News In Tamil Live : மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்திலுள்ள வசாய்-விரார் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த 13 பேர் உயிரிழந்தனர். மேலும், சில நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் நாசிக்கில் ஆக்ஸிஜன் கசிவு காரணமாக 24 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது தொடர்பாக இன்று கருத்துக் கேட்பு
ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது தொடர்பாகத் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்பு நடைபெறவிருக்கிறது. ஒரு கட்சி சார்பில் ஒருவர் மட்டும் அனுமதி என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. காவல்துறையின் இந்த முடிவுக்குக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாம் அலை படுவேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவுவதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பத்து மணிக்கு உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார்.
பெட்ரோல்-டீசல் விலை
சென்னையில் 8-ம் நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.43-க்கும், டீசல் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக +2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் +2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10,51,487 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பக்கு 78 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், முன் ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விராஃபின் மருந்து கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படும் சுவாச மண்டல பாதிப்பை குறைக்கும் என கூறப்படுகிறது.
நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மே 2ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும் முதலில் தபால் வாக்குகள் தான் எண்ணப்படும் என்றும் சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டுமா?
புதுக்கோட்டை வங்கியில் நகைகள் கையாடல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாடிக்கையாளர்களின் 305 பவுன் நகைகளை கையாடல் செய்து தனியார் நிறுவனத்தில் அடகு வைத்தது அம்பலமானது. இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் 3 பேர் கைது
புனேவில் இருந்து 2 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இதுவரை தமிழகத்திற்கு 55,03,590 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கோவாக்ஸின் தடுப்பூசிகள் 8 லட்சத்திற்கும் அதிகமாக தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் 26ம் தேதி முதல் ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தம்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற் காரணத்தால் இந்தியாவில் இருந்து இந்தோனேசியவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வுகள் நிறைவு பெற்றதால் தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை என்று தகவல் வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு.
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.
தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ் தேவை என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருக்கிறார்.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் மேலும் 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே 41 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதிகள் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.32 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் 3,32,730 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனனர்.
மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் கொடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். மேலும், தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.