News In Tamil Live : பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1, அமெரிக்காவுக்குச் சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள் உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இன்று காலை 10.24 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளன. இதன் 25 மணி 30 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதே போன்று இந்த ஆண்டு பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கூட்டணி கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், மணிப்பூர் மாநிலம் அகர்தாவிலிருந்து 18 பேட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில், சுமார் 1300-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகச் சென்னை வந்தடைந்தனர்.
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங் உள்ளிட்டோரும் பேச்சு வார்த்தையில் பங்கு பெற்றுள்ளனர்.
மோடி ஆரியத்தை புகுத்த நினைப்பவர் – நாம் திராவிடத்தால் அதைத் தடுத்துக் கொண்டிருப்பவர்கள்; இந்த மோதல் காலம் காலமாக நடந்துவரும் மோதல்; ஆனால், குற்றவாளிகளை மாலையிட்டு வரவேற்கும் மோடிக்கு திமுகவை குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது?” என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினர்.
இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் செலுத்துவாகனம் பி எஸ் எல் வி - சி – 51, 19 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள்களில் மிகவும் முக்கியமானதாக 637 கிலோ கிராம் எடைக்கொண்ட பிரேசிலின் அமேசோனியா செயற்கைக்கோள் இடம்பெற்றது.
இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் செலுத்துவாகனம் பி எஸ் எல் வி - சி – 51, 19 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோள்களில் மிகவும் முக்கியமானதாக 637 கிலோ கிராம் எடைக்கொண்ட பிரேசிலின் அமேசோனியா செயற்கைக்கோள் இடம்பெற்றது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்திருப்பதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: “மோடி ஆட்சியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி மிகவும் சிரமப்படுகின்றனர்; மோடி ஆட்சியில் ஏழைகளுக்கு எந்த திட்டமும் இல்லை; உதவிகள் சென்று சேரவில்லை!” என்று விமர்சித்துள்ளார்.
மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “திருவண்ணாமலை மாவட்டத்தில் மூடப்பட்ட கிணறுகளை புதுப்பிக்கும் பணிகளில் அம்மாவட்ட மக்கள் ஈடுபட்டிருக்கின்றனர்; மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வாழை நாரில் இருந்து பல பொருட்களை உருவாக்கி வருகிறார்” என்று கூறி பாராட்டினார்.
பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் பகவத்கீதையுடன் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்தில் பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, இந்த ஏவுகணையில் கொண்டுசெல்லப்பட்ட 19 செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
உலகில் உள்ள மொழிகளில் மிக தொன்மையான மொழி, தமிழ் மொழி என்றும் நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்றும் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது. இந்திய அறிவியலின் வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கோடை காலத்திற்காக மழைநீரை சேமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, நாளை நண்பகல் 12.30 மணிக்கு தேர்தல் வழிமுறைகள் தொடர்பாக ஆலோசனை செய்யவிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் திமுக இன்று மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதைத் தொடர்ந்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியுடனும் இன்று பேசுகிறது. ஏற்கெனவே காங்கிரசுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் தங்கி இருக்கும்படி வர வேண்டும் என அறிவுறுத்தி அவசரமாக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு கமல்ஹாசன் அழைப்புவிடுத்திருக்கிறார். இதனால் மநீம தலைமை அலுவலகத்தில் நாளை அவசரக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. கூட்டணி தொடர்பாக நேற்று கமல்ஹாசனை சரத்குமார் சந்தித்ததை அடுத்து சட்டப்பேரவை தேர்தலில் மநீம தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியில் போட்டியிடுமா உள்ளிட்டவற்றை நாளை ஆலோசனை செய்யவுள்ளனர்.
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், சீர்மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். அவருக்கு, பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் பரப்புரைத் திட்டங்கள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பேசப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் அமித் ஷாவின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights