Advertisment

Tamil News Highlights : போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

Latest Tamil News : கோவிட் 19-ஆல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த முருகேசன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்

Tamil News Highlights : தமிழ்நாடு முழுவதும் உள்ள மெட்ரிக், சிபிஎஸ்இ, ICSE, IGCSE, IB பள்ளிகள் என அனைத்து தனியார்ப் பள்ளிகளும், டியூஷன் கட்டணம் எனப்படும் படிப்பு கட்டணத் தொகையில் 75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். சீருடை, பேருந்து கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்த அவர்களை வற்புறுத்தக் கூடாது என்றும் கட்டணம் செலுத்தாத மாணவர்களைக் கட்டாயப்படுத்தவோ அவர்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கவோ கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

ரேசன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர்

திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கபசுர குடிநீர் பாக்கெட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகளவில் 18 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் தற்போது 17,99,09,844 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பிலிருந்து இதுவரை 16,46,66,828 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இதற்கு இதுவரை 38 லட்சத்து 97 ஆயிரத்து 354 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் 19-ஆல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.98.65-க்கும், டீசல் லிட்டர் ரூ.92.83-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:44 (IST) 23 Jun 2021
    முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

    சேலத்தில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வாகன சோதனையின் போது, போலீசாருடன் முருகேசன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். வாக்குவாதம் முற்றி, போலீசார் தாக்கியதில் முருகேசன் உயிரிழந்தார்.



  • 19:36 (IST) 23 Jun 2021
    தமிழகத்தில் மேலும் 6,596 பேருக்கு கொரோனா தொற்று; 166 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் மேலும் 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு இன்று 166 பேர் உயிரிழந்துள்ளனர்



  • 18:56 (IST) 23 Jun 2021
    சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் குழப்பம்

    சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்ததால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை, வீட்டு தனிமையில் இருந்த 2,012 பேர் குணமடைந்து விட்டதாக தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டது தான் குழப்பத்திற்கு காரணம் என விளக்கம் அளித்துள்ளது.



  • 18:18 (IST) 23 Jun 2021
    கொரோனா பரவலின் 2வது அலைக்கு தேர்தலே காரணம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

    கொரோனா பரவலின் 2வது அலைக்கு தேர்தலே காரணம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்டால், கொரோனா மேலும் பரவ வாய்ப்பாக அமைந்துவிடும் எனவும் நீதிபதிகள் கருத்து.



  • 17:30 (IST) 23 Jun 2021
    தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிரா, கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 17:08 (IST) 23 Jun 2021
    கொரோனா நிவாரணம் - மளிகை பொருட்கள் ஜூன் 25க்குள் விநியோகிக்க வேண்டும்

    கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பினை வரும் 25ஆம் தேதிக்குள் விநியோகிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



  • 16:29 (IST) 23 Jun 2021
    நீட் தேர்வு மாணவர்களின் உயிர் பிரச்னை... நீதிமன்றத்தை அணுக உள்ளோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

    சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வு மாணவர்களின் உயிர் பிரச்னை என்பதால் நீதிமன்றத்தை அணுக உள்ளோம், நீட் தேர்வில் விலக்கு பெற தோள் கொடுங்கள், துணை நில்லுங்கள்!” என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.



  • 16:24 (IST) 23 Jun 2021
    தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி தான் காரணம் - அமைச்சர் மா.சு. பேச்சு

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் மா.சுப்பிரமணியன் பேச்சு: ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை, எடப்பாடி முதல்வரான பிறகு தான் நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்தது. இதை யாராவது மறுக்க முடியும? தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு முழுக்க முழுக்க காரணம் எடப்பாடி பழனிசாமிதான்” என்று விமர்சித்துப் பேசினார்.



  • 16:06 (IST) 23 Jun 2021
    கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - ஸ்டாலின்

    சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு முருகேசன் என்பவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் என் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன் *தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.



  • 15:42 (IST) 23 Jun 2021
    நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது - முதல்வர்

    நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதில் அளித்தள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வுக்கு திமுக ஒருபோதும் துணை நிற்காது, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறியுள்ளார்.



  • 15:03 (IST) 23 Jun 2021
    திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க கோரிக்கை

    திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் அதிகரித்து வரும் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு அரசு இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



  • 15:00 (IST) 23 Jun 2021
    தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு விமான கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்திக்கொண்டவர்களுக்கு விமான கட்டணத்தில் 10 சதவீதம் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:57 (IST) 23 Jun 2021
    மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து சேவை தொடக்கம்

    தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை தங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.



  • 14:22 (IST) 23 Jun 2021
    கீழடி அருங்காட்சியக கட்டுமானப் பணிகள் குறித்து புகார்

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழடியில், 12 மாதங்களில் கட்டி முடிக்கவேண்டிய கீழடி அருங்காட்சியக கட்டுமான பணிகள் 11 மாதங்கள் ஆகியும்அடித்தளம் அமைக்கும் பணியே இன்னும் முடிக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.



  • 14:19 (IST) 23 Jun 2021
    புறநகர் ரயில் சேவையை தொடங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், சென்னை காஞ்சிபும், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் வேலைக்கு செல்லும் தொழிலார்கள் பயன்படுத்தி வந்த ரயில் சேவை தொடங்கப்படாத நிலையில், புறநகர் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளளனர்.



  • 13:57 (IST) 23 Jun 2021
    வைகை அணையில் இருந்து நீர் திறப்பு

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து விநாடிக்கும் 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவைக்காக அணையின் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்படும் என்று அறிவிப்பு.



  • 13:53 (IST) 23 Jun 2021
    நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை - உதயநிதி ஸ்டாலின்

    நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு தயாராக உள்ள மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் இதனால் பாதிப்பு அடையாத அளவில் அரசின் நடவடிக்கைகள் இருக்கும் என்று சட்டப்பேரவையில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பேச்சு.



  • 13:32 (IST) 23 Jun 2021
    பள்ளிக்கல்வித்துறை செய்தி

    தமிழக பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் அதிகாரங்களை ஆணையரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் நியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 13:30 (IST) 23 Jun 2021
    ஏழைகள் நல உணவு திட்டம்

    பிரதமரின் ஏழைகல் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.



  • 13:13 (IST) 23 Jun 2021
    வன்னியர் இட ஒதுக்கீடு - ஸ்டாலின் பதில்

    தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று பாமக எம்.எல்.ஏ ஜி.கே. மணியின் கேள்விக்கு முதல்வர் முக ஸ்டாலின் பதில் அளித்தார்.



  • 13:09 (IST) 23 Jun 2021
    மதுபோதையில் இருந்த நபரை தாக்கிய காவல்துறையினர் கைது

    சேலம் மாவட்டம் பாப்பநாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் முருகேசன். விவசாயியான அவர் மதுபோதையில் இருந்த போது எஸ்.ஐ. பெரியசாமி மற்றும் காவலர் முருகன் ஆகியோர் அவரை தாக்கியுள்ளனர். அதனால் முருகேசன் உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து இரண்டு காவல்துறையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி. நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.



  • 12:45 (IST) 23 Jun 2021
    கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை

    கலைஞர் மு. கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் திருச்சி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 12:43 (IST) 23 Jun 2021
    கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை

    கலைஞர் மு. கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சட்டப்பேரவையில் திருச்சி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு கலைஞரின் பெயரை வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 12:27 (IST) 23 Jun 2021
    1957ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையிலேயே ஒன்றிய அரசு என்று தான் குறிப்பிட்டிருந்தோம் - முக ஸ்டாலின்

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் தற்போது ஸ்டாலின் தன்னுடைய உரையை ஆற்றி வருகிறார். ஒன்றியம் என்ற வார்த்தையை திமுக தங்களின் 1957ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையிலேயே பயன்படுத்தி இருந்தது. தற்போதும் பயன்படுத்துவோம் பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 12:25 (IST) 23 Jun 2021
    கோவையை புறக்கணிக்கமாட்டோம் - முதல்வர்

    கோவையை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்க மாட்டோம். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என முதல்வர் சட்டப்பேரவையில் பேச்சு.



  • 12:15 (IST) 23 Jun 2021
    நீட் விலக்குக்கு பாஜக ஆதரவு தர தயாராக உள்ளதா? முதல்வர் கேள்வி

    தமிழகத்தில் நீட் விலக்குக்கு ஆதரவு அளிக்க பாஜக தயாராக உள்ளதா என்று பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நயினார், சட்டத்துக்குட்பட்டு விதி விலக்கு தரப்பட்டால், பாஜக ஆதரவு தர தயார் என்று பதில் கூறியுள்ளார்.



  • 11:32 (IST) 23 Jun 2021
    தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீடிப்பு

    தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில், தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதியுடன் தனி அலுவலர் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



  • 11:31 (IST) 23 Jun 2021
    9.15 மணிக்குள் பள்ளிக்கு ஆசிரியர்கள் வர வேண்டும்

    தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வர தாமதமானால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.



  • 10:59 (IST) 23 Jun 2021
    நிதி நிலை சீரானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    கொரோனா 2-ம் அலைக்காக மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 1 சதவீதத்தை செலவிட்டு வருகிறோம். முதலமைச்சரின் வாக்குறுதி அடிப்படையில் நிதி நிலை சீரானதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.



  • 10:44 (IST) 23 Jun 2021
    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம்

    இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம், கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.



  • 10:07 (IST) 23 Jun 2021
    2-வது டோஸ் செலுத்திக்கொள்வதற்கான சிறப்பு முகாம் தொடக்கம்

    சென்னையில் கோவாக்சின் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொள்வதற்கான சிறப்பு முகாம் தொடங்கியது. இன்று முதல் 2 நாட்களுக்கு இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என மாநகராட்சி அறிவித்திருக்கிறது.



  • 09:52 (IST) 23 Jun 2021
    பல்லாவரம் எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலும் பணம் கொள்ளை

    சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-களில் லட்சக்கணக்கான ரூபாய் களவு போனதை அடுத்து, பல்லாவரம் பழைய ட்ரங்க் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎமில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 500 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.



  • 09:05 (IST) 23 Jun 2021
    தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசி டோஸ்கள் இன்று வருகை

    இன்று தமிழத்திற்கு 2.05 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் மற்றும் 4.67 லட்சம் கோவாக்சின் டோஸ்கள் என 6.72 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வர உள்ளன.



Stalin School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment