Advertisment

News Highlights: தனியார் பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வரவேண்டாம் என உத்தரவு

News In Tamil : ஒரே நாளில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது

author-image
WebDesk
New Update
News Highlights: தனியார் பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வரவேண்டாம் என உத்தரவு

Latest Tamil News : திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
publive-image

24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட்டில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் உள்ளது

1000 டன்னுக்கும் மேலாக மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், பாதுகாப்பான முறையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதில் முழு கவனம் செலுத்த உள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையில் தனியாக ஆக்சிஜன் பிரிவு அமைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:31 (IST) 30 Apr 2021
    கே.வி. ஆனந்த் சார்.. இது பேரிடர் காலம் என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது - நடிகர் சூர்யா

    கொரோனா பாதிப்பால் இறந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சூர்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முதன்முதல் என் மீது பட்ட வெளிச்சம், உங்கள் கேமிராவில் இருந்து வெளிப்பட்டது. அதன் மூலம்தான் என் எதிர்காலம் பிரகாசமானது. அயன் திரைப்படத்தின் வெற்றி அனைவருக்கும் பிடித்தமான நட்சத்திரமாக என்னை உயர்த்தியது. எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார்.” என்று தெரிவித்துள்ளார்.


  • 21:12 (IST) 30 Apr 2021
    மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வருகிறது - உத்தவ் தாக்கரே பேட்டி

    மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேட்டி: “மகாராஷ்டிராவில் மக்கள் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்வதால் ஊரடங்கை கடுமையாக்கத் தேவை இருக்காது; மாநிலத்தில் கொரோனா பரவல் கணிசமாக் குறைந்துவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.


  • 19:37 (IST) 30 Apr 2021
    தமிழகத்தில் இன்று 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இன்று புதியதாக 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிபால் 113 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


  • 17:14 (IST) 30 Apr 2021
    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : மேலும் 2 ஊழியர்கள் கைது

    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை புரசைவாக்கம் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த மேலும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  • 17:12 (IST) 30 Apr 2021
    கொரோனா 2 ஆம் அலை குறித்து ஆலோசனை பிரதமர் ஆலோசனை

    இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா 2 ஆம் அலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது இந்த கூட்டத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசின் அனைத்து துறைகளும் தீவிரமாக செயல்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்


  • 16:42 (IST) 30 Apr 2021
    தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

    தமிழக சட்டசபை தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், திமுக வெற்றியடைந்த செய்தியை வீடுகளுக்குள் கொண்டாடுங்கள் வீதிகளில் அல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  • 16:38 (IST) 30 Apr 2021
    தடுப்பூசி கையிருப்பில் இல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    இந்தியா முழுவதும் மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூச செலுத்தும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல இடங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கூறப்படும் நிலையில், தடுப்பூசி மையங்களில் நாளை வரிசையில் நிற்காதீர்கள் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


  • 16:36 (IST) 30 Apr 2021
    கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள் : ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை

    தமிழக சட்டசபை தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாக உள்ளதால், கடும் அதிருப்தியுள்ள உள்ள அதிமுக தொண்டர்களுக்கு கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்; வெற்றி மாலையை சூட தயாராகுங்கள் என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


  • 16:03 (IST) 30 Apr 2021
    அதிமுக வேட்பாளர்களுக்கு தலைமை புது உத்தரவு

    வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. களங்கள் அனைத்திலும் அதிமுக வெல்லும்; கடமைகள் அழைக்கின்றன வெற்றிமாலை சூட தயாராகுங்கள் என்றும் கூறியுள்ளது.


  • 16:02 (IST) 30 Apr 2021
    தனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவிப்பு

    கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.


  • 15:59 (IST) 30 Apr 2021
    டிஜிபிக்கு எதிரான பாலியல் புகார் : 6 வாரங்களில் விசாரணை முடிக்க உத்தரவு

    சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் 6 வாரங்களில் விசாரணையை முடிக்க சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாமாக முன் வந்து விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் "6 வாரங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


  • 15:53 (IST) 30 Apr 2021
    வரும் நாட்களில் சென்னையில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு

    சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "வரும் நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.


  • 15:52 (IST) 30 Apr 2021
    நாளை தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்த முடியாது - சென்னை மாநகராட்சி

    இந்தியாவில் வரும் மே 1- முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேவையான தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என்பதால், சென்னையில் நாளை தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்த முடியாது" என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


  • 15:24 (IST) 30 Apr 2021
    சிறப்பு டிஜிபி வழக்கு; '6 வாரத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' - சென்னை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    சிறப்பு டிஜிபி மீதான வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்குள் முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 15:15 (IST) 30 Apr 2021
    'மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு ஊரடங்கு தான்' - முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்

    'மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு ஊரடங்கு தான்' என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.


  • 14:51 (IST) 30 Apr 2021
    தனியார் பள்ளி ஆசிரியர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை!

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மே 1 முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.


  • 14:39 (IST) 30 Apr 2021
    மே 2 -ல் ஊர்வலம் செல்லவும் பட்டாசு வெடிக்கவும் தடை - சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஊர்வலம் செல்லவும் பட்டாசு வெடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


  • 14:28 (IST) 30 Apr 2021
    ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மேலும் ஒருவர் சென்னையில் கைது.

    கள்ளச்சந்தையில் விற்றதாக தனியார் மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில், சென்னை மிண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஊழியர் கார்த்திக் என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்த போலீஸ்சார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  • 14:12 (IST) 30 Apr 2021
    படுக்கை வசதி குறித்து அறிய ட்விட்டர் கணக்கு!

    கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி குறித்த தகவலைப் பெற @104GoTN என்ற ட்விட்டர் கணக்கை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த கணக்கை பிரபலப்படுத்த bedsfortn என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது


  • 14:05 (IST) 30 Apr 2021
    மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்!

    மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், "நிழற்படக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என தன் உழைப்பினால் உயரம் தொட்டவர்" என்று தெரிவித்துள்ளார்.


  • 13:42 (IST) 30 Apr 2021
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு அமைப்பு!

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆலை உறுப்பினர், 2 சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்


  • 13:24 (IST) 30 Apr 2021
    தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்

    கொரோனா விதிகளை பின்பற்றி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும். பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை என்பதையும் ஊர்வலங்கள் நடைபெறவில்லை என்பதையும் அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம்


  • 13:16 (IST) 30 Apr 2021
    ஸ்டாலின் அறிக்கை

    வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம். வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் - திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள். இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம். நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


  • 12:42 (IST) 30 Apr 2021
    ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு உருவாக்கப்பட்டது

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் தூத்துக்குடி எஸ்.பி, துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆலை உறுப்பினர், 2 சுற்றுச்சூழல் நிபுணர்கள் என 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு


  • 12:19 (IST) 30 Apr 2021
    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர்

    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்ற விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வருகிறார் விக்னேஷ். திருவண்ணாமலைக்கு சென்று விக்னேஷை கைது செய்தது, தாம்பரம் காவல்த்துறை.


  • 12:08 (IST) 30 Apr 2021
    தலைமைப் பொறியாளர் அசோகனின் இடைநீக்க உத்தரவு ரத்து

    நீர்வள தலைமைப் பொறியாளார் உட்பட 4 பேரை விழுப்புரம் அணை உடைந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஜனவரி மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது தலைமைப் பொறியாளர் அசோகனின் இடைநீக்க உத்தரவு ரத்து


  • 12:05 (IST) 30 Apr 2021
    கேரளாவில் மே மாதம் 4ம் தேதி முதல் 9 வரை கடுமையான கட்டுப்பாடுகள்

    கொரோனா பரவல் காரணமாக மே மாதம் 4ம் தேதி முதல் 9 வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன். ஆக்ஸிஜன் விநியோகத்தில் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார் கேரள முதல்வர்.


  • 11:08 (IST) 30 Apr 2021
    தங்கம் விலை குறைந்தது

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,405-க்கு விற்பனை ஆகிறது.


  • 11:05 (IST) 30 Apr 2021
    மறைந்த கே.வி.ஆனந்துக்கு கொரோனா உறுதி

    கொரோனா தொற்றால் உயிரிழந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் உடல் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து மின்மயானத்துக்கு புறப்பட்டது. பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் சற்றுநேரத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.


  • 10:39 (IST) 30 Apr 2021
    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்றவர் கைது

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வரும் விக்னேஷ் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயற்ச்சி செய்ததால் கைது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை பெற்றதாக விசாரணையில் தகவல்.


Tamilnadu Election 2021 Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment