Latest Tamil News Live : பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பிலிருந்து வந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா மாற்றப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், RAPID பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனக் கண்டறியப்பட்ட நிலையில் RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு மணிப்பூர் மாநிலத்தின் பங்கு பெருமைக்குரியது என்றும் பல்வேறு துறைகளில் திரிபுரா மாநிலம் சிறந்து விளங்குகிறது என்றும் சிறந்த படைப்பாற்றல் மிக்கவர்களாக மேகாலயா மாநில இளைஞர்கள் உள்ளனர் என்றும் கூறி இந்த மூன்று மாநிலங்களின் உதய நாளையொட்டி பகிர்ந்திருக்கிறார் பிரதமர் மோடி. "தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Today's Tamil News Live : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஆள்மாறாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் கோட்டாட்சியர் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதல் பரிசு வென்ற கண்ணன் ஆள்மாறாட்டம் செய்ததாக இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 6-ஆம் தேதி தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி கூட்டுறவு பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
கூடுதல் கட்டணத்திற்கு எதிராகப் போராடிய ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியரை அழைத்துப் பேசி தீர்வு காணாமல் கல்லூரியையும், விடுதியையும் மூடுகிறது இந்த அராஜக அரசு? இதுவா தீர்வு? அரசு மருத்துவ கல்லூரி கட்டணத்தையே வசூலிக்க உத்தரவிடுக! என மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.
Video: Fire breaks out at Covishield-maker Serum Institute's campus in Pune, five fire tenders pressed into service pic.twitter.com/9ru4r8AoLy
— The Indian Express (@IndianExpress) January 21, 2021
இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை உற்பத்தி செய்யும் இந்திய சீரம் மைய வளாக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இருப்பினும், தடுப்பூசி உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்ற அந்நிறுவனம் தெரிவித்தது.
After prolonged delay from TN Raj Bhavan and Perarivalan's legal fight, SG informed the Supreme Court today that TN Governor will take decision within 3 or 4 days. TN cabinet had submitted the recommendations for Rajiv convicts' release in September, 2018, under Article 161.
— Arun Janardhanan (@arunjei) January 21, 2021
In July 2020, Madras HC made it clear that the TN Guv Banwarilal Purohit cannot sit on the state government’s recommendation for so long.
— Arun Janardhanan (@arunjei) January 21, 2021
HC said there is no time limit prescribed for Guv to decide on such issues only “because of the faith and trust attached to the constitutional post..."
“…if such authority fails to take a decision in a reasonable time, then the court will be constrained to interfere," said HC.— Arun Janardhanan (@arunjei) January 21, 2021
பேரறிவாளன் விடுதலை குறித்து மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என இன்று உச்சநீதிமன்றத்தில் சொலிஸிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.
நாட்டில் 6 மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா, ஹரியானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, சத்திஷ்கர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய்த் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 10 மாநிலங்களில் காகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மாணவர் படை விரிவுபடுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய மாணவர்படையின் வருடாந்திர பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், " அரசு வேலைவாய்ப்பில் தேசிய மாணவர் படைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை, மாலை என 2 வேளைகள் வகுப்புகள் நடத்துவது பற்றி ஆலோசனை நடைபெறுகிறது. மேலும், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபிறகு விடுதிகளில் அனுமதிக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.
"சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல்நிலை சீராக உள்ளதாக சிறைத்துறை மூலம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சிடி ஸ்கேன் தேவையா என மருத்துவர்களே முடிவு செய்வார்கள். சசிகலாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று பெங்களூரு சிவாஜிநகர் அரசு மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவை பார்க்க வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights