Tamil news today: திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 19-06- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 19-06- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
heavy rain

Due to heavy rain Holiday for schools

பெட்ரோல், டீசல்விலை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பரவலாக மழை

சென்னையில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை. செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை.

திண்டுக்கல் அணி வெற்றி

டிஎன்பிஎல் - மதுரை பான்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ், 14.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment
Advertisements

  • 22:21 (IST) 19 Jun 2023
    பருவமழையை எதிர்கொள்ள 500 வீரர்கள் தயார் : காவல்துறை டிஜிபி

    தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் தலா 100 பேரை கொண்ட 5 குழுவில் சென்னையில் 2 குழுவும், நீலகிரி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் 3 குழுக்களும் தயார்" - காவல்துறை டிஜிபி


  • 21:13 (IST) 19 Jun 2023
    கோவை அணிக்கு 127 ரன்கள் இலக்கு

    டிஎன்பிஎல் - லைகா கோவை கிங்ஸ் அணிக்கு 127 ரன்கள் இலக்கு முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் சேர்ப்பு


  • 20:31 (IST) 19 Jun 2023
    திருக்கோவில்களில் யானை வாக்குவது தொடர்பான தனி நீதிபதி உத்தரவுக்கு தடை

    திருக்கோவில்களில் இனி யானைகள் வாங்க கூடாது என்று தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, கடந்த பிப்ரவரி 7-ந் தேதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


  • 20:29 (IST) 19 Jun 2023
    அமைச்சர் சேகர் பாபு பேட்டி!

    நாளை சென்னை முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..” -அமைச்சர் சேகர் பாபு பேட்டி!


  • 19:44 (IST) 19 Jun 2023
    தமிழகத்தில்10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில், 10 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.


  • 19:41 (IST) 19 Jun 2023
    முட்டை விலை 5 காசுகள் அதிகரிப்பு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து, தற்போது ரூ.5.45க்கு விற்பனை

    வெயில் காரணமாக, உற்பத்தி குறைந்துள்ள நிலையில் தொடர்ந்து 6-வது நாளாக கொள்முதல் விலை உயர்வு


  • 18:59 (IST) 19 Jun 2023
    காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதித்து காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அறிவித்துள்ளது. தென்கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று, மணிக்கு 45-65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


  • 18:40 (IST) 19 Jun 2023
    மாமன்னன் திரைப்படத்திற்கு தடை கோரி மனு

    உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என ஓ .எஸ்.டி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ஏஞ்சல் என்னும் திரைப்படம் 80% முடிந்துள்ளது. மீதமுள்ள 20% பட சூட்டிங்கிற்கு, ஒப்பந்தப்படி உதயநிதி கால்ஷீட் தராமல் புறக்கணிக்கிறார் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது


  • 18:30 (IST) 19 Jun 2023
    சேலத்தில் மது அருந்திய ஒருவர் மரணம்

    சேலம், எடப்பாடியை அடுத்துள்ள கள்ளுக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் பாரில் மது அருந்திய கல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சேகர்(35) என்பவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


  • 17:44 (IST) 19 Jun 2023
    சென்னையில் மணிக்கு 40 கி. மீ வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

    சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்


  • 17:21 (IST) 19 Jun 2023
    அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு - தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

    அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 2006-11ல் சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது


  • 17:07 (IST) 19 Jun 2023
    சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


  • 17:00 (IST) 19 Jun 2023
    சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - ஸ்டாலின் அறிவிப்பு

    கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்


  • 16:58 (IST) 19 Jun 2023
    பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த வழக்கு; இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை

    சென்னை பள்ளி மாணவியை 2021ம் ஆண்டு பள்ளி மாணவியை, கத்தி முனையில் பாலியல் வன்முறை செய்த வழக்கில் தாஸ் என்பருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


  • 16:49 (IST) 19 Jun 2023
    ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி; வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கணை

    ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார்.


  • 16:46 (IST) 19 Jun 2023
    சென்னையில் மழைநீர் தேங்கியதால் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

    மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை செண்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்களீன் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வியாசர்பாடி - பேசின்பிரிட்ஜ் இடையேயான பாலம் எண் 14-ல் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    செண்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆவடியில் இருந்து கோவை இண்டர்சிட்டியும் லால்பாக் விரைவு ரயிலும் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


  • 16:42 (IST) 19 Jun 2023
    பா.ஜ.க நிர்வாகி எஸ்.ஜி. சூர்யா ஜாமீன் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு

    மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ததால் விசாரணையை ஒத்திவைத்தது மதுரை நீதிமன்றம்.


  • 15:30 (IST) 19 Jun 2023
    இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பெயர்

    செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அரசு இணையதளத்தில் துறைகள் குறிப்பிடாமல் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெற்றுள்ளது.


  • 15:27 (IST) 19 Jun 2023
    ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

    நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராக நியமனம்

    எரிசக்தித்துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமனம்

    திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம்

    பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர் விஜய ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம்; எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆசியா மரியம் சிறுபாண்மையினர் நலத்துறை இயக்குநராக நியமனம்

    ஊரக வளர்ச்சி இணை செயலாளர் சந்திர சேகர் சஹாமுரி பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநராக நியமனம்


  • 15:23 (IST) 19 Jun 2023
    சென்னையில் கனமழை காரணமாக 7 ரயில்கள் மாற்றம்

    சென்னையில் கனமழை காரணமாக சென்ட்ரலில் இருந்து இயக்கப்பட வேண்டிய 7 ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய 7 ரயில்கள் திருவள்ளூர், ஆவடி, கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்ப்டும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.


  • 14:57 (IST) 19 Jun 2023
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

    தமிழ்நாடு அரசுத்துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


  • 14:26 (IST) 19 Jun 2023
    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது


  • 13:59 (IST) 19 Jun 2023
    அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:58 (IST) 19 Jun 2023
    சென்னைக்கு சிறப்பு நிதி

    சென்னைக்கு சிறப்பு நிதியாக ரூ.500 கோடி ஒதுக்கீடு. சாலை மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் அடுத்த 3 மாதங்களில் நிறைவடையும். மெட்ரோ வாட்டர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்பட்டும். கத்திப்பாரா அருகே தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுவிட்டது- நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா


  • 13:58 (IST) 19 Jun 2023
    13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:58 (IST) 19 Jun 2023
    ரயில் தாமதம்

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூரு செல்லும் ’வெஸ்ட் கோஸ்ட் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்’ இன்று நண்பகல் 1.15 மணிக்கு பதிலாக 2.15 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படுகிறது.


  • 13:16 (IST) 19 Jun 2023
    முடிவுக்கு வந்த காத்திருப்பு போராட்டம்

    ஓசூர் அருகே சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 166 நாட்கள் நடந்த விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

    விளைநிலங்களை தவிர்த்து மற்ற நிலங்களே கையகப்படுத்தப்படும் என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் பழச்சாறு கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தனர்


  • 13:15 (IST) 19 Jun 2023
    குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு

    திருவண்ணாமலை மாவட்டம் புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 40 நாட்களுக்கும் மேலாக தொடரும் போராட்டம் தொடரும் நிலையில் தற்போது குப்பை கிடங்கிற்கான மதில் சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். , கிராம மக்கள் உடனடியாக கிணற்றில் குதித்து 2 பெண்களையும் மீட்டனர்.


  • 12:59 (IST) 19 Jun 2023
    தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஸ்டாலின்

    திருவாரூர் மாவட்டம் ஓடம்போக்கி ஆற்றில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 12:58 (IST) 19 Jun 2023
    சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை

    சென்னையில் மழை நீர் தேங்கியதாக 70 புகார்கள் வந்தன.

    புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மழைநீர் அகற்றம்.

    வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை

    கொடுத்திருந்ததால் தயார் நிலையில் இருந்தோம். ஒருசில இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது.

    பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை.

    கடந்த ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கையால் தற்போது பெரிதாக மழைநீர் தேங்கவில்லை.

    சாலை மற்றும் மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் மட்டுமே ஒருசில இடங்களில் நீர் தேக்கம்.

    சென்னையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது - சென்னை மாநகராட்சி துணை ஆணையர் சமீரன் பிரத்யேக பேட்டி


  • 12:42 (IST) 19 Jun 2023
    ஆஞ்சநேயர் கோயிலை முழுவதுமாக சூழ்ந்த மழை நீர்

    சென்னையில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை

    பட்டாளம் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் மழைநீர்

    பட்டாளத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலை முழுவதுமாக சூழ்ந்த மழை நீர்

    முழங்கால் அளவு தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் சிரமம்


  • 12:41 (IST) 19 Jun 2023
    உத்தரகோசமங்கை ஆலயத்தின் தீர்த்த குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

    இராமநாதபுரத்தில் உலகப் பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை ஆலயத்தின் தீர்த்த குளத்தில் திடீரென இறந்து மிதக்கும் மீன்கள்


  • 12:17 (IST) 19 Jun 2023
    சென்னையில் கனமழைக்கு வீடு, பொருள், உயிர் சேதம் இல்லை

    கனமழையால் சென்னையில் 6 மரங்கள், 38 கிளைகள் முறிந்து விழுந்துள்ளன.

    முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் இருந்தபடி அதிகாரிகளிடம் பணிகளை கேட்டறிந்து வருகிறார்.

    22 சுரங்கப் பாதைகளில் ஒரு சுரங்கப் பாதையில் மட்டும் தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    கனமழை காரணமாக சென்னையில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்


  • 12:15 (IST) 19 Jun 2023
    அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும்

    அடுத்த 3 தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை தொடரும்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் மழை தொடரும்

    1996க்கு பிறகு ஜூன் மாதத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்ச மழை பதிவு - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்


  • 12:15 (IST) 19 Jun 2023
    அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட்

    அசாம் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்

    கனமழை காரணமாக 142 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன


  • 12:14 (IST) 19 Jun 2023
    சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் 2000 ஊழியர்கள்

    சென்னையில் மழைநீரை அகற்றும் பணியில் 2000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் - சென்னை குடிநீர் வாரியம் தகவல்

    300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றப்படுகிறது

    180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றல் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் தொடர்பான புகார்களை 044-4567 4567 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்"


  • 12:13 (IST) 19 Jun 2023
    தனியார் பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்து

    கடலூர் மாவட்டம் வாழப்பட்டில் டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

    கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து

    வேகத்தடை இல்லாததால் விபத்து என பொதுமக்கள் சாலை மறியல்

    கடலூர் - பண்ருட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


  • 12:12 (IST) 19 Jun 2023
    2 பேருந்துகள் மோதி பயங்கர விபத்து - 100க்கும் மேற்பட்டோர் காயம்

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

    விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு - 5 பேர் கவலைக்கிடம், 100க்கும் மேற்பட்டோர் காயம்


  • 11:18 (IST) 19 Jun 2023
    அமலாக்கத்துறை மேல்முறையீடு - உச்ச நீதிமன்றம் விசாரணை

    அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு

    அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை நாளை மறுதினம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்


  • 10:50 (IST) 19 Jun 2023
    |9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

    சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை தொடரும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் மழை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்


  • 10:39 (IST) 19 Jun 2023
    சென்னை புறநகரில் தொடரும் கனமழை

    சென்னை புறநகரில் தொடரும் கனமழையால். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் பேருந்துகள், வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பணிக்கு செல்பவர்கள் அவதி. மழையில் நனைந்தபடி பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள்


  • 10:37 (IST) 19 Jun 2023
    முதல்வர் ஸ்டாலின் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

    "சகோதரர் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; இந்தியாவின் ஜனநாயக மாண்பைக் காக்க நாம் ஒன்றாக சேர்ந்து பயணிப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


  • 09:59 (IST) 19 Jun 2023
    திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை

    திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை. நாவலூர், கேளம்பாக்கம், சிறுசேரி, தாழம்பூர், முட்டுகாடு, கோவளம் பகுதியில் பலத்த மழை தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி


  • 09:43 (IST) 19 Jun 2023
    திருவள்ளூர் மாவட்டதில் 2வது நாளாக தொடரும் கனமழை

    வண்ணாரப்பேட்டை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கு வெளியே தேங்கிய மழைநீர் , பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர் .திருவள்ளூர் மாவட்டதில் 2வது நாளாக தொடரும் கனமழை அதிகபட்சம் ஜமீன் கொரட்டூரில் 8 செ.மீ, பூந்தமல்லியில் 7 செ.மீ மழை பதிவு


  • 09:26 (IST) 19 Jun 2023
    சென்னையில் இதுவரை 8 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்பு

    சென்னையில் இதுவரை 8 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்பு. செம்பியம், கொளத்தூர், தலைமைச் செயலகம், மைலாப்பூர், கிண்டி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தது மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புதுறையினர் தகவல்


  • 09:24 (IST) 19 Jun 2023
    தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்

    தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


  • 09:02 (IST) 19 Jun 2023
    மழை: மரம் முறிந்து விழுந்து விபத்து

    கனமழை காரணமாக சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தெருவில் மரம் முறிந்து விழுந்து விபத்து


  • 09:01 (IST) 19 Jun 2023
    5 அடி உயரத்திற்கு தேங்கியுள்ள மழைநீர்

    சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலை - கிரீன்வேஸ் சாலை சந்திப்பு, நீலாங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் குளம் போல் தேங்கிய மழைநீர். பெருங்குடி உலக வர்த்தக மையம் அருகே 5 அடி உயரத்திற்கு தேங்கியுள்ள மழைநீர்


  • 09:00 (IST) 19 Jun 2023
    சென்னையில் இதுவரை பெரிய அளவுக்கு மழை பாதிப்பு இல்லை

    சென்னையில் இதுவரை பெரிய அளவுக்கு மழை பாதிப்பு இல்லை. தாழ்வான பகுதிகளை கண்காணிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது- சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்


  • 08:59 (IST) 19 Jun 2023
    6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

    தமிழகத்தில் கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் விடுமுறை


  • 08:58 (IST) 19 Jun 2023
    மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

    சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி . கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது சென்னை, வேப்பேரியில் சாலைகளின் இருபுறமும் மழைநீர் தேங்கியுள்ளது.


  • 08:58 (IST) 19 Jun 2023
    துணைத் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும்

    தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என அறிவிப்பு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களிலும் தேர்வுகள் நடைபெறும் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு


Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: