Advertisment

News Highlights: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழக அரசை அனுமதிக்கக் கூடாது- வேதாந்தா மனு

News In Tamil மீறி வரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

author-image
WebDesk
New Update
News Highlights: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழக அரசை அனுமதிக்கக் கூடாது- வேதாந்தா மனு

Latest Tamil News : முழு ஊரடங்கு நேரத்தில் அவசியமின்றி வெளியில் சுற்றினால் வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரக்கைவிடுத்துள்ளது. காய்கறி கொண்டு செல்லும் வாகனங்கள், திருமணம், சடங்கு தொடர்பான வாகனங்கள், உணவகங்களிலிருந்து பார்சேல் கட்டி வீடுகளுக்கு  எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை அவர்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்க அனுமதி. இதனை மீறி வரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

Advertisment

News Highlights: ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு தமிழக அரசை அனுமதிக்கக் கூடாது- வேதாந்தா மனு

Latest Tamil News : முழு ஊரடங்கு நேரத்தில் அவசியமின்றி வெளியில் சுற்றினால் வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரக்கைவிடுத்துள்ளது. காய்கறி கொண்டு செல்லும் வாகனங்கள், திருமணம், சடங்கு தொடர்பான வாகனங்கள், உணவகங்களிலிருந்து பார்சேல் கட்டி வீடுகளுக்கு  எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை அவர்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயக்க அனுமதி. இதனை மீறி வரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்த ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தொடங்கியது. நாளை காலை 4 மணி வரை நீட்டிக்கவுள்ள இந்த ஊரடங்கில் தற்போது அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும், இன்று இரவு 9 மணி வரை மெட்ரோ சேவைகள் இருக்கும் என்றும் காலை 6 முதல் இரவு 9 மணி வரை உணவகங்களில் பார்சேல் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு புதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இந்தத் தடுப்பூசி திட்டத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்கவேண்டும். அவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:58 (IST) 25 Apr 2021
    உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பிரமாண பத்திரம் தாக்கல்

    ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    அதில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பிற்கான கருவியை இயக்கும் நிபுணர்கள் தமிழக அரசின் வசம் இல்லை. எனவே அரசு அதனை மேற்கொண்டால் ஆபத்து நிகழலா என எச்சரிக்கை தெரிவித்துள்ளது.


  • 21:54 (IST) 25 Apr 2021
    புதுச்சேரியில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்க முடிவு

    தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


  • 20:54 (IST) 25 Apr 2021
    மருத்துவ தேவைக்கு மட்டும் ஆக்சிஜன் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவு

    மருத்துவ தேவைக்கு மட்டும் ஆக்சிஜன் பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் தங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.


  • 19:35 (IST) 25 Apr 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா; 82 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 82 உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 4,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 19:34 (IST) 25 Apr 2021
    ஆக்சிஜன், டேங்கர்கள் இருந்தால் டெல்லி அரசுக்கு தந்து உதவுங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆக்சிஜன், டேங்கர்கள் இருந்தால் டெல்லி அரசுக்கு தந்து உதவுங்கள் என்று தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆக்சிஜன் தர வேண்டி மாநில முதல்வர்களுக்கு கெஜ்ரிவால் நேற்று கடிதம் எழுதி இருந்தார்.


  • 19:05 (IST) 25 Apr 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா; 82 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,659 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 82 உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 4,206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 18:14 (IST) 25 Apr 2021
    முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்

    தமிழகத்தி கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் நாளை காலை 9.15 மணிக்கும் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நோய் பரவல், ஆகிஸிஜன் தட்டுப்பாடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.


  • 18:01 (IST) 25 Apr 2021
    தேசிய கல்விக் கொள்கை: மொழிபெயர்ப்பில் தமிழை புறக்கணித்த மத்திய அரசு - கமல்ஹாசன் கண்டனம்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய கல்விக் கொள்கையை பல மொழிகளில் வெளியிட்டிருக்கும் மத்திய அரசு தமிழை மட்டும் புறக்கணித்திருப்பது ஏற்புடையதல்ல. மேடைப்பேச்சில் திருக்குறளை, பாரதியார் கவிதைகளைக் குறிப்பிட்டு தமிழ் மீது பற்று இருப்பது போல காட்டிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகமே. நிஜத்தில் தமிழ் நிலத்தின் பண்பாட்டின் மீது படையெடுப்பதும், உரிமைகளை வேரறுப்பதுமே தொடர்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.


  • 17:05 (IST) 25 Apr 2021
    உத்தரபிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை

    இந்தியாவில் கொரோன மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படும் நிலையில், உத்தரபிரதேசத்தில் எந்தவொரு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்


  • 16:14 (IST) 25 Apr 2021
    திரையரங்கு நிர்வாக மேலாளர் கோரிக்கை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டள்ள நிலையில் திரையரங்குகளுக்கு அரசு தளர்வு அளிக்க வேண்டும் என சம்சுதீன், திரையரங்கு நிர்வாக மேலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  • 16:13 (IST) 25 Apr 2021
    3 திருமண மண்டபங்களுக்கு அபராதம்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டள்ள நிலையில், திருமண நிகழ்ச்சியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேலத்தில் இந்த விதிகளை பின்பற்றாமல் அதிக கூட்டம் சேர்த்த 3 திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு்ளளது.


  • 16:09 (IST) 25 Apr 2021
    உணவக உரிமையாளர்கள் கோரிக்கை

    தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு புதிய கட்டப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்களில் 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  • 15:59 (IST) 25 Apr 2021
    82 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி; ஈராக் சோகம்

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில், கொரோனா மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலியாகி உள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


  • 15:56 (IST) 25 Apr 2021
    உ.பி. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை; யோகி அதித்யநாத்

    உத்திர பிரதேசத்தில் எந்த ஒரு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


  • 15:53 (IST) 25 Apr 2021
    3800 ரயில் பெட்டிகள் தயார்; ரயில்வே அமைச்சகம்

    கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோயாளிகளுக்கான படுக்கை வசதியில் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள, சுமார் 3800 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


  • 15:46 (IST) 25 Apr 2021
    இந்தியாவில் சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி ட்வீட்!

    இந்தியாவில் சிஸ்டம் தோல்வி அடைந்து விட்டது. எனவே, ஜான் கி பாத் தான் முக்கியம். நெருக்கடியான சமயத்தில் நாட்டிற்கு பொருப்புள்ள் குடிமக்களே தேவை. காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களது அனைத்து அரசியல் பணிகளையும் நிறுத்தி விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேட்டுக்கொள்வதாக ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


  • 15:38 (IST) 25 Apr 2021
    அடுத்த 5 நாள்களுக்கு மழை; சென்னை வானிலை ஆய்வு மையம்

    வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 15:18 (IST) 25 Apr 2021
    மகாராஷ்டிராவில் 67000 பேருக்கு கொரோனா உறுதி!

    மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலேயே அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரதா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


  • 15:05 (IST) 25 Apr 2021
    முழு ஊரடங்கு எதிரொலி; சென்னையில் 60 வாகனங்கள் பறிமுதல்

    இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் தேவையின்றி வெளியில் சுற்றியதாக இதுவரையில் 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.


  • 14:36 (IST) 25 Apr 2021
    தடையின்றி ஆக்சிஜன்; வலுவான மருத்துவ கட்டமைப்பே காரணம் - சுகாதராத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

    கொரோனா சூழலிலும், தமிழகத்தில் தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதற்கு வலுவான மருத்துவக் கட்டமைப்பே காரணம் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


  • 14:13 (IST) 25 Apr 2021
    தடுப்பூசி விவகாரம்; அரசியல் செய்யும் மத்திய அரசு - சத்தீஸ்கர் அமைச்சர் சாடல்!

    சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ, மாநிலத்தில் போதுமான அளவுக்கு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், மோதுமான தடுப்பூசி மருந்து கிடைக்கவில்லை என்பதால், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசு, அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.


  • 13:48 (IST) 25 Apr 2021
    தமிழகத்திற்கு 310 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை - முதலமைச்சர் பழனிசாமி

    தமிழகத்திற்கான ஆக்சிஜன் தேவை 310 மெட்ரிக் டன் என்ற அளவில் உள்ளது. தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருக்கும் போது பிற மாநிலங்களுக்கு அனுப்புவது நியாயமில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அளவு போதுமானதாக இல்லை என முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


  • 13:28 (IST) 25 Apr 2021
    மே 3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு - டெல்லி முதல்வர்

    டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மே 3ஆம் தேதி காலை 5 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


  • 13:24 (IST) 25 Apr 2021
    ஆக்ஸிஜன் தேவை; பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

    தமிழகத்திற்கு ஆக்ஸிஜன் தேவை அதிகமாக இருப்பதால், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.


  • 12:55 (IST) 25 Apr 2021
    551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவு

    நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பி.எம். கேர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மருத்துவ மனைகளுக்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


  • 12:53 (IST) 25 Apr 2021
    551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவு

    நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவ தேவைக்காக ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பி.எம். கேர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மருத்துவ மனைகளுக்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


  • 12:46 (IST) 25 Apr 2021
    அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

    கொரோனா தொற்றை வீழ்த்துவதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின் இலவச தடுப்பூசி திட்டம் தொடரும் எனவும், தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் தடுப்பூசி திட்டத்தில் பங்கெடுக்கலாம் என்றும்

    பிரதமர் தெரிவித்துள்ளார்.


  • 12:39 (IST) 25 Apr 2021
    வைரஸை எதிர்த்து போராட நேர்மறை எண்ணம் முக்கியம் - பிரதமர்

    கொரோனா இரண்டாவது அலையால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நிலையில், வைரஸை எதிர்த்து போராட நேர்மறையான எண்ணம் முக்கியமானது என பிரதமர் தெரிவித்துள்ளார்.


  • 12:36 (IST) 25 Apr 2021
    தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மருத்துவர்களுக்கு பாராட்டு

    இந்த கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


  • 12:35 (IST) 25 Apr 2021
    வதந்திகளை நம்ப வேண்டாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்

    கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை ஆதாரங்கள் மூலம் மட்டுமே சரிபார்க்க வேண்டும். தவறான தகவல்களை பொது மக்கள் யாரும் நம்பி பலியாக வேண்டாம். தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு தகவலகளையும் ஆதாரங்களை சரிபார்த்தபின் பரப்புங்கள், தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.


  • 12:34 (IST) 25 Apr 2021
    வதந்திகளை நம்ப வேண்டாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்

    கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை ஆதாரங்கள் மூலம் மட்டுமே சரிபார்க்க வேண்டும். தவறான தகவல்களை பொது மக்கள் யாரும் நம்பி பலியாக வேண்டாம். தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு தகவலகளையும் ஆதாரங்களை சரிபார்த்தபின் பரப்புங்கள், தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.


  • 12:32 (IST) 25 Apr 2021
    தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மருத்துவர்களுக்கு பாராட்டு

    இந்த கொரோனா காலகட்டத்தில் நோயாளிகளுக்கு ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


  • 12:29 (IST) 25 Apr 2021
    வதந்திகளை நம்ப வேண்டாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்

    கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை ஆதாரங்கள் மூலம் மட்டுமே சரிபார்க்க வேண்டும். தவறான தகவல்களை பொது மக்கள் யாரும் நம்பி பலியாக வேண்டாம். தொற்றுநோய் தொடர்பான எந்தவொரு தகவலகளையும் ஆதாரங்களை சரிபார்த்தபின் பரப்புங்கள், தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.


  • 12:24 (IST) 25 Apr 2021
    மாநிலங்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் - பிரதமர்

    கொரோனா இரண்டாவது அலைக்கெதிரான இந்த போரில், மாநிலங்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மான் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.


  • 12:21 (IST) 25 Apr 2021
    சுகாதாரப் பணியாளர்களை வணங்குங்கள் - பிரதமர் மோடி

    தொற்று நோய்க்கு எதிரான போரில் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை வணங்குங்கள் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தற்போது தொற்று நோய் பற்றி நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


  • 11:19 (IST) 25 Apr 2021
    ”ஆக்ஸிஜன் தந்து உதவுங்கள்” - டெல்லி முதல்வர் வேண்டுகோள்

    டெல்லிக்கு ஆக்ஸிஜன் கொடுத்து உதவிடுமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.


  • 11:17 (IST) 25 Apr 2021
    முழுமுடக்க நாளிலும் கொரோன தடுப்பூசி செலுத்த அனுமதி

    முழு ஊரடங்கு நாளான இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. தமிழகம் முழுவதும் 4000 தடுப்பு மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரப் பணியாளர்கள் தயாராக உள்ளனர்.


  • 10:50 (IST) 25 Apr 2021
    இன்னொரு ஊரடங்கை தாங்கும் நிலை இல்லை - ஸ்டாலின்

    மே 2-ஆம் தேதிக்குப் பிறகு இன்னொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்களும் இல்லை, அவர்களது வாழ்வாதாரமும் இல்லை என்றுகூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.


  • 10:48 (IST) 25 Apr 2021
    கொரோனா பாதிப்பு 3.49 லட்சத்தை நெருங்கியது

    இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.49 லட்சத்தை நெருங்கியது. இந்தியாவில் ஒரேநாளில் 3,49,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஒரே நாளில் 2,767 பேர் உயிரிழந்துள்ளனர்.


  • 10:47 (IST) 25 Apr 2021
    இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்

    கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு துணை நிற்போம் என்றும் இந்தியர்களுக்கு உதவ அனைத்து வகையிலும் தயாராக உள்ளோம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது.


  • 10:45 (IST) 25 Apr 2021
    ஊரடங்கு காரணமாக கோயில் வாசலில் நடந்த 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள்

    கொரோனாவைக் கட்டுப்படுத்த இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலின் முன் நடைபெற்றன.


Tamil Nadu Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment