Live

Tamil News Today : தமிழ்நாட்டில் 6,000ஆக குறைந்த கொரோனா; 155 பேர் பலி

Latest Tamil News : ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் உரை ஆற்றுகிறார்.

india coronaviurs cases fall, india, covid deaths remains high, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று, கொரோனா மரணங்கள், கோவிட் 19, தமிழ்நாடு, கர்நாடகா, இணந்தியா, covid deaths, covid vaccine, covid 19, tamil nadu, karnataka, daily covid cases

Tamil News Live : கடந்த 21ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அதன் இறுதி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை ஆற்றுகிறார். மேலும், அரசுத் துறைகளின் செலவினங்களை ஆய்வு செய்து மத்திய அரசின் தணிக்கைத் துறை அளித்த அறிக்கையும் சட்டப்பேரவையில் தாக்கலாக இருக்கவுள்ளது.

காஷ்மீரின் முக்கிய தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களைப் பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் என்ன பேசப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை என்றாலும் காஷ்மீரில் தேர்தல் நடத்துவது, மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்துப் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் சார்பில், மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்து கொள்கிறார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சிறப்பு சலுகை

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு விமான பயண கட்டணத்தில் 10 சதவிகித சலுகை கொடுக்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது. இது, இந்தியாவின் மெகாதடுப்பூசி திட்டத்திற்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
1:37 (IST) 24 Jun 2021
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,162 பேருக்கு கொரோனா; 155 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் இன்று 155 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 9,046 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் செய்யப்பட்டனர்.

12:25 (IST) 24 Jun 2021
பழிகளும் அவமானங்களும் என்னை மேலும் மேலும் உழைக்கவும், உண்மையாக இருக்கவும்தான் தூண்டுகிறது – ஸ்டாலின்

சட்டமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் என்னை மேலும் மேலும் உழைக்கவும், உண்மையாக இருக்கவும்தான் தூண்டுகிறது. மாற்றத்தை படைத்த தமிழ்நாட்டு மக்களை மறந்துவிட முடியுமா? எங்கள் இதயத்தின் இயங்கு சக்தியாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களை என்றைக்கும் மறக்க மாட்டோம்.” என்று கூறியுள்ளார்.

11:42 (IST) 24 Jun 2021
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் அருகே ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் அருகே ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை நடைபெறுவதாக தென்னக ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வந்து செல்ல ஏதுவாக ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

10:55 (IST) 24 Jun 2021
கூகுள் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து புதிதாக ஸ்மார்ட் போன் செப்.10 முதல் விற்பனை

கூகுள் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள விலை மலிவான ஸ்மார்ட் போனை செப்.10 முதல் விற்பனை செய்யவுள்ளதாக, முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

10:18 (IST) 24 Jun 2021
உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்” – அமைச்சர் கே.என்.நேரு

உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

9:45 (IST) 24 Jun 2021
மணிகண்டன் ஜாமீன் மனு – நாளை தீர்ப்பு

துணை நடிகையின் புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல் செய்துள்ளார்.

8:59 (IST) 24 Jun 2021
ஊரடங்கு தளர்வுகள் – முதல்வர் நாளை ஆலோசனை

ஊரடங்கை நீட்டித்து தளர்வுகள் வழங்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

7:45 (IST) 24 Jun 2021
மத்திய அரசின் சிறு துறைமுகங்களுக்கான திருத்த மசோதாவிற்கு தமிழக அரசு எதிர்ப்பு

மத்திய இணை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற கடல்சார் மேம்பாட்டு கூட்டத்தில் புதிய சட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

7:43 (IST) 24 Jun 2021
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

7:25 (IST) 24 Jun 2021
நாளை முதல் புறநகர் ரயில்கள் சென்னையில் இயக்கம்

சென்னையில் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த அனைத்து பயணிகளுக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெண் பயணிகள் 24 மணி நேரமும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த அனுமதி. அத்தியாவசிய மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்து பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் மாஸ்க் அணியாமல் சிக்கினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

7:13 (IST) 24 Jun 2021
பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்

12ஆம் வகுப்பு மாநில பாடத் திட்ட பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் முடிவுகளை ஜூலை 31ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

7:12 (IST) 24 Jun 2021
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்துள்ள நிலையில் இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

7:04 (IST) 24 Jun 2021
weather report – கடலரோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை அறிக்கை அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசனாது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

6:55 (IST) 24 Jun 2021
நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து 85,935 கருத்துகள் பெறப்பட்டுள்ளது

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து 85,935 கருத்துகள் பெறப்பட்டுள்ளது என்று ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் மக்கள் பதில் அளித்து வருகின்றனர்.

6:53 (IST) 24 Jun 2021
திமுக அடக்க முடியாத யானை – முக ஸ்டாலின்

அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள். திமுக அடக்கமுடியாத யானை. யானைக்கு நான்கு கால்கள் தான் பலம். அது போன்ற திமுகவுக்கு சமூக நீதி, மொழிப்பற்று, சுயமரியாதை, மாநில உரிமை என்ற நான்கு கொள்கைகள் பலமாக இருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவருக்கு பதில் அளித்துள்ளார் முக ஸ்டாலின்

6:22 (IST) 24 Jun 2021
வடமாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க 2 தொழிற்சாலைகள் நிறுவப்படும் – முக ஸ்டாலின்

திண்டிவனம் மற்றும் செய்யாறு பகுதிகளில் தொழில்வளர்ச்சியை அதிகரிக்க இரண்டு தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

6:19 (IST) 24 Jun 2021
இன்றோடு 49 நாட்கள் ஆகியுள்ளன – முதல்வர்

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டு தான் இருக்கின்றோம். 49 நாட்களில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கும் எதிர்கட்சி தலைவருக்கு நன்றி என்று முக ஸ்டாலின் சட்டசபையில் பேச்சு.

6:16 (IST) 24 Jun 2021
பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து

அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு

6:11 (IST) 24 Jun 2021
தொழிற்சாலைகள் நிறுவப்படும் – முதலமைச்சர் ஸ்டாலின்

வடமாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க திண்டிவனம் மற்றும் செய்யாறு பகுதிகளில் 2 தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், கடந்த ஆட்சியிடம் கொரோனா தொற்று குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட சொன்னேன் ஆனால், ஏற்கவில்லை. ஆட்சிக்கு வரப்போவதில்லை என அலட்சியமாக இருந்ததால்தான் கொரோனா தொற்று அதிகரித்தது என்றும் குற்றம் சாட்டினார்.

5:19 (IST) 24 Jun 2021
ஆளுநர் உரை வெறும் முன்னோட்டம்தான் – முதலமைச்சர் ஸ்டாலின்

5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதை ஆளுநர் உரையில் சொல்லி விட முடியாது. ஆளுநர் உரை வெறும் முன்னோட்டம்தான் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4:28 (IST) 24 Jun 2021
நிவாரண நிதி பெறுவதற்கு கால நிர்ணயம் செய்யப்படவில்லை

ரேசன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பை வழங்குவதற்கும் கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 பெறுவதற்கும் கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை என்று உணவு பொருட்கள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

4:26 (IST) 24 Jun 2021
டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்தார்

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதித்த சென்னை பெண் குணமடைந்து விட்டார் என்று மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4:24 (IST) 24 Jun 2021
ரயிலில் சொந்த ஊர் செல்லும் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருக்கும் தனது சொந்த ஊரான பராங்கிற்கு ரயிலில் செல்ல உள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு ரயிலில் பயணம் செய்தார். அவரைத் தொடர்ந்து 15 வருடங்கள் கழித்து, ஒரு குடியரசுத் தலைவர் ரயிலில் பயணம் செய்ய உள்ளார்.

Web Title: Tamil news today live chennai tamil nadu stalin governor corona modi kashmir

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express