Tamil News Highlights : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 1400 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது. பேருந்துகளில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி.
சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி உரை
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ‘நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’’ என்ற திருக்குறளைச் சுட்டிக்காட்டி, “கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது என்றும் லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யோகாவை பின்பற்றத் தொடங்கியுள்ளனர் என்றும் கூறினார். மேலும், ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்” என்று சிறப்புரை ஆற்றினார் பிரதமர் மோடி.
இன்று தமிழக சட்டசபை முதல் கூட்டத் தொடர்
16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கலைவானர் அரங்கில் இன்று தொடங்கவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இது என்பதால் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் ஆளுநர் உரை இதில் இடம்பெறும். ஆளுநர் உரையில் இடம்பெறும் அறிவிப்புகளின் எதிர்பார்ப்புகள் ஒருபுறமிருக்க, முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் மறுபுறம் ஆயத்தமாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும் என திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் அடுத்து வரும் தேர்தலில் மாபெரும் வெற்றியைபெறும் வகையில் நமது ஐந்தாண்டு செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
தமிழக அரசு பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், குழுவில் உள்ள பொருளாதார வல்லுநர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள் எனவும், பொருளாதாரக் குழுவை அமைத்தது சிறந்த நடவடிக்கை எனவும், ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 189 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24.29 லட்சமாக உயர்ந்துள்ளது, மேலும் மொத்த உயிரிழப்பு 31,386ஆக உயர்ந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் 65வது படத்திற்கு ’BEAST’ என பெயரிடப்பட்டுள்ளது. 'BEAST' படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அதில், வாக்காளர்களின் வசதிக்காகவே சின்னங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது.
நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையத் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன்: “பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்ரு கருத்து தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பினரின் கருத்தையும் பதிவு செய்து இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்” என்று கூறினார்.
பள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்படுள்ளது.


டோக்யோ ஒலிம்பிக் தொடரில் 50% இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று டோக்யோ ஒலிம்பிக் நிர்வாக குழு அறிவித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியில், தமிழ்நாடு தலைநிமிர்ந்து பீடு நடைபோடும் என்ற நம்பிக்கையை ஆளுநர் உரை ஏற்படுத்தி இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். வேளாண் துறைக்கான தனி நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட கடும் எதிர்ப்பு, முல்லை பெரியாறு அணையை பலப்படுத்துதல் போன்றவற்றில் தி.மு.க. அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் உரை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக அறிவித்த திட்டங்கள் உள்ளடக்கி ஆளுநர் உரை அமைந்திருக்கிறதா என துருவித் துருவி பார்த்தேன். ஆளுநர் உரையில் எனக்கு எதுவும் தென்படவில்லை. நீட் விவகாரத்தில் ஒரு தெளிவற்ற நிலை காணப்படுவதாக தெரிகிறது என எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான தெளிவான செயல்திட்டம் இல்லாததும், சமூகநீதி சார்ந்த வாக்குறுதிகள் இல்லாததும் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக தமிழகம் முழுவதும் ஏராளமான புகார்கள் வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய குற்றப்பிரிவு அறிவித்த இ-மெயில் முகவரிக்கு 100க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ஆளுநர் உரை வழக்கமான சடங்காக அமைந்துள்ளது. வெறும் அறிவிப்புகளின் தொகுப்பாக இருக்கும் இந்த உரையில் உள்ள அம்சங்களை எந்த அளவிற்கு ஆட்சியாளர்கள் செயல்படுத்துவார்கள் என தெரியவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஏனெனில், மேகேதாட்டு அணை பிரச்னை, நீட் தேர்வு விவகாரம், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு போன்றவற்றில் ஆக்கப்பூர்வமாக செயல்படாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் தி.மு.க அரசு ஆளுநர் உரை அறிவிப்புகளை எப்படி செயல்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் -டிடிவி தினகரன்
@CMOTamilnadu— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 21, 2021
சென்னையில் ஒரே வாரத்தில் ஷெனாய் நகர், ராமாபுரம், வேளச்சேர், தரமணி ஆகிய 4 இடங்கலில் உள்ள ஏ.டி.எம்.களில் ரூ. 15 லட்சம் வரை திருட்டு. மர்ம கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர் காவல்துறையினர்
சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூன் 24ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 24ம் தேதி அன்று சட்டமன்றத்தில் பதிலுரை வழங்குகிறார் முதலமைச்சர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் திமுக கூறியது. ஆனால் அது தொடர்பாக ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெறவில்லை என்றும், கொரோனா பரவலை குறைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் பேச்சு.
பாலியல் வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு பாஜக பிரமுகர் ஒருவர் அடைக்கலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைமறைவாக இருந்தபோது பா.ஜ.க.வின் தென்மாவட்ட முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் தங்க வைத்ததாகவும் தகவல்.
இன்று உலகம் முழுவதும் இசை தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள புதிய பாடல் ஒன்றின் வீடியோ
Happy world-music day! Harmony with A.R Rahman | Stream Now | Prime Ex… https://t.co/VoY0wtka52 via @YouTube— A.R.Rahman #99songs 😷 (@arrahman) June 21, 2021விருதுநகர் சாத்தூர் அருகே தாயில்பட்டியில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒரு கர்ப்பிணி உள்பட 2 பேர் பலி. நான்கு வீடுகள் இடிந்து சேதம். 4 பேர் மருத்துவமனையில் அனுமதி
மனித கழிவுகளை அகற்றும் இயந்திரத்தை தன்னுடைய தொகுதியான திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் அறிமுகம் செய்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழகத்தில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டும், இருக்கும் மனித வளங்களை முழுமையாக பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சியை பெற, தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று அமைய உள்ளது. இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபர் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாளர் அரவிந்த் சுப்பிரமணியன், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஜீன் ட்ரெஸ் மற்றும் மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ். நாராயணன் இந்த குழுவில் இடம் பெற உள்ளனர்.
ஈழத் தமிழர்களுக்கு சம குடிமைசார் மற்றும் அரசியல்சார் உரிமைகளை உறுதி செய்திய இலங்கை அரசை வலியுறுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். தமிழகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தமிழ் மொழி இணை-அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படும். அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 343-ல் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
முதல்வர் பதவியேற்ற பிறகு முக ஸ்டாலின் டெல்லி சென்று தமிழக அரசுக்கு தேவைப்படும் உதவிகள், தமிழக அரசின் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டிய பிரச்சனைகள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு தேவைப்படும் முக்கிய திட்டங்கள் ஆகியவற்றை விளக்கியுள்ளார். தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம் என்று பன்வாரிலால் புரோகித் பேச்சு.
மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை உயர்த்த தொடர்ந்து வலியுறுத்துவோம்
இதுவரை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 335.01 கோடி ரூபாய் நிதி உதவி பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்டுள்ளது. இத்தொகையில் 141.10 கோடி ரூபாய் உயிர்காக்கும் கருவிகள் மற்றும் மருந்துகளை கொள்முதல் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்ஸிஜன் வழங்க ரூ. 50 கோடியும், மூன்றாம் அலை தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ. 50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவை கூட்டத்தொடர் உரையில் கூறினார். மேலும், 2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என்றும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைஉரையாற்றினார். அதில், தமிழ் மிகவும் இனிமையான மொழி என்று கூறியதோடு இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என்று கூறினார். மேலும், மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் விவசாயிகள் நலன் காக்க, ஆண்டுதோறும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
மே மாதம் வாங்கிய 1000 ரூபாய் மாதாந்திர பாஸ், ஜூலை 15 வரை செல்லும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ஆரணி அருகே கே.வி.குப்பம் கிராமத்தில் 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி தாய் உள்பட 3 பெண்கள் அடித்து கொன்றதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் 40 நாட்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. இதில் பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கிறது.