Advertisment

Tamil News Highlights: மேகதாது அணை கட்டுவதில் 100% உறுதியாக இருக்கிறோம்- கர்நாடக அரசு

Latest Tamil News : சென்னையில் 179 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: மேகதாது அணை கட்டுவதில் 100% உறுதியாக இருக்கிறோம்- கர்நாடக அரசு

Tamil News Highlights : மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு  அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்கலாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்க முடிவு செய்த அவர், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்துப் பேசவிருக்கிறார்.

Advertisment

179 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்

சென்னையில் 179 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தேர்தலுக்கு முன், ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் 5 மாதங்களுக்குப் பின் தற்போது மீண்டும் இடமாற்றம் செய்யப்படுகிறது.

மேகதாது அணை விவகாரம்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.101.92-க்கும் டீசல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:16 (IST) 12 Jul 2021
    மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம்- துரைமுருகன்

    மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மையாவுக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.



  • 21:12 (IST) 12 Jul 2021
    டிவி விவாதங்களை புறக்கணிக்க அதிமுக முடிவு; இபிஎஸ்- ஓபிஎஸ் கூட்டறிக்கை

    மக்கள் பிரச்சனைகள் பல இருக்கின்ற போது, அதையெல்லாம் விடுத்து, ஊடகங்கள் அதிமுக-வின் புகழுக்கு சிறுமைப்படுத்தும் விதமாக விவாத நிகழ்ச்சிகளை நடத்துவதால், தொலைக்காட்சி, சமூகத் தொடர்பு ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.



  • 21:05 (IST) 12 Jul 2021
    டிவி விவாதங்களை புறக்கணிக்க அதிமுக முடிவு; இபிஎஸ்- ஓபிஎஸ் கூட்டறிக்கை

    மக்கள் பிரச்சனைகள் பல இருக்கின்ற போது, அதையெல்லாம் விடுத்து, ஊடகங்கள் அதிமுக-வின் புகழுக்கு சிறுமைப்படுத்தும் விதமாக விவாத நிகழ்ச்சிகளை நடத்துவதால், தொலைக்காட்சி, சமூகத் தொடர்பு ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.



  • 20:56 (IST) 12 Jul 2021
    இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

    இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து தேர்வுக்கான அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.



  • 20:22 (IST) 12 Jul 2021
    தமிழகத்தில் மேலும் 2,652 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 18:45 (IST) 12 Jul 2021
    நீட் வேண்டாம் என்பதுதான் திமுக அரசின் கொள்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    நீட் வேண்டாம் என்பதுதான் திமுக அரசின் கொள்கை. நீட் தேர்வு ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இருப்பினும், மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யும் பணிகள் தொடர்ந்து வருகிறது. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவது தவறில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 18:35 (IST) 12 Jul 2021
    நாடு முழுவதும் செப்டம்பர் 12ல் நீட் தேர்வு - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

    நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படும் நகரங்கள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.



  • 18:31 (IST) 12 Jul 2021
    நாடு முழுவதும் செப்டம்பர் 12ல் நீட் தேர்வு - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

    நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படும் நகரங்கள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



  • 18:24 (IST) 12 Jul 2021
    நாடு முழுவதும் செப்டம்பர் 12ல் நீட் தேர்வு - மத்திய கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

    நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படும் நகரங்கள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.



  • 17:51 (IST) 12 Jul 2021
    மேகதாது அணை நிச்சயம் கட்டப்படும் - கர்நாடக உள்துறை அமைச்சர் பஸ்வராஜ் பொம்மாய்

    கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பஸ்வராஜ் பொம்மாய்: “மத்திய அரசிடம் அனுமதி பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். கர்நாடக அரசு இதில் 100% உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



  • 17:06 (IST) 12 Jul 2021
    சகோதர மாநிலம் என்ற உணர்வுடன் கர்நாடஜன் செயல்பட வேண்டும் - பாமக தலைவர் ஜி.கே.மணி கருத்து

    பாமக தலைவர் ஜி.கே.மணி: “காவிரி பிரச்னையில் கடைமடை மாநிலத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சகோதர மாநிலம் என்ற உணர்வோடு கர்நாடக அரசு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 16:37 (IST) 12 Jul 2021
    மேகதாது அணை விவகாரம்: நாடளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - திருமாவளவன்

    விசிக தலைவர் திருமாவளவன், “நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது விவகாரத்தை தமிழக எம்.பி.க்கள் ஒருமித்த குரலில் எழுப்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.



  • 16:33 (IST) 12 Jul 2021
    சாலையில் மது அருந்திய இளைஞரை கண்டித்த போலீஸ்; பாட்டிலில் குத்திக்கொண்டு இளைஞர் உயிரிழப்பு

    சென்னை அயப்பாக்கத்தில் சாலையில் மது அருந்தியதை எச்சரித்த போலீசார்; மது போதையில் கழுத்தில் பாட்டிலால் குத்திக்கொண்ட இளைஞர் பாக்கியராஜ் உயிரிழந்தார்.



  • 15:42 (IST) 12 Jul 2021
    சபரிமலை - இன்று முதல் முன்பதிவு

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    ஜூலை 16-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கவுள்ள நிலையில் 5,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 15:41 (IST) 12 Jul 2021
    தூய்மைப் பணியாளர்களுக்கு பாரத ரத்னா வழங்க கோரிக்கை

    தூய்மைப் பணியாளர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றும், முன்களப் பணியாளர்களான மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளதாக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.



  • 15:38 (IST) 12 Jul 2021
    மக்களை பிரித்தாளும் முயற்சியில் பாஜக

    பாஜக அரசு மக்களை பிரித்தாளும் முயற்சியை செய்கிறது எனவும், தமிழகத்தை பிரிக்கக் கூடாது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் கூறியுள்ளார்.



  • 13:33 (IST) 12 Jul 2021
    வானிலை அறிக்கை

    6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:10 (IST) 12 Jul 2021
    மேகதாது அணை 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க‌க்கூடாது என்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேகதாது அணை தீர்மானங்களை அனைத்துக் கட்சிகளும் நேரில் சென்று மத்திய அரசிடம் வழங்கும் என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.



  • 12:54 (IST) 12 Jul 2021
    இன்று முதல் பெண் பயணிகளுக்கு இலவச பயணச்சீட்டு

    இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் கட்டாயம் தங்களுக்கான டிக்கெட்களை பெற வேண்டும். சோதனையின் போது டிக்கெட் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது போக்குவரத்துறை. எந்த வழித்தடங்களில் எவ்வளவு பெண்கள் பயணிக்கிறார்கள் என்பதை கணக்கிட டிக்கெட் வழங்கப்படுகிறது என்றும் விளக்கம்.



  • 12:32 (IST) 12 Jul 2021
    முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு

    தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் கே.சி. வீரமணி இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:30 (IST) 12 Jul 2021
    டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளின் பலன் என்ன?

    டெங்கு பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளின் பலன் என்ன என்பது தொடர்பாக விரிவாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது சென்னை மாநகராட்சி.



  • 12:29 (IST) 12 Jul 2021
    பிரிவினையை விதைக்க வேண்டாம் - கே.பி.முனுசாமி

    பிரிவினை விதையை விதைக்க வேண்டாம். கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் தமிழகத்தின் அமைதி பாதிக்கும் என்று அதிமுக எம்.எல்.ஏ. கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.



  • 11:54 (IST) 12 Jul 2021
    ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

    நிர்வாகிகளுடன் ஆலோசையில் ஈடுபட்ட பிறகு, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி மக்கள் மன்றம், ரஜினி ரசிகர் நற்பணிமன்றமாக செயல்படும் எனவும் கூறியுள்ளார்.



  • 11:20 (IST) 12 Jul 2021
    133 ட்விட்டர் கணக்குகள் மீது நடவடிக்கை

    சமூக ஊடக நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் புதிய தகவல் தொழில் நுட்ப விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அரசின் விதிமுறைகளுக்கு முரணாக பதிவிட்ட 133 கணக்குகளுக்கு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • 11:18 (IST) 12 Jul 2021
    தமிழ்நாட்டில் ஜிகா பாதிப்பு இல்லை

    தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் கேரளாவில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 11:15 (IST) 12 Jul 2021
    மின்னல் தாக்கி 7 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள ஆம்பர் கோட்டை அருகே மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கோடா, ஜலாவர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகியுள்ளனர். பல்வேறு இடங்களில் படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 11:12 (IST) 12 Jul 2021
    இந்தியாவில் 37,154 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பேர் உயிரிழந்துள்ளனர்.



Rajinikanth Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment