News In Tamil Live : தமிழக சட்டபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமாரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர் நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசுகின்றனர். வெற்றி வியூகம் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கிறது அதிமுக.
வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியது. மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதுவரை 1,120 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங். - மக்கள் நீதி மய்யம் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமியுடன் ம.நீ.ம. மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக தகவல்
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநே மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும்,, மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டி போட்டியிடுவோம் என்று மமக அறிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தியுள்ளார். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 118 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 101 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்
ரம்ஜான் தினத்தன்று (மே 13,15) தேர்வுகள் வேண்டாம் என மத்திய கல்வி அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதிய நிலையில், அன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினமே கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அரைசதம் கடந்துள்ளார். அதிரடி காட்டி வரும் ரிஷப் பண்ட் 103 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் விளாசி 75 ரன்கள் சேர்த்துள்ளார். மறுமுனையில் உள்ள வாஷிங்டன் சுந்தர் 82 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்துள்ளார். தற்போது 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 223 ரன்கள் சேர்த்துள்ளது.
மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தில் ஆந்திர அரசு பெண்களுக்கு மொபைல்கள் வாங்க 10% தள்ளுபடியை ஆந்திர அரசு அறிவித்தது. மேலும் காவல்துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் மார்ச் 8 ஆம் தேதி விடுமுறையையும் அறிவித்துள்ளது
"பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடனை அரசே செலுத்தும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும், மற்றும் 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்" என்று பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 79 தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள், 50 பெண்கள், 42 இஸ்லாமியர்கள், 17 பழங்குடியினர்கள் வேட்பாளர்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிகமுகவின் 6 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். மற்ற வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் பின்வருமாறு, ஓ.பன்னிர்செல்வம் - போடிநாயக்கநூர், சிவி சண்முகம் - விழுப்புரம், ஜெயக்குமார் - ராயபுரம், எஸ்,பி. சண்முகநாதன் - ஸ்ரீவைகுண்டம்
"முதலமைச்சர் திரு. பழனிசாமியின் பிடியிலிருந்து தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் வெளியில் வந்து - பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும்; தாமதித்தால், தேர்தல் ஆணையமே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க போட்டியிட விரும்பும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஈரோடு, பவானி, திருப்பூர், கோவை, சேலம், ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், சூலூர், அரவக்குறிச்சி, கரூர், விருதுநகர், ராஜபாளையம், மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் இதை அடங்கும்.
பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். நீர்,வேளாண்மை, மேலாண்மை, கல்வி, சமூக நிதி, நிர்வாக சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன், போக்குவரத்து, மின்சாரம், சிறுபான்மையினர் உள்ளிட்டவைக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம்.
ரமலான் அன்று நடக்கவிருக்கும் சி.பி.எஸ்.இ தேர்வு தேதிகளை மாற்றுவதற்கான மார்க்சிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் கோரிக்கை கடிதத்திற்கு, தேதி மாற்ற பரிசீலனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்திருக்கிறார்.
வன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீட்டை செயல்படுத்த இடைக்கால தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த மனு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரிக்கப்படவுள்ளது. சாதிவாரி கணக்கீடு தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிட கோரி மனுவில் கோரிக்கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில், அமைச்சர் மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால், லஞ்ச ஒழிப்புத்துறை சட்டத்தின் கீழ், விசாரணையை தொடர வேண்டிய அவசியம் இல்லை. இதனால் இந்த வழக்கை முடிக்க பொதுத்துறை உத்தரவிட்டதாக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ராஜேந்திர பாலாஜி அமைச்சராக பதவியேற்பதற்கு முன் உள்ள சொத்துக்கள மீது மட்டும் விசாரணை நடத்தலாம் என்று உத்தரவிடப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights