Advertisment

News Highlights : இந்தியாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

News In Tamil : டெல்லியில் ஒரு மாத காலத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
News Highlights : இந்தியாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

Latest Tamil News : கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம், இன்று காலை 10.30 மணிக்குக் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

ஆசிரியர்களைக் கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக்கூடாது

வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஆசிரியர்களைக் கல்லூரிக்கு வர நிர்பந்திக்கக் கூடாது என்றும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டும் என்றும் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள்

டெல்லியில் ஒரு மாத காலத்திற்குள் 44 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும் என்றும், அவற்றில் 8 ஆலைகள் மத்திய அரசு அமைக்கப்படும் என்றும் 36 ஆலைகள் டெல்லி அரசு அமைக்கும் என்றும் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவற்றில் பிரான்சிலிருந்து, தற்போது பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ள 21 ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்களை வாங்க இருப்பதாகவும் அவற்றை மருத்துவமனைகளுக்கு வழங்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மழை

வளிமண்டல சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:12 (IST) 28 Apr 2021
    புதுச்சேரியில் 84 முகவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

    புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த முகவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


  • 22:09 (IST) 28 Apr 2021
    ஜூன் 4 முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் - தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

    ஜூன் 4 முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடங்க உள்ளது என்று தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    துவக்க போட்டி ஜூன் 4ஆம் தேதி நெல்லையிலும், இறுதிப்போட்டி ஜூலை 4ஆம் தேதி சேலத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிசிசிஐ மற்றும் தமிழக அரசின் அனுமதியுடன் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் தொடங்குகின்றன என்றும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 21:54 (IST) 28 Apr 2021
    இந்தியாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

    கொரோனா பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 மில்லியன் டாலர்கள் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் இந்தியாவுக்கு தேவையான உதவிகளி செய்துத்தர தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.


  • 21:48 (IST) 28 Apr 2021
    18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் - ஆளுநர் வேண்டுகோள்

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரிசோதனை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆகியவற்றை அதிகரிக்கவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.


  • 20:58 (IST) 28 Apr 2021
    அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு

    அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்

    அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 20:10 (IST) 28 Apr 2021
    சீரம் இந்தியா நிறுவனத்தின் CEO அடார் பூனாவல்லாவுக்கு Y பிரிவு பாதுகாப்பு

    கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தின் CEO அடார் பூனாவல்லாவுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு, 24 மணி நேரமும் CRPF வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.


  • 19:57 (IST) 28 Apr 2021
    கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியாவுக்கு உதவத் தயார் - ஜெர்மன் அரசு

    இந்தியா கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கும், எங்களுக்கும் வழங்கி உதவியுள்ளது. கடுமையான இந்த சூழ்நிலையில் இந்தியாவிற்கு உதவத் தயார் என்று ஜெர்மன் அரசு தெர்வித்துள்ளது.


  • 18:31 (IST) 28 Apr 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா; 98 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,30,167 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 98 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


  • 17:59 (IST) 28 Apr 2021
    கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு; சீரம் நிறுவனம் அறிவிப்பு

    மாநிலங்கள் கொள்முதல் செய்யும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.400 இருந்து ரூ.300 ஆக குறைத்து சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


  • 17:57 (IST) 28 Apr 2021
    17 நாடுகளில் இந்திய வகை கொரோனா?

    இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், 17 உலக நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


  • 17:37 (IST) 28 Apr 2021
    வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு; தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்த மேலும் இரண்டு வழக்குகளில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 17:36 (IST) 28 Apr 2021
    ரெம்டிசிவிர் வழங்கும் நேரத்தை உயர்த்துக; கமல்ஹாசன் கோரிக்கை!

    ரெம்டெசிவிர் வழங்கும் நேரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.


  • 17:25 (IST) 28 Apr 2021
    ஆன்லைன் தடுப்பூசி முன்பதிவு; கோ-வின் தளம் முடக்கம்

    கோ-வின் போர்ட்டல் மூலம் இன்று மாலை 4 மணி முதல் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கியது. பலரும் ஒரே நேரத்தில் இணையத்தில் போர்ட்டலில் முன்பதிவு செய்ய முற்பட்டதால், போர்ட்டல் முடக்கம் ஏற்பட்டுள்ளது.


  • 17:22 (IST) 28 Apr 2021
    கொரோனா நிலவரம்; ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தி வருகிறார்.


  • 17:21 (IST) 28 Apr 2021
    ஆன்லைனில் தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்!

    18 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


  • 17:20 (IST) 28 Apr 2021
    ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை; பள்ளிக்கல்வித்துறை அதிரடி

    மே ஒன்றாம் தேதி முதல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


  • 17:18 (IST) 28 Apr 2021
    18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இல்லை; மகாராஷ்டிரா அதிர்ச்சி

    மகாராஷ்டிராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1ஆம் தேதி தடுப்பூசி போடப்போவதில்லை என மகாராஷ்டிர அமைச்சரவை கூட்டத்தில் திடீர் முடிவு செய்யப்பட்டுள்ளது.


  • 16:45 (IST) 28 Apr 2021
    1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல்; முதல்வர் பழனிச்சாமி ஆணை

    கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு மிக முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிளை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


  • 15:16 (IST) 28 Apr 2021
    வாக்கு எண்ணிக்கை-நெறிமுறைகள் வெளியீடு

    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வருவது அவசியம். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே பொதுமக்கள், தொண்டர்கள் கூடக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


  • 14:56 (IST) 28 Apr 2021
    புதுச்சேரியில் மே 3 வரை மதுக்கடைகள் மூடல்

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மே 3 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


  • 14:19 (IST) 28 Apr 2021
    தனியார் ஹோட்டல்களில் கோவிட் கேர் மையம்

    சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கோவிட் கேர் மையம் தொடங்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


  • 13:33 (IST) 28 Apr 2021
    க அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி 8 பேர் மரணம்

    கர்நாடக அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். எஸ்.என்.ஆர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நேற்றிரவு ஆக்ஸிஜன் சரியாக கிடைக்காத காரணத்தால் அவர்களில் 8 பேர் உயிரிழப்பு.


  • 13:30 (IST) 28 Apr 2021
    இந்தியன் 2 - தயாரிப்பில் பிரச்சனை

    இந்தியன் 2 பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இயக்குநர் சங்கருக்கு தடை கோரிய வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


  • 13:09 (IST) 28 Apr 2021
    கொரோனா தடுப்பூசி இன்று மாலை முதல் முன்பதிவு

    18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மே 1ம் தேதி முதல் போடப்படும். இந்நிலையில் இன்று மாலையில் இருந்து அந்த தடுப்பூசியை பெறுவதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய சேது அல்லது கோவின் இணைய தளங்களில் நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


  • 12:35 (IST) 28 Apr 2021
    சென்னை மாநகராட்சியில் மருத்துவ பணி

    பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவ அலுவலராக பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கல்வி சான்றிதழ்களுடன் 29 மற்றும் 30 தேதிகளில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இந்த பதவி தற்காலிகமானது. எந்த காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

    📌 வேலைவாய்ப்பு

    பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவ அலுவலராக பணிபுரிய விருப்பம் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் நேரடியாக கல்வித்தகுதிக்கான அசல் சான்றிதழுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம்.

    நேரம் : 10 am to 5 pm

    நாள் : 29.04.2021 & 30.04.2021 pic.twitter.com/ubDA4XKwxC
    — Greater Chennai Corporation (@chennaicorp) April 28, 2021

  • 12:30 (IST) 28 Apr 2021
    முதற்கட்ட உடற்பரிசோதனை மையம் திறப்பு
    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தினை (Screening Centre), இணை ஆணையாளர் (சுகாதாரம்) (பொ) டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.04.2021) ஆய்வு செய்தார்.covid19chennai chennaicorporation pic.twitter.com/2NsDj5YHpX
    — Greater Chennai Corporation (@chennaicorp) April 28, 2021

  • 12:29 (IST) 28 Apr 2021
    பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணி

    திருச்சியில் உள்ள பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்


  • 12:28 (IST) 28 Apr 2021
    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு முறைகேடு வழக்கு

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்கு முறைகேடு நடைபெற்றது என திமுக வேட்பாளர் ஆஸ்டின் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு. ஏப்ரல் 30-ம் தேதி அன்று இது தொடர்பாக விளக்கம் அளிப்பதாக தேர்தல் ஆணையம் பதில்


  • 12:08 (IST) 28 Apr 2021
    நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று

    தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார் அல்லு அர்ஜூன்.


  • 11:34 (IST) 28 Apr 2021
    தங்கம் விலை குறைந்தது

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.35,504-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.27 குறைந்து ரூ.4,438க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 11:01 (IST) 28 Apr 2021
    ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பிய சிங்கப்பூர் அரசு

    இந்தியாவிற்கு 256 ஆக்சிஜன் சிலிண்டர்களை சிறப்பு விமானம் மூலமாக விமானப்படை அனுப்பி வைத்தது சிங்கப்பூர் அரசு.


  • 11:00 (IST) 28 Apr 2021
    கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரி

    தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க சென்னைக்கு சிறப்பு அதிகாரி நியமனம். சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.


  • 10:57 (IST) 28 Apr 2021
    2.61 லட்சம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

    இந்தியாவில் இன்று 2.61 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், ஒன்றரை கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுவரை 55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


  • 10:02 (IST) 28 Apr 2021
    தடுப்பூசி விலையை உயர்த்துவது அநியாயம் - ஸ்டாலின்

    மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாருக்கு தடுப்பூசிகளை வெவ்வேறு விலைகளில் அளிப்பது அநியாயம். ஒரே நாடு, ஒரு மொழி என்று பேசும் பாஜக ஆட்சியில் தடுப்பூசிக்கு மட்டும் 3 வகையான விலை விதிப்பு ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


  • 09:58 (IST) 28 Apr 2021
    தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம்

    18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது.


  • 09:56 (IST) 28 Apr 2021
    150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?

    நாட்டில் கொரோனா பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 15 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருப்பதால், இந்தப் பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புள்ளது.


  • 09:48 (IST) 28 Apr 2021
    தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா உதவும் - பைடன்

    கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் அமெரிக்கா சிரமப்பட்டபோது, இந்தியா உதவி செய்ததாகவும், அதுபோலவே, இந்தியாவுக்கு இந்த நேரத்தில் உதவ அமெ​ரிக்காக தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். தேவையான மருத்துவ உயிர் காக்கும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை அனுப்புவது உட்பட அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்குவதுடன் ரெம்டெசிவிர் மருந்து உள்ளிட்டவற்றை இந்தியாவிற்கு உடனடியாக அனுப்ப உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.


Corona Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment