Advertisment

News Highlights: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Latest Tamil News: சென்னையில் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன

author-image
WebDesk
New Update
News Highlights: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000; மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

News In Tamil : திருச்சி சிறுகனூரில் இன்று நடைபெறும் திமுகவின் விடியலுக்கான முழக்கப் பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவிக்கிறார். பொதுக்கூட்டத்திற்காக, 3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2 லட்சம் பேர் வரை அமரும் வகையில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 90 அடி உயரக் கம்பத்தில் திமுக கொடியேற்றி வைக்கவுள்ளார்.

Advertisment

சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாகர்கோவிலுக்கு வருகை தருகிறார். திருவனந்தபுரத்திலிருந்து, காலை பத்து மணிக்கு ஹெலிகாப்டரில் நாகர்கோவிலில் உள்ள ஏ.ஆர்.கேம்ப் தளத்தை அடைகிறார் அமித் ஷா, மீனாட்சிபுரம் சந்திப்பிலிருந்து வேப்பமூடு சந்திப்பு வரை நடைபெறும் கொடி பேரணியில் பங்கேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், 2 மணிக்கு மீண்டும் ஏ.ஆர்.கேம்ப் தளத்துக்குச் செல்லும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்படுகிறார்.

கிருஷ்ணகிரியை அடுத்த சமத்துவபுரத்தில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.














22:38 (IST)07 Mar 2021





















அப்துல் கலாமின் மூத்த சகோதரர் அப்துல் மீரான் மரைக்காயர் மரணம்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் அப்துல் மீரான் மரைக்காயர் காலமானார் 

வயது மூப்பின் காரணமாக 104 வயதில் அப்துல் மீரான் மரைக்காயர் மரணம் அடைந்தார்.

21:44 (IST)07 Mar 2021





















முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக எல்.கே.சுதிஷ் சந்திப்பு

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை தொகுதி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்

அதிமுக - தேமுதிக இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்

21:02 (IST)07 Mar 2021





















திமுகவின் வெற்றியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது - மு.க.ஸ்டாலின் பேச்சு

திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை அறிவித்த மு.க.ஸ்டாலின், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை எந்தக் கொம்பனாலும்
தடுக்க முடியாது” என்று கூறினார். 

21:00 (IST)07 Mar 2021





















எஸ்.சி., எஸ்.டி., கல்வித்தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் - ஸ்டாலின்

திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

எஸ்.சி., எஸ்.டி., கல்வித்தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் - ஸ்டாலின் உறுதி

மனித கழிவை மனிதரே அகற்றும் நிலை முற்றிலும் ஒழிக்கப்படும் - ஸ்டாலின் அறிவிப்பு

20:47 (IST)07 Mar 2021





















குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்

திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

19:46 (IST)07 Mar 2021





















10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதாக மு.க.ஸ்டாலின் உறுதி

திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் பேசிய மு.க.ஸ்டாலின், “அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வள்ர்ச்சி எட்டப்படும், ஆண்டுக்கு 10 லடம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் சரிபாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

19:42 (IST)07 Mar 2021





















10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சியில் நடைபெறும் திமுகவின் பொதுக்கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு 
திட்டத்தை அறிவித்தார். அதில், துறைகளை சீரமைப்பதே எனது முதல் பணி என்று கூறினார். நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், சமூக நீதி இவை உள்ளிட்ட 7 துறைகள் முக்கியமானவை என்று கூறினார்.

19:39 (IST)07 Mar 2021





















வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் இ-பாஸ் கட்டாயம்

புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர மற்ற வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

18:57 (IST)07 Mar 2021





















567 பேருக்கு கோவிட்-19 தொற்று

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 567 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

18:56 (IST)07 Mar 2021





















விடியலுக்கான முழக்கம் - மு.க ஸ்டாலின்  கொடியேற்றித் துவக்கி வைத்தார்.  

தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' பொதுக்கூட்டத்தை திமுக தலைவர் மு.க ஸ்டாலின்    கொடியேற்றித் துவக்கி வைத்தார்.  

18:17 (IST)07 Mar 2021





















இறுதியாட்டத்தில் இந்தியாவின் பி வி சிந்து

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இறுதியாட்டத்தில் இந்தியாவின் பி வி சிந்து இன்று ஸ்பெயினின் Carolina Marin –ஐ எதிர்கொள்கிறார்.

17:09 (IST)07 Mar 2021





















தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

17:08 (IST)07 Mar 2021





















முழு கவச உடையை தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் - சத்யபிரதா சாஹூ

கோவிட் 19 நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் முழு கவச உடையை தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

16:59 (IST)07 Mar 2021





















உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம்  என தமிழக அரசு அறிவித்தது.   

 

16:54 (IST)07 Mar 2021





















வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது

புதிய வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மீண்டும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் விவசாயிகளின் நலனை பாதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

16:54 (IST)07 Mar 2021





















நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு நாளை தொடங்குகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு நாளை தொடங்குகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்திலேயே இரண்டு கோவிட் - 19 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம்; தெரிவித்துள்ளது.

16:17 (IST)07 Mar 2021





















மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களுக்கு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பியது

மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப்பில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 10,187 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 2,791 பேருக்கும், பஞ்சாப்பில் 1,159 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

16:15 (IST)07 Mar 2021





















சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மமதா பேனர்ஜி பேரணி

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்று வருகிறது.  

15:35 (IST)07 Mar 2021





















புதுச்சேரி மாவட்டத்தில் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு,  புதுச்சேரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் பிரச்சார பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

15:33 (IST)07 Mar 2021





















மக்கள் நீதி மய்யம்- சமத்துவ மக்கள் கட்சி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை

மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் உடன் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே. நிர்வாகிகள் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.   

14:52 (IST)07 Mar 2021





















எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள் - கமல்ஹாசன் வேண்டுகோள்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள், நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என்று ட்வீட் செய்துள்ளார். 

14:52 (IST)07 Mar 2021





















எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள் - கமல்ஹாசன் வேண்டுகோள்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என எழுதி வாசலில் மாட்டுங்கள், நாய் நரிகள் நம்மை அணுகாதிருக்கட்டும் என்று ட்வீட் செய்துள்ளார். 

14:48 (IST)07 Mar 2021





















திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக் இந்திய தவ்ஹித் ஜமாஅத் அறிவித்துள்ளது.

13:54 (IST)07 Mar 2021





















14-வது ஐபிஎல் தொடர் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடக்கம்

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே 30ம் தேதிய நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13:29 (IST)07 Mar 2021





















என்.டி.ஏ ஜே.இ.இ முதன்மை தேர்வு முடிவு நாளை வெளியீடு

ஜே.இ.இ முதன்மை தேர்வு முடிவு 2021 நாளை வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜே.இ.இ முதன்மை தேர்வு எழுதியவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலை,  nta.ac.in, jeemain.nta.nic.in என்ற இணையதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

12:44 (IST)07 Mar 2021





















திமுக - மார்க்சிஸ்ட் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக வாய்ப்பு

திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7 தொகுதிகளை கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்.

12:25 (IST)07 Mar 2021





















அமித் ஷா வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி சுசீந்திரத்தில் 'வெற்றி கொடி ஏந்தி வெல்வோம்' என்ற பாஜக பிரசாரத்தை தொடங்கி வைத்த அமித்ஷா, பொன் ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

12:24 (IST)07 Mar 2021





















லலிதா ஜுவல்லரி சோதனையில் சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி கண்டுபிடிப்பு

லலிதா ஜுவல்லரியில் கடந்த 4-ம் தேதி நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இங்கு நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

10:33 (IST)07 Mar 2021





















தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியும், எழுச்சியும் அளிக்கிறது - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் பாஜக கால்பதிக்க கூடாது, அதிமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். தற்போதைய தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியும், எழுச்சியும் அளிக்கிறது. தொகுதிகளின் எண்ணிக்கை அரசியல் கள நிலவரத்தை பொறுத்த‌து. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் கூட போட்டியிடும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

10:30 (IST)07 Mar 2021





















திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக தலைவர் ஸ்டாலின் - கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் முன்னிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

publive-image

09:58 (IST)07 Mar 2021





















கொரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் திறக்க உத்தரவு

பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அந்தந்த மாவட்ட, மாநகர நிர்வாகங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

09:56 (IST)07 Mar 2021





















10 சதவிகித இட ஒதுக்கீடு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்காத நிலையில் எம்.டெக் பயோ டெக்னாலஜி படிப்பில்10 சதவிகித இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

Tamil News : திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த ஆறிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டதாக மதிமுக நிறுவனர் வைகோ தெரிவித்தார்.

முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியின் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu Politics Dmk Leader Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment