Advertisment

News Highlights : நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு; இன்று மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கம்!

Latest Tamil News : கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

author-image
WebDesk
New Update
News Highlights : நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு; இன்று மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கம்!

Tamil News Today Live:  தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை ஜூன் 3 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சேலம், கோவை, மதுரை திருச்சி ஆகிய இடங்களுக்குச் சென்று கொரோனா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் என்.ஐ.டி யில் 670 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசு கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்தது. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில், கொரோனா பரவல் குறையாததால் ஊரடங்கை நீட்டித்து தீவிரப்படுத்துவது குறித்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கருப்பு பூஞ்சை

தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு சிகிச்சை அளிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தாக்கம் ஏற்படுவதாகவும், இதுவரை தமிழகத்தில் 9 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம்

கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை

வடக்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றெழுத்த தாழ்வு பகுதிக்கு ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் ஒடிசா, மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாநிலங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 20:52 (IST) 22 May 2021
    வழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட டுவைன் பிராவோ

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள்தீவிரமடைந்து வரும் நிலையில்,தினசரி பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. இதனால் பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ கொரோனா குறித்து வழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில்,

    கொரோனா தொற்று காலத்தில் அனைவரும் பாதுகாப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா குறித்து அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். நாம் அனைவரும் சாம்பியன்கள் நம்மால் கொரோனவை விரட்ட முடியும். நம்பிக்கையுடன் இருப்போம் அனைவரும் காெரோனா தடுப்பூச செலுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


  • 20:07 (IST) 22 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,873பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,873பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 18,06,861ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் இன்று ஒரே நாளில் 5,559 பேருக்குகொரோனா ஏற்பட்டுள்ளநிலையில், தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 448 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.


  • 18:55 (IST) 22 May 2021
    கொள்ளை வழக்கில் கைதானவர் பயஙகராவத இயக்கத்துடன் தொடர்பு

    சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த சுராஜி, சௌக்கார்பேட்டை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். சுராஜை மர்ம நபர்கள் தாக்கி ஏழரை லட்சம் பணம் மற்றும் 300 கிராம் தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.

    இந்த வழக்கில் ராயப்பேட்டையை சேர்ந்த சபியுல்லா யாசின் என்பவரை கைது செய்து, 6 லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர், அல்உம்மா இயக்கத்துடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.


  • 18:52 (IST) 22 May 2021
    பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

    கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆளானவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்த நோய்க்கு அரசு இலவசமாக சிகிச்சை அளிப்பதுடன், அதற்கு தேவையான மருந்துகள் அதிக அளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.


  • 17:23 (IST) 22 May 2021
    ஊரடங்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக நாளை மாலை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 16:29 (IST) 22 May 2021
    தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு

    தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில், காய்கறிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


  • 16:27 (IST) 22 May 2021
    தமிழகத்தில் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    தமிழகத்தில் இன்றும் நாளையும் 4500 சிறப்பு பேருந்துகள் முழுவதும் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சென்னையில் இருந்து 1500, மற்ற மாவட்டங்களில் இருந்து 3000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இரவு நேரத்திலும் 2 நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது


  • 15:45 (IST) 22 May 2021
    4500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!

    24ம் தேதி முதல் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் வசதிக்காக இன்றும், நாளையும் இரு நாட்களுக்கு 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 15:41 (IST) 22 May 2021
    நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது!

    வரும் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தளர்வில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


  • 15:36 (IST) 22 May 2021
    மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு முகாம்கள் - உதவி எண் அறிவிப்பு

    மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு முகாம்களை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் பதிவு செய்ய உதவி எண்களை அறிவித்துள்ளது.


  • 15:00 (IST) 22 May 2021
    தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

    பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்கவும், இன்றும், நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்வதற்கும் அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


  • 14:58 (IST) 22 May 2021
    வரும் 24ம் தேதி முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்...!

    ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயங்கவும், பெட்ரோல் பங்க்குகள், ஏடிஎம் எப்போதும் இயங்கும் என்றும், சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


  • 14:56 (IST) 22 May 2021
    வரும் 24ம் தேதி முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்

    தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வழிகாட்டு நெறிமுறைகளின் படி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


  • 14:43 (IST) 22 May 2021
    தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளின்றி மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு...!

    தமிழகத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு நாளை மறுநாள் முதல் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து கடைகளும் நாளை காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி எனவும் காய்கறிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


  • 14:07 (IST) 22 May 2021
    மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் - துவக்கி வைத்த முதல்வர்

    கொரோனா தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


  • 14:03 (IST) 22 May 2021
    ஊரடங்கு நீடிப்பு

    ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக, மருத்துவ நிபுணர்கள், சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் உடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய முதல்வர் முக ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் புதிய ஊரடங்கு குறித்து அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.


  • 13:24 (IST) 22 May 2021
    ரூ. 2.23 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

    தமிழகத்திற்கு கூடுதலாக ரூ. 2.23 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மொத்த தடுப்பூசி கையிருப்பாக 12.8 லட்சமாக உள்ளது. இதுவரை 91 லட்சம் தமிழகத்திற்கு வந்துள்ளது. கோவிஷீல்ட் 79 லட்சம், கோவாக்ஸின் 12 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது. 71.52 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


  • 12:50 (IST) 22 May 2021
    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து

    கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் நின்றிருந்த ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் யாரும் ஆம்புலன்ஸில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு


  • 12:48 (IST) 22 May 2021
    கொரோனா தொற்றில் பலியான வங்கி ஊழியர்கள் எண்ணிக்கை

    கொரோனா தொற்றின் காரணமாக 1300 வங்கி ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது


  • 12:47 (IST) 22 May 2021
    அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம்

    தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர் என்று அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்கள் குழுவுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 12:23 (IST) 22 May 2021
    கொரோனா இரண்டாம் தொற்றிற்கு 420 மருத்துவர்கள் பலி

    கொரோனா இரண்டாம் அலையில் 420 மருத்துவர்கள் மரணம். கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தம் 1,168 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையில் அதிகபட்சமாக டெல்லியில் 100 மருத்துவர்களும், பீகாரில் 96 மருத்துவர்களும், தமிழகத்தில் 16 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.


  • 12:03 (IST) 22 May 2021
    தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது - முதல்வர்

    முழு ஊரடங்கு காலத்தை பொதுமக்கள் விடுமுறைக்காலம் என்று நினைக்கின்றார்கள். இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் உணரவில்லை. கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தரவுகளை பயன்படுத்தி அவசியமில்லாமல் மக்கள் வெளியே சுற்றுவது தான் அதிகரித்துள்ளது என்று முதல்வர் பேச்சு


  • 11:49 (IST) 22 May 2021
    தமிழகத்தில் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை

    தமிழகத்தில் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சரிடம் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இருப்பினும், ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து, சூழலை பொறுத்து முடிவெடுக்கலாம் என நிபுணர் குழுவில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


  • 11:42 (IST) 22 May 2021
    கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக மாநிலங்களுக்கு, மத்திய அரசு மருந்து ஒதுக்கீடு

    கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக மாநிலங்களுக்கு, மத்திய அரசு மருந்து ஒதுக்கீடு செய்துள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்து கூடுதலாக 23,680 குப்பிகள் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 140 மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


  • 11:09 (IST) 22 May 2021
    ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மருத்துவ குழுவுடன் ஆலோசனை

    தமிழகத்தில் நாளை மறுநாள் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், கொரோனா பரவல் குறையாததால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ குழுவுடன், முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார்.


  • 11:01 (IST) 22 May 2021
    தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என தகவல்


  • 10:25 (IST) 22 May 2021
    தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்


  • 10:16 (IST) 22 May 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 4,194 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

    இந்தியாவில் ஒரே நாளில் 4,194 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  • 09:53 (IST) 22 May 2021
    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. திமுக எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


Weather Forecast Report Stalin Tamilnadu Covid Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment