Advertisment

News Highlights : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 36184 பேருக்கு கொரோனா உறுதி

Latest Tamil News : வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மே 24-ம் தேதி புதிய புயல் உருவாகும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
News Highlights : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 36184 பேருக்கு கொரோனா உறுதி

Tamil news today live : பரவி வரும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்யவிருக்கிறார். மே 24-ம் தேதியுடன் முழு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இந்த முக்கிய ஆலோசனை நடைபெறவிருக்கிறது.

Advertisment

கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கவுள்ளது

பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. ஹைதராபாத்தை தொடர்ந்து, குஜராத் மாநிலம் அங்கலேஷ்வரில் உள்ள தடுப்பூசி மையத்திலும் கூடுதலாகத் தடுப்பூசி உற்பத்தி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு, சுமார் 20 கோடி டோஸ்களை பாரத் பயொடெக் தயாரிக்க உள்ளது.

கொரோனா பரிசோதனைக்குக் கூடுதல் கட்டணம் வசூல்

புதுச்சேரியில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, அங்குள்ள தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களில் கொரோனா தொடர்பான  RTPCR பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த 500 ரூபாய் கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் 'யாஸ்' எனும் புதிய புயல் - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மே 24-ம் தேதி புதிய புயல் உருவாகும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தப் புதிய புயலுக்கு யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, மே 26-ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, காவல்துறையினர் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக எடுத்துவருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 21:07 (IST) 21 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36184 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36184 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 17,70,988ஆக உயாந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 467 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.


  • 19:18 (IST) 21 May 2021
    ஜூன் 3-ம் தேதிக்குள் 2-வது தவனை வழங்கப்படும் என அறிவிப்பு

    தமிழத்தில் கொரோனா நிதியாக 4 ஆயிரம் நிவாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் தவனையான 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது தவனையாக 2 ஆயிரம் ஜூன் 3-ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 19:15 (IST) 21 May 2021
    அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் நீக்கம்

    கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.


  • 18:15 (IST) 21 May 2021
    கொரோனா தடுப்பு - முதல்வர் விளக்கம்

    1212 செவிலியர்களை பி நிரந்தரம் செய்து அறிவிப்பு வெளியிட்டோம். தொழில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். ஆட்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தி தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பு பணிக்காக 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை அனுப்பி வைத்தேன் என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.


  • 17:37 (IST) 21 May 2021
    திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு

    கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 400 புதிய படுக்கை வசதிகளை திறந்து வைத்தார்.


  • 17:35 (IST) 21 May 2021
    ஸ்டெர்லைட் போராட்ட வழக்கு வாபஸ்

    பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பான வழக்குகள் தவிர ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான மற்ற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறுவாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


  • 16:57 (IST) 21 May 2021
    திருச்சி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு!

    கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு நடத்தி வரும் நிலையில், தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அங்குள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.


  • 16:48 (IST) 21 May 2021
    கருப்பு பூஞ்சை பாதிப்பு சிகிச்சைக்கு மருந்து வாங்க உத்தரவு

    கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 5000 குப்பிகள் மருந்து வாங்க தமிழ்நாடு மருத்துவ பணி கழகம் உத்தரவிட்டுள்ளது.


  • 16:32 (IST) 21 May 2021
    ஆசியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் அம்பானி, அதானி

    ஆசியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, சீனாவின் ஸாங் ஷான்ஷானை முந்தி, 2வது இடத்தை பெற்றார். முதலிடத்தில் ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார்.


  • 16:20 (IST) 21 May 2021
    அரசுப்பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலவருக்கு நன்றி - விசிக தலைவர் திருமாவளவன்

    "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி நியமன ஆணைகளை வழங்கிய மாண்புமிகு முதலவர் அவர்களுக்கு விசிக சார்பில் மனம்நிறைந்த நன்றி. மேலும்,பொதுமக்கள் மீதான பொய்வழக்குகள் அனைத்தையும் திரும்பெற ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம்" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


  • 15:58 (IST) 21 May 2021
    தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 3வது நாளாக முதல் இடம்!

    தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 3வது நாளாக முதல் இடத்தில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 15:56 (IST) 21 May 2021
    சுற்றுசூழல் ஆர்வலர் சுந்தர்லால் மறைவிற்கு குடியரசுத் தலைவர் இரங்கல்...!

    பிரபல சுற்றுசூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணாவின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.


  • 15:54 (IST) 21 May 2021
    7 தமிழர் விடுதலை விவகாரம் - திருமாவளவன் வலியுறுத்தல்!

    "7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. எனவே 7 பேரையும் விடுவிப்பதாக மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும். அவரிடமிருந்து ஒப்புதல் வரும்வரை அவர்கள் 7 பேரையும் பரோலில் விடுவிக்கவேண்டும்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


  • 15:36 (IST) 21 May 2021
    பவானிபுர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டி?

    மேற்கு வங்க மாநிலம் பவானிபுர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சொவந்திப் சேட்டர்ஜி ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


  • 15:33 (IST) 21 May 2021
    சென்னையில் 2வது நாளாக கோடை மழை!

    சென்னையில் மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், போரூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருவேற்காடு, வளசரவாக்கம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


  • 15:32 (IST) 21 May 2021
    சென்னையில் 2வது நாளாக கோடை மழை!

    சென்னையில் மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், போரூர், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், திருவேற்காடு, வளசரவாக்கம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


  • 15:10 (IST) 21 May 2021
    "ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு அங்கீகரிக்க முடியாது"- சென்னை உயர்நீதிமன்றம்

    ஒரே ஆண்டில் நேரடியாக, தொலைதூரக் கல்வி மூலம் பெற்ற பட்டங்களை அங்கீகரிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மூன்று நீதிபதிகள் அமர்வு, ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு அங்கீகரிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தொலைதூர கல்வியாளர்களுக்கு முறையான பயிற்சி, அனுபவம் கிடையாது என்றும் இரட்டை பட்டப்படிப்பை அனுமதிப்பது தொடர்பாக மனித வள மேம்பாட்டு துறைக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


  • 14:13 (IST) 21 May 2021
    பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் - சோனியா

    கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு இலவச கல்வியை வழங்க வேண்டும் என்றும் அதற்காக நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.


  • 13:55 (IST) 21 May 2021
    விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்

    விழுப்புரம் மாவட்ட்டத்தில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  • 13:42 (IST) 21 May 2021
    செல்லப் பிராணி இறந்த பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதி சடங்கு

    பீகாரை சேர்ந்த நபர் ஒருவர் 12 வருடங்களாக செல்லமாக வளர்த்து வந்த நாய் இறந்த நிலையில் அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் நடத்தியுள்ளார்.


  • 13:39 (IST) 21 May 2021
    புதுவையில் நிலவும் குழப்பம்

    புதுவையில் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 19 நாட்கள் ஆன நிலையில் எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்காமல் உள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


  • 13:02 (IST) 21 May 2021
    கடந்த 20 நாட்களில் கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4983 ஆக அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனா வைரஸால் கடந்த 20 நாட்களில் 4,983 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பால் மக்கள் அச்சம். சென்னையில் அதிகபட்சமாக 1314 நபர்கள் கடந்த 20 நாட்களில் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 20 நாட்களில் 441 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 294 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.


  • 12:56 (IST) 21 May 2021
    கொரோனா தொற்று

    கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸில் மக்கள் உற்சாகமாக வலம் வருகின்றனர். அதே நேரத்தில் இலங்கையில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. நோய் தொற்று அதிகரிப்பால் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.


  • 12:21 (IST) 21 May 2021
    கொரோனா நிவாரண நிதி அறிவிப்பு

    மத்தியப் பிரதேசத்தில் கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.


  • 11:56 (IST) 21 May 2021
    சென்னையில் 2600 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு

    6 பேருக்கு மேல் தொற்று உள்ள 2600 இடங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்தது சென்னை மாந்கராட்சி. சென்னையில் 3 மேருக்கும் குறைவாக தொற்றுகள் உள்ள பகுதிகளாக 6500 தெருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


  • 11:50 (IST) 21 May 2021
    மதுரை தோப்பூரில் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

    மதுரை தோப்பூரில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த முதல்வர் முக ஸ்டாலின் அந்த மையத்தை ஆய்வு செய்தார்.


  • 11:48 (IST) 21 May 2021
    கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் மீது கடும் நடவடிக்கை

    கொரோனா பரிசோதனைகளுக்காக கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் ஆய்வகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். கூடுதல் கட்டணங்கள் வசூலித்தால் 1800 425 3993 அல்லது 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.


  • 11:43 (IST) 21 May 2021
    ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் கூடிய 2 பேருந்துகளை வழங்கிய அறக்கட்டளைகள்

    சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தலா 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் பொருத்தப்பட்ட 2 பேருந்துகளை ஆரண்டா, கருணை அறக்கட்டளைகள் வழங்கியுள்ளன.


  • 11:21 (IST) 21 May 2021
    கொரோனாவால் 2 விவசாயிகள் மரணம் - கிசான் யூனியன்

    கொரோனாவால் இரண்டு விவசாயிகள் மரணமடைந்துள்ளதால், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் என பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் போலால் சிங் கோரிக்கை வைத்திருக்கிறார்.


  • 10:31 (IST) 21 May 2021
    துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு பணி நியமன ஆணை

    மதுரை ஆட்சியர் அலுவலகத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர், காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைத்தன.


  • 10:27 (IST) 21 May 2021
    ராஜீவ் காந்தி கொலை வழக்கு :7 பேர் விடுதலையில் உடன்பாடு இல்லை

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


  • 10:07 (IST) 21 May 2021
    ஒரே நாளில் 2,59,551 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் 2,59,551 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும், 4209 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 09:59 (IST) 21 May 2021
    கருப்பு பூஞ்சை நோய் காரணமாக இளம் பெண் உயிரிழப்பு

    கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 32 வயது பெண் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக உயிரிழந்திருக்கிறார். மேலும், 62 வயதான அப்துல் காதர் என்பவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு கண் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருக்கிறது. கேரளாவில் இதுவரை 15 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டிருக்கிறது.


  • 09:54 (IST) 21 May 2021
    தலா ரூ.1 லட்சம் நிதியுதவி

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி தரப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.


Stalin Tamilnadu Covid Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment