Advertisment

Tamil News Highlights: என்.சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் - இறுதிச் சடங்கில் சீதாராம் யெச்சூரி, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

Tamil Nadu News, Tamil News LIVE, Chennai Rains Today, IND vs NZ Semifinal Live– 15 November 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
n sankaraiah

Tamil news

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil News Updates 

பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது

10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

சங்கரய்யா மரணம்: ராகுல் காந்தி இரங்கல்

தமிழ்நாட்டின் தகைசால் தமிழர் விருது பெற்றவரும், மூத்த கம்யூனிஸ்ட் நிர்வாகியுமான சங்கரய்யா தனது 102ஆவது வயதில் சென்னையில் நேற்று (நவ.15) காலமானார்.

அவரின் இறப்புக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தை முன்னிறுத்தி மேற்கொண்ட உறுதியான போராட்டங்களால் அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


 
செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றம்   

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மூளைக்கு செல்லும் நரம்பில் வலி ஏற்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டியில் 50 சதங்கள் அடித்து சாதனை... விராட் கோலிக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

புழல் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார் செந்தில் பாலாஜி 

புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது - வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்கிறது. விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 470 கி.மீ தென்கிழக்கு திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விதிகளின்படி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது - இந்து அறநிலையத் துறை விளக்கம்

விதிகளின்படியே கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன, உண்டியல் திறப்பை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியம் இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காசி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

டெட்ரா பாக்கெட்களில் மது விற்பனை; நிபுணர் குழு அமைத்துள்ளதாக ஐகோர்ட்டில் டாஸ்மாக் தகவல்

டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பருவமழை பாதிப்பு; மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் முக்கிய உத்தரவு

பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என மின்வாரிய ஊழியர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

பற்களை பிடுங்கிய ஐ.பி.எஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில், ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

சங்கரய்யா மரணம்; சரத்குமார் இரங்கல்

சுதந்திர போராட்ட தியாகியும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யாவின் மறைவுக்கு நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்

சங்கரய்யா மறைவு - சீமான் இரங்கல்

 

சங்கரய்யா மறைவு - டிடிவி தினகரன் இரங்கல்

 

 

சங்கரய்யா மறைவு - கமல்ஹாசன் இரங்கல்

 

காஷ்மீர்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழப்பு

 கிஷ்த்வாரில் இருந்து ஜம்முவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, தோடா பகுதியில் இருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து  விப்பத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழப்பு. காயமடைந்வர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதி. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும்  பணி தீவிரம்.  

சங்கரய்யா மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர் சங்கரய்யா. பள்ளி பருவத்தில் தொடங்கி, நூற்றாண்டை கடந்து பிறகும் கூட மக்கள் உரிமைகளுக்காகவும், சமூகக் கேடுகளுக்கு எதிராகவும் போராடி வந்தார்.  சங்கரய்யாவின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். - ராமதாஸ் இரங்கல்

 

சங்கரய்யா மறைவு - அண்ணாமலை இரங்கல்

 

சங்கரய்யா மறைவுக்கு- திருமாவளவன் இரங்கல்

 

வங்கக்கடல்:  நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சங்கரய்யா மறைவு - இபிஎஸ் இரங்கல்

நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான திரு.சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி திரு.சங்கரய்யா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்- இபிஎஸ் இரங்கல்

 

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சி.பி.எம் 1 வாரம் துக்கம் அனுசரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மூத்த தலைவர், தியாகி சங்கரய்யா மறைவு. மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பு. மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

இருசக்கர வாகன பேரணி: உதயநிதி தொடங்கி வைப்பு 

திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணி கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சேலத்தில் அடுத்த மாதம் 17ஆம் தேதி திமுக இளைஞரணி மாநில மாநாடு. மொத்தம் 13 நாட்கள் 8,647 கிலோ மீட்டர்கள் இருசக்கர வாகன பேரணி நடைபெறுகிறது.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் வலம் வந்து சேலத்தில் பேரணி நிறைவடையும் பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்பு

சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: ஸ்டாலின்

மறைந்த மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை. அரசு மரியாதையுடன் தகைசால் தமிழருக்கு பிரியாவிடை அளிக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

விடுதலை போராட்ட வீரராக, அரசியல் தலைவராக தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினை போற்றும் வகையில் அரசு மரியாதை. சாதி வர்க்கம், அடக்குமுறை ஆதிக்கத்துக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி என புகழாரம்

விஜயபாஸ்கர் வழக்கு: டிச2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. வருமானத்தை விட அதிகமாக ரூ.35.75 கோடி சொத்து சேர்த்தாக விஜயபாஸ்கர் மீது 2021-ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

சங்கரய்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பு 

சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் குரோம்பேட்டை இல்லத்திலும் பின்னர் தி.நகர் கட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட உள்ளது. 

ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு வழக்கு: நாளை விசாரணை

அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடியை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு

தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் எண்ணிட பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓபிஎஸ் மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு

இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் செயல்பட முடியாத நிலை உள்ளதால் இன்றே விசாரிக்க வேண்டுமென ஓ.பி.எஸ். தரப்பில் கோரிக்கை. நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு

சங்கரய்யா உடலுக்கு ஸ்டாலின் மரியாதை

அப்பலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சங்கரய்யா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் சங்கரய்யா உடலுக்கு அஞ்சலி

சங்கரய்யா மறைவு: திருமா இரங்கல்

சங்கரய்யா மறைவு பொதுவுடைமை இயக்கங்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் நேர்ந்த 

ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் திருமாவளவன் இரங்கல். 

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு

என்.சங்கரய்யா (102) உடல்நலக் குறைவால் மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்தர போராட்ட வீரருமான என்.சங்கரய்யா (102) உடல்நலக் குறைவால் காலமானார். Credit: Sun News Twitter

104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 104 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.

சென்னை மாவட்டத்தி்ல் 5 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 ஏரிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 ஏரிகளும் நிரம்பியதாக நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2வது நாளாக கடல் சீற்றம்

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், உயாளி குப்பம், கோகிலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த கற்ற தாழ்வு பகுதி, அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதி அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை (நவ.16) வலுவடைய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சஹாரா குழும நிறுவனர் மரணம்

sahara ceo

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் (75) மாரடைப்பால் நேற்று இரவு காலமானார்.

சென்னைக்கு மஞ்சள் நி எச்சரிக்கை

சென்னைக்கு இன்று மஞ்சள் நி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 8.30 மணி அளவில் கனமழை பதிவாக வாய்ப்பு

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூரில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும்

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும்- சென்னை வானிலை மையம் அறிவிப்பு

இன்று எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை

கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

திருவள்ளூர், காரைக்கால், புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும்  இன்று விடுமுறை

சென்னையில் நேற்று மிக கனமழை பதிவு

சென்னையில் நேற்று மிக கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மெரினா கடற்கரை பகுதியில் 12 செ.மீ மழையும், அம்பத்தூரில் 9.5 செ.மீ மழையும், மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 9.4 செ.மீ மழையும், கோடம்பாக்கத்தில் 8.5 செ.மீ., மழைப் பதிவானது.

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் வினாடிக்கு 301 கன அடி நீர்வரத்து உள்ளது.

விழுப்புரம், காஞ்சிபுரம்- பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை இல்லாததால், இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்- மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள்ளதால் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும்- மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுகளில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இது இன்று காலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment