Advertisment

News Highlights : ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் !

Tamil News Today : வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18-ம் நாளை எட்டியிருக்கிறது.

author-image
WebDesk
New Update
aiadmk office

அதிமுக தலைமைக் கழகம்

News In Tamil : ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பணிகள் தொடர்பான அறிக்கையுடன் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisment

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்துக் கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டன. ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி என வெளிப்படையாக அறிவித்து தேர்தலுக்கு ஆயத்தமாகி உள்ளது.

இன்னும் ஆறு மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைவர் விஜயகாந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆண்டிபட்டியில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பேசிய பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிடத் தயார் என்றும் தேமுதிக-அதிமுக கூட்டணியில் தொடரும் என்றும் பிரேமலதா கூறியிருந்தார்.

இன்று முதல் வருகிற 16-ஆம் தேதி வரை சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் மதுரை மற்றும் நெல்லை பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்கிறார். முதலில் அவனியாபுரம் மற்றும் பசுமலை பகுதிகளில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். பிறகு, கீழ வாசலில் பரப்புரை மேற்கொள்ளும் கமல்ஹாசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக மையத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து கருப்பாயூரணியில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

மிக மோசமான சேதங்கள் ஏற்பட்டு, விவசாயிகள் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், ஏதோ 3,758 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே பாதிப்பு எனக் குறைத்து மத்திய அரசிடம் நிதியுதவி கோரியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.














Highlights

    22:04 (IST)13 Dec 2020

    2024 தேர்தலில் 400 இடங்கள் வெற்றி இலக்கு; பிரதமர் மோடியின் சகோதரர் பேட்டி

    செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, 2024 மக்களவைத் தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறா இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    21:14 (IST)13 Dec 2020

    மாமல்லபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களைப் பார்வையிட நாளை முதல் அனுமதி

    மாமல்லபுரம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. 10 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் புராதன சின்னங்களை காண அனுமதி இல்லை என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

    19:44 (IST)13 Dec 2020

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    19:03 (IST)13 Dec 2020

    ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்

    மதுரையில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “நீங்கள் ஆணையிட்டால் உங்களை நான் காப்பாற்றுவேன். நமது ஆட்சி உறுதி. ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இங்கே ஜனவரியில் நடக்கும் காளைகளுடன் ஜல்லிக்கட்டு. மே மாதம் கயவர்களுடன் ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். நீங்களும் தயாராக வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மதுரை இரண்டாம் தலைநகராமாக்குவோம்” என்று கூறினார்.

    17:54 (IST)13 Dec 2020

    மெரினா கடற்கரைக்கு செல்ல நாளை முதல் அனுமதி

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 25 முதல் தமிழகத்தில் மெரினா உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகள் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுத்து மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மெரினா உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு செல்ல நாளை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்காக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    17:10 (IST)13 Dec 2020

    விவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 14ல் விசிக புறக்கணிப்பு போராட்டம் - திருமாவளவன்

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 14ல் விசிக புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.

    திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 14 இல் அதானி அம்பானி நிறுவனங்களையும் பொருட்களையும் புறக்கணிக்கும் பிரச்சார இயக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொள்கிறது.” என்று அறிவித்துள்ளார்.

    டிசம்பர் 14 : அதானி-அம்பானி நிறுவனங்களைப் புறக்கணிக்கும் போராட்டம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பு!...

    Posted by Thol.Thirumavalavan on Sunday, 13 December 2020

    16:41 (IST)13 Dec 2020

    அதானி - அம்பானி நிறுவனப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் - விசிக

    அதானி - அம்பானி நிறுவனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சி 

    15:47 (IST)13 Dec 2020

    சாலையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அன்பழகன்

    தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக, இந்த சாலையை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே பி அன்பழகன் கூறியுள்ளார்.

    தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று நேரிட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர், விபத்துக்கு லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்று தெரிவித்தார். மேலும்,  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்பழகன் தெரிவித்தார்.

    15:42 (IST)13 Dec 2020

    ஐதராபாத் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்

    அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். 

    14:38 (IST)13 Dec 2020

    மக்கள் நீதி ம‌ய்யம் தலைமையில் 3வது அணி சாத்தியம் - கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யக்  கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  தேர்தல் பரப்புரையைத் தொடங்க மதுரை சென்றடைந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " மக்கள் நீதி ம‌ய்யம் தலைமையில் 3வது அணி சாத்தியம், எப்போது சாத்தியம் என்பதை இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் அணிகள் கூடும், அணிகள் பிளவுப்படும்" என்று தெரிவித்தார்.

    அரசு வழிகாட்டுதல்படி ஏற்பாடு செய்திருந்த மதுரை தேர்தல் பிரச்சாரத்திற்குச் சில இடங்களில் மட்டும் கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு தடை புதிதல்ல என்றும் தெரிவித்தார்.

    14:17 (IST)13 Dec 2020

    போக்குவரத்துத் துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் - கே. எஸ் அழகிரி

    தமிழக அரசு தாமாக முன்வந்து, போக்குவரத்துத் துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்காவிட்டால், நீதிமன்றம் மூலம் சிபிஐ விசாரணை கோருவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கே. எஸ் அழகிரி தெரிவித்தார். 

    - 

    14:10 (IST)13 Dec 2020

    வழக்கு முடிவடைந்தவுடன் 10,000 கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் - தங்கமணி

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகிய பணி இடங்களை நிரப்புவதற்கு வரும் ஜனவரி மாதம் முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்தவுடன் 10,000 கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.  

    13:33 (IST)13 Dec 2020

    4000 செவிலியர்களின் பணியை நிரந்தரம் செய்திட வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை

    கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்கு தற்காலிக பணிக்காலம் நிறைவடைகிறது;

    கொரோனா அபாயம் நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மற்றும் தேவை கருதி அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தமிழக அரசுக்கு  கோரிக்கை வைத்தார்.  

    13:11 (IST)13 Dec 2020

    சட்டரீதியான வாதங்களை தடுக்கலாம் என முதல்வர் நினைப்பது அரசியல் அறியாமை - ஆ.இராசா

    "வழக்குகள் மூலம் அச்சுறுத்தலாம் - சட்டரீதியான வாதங்களை தடுக்கலாம் என முதல்வர் நினைப்பது அரசியல் அறியாமை; ஜெயலலிதா ஊழல் குறித்த உச்ச நீதிமன்ற கண்டனங்களை நிரூபிக்கும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி"
    என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா தெரிவித்தார்.

    12:32 (IST)13 Dec 2020

    சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் விஜயகாந்த் அறிவிப்பார்

    வரும் தேர்தல் தமிழகத்தின் முக்கிய தேர்தல். அதற்காக விஜயகாந்த் நிச்சயம் பிரசாரம் மேற்கொள்வார் என்றும் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஒரு புரட்சித் தலைவர் என்றால் அது கேப்டன்தான். மக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார் பிரேமலதா விஜயகாந்த்.

    12:19 (IST)13 Dec 2020

    ஸ்டாலினுக்கு பெரிய பயம் வந்துவிட்டது - எல்.முருகன் கருத்து

    ஸ்டாலினுக்கு பெரிய பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் எனப் பேசுகிறார் என்றும் கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டுப் போடமாட்டார்கள் என்று ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

    11:20 (IST)13 Dec 2020

    தேர்தலை சந்திப்பேன் என்ற ரஜினி பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை - விஜய பிரபாகரன்

    உயிரே போனாலும் தேர்தலை சந்திப்பேன் எனக்கூறிய ரஜினி, பிறந்தநாளன்று கூட மக்களை சந்திக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் விஜய பிரபாகரன். மேலும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. தற்போது அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள்ளது என்றும் தேர்தல் பயத்தால் திமுக, முன்கூட்டியே பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது என்றும் கூறினார்.

    10:21 (IST)13 Dec 2020

    பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே - கமல்ஹாசன்

    கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? - பிரதமருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கேள்வி

    09:29 (IST)13 Dec 2020

    தமிழகத்தில் வரும் 16, 17ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

    வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் 16, 17 தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

    09:28 (IST)13 Dec 2020

    உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி

    2001-ம் ஆண்டு, நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்றும் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த வீர‌ர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    09:26 (IST)13 Dec 2020

    வாக்காளர் சிறப்பு முகாம்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்யத் தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து, தங்களுடைய பெயர், முகவரி, உள்ளிட்டவற்றை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்துகொள்ளலாம். தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி 20-ல்  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    Latest Tamil News : திமுக மகளிரணி மாநில செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வியாழக்கிழமை (10/12/2020) அன்று ”விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” பிரச்சாரத்தில் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை எஸ்.ஐ.எஸ்.எச் காலனியில் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 23 கோடி மதிப்பிலான மேம்பாலம் தற்போது வரை முடிக்கப்படவில்லை என்று கூறினார்.

    மேலும் நொய்யல் ஆறு சீரமைப்பிற்காக ரூ. 230 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த திட்டம் நிறைவேறவில்லை. இது தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முக ஸ்டாலின் கேட்டுக் கொண்ட போதும் முதல்வரிடம் எந்தவிதமான பதிலும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் இந்த மாவட்டம் வளர்ச்சி என்பதை காணவே இல்லை என்றும் கூறினார்.

    Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment