Advertisment

Tamil News Highlights : முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Latest Tamil News தமிழகத்தில் உள்ள 3000 தொழு நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் தொடக்கம்

author-image
WebDesk
New Update
former AIADMK minister Manikandan arrested aiadmk ex minister manikandan arrested, அதிமுக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது, நடிகை சாந்தினி பாலியல் புகார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினி, actress chandini sexual complaint, aiadmk, manikandan, actress chandini

Tamil News Live : நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டிருக்கிறார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் அளித்திருந்த நிலையில் மணிகண்டன் தற்போது கைதாகியிருக்கிறார்.

Advertisment

தளர்வுகளை அறிவிப்பதில் கவனம் வேண்டும்

மாநில அரசுகள் மிக கவனமாகப் பரிசீலித்த பிறகுதான் பொது முடக்கத் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் பொது முடக்கத் தளர்வுகளை அளிப்பது அவசியமானது என்றும் அதே நேரம் கள நிலவரங்களை நன்கு ஆராய்ந்து அறிந்து அதன் பின்பே உரியத் தளர்வுகளை அளிக்க வேண்டும் என்றும் அஜய் பல்லா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு மேலும் 3.10 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள்

தமிழ்நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்காக மத்திய தொகுப்பிலிருந்து மேலும் 3 லட்சத்துப் பத்தாயிரத்து 150 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்து சேர்ந்திருக்கிறது. இவற்றைப் பெற்றுக் கொண்ட தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னையின் மாநில சேமிப்பு கிடங்கிற்குக் கொண்டு சென்றனர். மேலும், தமிழகத்தில் உள்ள 3000 தொழு நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி நாளை முதல் தொடங்க உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.98.40-க்கும், டீசல் லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து ரூ.92.58-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:42 (IST) 20 Jun 2021
    முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

    முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பெங்களூரில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்ட மணிகண்டனிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை செய்தனர்.



  • 20:09 (IST) 20 Jun 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,817 பேருக்கு கொரோனா; 182 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,817 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 182 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.



  • 18:12 (IST) 20 Jun 2021
    சென்னையில் நாளை முதல் காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

    சென்னையில் நாளை முதல் காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பமாகிறது என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், காலை 9 முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • 17:10 (IST) 20 Jun 2021
    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேருக்கு கொரோனா உறுதி

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 124 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.



  • 16:51 (IST) 20 Jun 2021
    பெற்றோர் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் - காதாரத்துறை செயலாளர்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், குழந்தைகளின் பெற்றோர் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,தெரிவித்துள்ளார்.



  • 15:53 (IST) 20 Jun 2021
    மின் நுகர்வோர் சேவை மையம் தொடக்கம்

    மின்வாரியம் தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சேவை மையத்தில் மின் விநியோகம் தொடர்பாக 24 மணி நேரமும் மக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக 9498794987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்



  • 15:47 (IST) 20 Jun 2021
    சர்வதேச யோகா தினம் - நாளை காலை பிரதமர் உரை

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாளை காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். பிரதமரின் உரையை தொடர்ந்து 7 மணியில் இருந்து 7.30 மணி வரை யோகா செய்முறை விளக்கம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 15:02 (IST) 20 Jun 2021
    தமிழ்நாட்டில் மின்னகம் நுகர்வோர் சேவை மையம் திறப்பு

    தமிழ்நாட்டில் மின் துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில், “மின்வெட்டு, மின் இணைப்பு பெறுவதில் சிக்கல், பராமரிப்பு பணிகள் என மின்சார துறை சார்ந்த அனைத்து வகை புகாரினை 9498794987 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அளிக்கலாம்மின்வெட்டு, மின் இணைப்பு பெறுவதில் சிக்கல், பராமரிப்பு பணிகள் என மின்சார துறை சார்ந்த அனைத்து வகை புகாரினை 9498794987 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:53 (IST) 20 Jun 2021
    எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 250 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வார்டை முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆய்வு செய்து வருகிறார்.



  • 14:37 (IST) 20 Jun 2021
    அரசு தியேட்டரை அனுமதிக்க வேண்டும் - ஐசரி கணேஷ்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் தற்போது புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகள் 100 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள அரசு தியேட்டரை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வலியுறுத்தியுள்ளார்.



  • 14:37 (IST) 20 Jun 2021
    அரசு தியேட்டரை அனுமதிக்க வேண்டும் - ஐசரி கணேஷ்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் தற்போது புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகள் 100 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள அரசு தியேட்டரை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வலியுறுத்தியுள்ளார்.



  • 13:02 (IST) 20 Jun 2021
    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து அனுமதி

    சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணம் செய்ய வேண்டும்.

    அதே போல, 50 சதவீத இருக்கைகளுடன் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்களில் இ-பதிவு இன்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வாடகை டாக்சிக்களில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • 12:37 (IST) 20 Jun 2021
    பெட்ரோல் டீசல் மதிப்பு கூட்டுவரியை குறைக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: “கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.



  • 10:47 (IST) 20 Jun 2021
    நாளை சர்வதேச யோகா தினம் முன்னிட்டு பிரதமர் மோடி உரை

    நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 10:44 (IST) 20 Jun 2021
    ஈரானின் அடுத்த அதிபர் இப்ராஹிம் ரைசி

    தற்போதைய அதிபர் ஹாசன் ரோஹானி, வரும் ஆகஸ்ட் மாதம் பதவி விலக உள்ள நிலையில் ஈரானின் அடுத்த அதிபராக இப்ராஹிம் ரைசி பதவி ஏற்க உள்ளார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் இப்ராஹிம் ரைசி, ஈரான் பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவர சிறந்த திட்டங்களை தீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • 10:37 (IST) 20 Jun 2021
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

    நியூசிலாந்துக்கு எதிராக சவுத்தாம்டனில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தில் தற்போது வரை இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வருகிறது.



  • 10:36 (IST) 20 Jun 2021
    ஊர் பஞ்சாயத்து முன்பு காலில் விழ வைத்ததாக புகார்

    அலங்காநல்லூர் அருகே மேலபனங்காடி கிராமத்தில் கன்று குட்டியை திருடியதாக கூறி காலில் விழ வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.



Covid 19 Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment