Latest Tamil News : வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் நேற்று முன் தினம் பெய்யத்தொடங்கிய மழை, நேற்று இரவு முதல் கனமழையாக மாறியது. இதனால் நகரம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்திருக்கிறது. தற்போதும் கனமழை தொடர்ந்து பெய்து வரும் காரணத்தால் புதுச்சேரி - காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்திருக்கிறது கல்வித்துறை.
இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து தகவல் தொடர்பு சேவைக்காக பிஎஸ்எல்வி – சி 50 ரக ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 2.41-க்கு துவங்கியது.சி.எம்.எஸ் – 01 செயற்கைக்கோளுடன் இன்று மாலை 03.41 மணிக்கு விண்ணில் பாய உள்ளது பி.எஸ்.எல்.வி சி- 50 ரக ராக்கெட்.
இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் கேரளா, டெல்லி மாநிலங்களை மேற்கோள் காட்டியவர்கள் இப்போது எங்கே போனார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி. மேலும், தமிழக அரசு மீது திட்டமிட்டே எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன என்றும் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
News In Tamil : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகள் நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும், நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக சட்டப்பேரவை பொது கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் திருச்சியில் நேற்றும் திண்டுக்கல்லில் இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் பங்கேற்ற திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு நிகழ்ச்சிக்கு பின் சென்னை செல்லும் போது காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, “நடிகர் கமல் நாட்டை ஆல நினைத்தால் ஒரு குடும்பம்கூட உருப்படாது; கமல் சினிமா மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை சீரழிக்கிறார்.” என்று கூறினார். முதல்வரின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக மநீம தலைவர் கமல்ஹாசன், “முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங். எம்பி ஜோதிமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இத வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங். எம்பி ஜோதிமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ரஜினி - கமல் கூட்டணியால் எந்த மாற்றமும் ஏற்படாது. இருவரும் இணைந்த அரசியல் திரைப்படம். இதில் வியப்பில்லை. இளைய தலைமுறை வாக்கு யாருக்கு என்பதில்தான் முடிவு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தன் மீதான வன்கொடுமை தடுப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசார்த்த உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த மனுவுக்கு புகார்தாரர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
சி.எம்.எஸ்.-01ஐ வெற்றிகரமாக நிலைநிறுத்திய பிறகு பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விஞ்ஞானிகளின் அயராத உழைப்பால் இது சாத்தியமானது. சந்திரயான் -3, ஆதித்யா, ககன்யான் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும். தனியாரும் விண்வெளியில் பங்கேற்கும் வகையில் இத்திட்டங்கள் சிறப்பு வாய்ந்தவை என்று தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதனை எதிர்த்து, விலையை திரும்பப் பெறக்கோரி டிசம்பர் 21ம் தேதி அன்று திமுக மகளிரணி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று முக ஸ்டாலின் அறிவிப்பு.
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளின் உரிமையில் தலையிட முடியாது. ஆனால் போராடும் முறையை மாற்றி பிற குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க நினைக்கின்றோம் என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அறிவிப்பு.
55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்கதேசம் இடையே ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைத்தார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக நடைபெற்ற கலந்துரையாடலின் ஒரு அம்சமாக சேவை துவக்கம் இடம்பெற்றது. வங்கதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவாக தபால் தலை வெளியிடப்பட்டது.
சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளதை அடுத்து, நாளை திமுக, தோழமை கட்சிகள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம், ஏற்கெனவே திட்டமிட்டபடி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என திமுகவினர் உறுதியாக இருக்கின்றனர்.
"லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி" என்று ட்விட்டரில் கமல்ஹாசன் பதிவிட்டிருக்கிறார்.
"7.5% உள் ஒதுக்கீட்டால் ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளனர். நானும் அரசுப் பள்ளியில் படித்தவன் என்பதால் இந்த உள் ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தேன். அடுத்த ஆண்டு மருத்துவப் படிப்பில் 435 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்" என்று ” முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள 6 மாணவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த வளாகத்தில் தங்கியிருக்கும் 2 மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து இந்த நிறுவனம் சோதனைகளை நடத்த முடிவு செய்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights