News In Tamil : மதுரை, நரசிங்கம் தட்டான்குளத்தைச் சேர்ந்த தாஹா முகமது தாக்கல் செய்த மனுவை அடுத்து ‘படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த, தமிழக அரசுக்கு, நீதிமன்றம் வேண்டுகோள் விடுக்கிறது. நீதிமன்றத்தின் குரலுக்கு தமிழக அரசு செவி சாய்க்குமா?’ என மதுரை உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா பரவலுக்குப் பின் தமிழகத்தில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க புதிய தொழிற்கொள்கை தற்போது தயாராகிவிட்டது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிடுகிறார். மேலும், சிறு குறுந் தொழிற் நிறுவனங்களுக்கான தொழிற் கொள்கையும் இன்று வெளியிடப்படுகிறது. சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் முன்னிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
கடந்த மாதம் முதல் பெட்ரோல் விலை ரூ.4.94-ஆகவும், டீசல் ரூ.5.56-ஆகவும் உயர்ந்துள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து இன்று ரூ.91.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.84.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் பெட்ரோல் லிட்டர் ரூ.93.17-க்கும், டீசல் ரூ.86.42-க்கும் விற்பனை ஆகின்றன.
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறைக்கு மாறுவதற்காக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நேற்றோடு முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ஃபாஸ்டேக் கட்டாயமாகியுள்ளது. நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பெரும்பாலான வாகனங்கள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கருடன் கடந்து செல்கின்றனர். ஃபாஸ்டேக் அல்லாதவர்கள் இருமடங்கு கட்டணம் செலுத்திச் செல்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே மாநிலத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இரு கட்சிகளும் தேர்தல் பணிக்குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுக்களை அமைத்து மும்முரமாக பணியாற்றி வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக தலைமை முந்திக்கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்கள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியது வரவேற்கத்தக்கது. எங்களின் தொடர் போராட்டத்திற்குப் பின் கிரண் பேடியை மாற்றியதை வரவேற்கிறோம். புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கிரண் பேடி தன்னிச்சையாக செயல்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
கிரண்பேடி – நாராயணசாமி இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கி குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “உலகிலேயே இந்தியாவில்தான் மிக எளிதாக வாகன ஓட்டுனர் உரிமம் கிடைக்கிறது, இது நாட்டுக்கு நல்லதல்ல; 2025க்குள் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு 50% ஆக குறையும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி: “சாலை பாதுகாப்பில் தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. உயிர்களை காப்பது நமது குறிக்கோள். சாலை விபத்துகளைத் தடுக்க தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. சாலை என்பது பயணிப்பதற்கு மட்டும்தான். பந்தயத்திற்கானது அல்ல. இளைஞர்கள் தங்கள் சக்தியை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி: “கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா சர்வதேச மையமாக திகழ்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வைகையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. மேலும், முழு மதுவிலக்கு என்பதை நீதிமன்றத்தின் வலியுறுத்தலாக மட்டும் பார்க்காமல் ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாக பார்க்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 6 ஆண்டுகள் நிறைவு
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், சென்னை எப்போதும் நம்பக்கம்தான் என ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார்.
மாட்டுச் சாணம் மூலம் பெயிண்ட் தயாரிக்கும் முறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது; காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்; கிரிக்கெட் மீதான அவர்களின் புரிதல் அபாரமானது என இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கோ பேக் மோடி எதிர்புக்கு பின்னால் தேச விரோதிகள் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
”கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்” என திஷாரவி கைது குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ந் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
தமிழக அரசின் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 300 பேர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில் 300 பேர் கட்சி மாறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து இதுவரை 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஆகியுள்ளது.
ஓபிசி இடஒதுக்கீட்டில் 4 வகை உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்ற மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2,633 ஓபிசி பிரிவுகளுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து இதுவரை 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதர்காக சட்டமன்றம் சென்றுள்ளார். புதுச்சேரி சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியிலிருந்து நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்கள் இதுவரை ராஜினாமா செய்துள்ளனர்.
சேலத்தில் 2020-21-ம் ஆண்டுக்கான திருமண தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார் ஜப்பானின் நவாமி ஒசாகா.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கவுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.
புதுச்சேரியில் ஏனாம் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்துவிற்கு அனுப்பி உள்ளார். ஏற்கெனவே கடந்த மாதம் தனது அமைச்சர் பதவியை மல்லாடி கிருஷ்ணா ராவ் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.