scorecardresearch

Tamil News Today : News Highlights : பிப். 5 வரை சட்டமன்ற கூட்டத்தொடர்; திமுக புறக்கணிப்பு

News In Tamil Live : இந்திய கடலோர காவல் படையினரின் எழுச்சி நாள் கொண்டாட்டம் : களைகட்டிய மெரினா!

Tamil News Today : News Highlights : பிப். 5 வரை சட்டமன்ற கூட்டத்தொடர்; திமுக புறக்கணிப்பு

Latest Tamil News Live :

தமிழக சட்டப்பேவைக் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.  இதனால், சட்டப்பேரவைக் கூட்டம் மேலும் 3 நாட்கள் நடைபெற உள்ளது. ஆனால், இதில் திமுக கலந்துகொள்ளாது என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றிக் கூட்டத்தைத் தொடங்கி வைப்பார். ஆங்கிலத்தில் ஆளுநர் வாசிக்கும் உரையை, அவைத்தலைவர் தனபால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்வார். வருகிற 5-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாள்களில் ஆளுநர் உரை மீது விவாதம் நடத்தப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிப்பார்.

கடந்த ஜனவரி 14-ம் தேதி பொங்கல் விழாவின்போது ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டுகளித்ததுடன், பொங்கல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து 23 முதல் 25-ம் தேதி வரை கொங்கு மண்டலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இரண்டாம் கட்டமாக வரும் 14,15, 16 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ராகுல் பரப்புரை மேற்கொள்கிறார்.

இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் இன்று முதல் வலைப்பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் தொடர் என இந்திய அணியுடன் இங்கிலாந்து அணி மோதும் போட்டிகள் வருகிற 5-ம் தேதி முதல் சென்னையில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் முடிவுகள் பெற்றபின் இன்று முதல் இந்திய, இங்கிலாந்து வீரர்களுக்கு வலைப்பயிற்சி தொடங்குகின்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Live Blog

Today’s Tamil News Live : தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil


22:43 (IST)02 Feb 2021

பாஜக மேலிட பொறுப்பாளராக கிஷன் ரெட்டி நியமனம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக மேலிட பொறுப்பாளராக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

22:42 (IST)02 Feb 2021

அதிமுக-வை யாரும் வீழ்த்த முடியாது – துணை முதல்வர் ஓ.பி.எஸ்

அதிமுக மிகப்பெரிய இயக்கம், அதனை யாரும் வீழ்த்த முடியாது என்று துணை முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

22:06 (IST)02 Feb 2021

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட தடை

சென்னையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா இறுதிக்கட்ட பணி நடைபெறுவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

22:05 (IST)02 Feb 2021

சசிகலா சென்னை திரும்புவது எப்போது?

ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் நடந்த நாளில் தமிழகம் திரும்ப சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

22:02 (IST)02 Feb 2021

சசிகலா சென்னை திரும்புவது எப்போது?

ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் நடந்த நாளில் தமிழகம் திரும்ப சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

21:59 (IST)02 Feb 2021

கொரோனா இறப்பு குறித்து மத்திய அமைச்சர் தகவல்

ஐனவரி 22 வரை நாட்டில் கொரோனாவுக்கு 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர் என மத்திய அமைச்சர் அஸ்வினி செளபே தெரிவித்துள்ளார்

19:50 (IST)02 Feb 2021

பாஜகவில் தாத்தாக்கள் இருக்க முடியாது – எல் முருகன்

பாஜக இளைஞரணியில் இளைஞர்களுக்கு மட்டுமே இனி இடம்; தாத்தாக்கள் இருக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

19:49 (IST)02 Feb 2021

மாநாடு டீசர் நாளை வெளியீடு

சிம்புவின் ’மாநாடு’ பட டீசரை நாளை வெளியிடுகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 

19:48 (IST)02 Feb 2021

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் இல்லை – மத்திய அரசு

கொரோனா தடுப்பூசியால் கடுமையான பாதக விளைவுகள் ஏற்பட்டதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை  என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

19:47 (IST)02 Feb 2021

ஜகமே தந்திரம் திரைப்படம் குறித்து தனுஷ் ட்விட்

எனது ரசிகர்களை போல ’ஜகமே தந்திரம்’ திரையரங்குகளில் வெளியாவதையே நானும் விரும்புகிறேன் என்று நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

19:46 (IST)02 Feb 2021

வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்வு

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்வு வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

19:46 (IST)02 Feb 2021

நடனமாடிய மம்தா பானர்ஜி

ஒரே மேடையில் 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்த மேற்குவங்க முதல்வர் மத்தா பானர்ஜி விழாவில் நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19:43 (IST)02 Feb 2021

மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

ஜம்மு – காஷ்மீரில் கடந்தாண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் 5,133 முறை அத்துமீறியுள்ளதாகவும், பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் 221 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

19:41 (IST)02 Feb 2021

கமல்ஹாசன் வலியுறுத்தல்

சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல ; தனியாரிடம் கொடுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். 

18:30 (IST)02 Feb 2021

சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் நீடிக்கும் – சரத்குமார்

வருகிற தேர்தலில் அதிமுக கூட்டணியி சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

18:29 (IST)02 Feb 2021

இடஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக உள்ளது பட்ஜெட் – டி.கே.ரங்கராஜன் விமர்சனம்

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், “இடஒதுக்கீட்டுக்கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக நிதிநிலை அறிக்கை உள்ளது; தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை” என்று விமர்சித்துள்ளார்.

17:21 (IST)02 Feb 2021

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவனையை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 4ம் தேதி தொடங்கி ஜூன் 7ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு காலிஅ 10.30 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 4ம் தேதி முதல் தொடங்கி ஜூன் 11ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு காலை மாலை என இரண்டு வேளைகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

17:07 (IST)02 Feb 2021

இளவரசி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசி தொற்று குணமடைந்ததையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறைக்கு அனுப்பப்பட்டார். 

15:38 (IST)02 Feb 2021

கூட்டத்தொடர் முடியும் முன் 7 பேரை விடுதலை செய்யவேண்டும் – தமிமுன் அன்சாரி கோரிக்கை

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் நாகைப்பட்டினம் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி: “7 பேர் விடுதலை தொடர்பாக எவ்வித அறிவிப்பும் ஆளுநர் வெளியிடாததது ஏமாற்றம் அளிக்கிறது; தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுத்து இந்த கூட்டத்தொடர் முடியும் முன்பாக 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

15:01 (IST)02 Feb 2021

‘நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தால் கா.ம.இ சேர்ந்து பயணிக்கும்’ – தமிழருவி மணியன்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், “நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும், காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும்; ரஜினி அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் பக்திப் பூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும்” என்று கூறினார்.

14:28 (IST)02 Feb 2021

சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப். 5 தேதி வரை நடைபெறும்; சபாநாயகர் அலுவல் கூட்டத்தில் முடிவு

தமிழக சட்டப்பேவைக் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.  இதனால், சட்டப்பேரவைக் கூட்டம் மேலும் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

14:19 (IST)02 Feb 2021

மாற்றுத் திறனாளிகள் விரும்பினால் தபால் வாக்குக்கு அனுமதி வழங்கப்படும் – தலைமை தேர்தல் அதிகாரி

தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ: “80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் விரும்பினால் தபால் வாக்குக்கு அனுமதி வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்.

14:04 (IST)02 Feb 2021

கொரோனா காலத்திலும் ரூ.60,674 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது – ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை: “கொரோனா காலகட்டத்திலும் ரூ.60,674 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே கர்நாடக எவ்வித அணைகளையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி முல்லைப் பெரியாறு குறுக்கே கேரளா அணை கட்டுவதை அனுமதிக்க கூடாது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்பு முதல்கட்டமாக துவங்கப்படும். அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் முதற்கட்ட பணிகள் மார்ச் மாதத்திற்கு முன்னர் நிறைவுபெறும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து காவிரி காப்பாளன் எனும் பட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி பொருத்தமானவர் ஆகிறார். பயிர் காப்பீடு திட்டத்திற்கான கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.” என்று கூறினார்.

13:59 (IST)02 Feb 2021

தமிழக அரசின் சேவைகளைப் பெற 1100 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் – ஆளுநர் உரை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை: “முதலமைச்சரின் உதவி மையம் எனும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தங்கள் வீடுகளில் இருந்தே 1100 என்ற எண்ணிற்கு அழைத்து அரசின் சேவைகளை பெறலாம். அரசின் சேவைகளை பெற தொலைபேசி எண் 1100. கொரோனா நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு இதுவரை ரூ.13208 கோடி செலவிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

13:56 (IST)02 Feb 2021

சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை: “கொரோனா சூழலில் மிகவும் இக்கட்டான காலத்தில் தமிழக சட்டப்பேரவை கூடியுள்ளது. நாட்டிலேயே அதிகம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டது தமிழகம் தான். தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதால் சமூகநீதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டால் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 435பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து நீடிக்கும். தமிழகத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்குவது தொலைநோக்கு பார்வையுடனான திட்டம். தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி எனும் முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது.” என்று தெரிவித்துள்ளார்.

13:14 (IST)02 Feb 2021

‘காவிரி காப்பாளன்’ பட்டத்திற்கு பொருத்தமானவர் முதல்வர் பழனிசாமி – ஆளுநர் பாராட்டு

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக தொடக்க உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ‘காவிரி காப்பாளன்’ என்ற பட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொருத்தமானவர்.” என்று பாராட்டினார். 

11:55 (IST)02 Feb 2021

இருமொழிக்கொள்கையை பின்பற்றுவது உறுதி

இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்றும் காவிரி – குண்டாறு இணைப்புத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

11:53 (IST)02 Feb 2021

சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

11:42 (IST)02 Feb 2021

முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆளுநர் பாராட்டு

தமிழகம் தொடர்ந்து 3 முறை நல்லாளுமைக்கான விருதை பெற்றுள்ளது என்றும் கொரோனா தடுப்பு பணியை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டு முதலமைச்சர் பழனிசாமியின் சிறப்பான நிர்வாகத்தை பாராட்டியுள்ளார் ஆளுநர் பன்வாரிலால்.

11:23 (IST)02 Feb 2021

தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து திமுக வெளிநடப்பு

மத்திய பட்ஜெட் குறித்து ஆளுநர் பேச முயற்சி செய்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

11:03 (IST)02 Feb 2021

திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள எதிர்கட்சிகளுக்கான அறையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை  நடத்திக்கொண்டிருக்கிறார். சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுகவின் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

10:45 (IST)02 Feb 2021

எதிர்க்கட்சியின் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை ஒத்திவைப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

10:35 (IST)02 Feb 2021

சிறப்பு காவல்துறை இயக்குனர் தமிழக காவல்துறையினருக்கு அறிவுரை

ஏரல் சிறப்பு எஸ்.ஐ கொல்லப்பட்ட சம்பவத்தில் தகாத வார்த்தைகள் உபயோகிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பேரவை கூட்டத் தொடர் முடியும் வரை மதுபோதையில் உள்ள நபர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரிக்கக் கூடாது என சிறப்பு காவல்துறை இயக்குனர் தமிழக காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

10:15 (IST)02 Feb 2021

மாநிலங்களவை காலை 10.30 மணி வரை ஒத்திவைப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

09:48 (IST)02 Feb 2021

சாலையில் ஆணிகள் பதிக்கும் டெல்லி போலீஸ்

விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக டெல்லி – உத்திர பிரதேசம் எல்லையான காசிப்பூர் சாலைகளில் ஆணிகளை பதித்துள்ளது டெல்லி காவல்துறை.

Tamil News Live : வரும் 2021 -22-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நேற்று தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். சுமார் 1.50 மணி நேரம் நடைபெற்ற இந்த உரையில் பட்ஜெட் குறித்து விளங்கங்கள் அளிக்கப்பட்டது.

இந்த பட்ஜெட் உரையில், வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி அடிப்படையில், (ஏஐடிசி) ஒரு லிட்டருக்கு ரூ .2.5 மற்றும் டீசலுக்கு ரூ .4 வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் இன்று முதல் பெட்ரோல் விலை உயரும் என்று பரவலாக பேசப்பட்டது. ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், தற்போது வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கலகத்தில் இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, இந்த வரிவிதிப்பு நுகர்வோர் மீது கூடுதலாக எவ்வித சுமையையும் ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 150 சதவீத அடிப்படை சுங்க வரிகளுக்குட்பட்ட மதுபானங்களுக்கும் தற்போது வரி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 100 சதவீத வரி முன்மொழியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், மதுபானங்கள் இறக்குமதி வரி 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிகர நுகர்வோர் கூடுதல் எதையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil news today live chennai tamil nadu politics eps governor cricket corona farmers

Best of Express