Advertisment

Tamil News Highlights: மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை- இம்பால் பகுதியில் ஊரடங்கு அமல்

Tamil News LIVE, Chennai Rains, Women’s reservation bill Parliament Special Session Live Updates– 21 September 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Indian army at Manipur

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil News Updates

இம்பால் பகுதியில் ஊரடங்கு அமல்

மீண்டும் வன்முறை வெடித்ததால் மணிப்பூர் மாநிலம் இம்பால் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது மசோதாவை எதிர்த்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. அனைவரின் ஒருமித்த ஆதரவோடு நிறைவேறியது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க மசோதா வழிவகை

ஆவின் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்!

கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என சர்வேயில் தெரியவந்துள்ளதாக ஆவின் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்! நுகர்வோர் விருப்பத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து, நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை!

நீட் முதுகலை தேர்வு 0 கட்ஆஃப்: கிருஷ்ணசாமி விமர்சனம்

“முதுநிலை மருத்துவ முதுகலை பட்ட படிப்புகளுக்கு ’0’ percentile இருந்தால் போதும் என்ற 21ம் நூற்றாண்டின் ஒரு பைத்தியக்காரத்தனமான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சக முடிவின் பேரில் தேசிய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த முடிவை ’பைத்தியக்காரத்தனம்’ என்று விமர்சிப்பதை தவிர வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ண சாமி தெரிவித்துள்ளார்.

நீதித்துறையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு: அன்புமணி ராமதாஸ்

அரசு மற்றும் நீதித்துறையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய அவர், “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஒபிசி பிரதிநிதித்துவம் இருக்க வேண்ம்” எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அரசு மற்றும் நீதித்துறையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றார்.

ரூ.500 லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.க்கு 2 ஆண்டு சிறை

பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு ரூ.500 லஞ்சம் பெற்ற நடுக்காவேரி சிறப்பு எஸ்.ஐ ஜார்ஜ்க்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2013ஆம் ஆண்டு நடந்த இந்த குற்றவியல் சம்பவத்தில் தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் தங்க கட்டிகள்: 4 பேர் கைது



குறைந்த விலையில் தங்க கட்டிகள் விற்பதாக மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி. வருண் குமார், “கொள்ளை கும்பலிடம் இருந்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

கோடிக் கணக்கில் கட்டணம் வசூலிப்பதற்கே நீட் துணை செய்வது மீண்டும் நிரூபணம் - அன்புமணி

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “ நீட் தேர்வில் மைனஸ் மதிப்பெண் எடுட்தாலே மருத்துவம் சேரலாம் எனபதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது. முதுநிலை படிப்புகளில் காலியிடங்கள் தனியார் கல்லூரிகளில்தான் அதிகம். ஆனால், அக்கல்லூரிகளில்தான் ஆண்டு கட்டனம் ரூ. 40 லட்சத்துக்கு மேல் உள்ளது. இதனை நிரப்ப தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரியின் தரத்தை உயர்த்தும், தனியார் கல்லூரிகள் அதிக கடணம் வசூலிப்பதை தடுக்கும் எனக் கூறியே நீட் கொண்டுவரப்பட்டது. ஆனால், இரண்டுமே நடக்கவில்லை. தகுதியைப் பற்றி கவலைப்படாமல் கோடிக் கணக்கில் கட்டணம் வசூலிப்பதற்கே நீட் தேர்வு துணை செய்வது இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

சிறுமியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது

சென்னை மேடவாக்கத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கல்லூரி மாணவர் வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரை அருகே கல்லூரி மாணவர் வசந்த்தை பள்ளிக்கரணை காவல்துறையினர் கைது செய்தனர்.

பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கனடா நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளியுறவு அமைச்சகம்

“கனடாவில் பாதுகாப்பான புகலிடங்கள் வழங்கப்படுகின்றன, கனேடிய அரசாங்கம் அவ்வாறு செய்யாமல், பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நீதியை எதிர்கொள்ள அவர்களை இங்கு அனுப்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்... நாடு கடத்தல் கோரிக்கை அல்லது அது தொடர்பான உதவியை நாங்கள் கோரினோம். குறைந்தது 20-25 நபர்களை நாங்கள் பல ஆண்டுகளாகக் கோரியுள்ளோம். ஆனால், பதில் உதவியாக இல்லை” என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.

இந்தியாவின் உள்விவகாரங்களில் கனடாவின் தலையீடுகளைக் காண்கிறோம் - வெளியுறவு அமைச்சகம் 

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராஜதந்திர இருப்பின் சமநிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, இந்தியா தனது உள் விவகாரங்களில் கனேடிய இராஜதந்திர தலையீட்டைக் கண்டதாகக் கூறினார்.

தர்மபுரியில் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார்

தர்மபுரி, பென்னாகரம் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்த போது, மலம் கலந்து இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மருத்துவ படிப்பு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்

சென்னையில் விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

சென்னையில் பட்டினபாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூரில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது

நவராத்திரி விழாவில் எந்த நபருக்கும் சிறப்பு முதல் மரியாதை வழங்கப்படாது - பழனி கோவில் நிர்வாகம்

பழனி கோவில் நவராத்திரி விழாவில் எந்த நபருக்கும் சிறப்பு முதல் மரியாதை வழங்கப்பட மாட்டாது என கோவில் நிர்வாகம் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்த கட்சிகளுக்கு பாராட்டு – அண்ணாமலை

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்த அனைத்து கட்சிகளையும் பாராட்டுகிறேன். 2024க்கு பின் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மசோதா தற்போது நிறைவேறியுள்ளது என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

'இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு சமஸ்கிருதமோ, இந்தியோ தெரியாது': ஆ.ராசா எம்.பி பேச்சு 

ஒருபுறம் நிலவுக்கு சந்திரயானை அனுப்பிவிட்டு, மறுபுறம் குலக்கல்வியை ஊக்குவிக்கிறீர்கள். குலக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் விஸ்வகர்மா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

சந்திரயான் திட்டத்தில், தமிழர்களின் பங்கு அளப்பரியது, இதற்கு பெருமைப்படுகிறோம். சந்திரயான் திட்டத்தில் பணியாற்றிய தமிழர்கள் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு சமஸ்கிருதமோ, இந்தியோ தெரியாது". என்று ஆ.ராசா எம்.பி தெரிவித்தார். 

'அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்': அண்ணாமலை பரபரப்பு பேட்டி 

மதுவிலக்கு கொள்கை என்றால், அதற்கு உதாரணம் அறிஞர் அண்ணா தான். மதுக்கடைகளுக்கு கையெழுத்து போட முடியாது என்பதில் உறுதியாக இருந்தவர் அண்ணா. 

தேசிய கட்சிகளுக்கு என்று மாநிலத்தில் சில தனி நிலைப்பாடுகள் உண்டு. அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. 

பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கிறார்களா? இல்லையா? என்பதை பொறுத்தே கூட்டணி. கூட்டணியின் மையப்புள்ளி பிரதமர் மோடி. 

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக தான் நான் தலைவராக உள்ளேன். என்னுடைய கொள்கைகளை எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன். அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்" என்று அண்ணாமலை தெரிவித்தார். 

ஓ.பி.எஸ் பதிலளிக்க உத்தரவு 

அதிமுக சின்னம், பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்கக் கோரி இ.பி.எஸ் வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்று கொண்டுள்ளது. கட்சியின் சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பப்படுகிறது என்று இ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணையை அக்.6ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது. 

டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

இருசக்கர வாகனத்தில் பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கிய நிலையில், டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில், யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கோவை மத்திய சிறைக்குள் வார்டன்கள் - கைதிகள் இடையே மோதல்

கைதிகள் தாக்கியதில் 4 சிறைவார்டன்கள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த வார்டன்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டுள்ளனர். 

சிறைவளாகத்தில் மரத்தின் மீது ஏறிக்கொண்ட கைதிகள் கைகளில் பிளேடால் கீறிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் சிறை வளாகத்தில் விசாரணை நடத்தி வருகிறார். 

கனடா நாட்டு குடிமக்களுக்கான விசா சேவை சஸ்பெண்ட்: இந்திய அரசு உத்தரவு

காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டதில் இந்திய ஏஜெண்டுகளுக்கு பங்கிருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக, இரு நாடுகள் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கனடாவில் இன்று மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை. கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. கனடாவில் இருந்து இந்தியா வரும், கனடா குடிமக்களுக்கான விசா சேவையை சஸ்பெண்ட் செய்துள்ளது. 

கனடா வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள்: தமிழ்நாடு அரசு

கனடா வாழ் தமிழர்கள் யாரும் இதுவரை தமிழக அரசிடம் எந்த உதவியும் கோரவில்லை. அங்குள்ள நிலவரம் குறித்து இந்திய தூதரகம் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவற்றை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. அவர்களுக்கான உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 

கனடா விவகாரம் தொடர்பாக வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். கனடா வாழ் தமிழர்கள் உதவி கோரினால் அவர்களை பத்திரமாக தமிழகம் அழைத்து வருவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்' என்று தமிழ்நாடு அரசு சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'பா.ஜ.க-வுடன் எந்த பிணக்கும் இல்லை'- செல்லூர் ராஜூ பேச்சு 

"அண்ணா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்குத்தான் அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜ.க - அ.தி.மு.க இடையே பிரச்சினை என்று யாரும் கூறவில்லை. அண்ணாமலையின் பேச்சை தான் எதிர்க்கிறோம்" என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

கொடநாடு, ஊழல் வழக்குகளில் இ.பி.எஸ்-ஐ தொடர்புபடுத்தி கருத்துகளை வெளியிட தடை

கொடநாடு, ஊழல் வழக்குகளில் இ.பி.எஸ்-ஐ தொடர்புபடுத்தி கருத்துகளை வெளியிட தடை கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கோரி இ.பி.எஸ் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வழக்கு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவு 

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது- உச்சநீதிமன்றம்

 காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது – நீதிபதிகள். தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் விநாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. காவிரியில் உரிய நீரை திறந்து விட கோரும் தமிழ்நாடு அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது - உச்சநீதிமன்றம்

 

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பது இனி கிடையாது

 காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பது இனி கிடையாது. எதுவாக இருந்தாலும், இனி உச்சநீதிமன்றத்தில் தான் சந்திக்க வேண்டும்- அமைச்சர் துரைமுருகன்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் 4ம் நாள் கூட்டம் தொடங்கியது.

 நீட் தேர்வால் பலனில்லை- ஒப்புக்கொண்ட மத்திய அரசு

 நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்NEET என்பதில் ELIGIBLITY என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டது மத்திய அரசு . நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட். விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்

 

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம்- மு.க.ஸ்டாலின்

கட் ஆஃப் மதிப்பெண் நீக்கப்பட்டதன் மூலம் நீட் தேர்வே அர்த்தமற்றதாகிவிட்டது.

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டு விட்டது.

நீட் தேர்வு என்பதே பயிற்சி மையங்களுக்கும், தேர்வுகளுக்கும் கட்டணம் செலுத்துவது என்பதாகி விட்டது- மு.க.ஸ்டாலின்

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஏற்கனவே ஜூன் 19ல் நிஜ்ஜார் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டார்

காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் இந்தியாவின் பங்கு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார். இதனால் இரு நாடுகள் இடையேயான நட்புறவில் சிக்கல் இருந்து வருகிறது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக எம்.பி.க்கள் குழு

Cauvery

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் உடன் கர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்தனர்.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க நிர்பந்திக்கக் கூடாது என முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழு வலியுறுத்தல்

திருவண்ணாமலை, தீபத் திருவிழா- பந்தகால் நடும் நிகழ்ச்சி

Thiruvannamalai

திருவண்ணாமலை, தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளை செய்வதற்கான பந்தகால் நடும் நிகழ்ச்சி ராஜகோபுரம் அருகே சிறப்பாக நடைபெற்றது.

காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூரில் தொடர் மழை- பள்ளிகளுக்கு விடுமுறை

வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை இன்று (செப்.21) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார்.

2வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை

வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் மழை   

சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை மெரினா, எம்.ஆர்.சி. நகர், அடையாறு, திருவான்மியூர், கோயம்பேடு, நெற்குன்றம், முகப்பேர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

குடியரசு தின விழா: பைடனுக்கு மோடி அழைப்பு

2024 ஜனவரியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பிடனை பிரதமர் நரேந்திர மோடி அழைத்துள்ளார் என்று அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment