Advertisment

News Highlights: முத்தையா முரளிதரன் சென்னை அப்பல்லோவில் அனுமதி

Latest Tamil News Live பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலுக்கான பரப்புரையில் பிஸியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

author-image
WebDesk
New Update
News Highlights: முத்தையா முரளிதரன் சென்னை அப்பல்லோவில் அனுமதி

News In Tamil Live : மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நோயாளிகள் அலை அலையாய் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியுடன் பேசப் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் மேற்குவங்க தேர்தலுக்கான பரப்புரையில் பிஸியாக இருப்பதாக பதில் வந்தது என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

Advertisment

கொரோனா அதிகரிப்பு தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். ஆலோசனைக்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள் பற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளா சென்று வீடு திரும்பியவர்களுக்கு வீட்டு சிறை கட்டாயம்

கும்பமேளா சென்று திரும்பியவர்களுக்கு, 14 நாள்கள் வீட்டிலேயே குவாரன்டீன் செய்யவேண்டும் என டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவு மீறுபவர்களுக்கு சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், இன்றிலிருந்து கும்பமேளாவுக்குச் செல்பவர்கள் தங்கள் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

பெட்ரோல் - டீசல் விலை

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.92.43-க்கும், டீசல் லிட்டர் ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 20:57 (IST) 18 Apr 2021
    கொல்கத்தா அணிக்கு 205 ரன்கள் இலக்கு

    ஐபிஎல் போட்டிகளில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 205 ரன்களை இலக்காக பெங்க்ளூர் அணி நிர்ணயித்துள்ளது. பெங்க்ளூர் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 78 ரன்களும், டி வில்லியர்ஸ் 76 ரன்களும் எடுத்தனர்.


  • 20:55 (IST) 18 Apr 2021
    தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 10,723 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இன்று 10,723 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 42 பேர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர்.


  • 20:04 (IST) 18 Apr 2021
    தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 10,723 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இன்று 10,723 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 42 பேர் கொரானாவால் உயிரிழந்துள்ளனர்.


  • 18:46 (IST) 18 Apr 2021
    தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் செய்முறைத் தேர்வுகள் மட்டும் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.


  • 18:40 (IST) 18 Apr 2021
    தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகள்

    தமிழக அரசு புதிய கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி உண்டு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.

    குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரிவோர்களில் 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறது.


  • 18:35 (IST) 18 Apr 2021
    இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு - தமிழக அரசு அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த உள்ளது. அதன்படி ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்குப் பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


  • 18:15 (IST) 18 Apr 2021
    கொரோனா கட்டுப்பாடுகளால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கக் கூடாது- மத்திய அரசு அறிவுறுத்தல்

    கொரோனா கட்டுப்பாடுகளால் தடுப்பூசி போடும் பணி பாதிக்கக் கூடாது என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொது மக்கள் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 18:11 (IST) 18 Apr 2021
    கொல்கத்தா அணிக்கு 205 ரன்கள் இலக்கு

    ஐபிஎல் போட்டிகளில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 205 ரன்களை இலக்காக ஹைத்ரபாத் அணி நிர்ணயித்துள்ளது. ஹைத்ரபாத் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 78 ரன்களும், டி வில்லியர்ஸ் 76 ரன்களும் எடுத்தனர்.


  • 18:05 (IST) 18 Apr 2021
    கொல்கத்தா அணிக்கு 205 ரன்கள் இலக்கு

    ஐபிஎல் போட்டிகளில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 205 ரன்களை இலக்காக பெங்க்ளூர் அணி நிர்ணயித்துள்ளது. பெங்க்ளூர் அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 78 ரன்களும், டி வில்லியர்ஸ் 76 ரன்களும் எடுத்தனர்.


  • 17:59 (IST) 18 Apr 2021
    MGKP காப்பீடு திட்டம் நிறுத்தம்; மத்திய அமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்!

    சுகாதாரப் பணியாளர்களுக்கான MGKP காப்பீடு திட்டம் மார்ச் 24ம் தேதியுடன் நிறுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ள நிலையில், காப்பீடு திட்டத்தை நீட்டிக்கக் கோரி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு ரவிக்குமார் எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.


  • 17:19 (IST) 18 Apr 2021
    கொரோனா எதிரொலி; 3000 கைதிகளை விடுவிக்கும் முனைப்பில் ஜிம்பாப்வே

    கொரோனா தொற்று அச்சம் காரணமாக, நாட்டின் சிறைகளில் உள்ள 3000 கைதிகளை விடுவிக்க ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது.


  • 17:17 (IST) 18 Apr 2021
    கொரோனா விழிப்புணர்வு; மாணவர்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை!

    கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரோடு மாணவர்கள் பலர், சமூக இடைவெளியை கடைப்பிடித்து தொடர்ந்து ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனைப் படைத்துள்ளனர்.


  • 16:51 (IST) 18 Apr 2021
    கேரளாவுக்குள் செல்ல முன்பதிவு கட்டாயம்!

    கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இனி வெளி மாநிலத்தவர்கள் கேரளாவுக்கு செல்ல முன்பதிவு கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


  • 16:46 (IST) 18 Apr 2021
    டாஸ்மாக் இயங்கும் நேரத்தை குறைக்க வேண்டும்; டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம்

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 12 முதல் இரவு 8 மணியாக குறைக்க வேண்டும் என, டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், சுகாதாரமற்ற பார்களை மூடவும் உத்தரவிட கேட்டுக் கொண்டுள்ளது.


  • 16:40 (IST) 18 Apr 2021
    தேவையற்ற சிகிச்சை; தோல் மருத்துவர் மீது நடிகை ரைசா புகார்!

    தோல் மருத்துவரின் தேவையில்லாத சிகிச்சையினால், தன் முகம் வீக்கமடைந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் நடிகை ரைசா பதிவிட்டுள்ளார்.


  • 15:51 (IST) 18 Apr 2021
    முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை; ஆலோசணைக் கூட்டத்தில் முடிவு!

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசணைக் கூட்டத்தில், முழு ஊரடங்குக்கான வாய்ப்புகள் குறைவு என ஆலோசிக்கப்பட்டதாகவும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டதாக, கூட்டத்தில் கலந்துக் கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  • 15:40 (IST) 18 Apr 2021
    ‘கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள்’ - டெல்லி மருத்துவரின் உருக்கமான இன்ஸ்டாகிராம் பதிவு

    கொரோனா தொற்றால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் டெல்லியில், நிலைமை எல்லை மீறி செல்வதை உணர்ந்த மருத்துவர் ஒருவர், கடந்த இரு வாரங்களாக கொரோனா சிகிச்சை மையத்தில் தான் கடந்து வந்த காட்சிகளை வலி நிறைந்த வார்த்தைகளோடு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கட்டாயம் மாஸ்க் அணியுங்கள் என்பதே அவர் பதிவின் மையக் கருத்தாக உள்ளது. அவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    fff; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
    ffffff; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
    f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;">
    f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;">
    f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;">
    000000">
    3897f0; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;"> View this post on Instagram
    f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);">
    f4f4f4; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;">
    f4f4f4; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">
    f4f4f4; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;">
    f4f4f4; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">
    f4f4f4; border-right: 8px solid transparent; transform: translateY(16px);">
    f4f4f4; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);">
    f4f4f4; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);">
    f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;">
    f4f4f4; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">

    c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Saandhra (@_saandhra_)


  • 15:33 (IST) 18 Apr 2021
    முன்களப் பணியாளர்களுக்கு மூன்று வண்ணங்களில் பாஸ்!

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மும்பையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், முன்களப் பணியாளர்களுக்கு எவ்வித சிரமங்களும் இன்றி பணியாற்றும் வகையில், மூன்று வண்ணங்களில் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.


  • 15:30 (IST) 18 Apr 2021
    தமிழக அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்; ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

    மாநில அரசுகளே சுதந்திரமாக கொரோனா சிகிச்சைக்கான

    மருந்துகளையும் தடுப்பூசிகளையும் மருத்துவ உபகரணங்களையும் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


  • 15:22 (IST) 18 Apr 2021
    12 நாள்களில் இரு மடங்கு அதிகரித்த கொரோனா தொற்று!

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பானது கடந்த 12 நாள்களில் 8 சதவீதத்திலிருந்து, 16.69 சதவீதமாக அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 15:16 (IST) 18 Apr 2021
    கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்; பெண் கைது

    அமெரிக்காவின் துணை அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி அமெரிக்கரான கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


  • 15:13 (IST) 18 Apr 2021
    தேர்தல் ஆணையமே ஒரு நாடகக் குழு; சீமான் விமர்சனம்!

    வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால், உடனடியாக பதிவான வாக்குகளை சொல்லிவிடும் என்ற நிலையில், வாக்குப்பதிவு முடிந்து 25 நாள்களுக்கு வாக்குப்பெட்டியை ஓர் இடத்தில் அடைத்து வைக்க என்ன தேவை இருக்கிறது என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், தேர்தல் ஆணையமே ஒரு நாடகக் குழு எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


  • 15:09 (IST) 18 Apr 2021
    கும்பமேளா சென்று வருவோர் 14 நாளுக்கு தனிமைப்படுத்தப்படுவர்!

    ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளா கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ள நிலையில், அங்கு சென்று வருவோர் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.


  • 14:54 (IST) 18 Apr 2021
    தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் தடுப்பூசி பற்றாக்குறையால் தமிழகமே தவித்து வருகிறது; தமிழக அரசு கேட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசி டோஸ்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று கோரியுள்ளார்.


  • 14:49 (IST) 18 Apr 2021
    வேலூரில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து; 3 பேர் பலி

    வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


  • 14:03 (IST) 18 Apr 2021
    தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றி - நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி பேட்டி

    மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “என் கணவர் உடலுக்கு காவல்துறை மரியாதை அளித்த அரசுக்கும், காவல்துறையினருக்கும் நன்றி” என தெரிவித்தார்.


  • 12:40 (IST) 18 Apr 2021
    சென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

    சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி: “சென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி; திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்; கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும்” என்று கூறினார்.


  • 12:36 (IST) 18 Apr 2021
    விவேக் மரணத்தை வைத்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் - சென்னை மாநகராட்சி ஆனையர் பேட்டி

    சென்னை மாநகராட்சி ஆனையர் பிரகாஷ் பேட்டி: “சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளைக் கொண்ட கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. கொரோனா சந்தேகங்களுக்கு 044-46122300, 044-25384520 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் அழைக்கலாம். இறுக்கமான கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். இதை யாரும் சிரமமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.விவேக் மரணத்தை வைத்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை.” என்று கூறினார்.


  • 12:15 (IST) 18 Apr 2021
    மத்திய அரசிடம் இருந்து இதுவரை 55.85 லட்சம் தடுப்பூசிகள் பெறபட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

    மத்திய அரசிடம் இருந்து இதுவரை 55.85 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது; 8.80 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். ஒரு நாளில் 1 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என்பதால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.


  • 12:11 (IST) 18 Apr 2021
    பிரச்சார கூட்டத்தை ரத்து செய்தார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மேற்கு வங்கத்தில் தனது தேர்தல் பிரச்சார கூட்டங்களை ரத்து செய்வதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.


  • 11:56 (IST) 18 Apr 2021
    ஜெஇஇ மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு!

    பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வு வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற இருந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக இந்தத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. 15 நாட்களுக்கு முன்னர் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.


  • 11:19 (IST) 18 Apr 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,501 பேர் கொரோனாவினால் இறந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


  • 11:15 (IST) 18 Apr 2021
    பிரிட்டன் இளவரசர் பிலிப் உடல் நல்லடக்கம்!

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பிலிப் கடந்த 9-ம் தேதி காலமானார். அதனைத்தொடர்ந்து பிரிட்டன் முழுவதும் 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இன்று, பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் உடல் வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


  • 11:14 (IST) 18 Apr 2021
    அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி

    வெளிமாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தற்போது மேற்கு வங்காளத்தில் உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.


  • 11:11 (IST) 18 Apr 2021
    நடிகர் அதர்வாவுக்கு கொரோனா உறுதி!

    நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை உறுதிசெய்துள்ளார்.


Corona Virus Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment