Advertisment

News Highlights: உடல் வலி, சளி, அஜீரணம் இருந்தால் உடனே பரிசோதனை செய்க- எய்ம்ஸ் மருத்துவர்கள்

News In Tamil Live 672-ஆக இருந்த ரயில் சேவை 434-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது என தெற்கு ரயில்வே தெரிவிக்கிறது.

author-image
WebDesk
New Update
Tamilnadu covid -19 case Tamil News: 52 MBBS students from Kancheepuram college test positive

Latest Tamil News Live : தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டதை அடுத்து, இரவு 10 மணிக்கு மேல் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதிகாலை ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரத்திற்கு ஒரு ரயில் சேவை மட்டுமே இருக்கும் என்றும் 672-ஆக இருந்த ரயில் சேவை 434-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெற்கு ரயில்வே கூறுகிறது.

Advertisment

இரவுநேர ஊரடங்கு… வெறிச்சோடிய சாலைகள்..

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு அமலுக்கு வந்தது. இதனால் மாநிலம் முழுவதும் சாலைகள் யாவும் வெறிச்சோடி காணப்பட்டன. சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அனைத்து மேம்பாலங்களும் அடைக்கப்பட்டிருந்தன.

ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கம்

கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்தான ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரியை முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த இறக்குமதி வரி விலக்கு வருகிற அக்டோபர் மாத இறுதி வரை அமலில் இருக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரங்கள் விலை உயர்வு.. தவிக்கும் விவசாயிகள்..

புதுக்கோட்டையில் உரங்கள் விலை உயர்வினாலும் இதனால் உரத் தட்டுப்பாடு காரணமாகவும் விவசாயிகள் தவிக்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் போன்ற உரங்களின் விலை கடுமையாக உயர்ந்தது. மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஏற்பட்ட உரத்தட்டுப்பாடு காரணமாகவும் புதுக்கோட்டை விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:57 (IST) 21 Apr 2021
    18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இலவசம் - கேரள முதல்வர்

    18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாகவே போடப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் மாநில அரசுகள் நிதிச்சுமையில் உள்ளதால் மத்திய அரசு தடுப்பூசிகளை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



  • 21:45 (IST) 21 Apr 2021
    தடுப்பூசி ஏற்றுமதி ஒரு குற்றம் - ராகுல் காந்தி

    சொந்த மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது ஒரு வகை குற்றமாகும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசிடம் தெளிவான திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.



  • 20:49 (IST) 21 Apr 2021
    கோயில் வளாகத்திலே கள்ளழகர் திருவிழா நடைபெறும்

    கொரோனா பரவல் காரணமாக மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோயில் வளாகத்திலே நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் முக்கிய நிகழ்வுகள் ஆன்லைன் மூலம் ஒளிப்பரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:53 (IST) 21 Apr 2021
    உடல்வலி, சளி, அஜீரணம் போன்ற அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் - எய்ம்ஸ் மருத்துவர்கள்

    உடல்வலி, சளி, அஜீரணம் போன்ற அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் உடலில் ஆக்ஸிஜன் அளவு 93 - 99% இருந்தால் தனியே ஆக்ஸிஜன் அளிக்க தேவையில்லை எனவும் கூறியுள்ளனர்.



  • 19:08 (IST) 21 Apr 2021
    தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா உறுதி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம். மேலும், இன்று ஒரு நாளில் 53 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.



  • 17:55 (IST) 21 Apr 2021
    இருசக்கர வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

    இருசக்கர வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 17:48 (IST) 21 Apr 2021
    மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

    நடிகர் மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக சென்னை மாநகராட்சி அவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தது.



  • 17:15 (IST) 21 Apr 2021
    வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

    தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொளி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர்.



  • 17:13 (IST) 21 Apr 2021
    ஆக்ஸிஜன் கசிவால் 22 நோயாளிகள் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

    நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 22 நோயாளிகள் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • 17:13 (IST) 21 Apr 2021
    இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்பு

    உள்நாட்டு தயாரிப்பான பயோலாஜிக்கல்-இ என்ற தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.



  • 16:53 (IST) 21 Apr 2021
    மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் மருத்துவர்களுக்கு நோட்டீஸ்

    வேலூர் அரசு மருத்துவமனையில் 7 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில், ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தது குறித்து பதிலளிக்க மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவ கல்லூரி டீனுக்கு மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 16:41 (IST) 21 Apr 2021
    தமிழகம் வந்த பிளஸ் டூ வினாத்தாள்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பிளஸ் டூ பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலங்களில் அச்சடிக்கப்பட்ட பிளஸ் டூ வினாத்தாள் இன்று தமிழகம் வந்துள்ளது. இந்த வினாத்தாள்கள் கல்வி மாவட்டவாரியாக கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.



  • 15:48 (IST) 21 Apr 2021
    காவல்துறை உயர் அதிகாரி மீதான பாலியல் : சிபிஐ விசாரணைக்கு மறுப்பு

    காவல்துறை உயர் அதிகாரி மீதான பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில்,ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்பி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 15:42 (IST) 21 Apr 2021
    கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையர் பதில்

    வாக்கு எண்ணும் மையங்களில், முறைகேடு நடப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று கூறியுள்ள தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வாக்கு எண்ணும் மையங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார்.



  • 15:24 (IST) 21 Apr 2021
    கோவாக்சின் தடுப்பூசி ஆய்வின் மூன்றாம் கட்ட ஆய்வறிக்கை வெளியிடு!

    தீவிர கொரோனா தொற்றிலிருந்து 100 சதவீத பாதுகாப்பும், அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றிலிருந்து 70 சதவீதம் பாதுகாப்பும் அளிக்கும் தன்மை கொண்டதாக சீரம் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்து உள்ளதாக, தற்போது வெளியாகியுள்ள அதன் மூன்றாம் கட்ட தற்கால முடிவுகள் தெரிவிக்கின்றன.



  • 15:16 (IST) 21 Apr 2021
    ஆக்ஸிஜன் டேங்கர் கசிவு; 22 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

    நாசிக் மருத்துவமனையில், ஆக்ஸிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவில் 11 நோயாளிகள் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்னிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.



  • 14:44 (IST) 21 Apr 2021
    ஆக்ஸிஜன் கசிவு; 11 நோயாளிகள் உயிரிழப்பு என தகவல்!

    மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டது. இதனால், சிகிச்சையில் இருந்து வந்த 11 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 14:14 (IST) 21 Apr 2021
    திட்டமிட்டபடி வாக்கு எண்னிக்கை; சத்திய பிரதா சாஹூ உறுதி!

    தமிழகத்தில் திட்டமிட்டபடி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ உறுதி அளித்துள்ளார்.



  • 14:12 (IST) 21 Apr 2021
    ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேதாந்தா மனு!

    மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், தற்போதுள்ள ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க, இலவசமாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வழங்க உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளது.



  • 13:25 (IST) 21 Apr 2021
    தங்கம் விலை உயர்வு

    ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 36 ஆயிரமாக விற்பனை செய்யப்பாடுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ. 472 இன்று அதிகரித்துள்ளது.



  • 13:23 (IST) 21 Apr 2021
    வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை இல்லை

    மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில் ஏப்ரல் 29ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் குடமுழுக்கு நிகழ்விற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.



  • 13:05 (IST) 21 Apr 2021
    தடுப்பூசிகளின் விலையை அறிவித்தது சீரம் நிறுவனம்

    இந்திய அரசின் வழிகாட்டுதலின் படி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ. 400 வீதம் வழங்குவதாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600க்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளது சீரம் நிறுவனம்.

    Following the Govt of India directives, we are announcing the prices of the Covishield vaccine - Rs 400 per dose for state governments and Rs 600 per dose for private hospitals: Serum Institute of India (SII) covid19 pic.twitter.com/xU54SUPbiE

    — ANI (@ANI) April 21, 2021


  • 12:42 (IST) 21 Apr 2021
    புதுச்சேரியில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு இல்லை

    புதுச்சேரியில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு இல்லை. அடுத்த 10 நாட்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளன என்றும் கொரோனா பாதிப்பை பொறுத்து அடுத்த ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர‌ராஜன் அறிவித்துள்ளார்.



  • 12:40 (IST) 21 Apr 2021
    போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 15 கோடி வரை இழப்பு

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ 15 கோடி வரை இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறியுள்ளார்.



  • 12:39 (IST) 21 Apr 2021
    தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முறைகேடுகள்

    திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் முறைக்கேடுகள் நடைபெற்றுள்ளன என்று நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்திரன் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.



  • 12:21 (IST) 21 Apr 2021
    தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை

    இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை செய்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மே 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.



  • 12:21 (IST) 21 Apr 2021
    தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று

    சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான்ன தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடந்து அவர்கள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். அவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது.



  • 12:18 (IST) 21 Apr 2021
    தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை

    இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை செய்து வருகிறார். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மே 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.



  • 11:59 (IST) 21 Apr 2021
    கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன ?

    நதிகள், நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 11:39 (IST) 21 Apr 2021
    மண்டேலா

    நடிகர் யோகி பாபுவின் 'மண்டேலா' திரைப்படத்தை மறு தணிக்கை செய்யக்கோரிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திரைப்பட தணிக்கை வாரியம், படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 11:21 (IST) 21 Apr 2021
    மருத்துவமனை, ஹோட்டல்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள்

    தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.



  • 11:15 (IST) 21 Apr 2021
    இந்தியா - இங்கிலாந்து இடையே விமான சேவை நிறுத்தம்

    இந்தியா - இங்கிலாந்து இடையே வரும் 24 முதல் 30-ம் தேதி வரை விமான சேவை நிறுத்தப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.



  • 10:59 (IST) 21 Apr 2021
    கட்டுப்பாடுகளுக்கு இடையே தினசரி 4 காட்சிகள்

    தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் திரையிடப்படும் காட்சிகளின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி இரவு 10 மணிக்குள் அனைத்து காட்சிகளையும் முடித்து திரையரங்குகளை மூடுவது என திட்டமிடப்பட்டது. அதேநேரத்தில், காலைக் காட்சியை 9.45-க்கு தனி திரையரங்குகளில் திரையிடவும் மால்களில் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணிக்கு காலை காட்சி திரையிடவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.



  • 10:54 (IST) 21 Apr 2021
    இந்தியாவுக்கு தடுப்பூசி மூலப்பொருட்களை வழங்க மறுப்பு

    1950 அமெரிக்க பாதுகாப்பு உற்பத்தி சட்டம் காரணமாக கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க நிறுவனங்கள் மறுத்துள்ளன. இதுகுறித்து பரிசீலிப்பதாக ஜோ பைடன் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.



  • 10:50 (IST) 21 Apr 2021
    மத்திய அரசை இருகரம் குவித்து கேட்கிறேன் - கெஜ்ரிவால்

    டெல்லி மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்சிஜன் அளிக்க மத்திய அரசை இருகரம் குவித்து கேட்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், இன்று காலைக்குள் ஆக்சிஜன் அளிக்கப்படாவிட்டால் நகரில் பெரும் குழப்பம் விளையும் என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.



  • 10:45 (IST) 21 Apr 2021
    சென்னையில் 30 இடங்களில் மையங்கள்

    சென்னையில் 30 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக 10,000 படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.



Lockdown Indian Railways
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment