Advertisment

Tamil News Today : தமிழ்நாட்டில் புதிதாக 2,312 பேருக்கு கொரோனா; 46 பேர் பலி

Latest Tamil News : தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : தமிழகத்தில் புதியதாக 1,896 பேருக்கு கொரோனா; 23 பேர் பலி

Tamil News Today Updates: கொரோனா பரவல் தடுப்பு மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளில் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் அலட்சியப்படுத்தி வருவதால், மூன்றாம் அலை தாக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில் 8 வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாயன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisment

பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் -முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது மற்றும் அடுத்தடுத்த தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. தற்போது அமலில் உள்ள பொதுமுடக்கம், வரும் 18-ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டை எதிர்கொள்ள தயாராகும் எடியூரப்பா

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை அமைக்கும் முயற்சியை கர்நாடக அரசு மிகத் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், அந்த அணையை எக்காரணத்தைக் கொண்டும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசும் எதிர்வினையாற்றி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடியை வருகிற வெள்ளிக்கிழமை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் அனைத்து கட்சி தலைவர்கள் அதே நாளில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை டெல்லியில் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.102.23-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:53 (IST) 16 Jul 2021
    தமிழ்நாட்டில் இன்று 2,312 பேருக்கு கொரோனா; 46 பேர் பலி

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2,312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் இன்று 46 பேர் உயிரிழந்ததாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,986 பேர் குணடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 21:49 (IST) 16 Jul 2021
    கொங்குநாடு என்பது தட்டச்சுப்பிழை - மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்

    மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்கும்போது வெளியிடப்பட்ட விவரக் குறிப்பில் கொங்குநாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது தட்டச்சுப்பிழை என எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.



  • 21:47 (IST) 16 Jul 2021
    சொகுசு கார் வரி விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜய் சார்பில் மேல்முறையீடு

    சொகுசு காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரிய வழக்கில் ₹1 லட்சம் அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.



  • 20:30 (IST) 16 Jul 2021
    மேகதாது அணை கட்ட அனுமதி கோரி பிரதமர் மோடியை சந்தித்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

    பிரதமர் மோடியைச் சந்தித்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 20:27 (IST) 16 Jul 2021
    ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடல்

    டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள உள்ள பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, அனைவரும் வெற்றிப் பதக்கங்களை வாரிக் குவிக்க வாழ்த்துகள் தெரிவித்தார். உங்களுக்கான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று உறுதியளித்தார்.



  • 19:20 (IST) 16 Jul 2021
    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்

    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பணிகள் தொய்வின்றி நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி தவிர, மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து தடை தொடரும்.

    சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:14 (IST) 16 Jul 2021
    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்

    தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 18:26 (IST) 16 Jul 2021
    தமிழக அரசியல் களம் இனி பாஜக vs திமுகதான் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    தமிழக அர்சியல் களம் இனி பாஜக கூட்டணியா திமுக கூட்டணியா என்ற விவாதத்தை நோக்கி நகர்ந்துவிட்டது என்று பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 17:29 (IST) 16 Jul 2021
    கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேவை - அண்ணாமலை

    தமிழக பாஜகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுளள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நீட் தேர்வு வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு; கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேவை என்று கூறியுள்ளார்



  • 16:06 (IST) 16 Jul 2021
    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குதலில் இந்திய புகைப்பட கலைஞர் மரணம்

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குதலில் இந்திய புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தொற்றுநோய்கள், மனிதாபிமான நெருக்கடிகளை படம் பிடித்த டேனிஷ் சித்திக் மறைவு வேதனையை தருகிறது என பதிவிட்டுள்ளார்.



  • 16:05 (IST) 16 Jul 2021
    ஜூலை 19-ந் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு

    தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில் மாணவர்கள் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.



  • 15:22 (IST) 16 Jul 2021
    மதுரையில் போலி மளிகை பொருட்கள் பறிமுதல்

    மதுரையில் சட்டவிரோதமாக டீத்தூள் பல்கொடி பொருங்காயம் உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து விற்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் மதுரை புதுராமநாத புத்தில் உள்ள குடோனில் போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில், தயாரிப்பு எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



  • 15:19 (IST) 16 Jul 2021
    வாடகைக்கு லாரிகளை வாங்கி விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

    நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு அருகே வாடகை லாரிகளை எடுத்து அதனை திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 15:15 (IST) 16 Jul 2021
    தமிழக பாஜகதலைவராக அண்ணாலை பொறுப்பேற்பு

    தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், தற்போது தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றுக்கொண்டார்.



  • 15:13 (IST) 16 Jul 2021
    தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்பு

    தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவராக முன்னாள் பைிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.



  • 14:59 (IST) 16 Jul 2021
    "சம்மனா" அல்லது "வாரண்டா" - கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

    முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா-விற்கு அனுப்பியது "சம்மனா" அல்லது "வாரண்டா" என கீழமை நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.



  • 14:47 (IST) 16 Jul 2021
    'மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை' - அமைச்சர் துரைமுருகன்

    டெல்லி சென்ற தமிழக அனைத்துக்கட்சி மத்திய நீர்வளத் துறை கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தது. அப்போது மத்திய அமைச்சர் ஷெகாவத் 'காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது' என குறிப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் "மேகதாது அணை - மத்திய அரசு துணைபோக கூடாது என வலியுறுத்தினோம். சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக மத்திய அமைச்சருடன் பேசினோம். மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை." என்று கூறியுள்ளார்.



  • 14:17 (IST) 16 Jul 2021
    சபரிமலை கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி: கொரோனா தடுப்பூசி சான்று அவசியம்!

    மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 5 மாதங்களுக்குப் பின் நாளை முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி சான்று இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது



  • 14:10 (IST) 16 Jul 2021
    மத உணர்வுகளை விட உடல் நலமே முக்கியம்.. கன்வர் யாத்திரையை 100% அனுமதிக்கக்கூடாது என உ.பி.அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

    கன்வர் யாத்திரை விவகாரத்தில் தடை விதிக்கும் முடிவை, உத்தரபிரதேச அரசு எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் வரும் திங்கட் கிழமை முடிவை அறிவிக்கும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அறிவித்தது.



  • 14:09 (IST) 16 Jul 2021
    ஜூலை 19-ல் ஜனாதிபதியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேச உள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்



  • 13:50 (IST) 16 Jul 2021
    கொரோனா 3வது அலை - மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

    தமிழகம் உட்பட ஆறு மாநில முதலமைச்சர்களுடன் காணொலியில் பேசிய பிரதமர், கடந்த சில தினங்களில் தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் 80 சதவீத தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார். தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு, மூன்றாவது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



  • 13:27 (IST) 16 Jul 2021
    புலிட்சர் விருது பெற்ற புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம்!

    இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் மரணம். ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தகவ



  • 13:01 (IST) 16 Jul 2021
    மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லி பயணம் செய்யவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளார்.



  • 12:39 (IST) 16 Jul 2021
    ஆகஸ்ட் இறுதியில் கொரோனா 3வது அலை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கணிப்பு

    உலகளவில் கொரோனாவின் உருமாறிய டெல்ட்டா வைரஸ் வேகமாக பரவுவதாக எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.எம்.சி.ஆர்), இந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் கொரோனா 3வது அலை தாக்கக்கூடும் என கணித்துள்ளது.



  • 12:32 (IST) 16 Jul 2021
    4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்!

    நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:03 (IST) 16 Jul 2021
    சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகளுக்கு சம்மன்

    சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. மேலும், திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகளை நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.



  • 12:01 (IST) 16 Jul 2021
    கும்பகோணம் பள்ளி தீ விபத்து 17-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

    2004-ம் ஆண்டு ஜூலை 16-ஆம்தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் சத்துணவு சமையலறையில் ஏற்பட்ட தீ, மேற்கூரையில் பற்றியதில் பள்ளிக்குழந்தைகள் 94 பேர் உயிரிழந்தனர். இதன் 17-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பள்ளி முன்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



  • 11:31 (IST) 16 Jul 2021
    12-ம் வகுப்பு மதிப்பெண்கள் தயார்.. விரைவில் வெளியீடு!

    12-ம் வகுப்பு மதிப்பெண்கள் தயார் நிலையில் இருக்கிறது என்றும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தெரிவித்தார்.



  • 11:30 (IST) 16 Jul 2021
    12-ம் வகுப்பு மதிப்பெண்கள் தயார்.. விரைவில் வெளியீடு!

    12-ம் வகுப்பு மதிப்பெண்கள் தயார் நிலையில் இருக்கிறது என்றும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தெரிவித்தார்.



  • 10:41 (IST) 16 Jul 2021
    இந்தியாவில் 38,949 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 38,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 542 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 10:40 (IST) 16 Jul 2021
    தமிழகம் சரியான பாதையில் செல்லும்

    மேகதாது விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தமிழக அரசு சரியான பாதையில் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கருத்து தெரிவித்துள்ளார்.



  • 10:37 (IST) 16 Jul 2021
    பழைய ஓய்வூதிய திட்டம்

    தேர்தல் வாக்குறுதியின்படி அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை நடைபெறுகிறது. இதனை அமல்படுத்த போக்குவரத்து கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 10:00 (IST) 16 Jul 2021
    ஒரே வாரத்தில் 21 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று

    புதுச்சேரியில் ஒரே வாரத்தில் 21 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலை அளிப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



  • 09:58 (IST) 16 Jul 2021
    தனி நீதிபதியின் கருத்துகளை நீக்குமாறு விஜய் மேல்முறையீடு

    ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவுவரி செலுத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பில், தன் மீதான தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



Stalin Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment