Latest Tamil News : பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 2800 பேரைத் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவி வரும் இந்தச் சூழலில் அங்கு மேலும் 39,237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.49 லட்சமாக உயர்ந்திருக்கிறது.
கேரளாவில் ஜனவரி 4-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வருகிற 28-ம் தேதி முதல் மாநிலத்தில் அரசு கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஆகியோர் கல்லூரிகளுக்கு வர வேண்டும் என்றும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கல்லூரிகள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 5 மணி நேரம் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அரசு, தேவைப்பட்டால் 2 ஷிப்ட்களாக வகுப்புகள் நடத்தலாம் என அரசு கல்லூரி நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
"சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தைச் சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன்" என்று எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளைத் தீர்க்கமாக கடைப்பிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்" என்று பெரியாரின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Today Tamil News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையுடன் இணைந்திருங்கள்
A man who influenced many. RIP Tho Pa 🙁
Kamal about tho. pa pic.twitter.com/1WKqAwvdne
— தனி காட்டு ராஜா (@_VforViking) December 24, 2020
தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர். தொ. பரமசிவன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகளிலும், தமிழகத்தின் தொன்மையைப் புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததிலும் மறக்கமுடியாத பணியாற்றியவர்
இவை தொடர்பாக பேராசிரியர் பரமசிவன் அவர்கள் ஆராய்ந்து கண்டறிந்த தகவல்களும், எழுதிய நூல்களும் என்றைக்கும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும். அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
"மு.க.அழகிரி பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்" - எல்.முருகன் #LMurugan | #MKAlagiri | #BJPhttps://t.co/MiUOfo09h7
— Thanthi TV (@ThanthiTV) December 24, 2020
மு. க அழகிரி பாஜகவுடன் இணைந்தால் அதை வரவேற்பம் என்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார். இதுவரை, மு. க அழகிரியுடன் பாஜக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
ஸ்வசதா அபியான் (Swachhata Abhiyan) என்னும் கைபேசிச் செயலியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்.
சுகாதாரமற்ற கழிவறைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுவோர் குறித்து இந்தச் செயலியின் மூலம் தகவல்கள் தெரிவிக்கலாம் என்றும், அதன் மூலம் சுகாதாரமான கழிவறை பொருத்தப்பட்டு, மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கு மறுவாழ்வு அளித்து, கண்ணியமான வாழ்க்கையை அவர்கள் வாழ வழி வகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி உரிய தகவல்களை வழங்கவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு, சுயநிதி கல்லூரிகளில் அரசு பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
விவசாயிகளின் துயர் மிகுந்த போராட்ட இரவுகளின் விடியலாய், பெருந்தொற்றுக் காலத்தைத் துடைத்தெறியும் அருமருந்தாய், பொருளாதாரப் பேரழிவில் இருந்து நம்மை மீட்கும் மூன்று விண்மீன்களின் புத்தொளியாய், தேவகுமாரன் பிறந்த இந்த "கிறிஸ்துமஸ் நாள்" அனைவரின் வாழ்விலும் மலரட்டும் என்று கே. எஸ் .அழகிரி தெரிவித்தார்.
தமிழக மக்கள் தொகை 7 கோடி பேருக்கு தேவையான மருத்துவர்கள் 70,000. ஆனால் இருக்கும் அரசு மருத்துவர்களோ 18,000. தமிழக அரசின் 2,000 மினி கிளினிக்குகளுக்கு அரசு மருத்துவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்
பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, கனமழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த, சிதம்பரத்தில் உள்ள இளமையாக்கினார் திருக்கோவில் குளத்தின் சுற்றுச் சுவர் ரூ.2.62 கோடி மதிப்பிலும், நாகூர் தர்கா குளத்தின் நான்கு புறதடுப்புச் சுவர் ரூ.5.37 கோடி மதிப்பிலும் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
அமமுக கட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தலைவராக தாம்பரம் நாராயணனும் செயலாளராக நல்லதுரையும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் ஊழல் இல்லை. திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தான் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ஊழல் இல்லை என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு. முக அழகிரி பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் முருகன் கூறியுள்ளார்.
இந்திய தலைநகர் பகுதியான டெல்லியில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க டெல்லி அரசு தயாராக உள்ளது என்றும், 1.15 கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்க சேமிப்பு அறைகள் விரைவில் தயார் செய்யப்படும் என்றும் அரவிந்த் ஜெக்ரிவால் அறிவிப்பு.
”மின் வாரியப் பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெறபப்ட்டது. 'குப்பை கொட்டவும் வரி' அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி செய்யும் என்றேன். வாபஸ் பெறப்பட்டது. திட்டங்களை அறிவிக்கும் முன்பு யோசிப்பதில்லையா” என்று முக ஸ்டாலின் கேள்வி.
சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என்று நீங்கள் கூறும் விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தல்
தேர்தலில் போட்டியிடுவதை விட இந்த மண்ணில் காலூன்றத் துடிக்கும் சனாதனிகளை எதிர்ப்பதே நம் தலையாய கடமை என்றும் ஆன்மிகம் என்பது மதத்தோடு தொடர்புடையது, யாருடைய முகமாக இவர்கள் களத்தில் இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
உழைப்பின் உயர்வைப் போற்றிய தொழிலாளி என எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி துணை முதலமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.
அழியாப் புகழுடன் தமிழக மக்களின் மனதில் சரித்திரமாய் நிலை கொண்டு நிற்கும் பொன்மனச்செம்மல்
தமிழகத்தின் உரிமைகளை காத்த காவல்காரன்
உழைப்பின் உயர்வைப் போற்றிய தொழிலாளி
தமிழ் பயிர் செழிக்கச்செய்த விவசாயி
தமிழக மக்களின் வாழ்வில் மாற்றமும் ஏற்றமும் தந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் pic.twitter.com/CBMkg2HEV5
— O Panneerselvam (@OfficeOfOPS) December 24, 2020
இதையடுத்து தைப்பொங்கல் பண்டிக்கையொட்டி ரூ.2,500 பரிசு தொடர்பான அராசணையை தமிழக அரசு வெளியிட்டது. 2.10 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கிட ரூ.5,604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights