Live

Tamil News Highlights : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,505 பேருக்கு கொரோனா; 48 பேர் உயிரிழப்பு

Latest Tamil News : ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறவுள்ளது

Study links milder covid 19 to prior encounters with similar less virulent coronaviruses Tamil News
Study links milder covid 19 to prior encounters with similar less virulent coronaviruses Tamil News

Tamil News Highlights: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய வீரர்-வீராங்கனைகளுடன் மாலை 5 மணியளவில் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். இந்த கலந்துரையாடலில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் நிசித் ப்ராமனிக், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இந்திய வீரர்-வீராங்கனைகள் 126 பேர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர்.

மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது

கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்றும் அதனால் ஏற்படும் அதிக பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என்றும் இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், நாட்டில் அரசு நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கோவிட் கால கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதுவே மூன்றாவது அலைக்குக் காரணமாக அமையும் என்றும், அதனைத் தவிர்க்க முடியாவிட்டாலும் அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யவேண்டும் என்றும் மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டது.

மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை

இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது மேக வெடிப்பினால், தர்மசாலாவில் உள்ள மெக்லியோட் கஞ்ச் அருகே பாக்சு பகுதியில் உள்ள பொது சொத்துக்களுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், அங்குப் பெய்த கனமழையைத் தொடர்ந்து மஞ்சி நதி நிரம்பியதால் 10-க்கும் மேற்பட்ட கடைகள் ளும் சேதமடைந்தன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாக்ரி தேசிய நெடுஞ்சாலை தடை செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.101.92-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
2:47 (IST) 13 Jul 2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,505 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

2:24 (IST) 13 Jul 2021
நீட் ஆய்வுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

நீட் ஆய்வுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இரட்டைவேட பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் உயர்நீதிமன்றம் நெத்தியடி தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு, தமிழக அரசின் உறுதிப்பாட்டுக்கும் முயற்சிகளுக்கும் தொடக்கப்புள்ளி எனவும், மாணவர்களின் உரிமை மட்டுமின்றி, மாநில உரிமையும் தீர்ப்பின் மூலம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

1:28 (IST) 13 Jul 2021
டிஎன்பிஎஸ்சி- 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு, முனியநாதன், ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ் மரியசூசை ஆகிய நால்வரையும் உறுப்பினர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

12:43 (IST) 13 Jul 2021
முதுநிலை மருத்துவப் படிப்புக்கு செப்டம்பர் 11ஆம் தேதி நீட் தேர்வு

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 11ல் நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

12:16 (IST) 13 Jul 2021
ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் குழுவுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.
இந்த கலந்துரையாடலில் தமிழக வீரர்கள் 2 பேர் பங்கேற்று வருகின்றனர்.

11:59 (IST) 13 Jul 2021
அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிய முதல்வர் அறிவுறுத்தல்

அரசு ஊழியர்கள் வாரத்தில் 2 நாள் கைத்தறி ஆடைகளை அணிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

11:45 (IST) 13 Jul 2021
நீட் தேர்வு ஆய்வுக்குழு – நாளை முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

நீட் தேர்வு தாக்கங்கள் குறித்து, ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ராஜன் தலைமையிலான குழு, நாளை முதல்வரிடம் அறிக்கையை சமர்பிக்கவுள்ளது.

11:06 (IST) 13 Jul 2021
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை, தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் டெல்லியில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பிரியங்கா காந்தியும் உடன் இருந்துள்ளார்.

10:23 (IST) 13 Jul 2021
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

கே.கே.நகர், போரூர், ராமாபுரம், அடையாறு, கோட்டூர்புரம், ஈக்காட்டுத்தாங்கல், அசோகர் நகர், ஜாபர்கான்பேட்டை, ஆவடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், அயனாவரம், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

10:08 (IST) 13 Jul 2021
நீட் ஆய்வுக்குழுக்கு எதிரான மனு தள்ளுபடி!

தமிழ்நாடு அரசு அமைத்த நீட் ஆய்வுக்குழுவுக்கு எதிராக பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

10:06 (IST) 13 Jul 2021
மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வு ரத்து!

மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இது உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் தான் வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

9:32 (IST) 13 Jul 2021
‘நீட் தேர்வு ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது அல்ல’ – சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!

நீட் தேர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ள நீதியரசர் ராஜன் தலைமையில் குழு அமைப்பட்டுள்ள நிலையில், 'நீட் தேர்வு ஆய்வுக்குழு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது அல்ல' என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

9:03 (IST) 13 Jul 2021
“மேகதாது விவகாரத்தில் காவிரி ஓடும் மாநிலங்களிடம் கருத்து கேட்டு முடிவு” – அமைச்சர் கஜேந்திர சிங்

மேகதாது அணை விவகாரத்தில் காவிரி ஆறு ஓடும் பிற மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பிறகே, முடிவு எடுக்கப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.

8:42 (IST) 13 Jul 2021
நீட் தேர்வுக்கு முன்பாக மாணவியரிடம் இருந்து துப்பட்டாவை பிடுங்குவதை எதிர்த்து, வழக்கு தொடர உள்ளேன் – நடிகர் ஆனந்தராஜ் பேட்டி

“நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகாமை ஆடை விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும்; மாணவியரிடம் இருந்து துப்பட்டாவை பிடுங்குவதை எதிர்த்து, வழக்கு தொடர உள்ளேன்” என நடிகர் ஆனந்தராஜ் குறிப்பிட்டுள்ளார்.

8:14 (IST) 13 Jul 2021
நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2012ல் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்குக் கேட்ட நடிகர் விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதத்தையும் உரிய வரியையும் இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

7:30 (IST) 13 Jul 2021
மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

உயிர்காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும், முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகள் இறக்குமதிக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

6:56 (IST) 13 Jul 2021
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

6:55 (IST) 13 Jul 2021
தமிழக பாஜக தலைவராக 16ஆம் தேதி பொறுப்பேற்கிறார் அண்ணாமலை

சென்னை கமலாலயத்தில் வரும் ஜூலை16ஆம் தேதி பிற்பகல் 2மணிக்கு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி, தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

6:43 (IST) 13 Jul 2021
மேகதாது விவகாரம் – மத்திய அமைச்சர் கருத்து

மேகதாது விவகாரத்தில் காவிரி ஆறு ஓடும் அனைத்து மாநிலங்களின் கருத்துகளையும் கேட்க வேண்டியுள்ளது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

6:21 (IST) 13 Jul 2021
சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிலையில், 2வது போக்சோ வழக்கில் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

5:43 (IST) 13 Jul 2021
2 டெண்டர்கள் ரத்து

கடந்த அதிமுக அரசில் உரிய நடைமுறைகள் இன்றி விடப்பட்ட ரூ.239 கோடி மதிப்பிலான 2 டெண்டர்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.

5:40 (IST) 13 Jul 2021
நீண்ட நாள் பரோல் வேண்டும்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது தன் கணவர் முருகனுக்கும், தனக்கும் நீண்ட நாள் பரோல் வழங்க வேண்டும் என்று நளினி கோரிக்கை வைத்துள்ளார்.

5:33 (IST) 13 Jul 2021
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சருடன் எடியூரப்பா சந்திப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வள அமைச்சரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்திக்க இருக்கிறார். மேலும், பெங்களூருவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து எடியூரப்பா ஆலோசனை செய்ய உள்ளார்.

4:34 (IST) 13 Jul 2021
ஹபீப் முகமது குண்டர் சட்டத்தில் அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியரான ஹபீப் முகமது, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைதானார். இந்நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவுவிட்டுள்ளார்.

4:32 (IST) 13 Jul 2021
சிவசங்கர் பாபா நீதிமன்றத்தில் ஆஜர்

பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

4:30 (IST) 13 Jul 2021
தண்ணீர் தேங்கினால் அபராதம்

டெங்கு தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. கொசுக்கள் வளரும் வகையில் தண்ணீர் தேங்கினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Web Title: Tamil news today live chennai tamil nadu corona modi rain

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com