (93) டெல்லியில் நேற்று காலமானார். 7 முறை நாடாளுமன்ற உறுப்பினர், 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் விஜய்குமார் மல்ஹோத்ரா; அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 



  • Sep 30, 2025 10:20 IST

    மதுவிலக்கு கோரி தீர்மானம் இயற்றுங்கள் - அன்புமணி

    காந்தி பிறந்தநாளில் மதுவிலக்கு, போதை ஒழிப்பு |கோரி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் தேவை மது, போதைக் கலாசாரத்தை ஒழிக்காவிட்டால் இந்த தலைமுறை இளைஞர்களை காப்பாற்ற முடியாது; மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுக என்று அன்புமணி கூறியுள்ளார். 



  • Advertisment
    Advertisements
  • Sep 30, 2025 10:08 IST

    ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,880-க்கு விற்பனை

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,860க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.161-க்கு விற்பனையாகிறது.



  • Sep 30, 2025 10:07 IST

    தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    தமிழ்நாடு அரசு திட்டத்தில் தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. வயதான தமிழறிஞர்கள் 150 பேருக்கு மாதம் ரூ.8000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://tamilvalarchithurai.org/agavai என்ற இணையதளம் மூலம் தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். உதவித் தொகை பெற 58 வயது, ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள் இருக்கவேண்டும்.



  • Sep 30, 2025 09:05 IST

    பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு விண்ணபிக்க இன்று கடைசி நாள்

    அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் (B.Ed, M.Ed) படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பி.எட், எம்.எட் (B.Ed, M.Ed) படிப்புகளுக்கு காலியாக உள்ள 579 இடங்களுக்கு http://tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.



  • Sep 30, 2025 09:03 IST

    ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

    ஆயுத பூஜை - கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி,எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு - எழும்பூர் சிறப்பு ரயில் இன்று இரவு 10.15 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்படும்.  மறு மார்கத்தில் அக் 5, மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தாம்பரம் - செங்கோட்டை ஒருவழி முன்பதிவு இல்லா அதிவிரைவு ரயில் இன்று மாலை 4.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். சென்னை எழும்பூர் - மதுரை ஒருவழி மெமு எக்ஸ்பிரஸ் இன்று இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.



  • Sep 30, 2025 08:17 IST

    ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து வழக்கு - இன்று தீர்ப்பு

    இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்த நிலையில், சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது



  • Sep 30, 2025 08:16 IST

    அமெரிக்க அதிபர் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் சந்திப்பு

    அமெரிக்க அதிபர் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்திப்பு. காசாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்



  • Sep 30, 2025 07:24 IST

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கவுகாத்தியில் நடைபெறும் முதல் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.



  • Sep 30, 2025 07:22 IST

    ஆயுத பூஜை விடுமுறை - சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

    ஆயுத பூஜை விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு இன்று மாலை 4.15 மணிக்கும், எழும்பூரில் இருந்து மதுரைக்கு இரவு 11.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.



  • Sep 30, 2025 07:21 IST

    கரூர் துயர சம்பவம் - சீனா இரங்கல்

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்



  • Sep 30, 2025 07:20 IST

    கங்கனா ரனாவத் நேரில் ஆஜராக பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவு

    பஞ்சாப் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த மஹிந்தர் கவுர் பற்றி சமூகவலைதளத்தில் கங்கனா ரனாவத் கருத்து பகிர்ந்த விவகாரம் தொடர்பான அவதூறு வழக்கில், நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் காணொளி மூலம் ஆஜராவதற்கான மனுவை நிராகரித்து,அக். 27ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது பஞ்சாப் நீதிமன்றம்.



Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: