Advertisment

News Highlights : காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

Latest Tamil News : டிசம்பர் மாதத்திற்குள் 200 கோடி தடுப்பூசி வரை உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என்றும் நட்டா தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
News Highlights : காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று திறப்பு : முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

Tamil News Live : ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கி நிதி உதவியுடன் கல்லணை கால்வாயை நவீனப்படுத்தும் மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்காக இன்று காலை சிறப்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு செல்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். திருச்சியிலிருந்து கல்லணை சென்று அங்கு ஆய்வுப் பணிகளை  மேற்பார்வையிட்ட பிறகு, அங்கிருக்கும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Advertisment

டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசி உற்பத்தி

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்கு 200 கோடி கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மத்திய அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசிய நட்டா, ஒரு மாதத்தில் ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகள் வரை தற்போது உற்பத்தி செய்யப்படுவதாகவும், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த எண்ணிக்கை 6 முதல் 7 கோடியாக அதிகரிக்கும் எனவும், செப்டம்பர் மாதத்தில் இது 10 கோடியாக அதிகரித்திருக்கும் என்றும் தெரிவித்தார். இது தொடர்ந்து மேலும், டிசம்பர் மாதத்திற்குள் 200 கோடி தடுப்பூசி வரை உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என்றும் நட்டா தெரிவித்தார்.

ஒரே நாளில் 30.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையின்146-வது நாளில், 30 லட்சத்து 32 ஆயிரத்து 675 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் 27 லட்சத்து 33 ஆயிரத்து 87 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி மற்றும் 2 லட்சத்து 29 ஆயிரத்து 588 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 24 கோடியே 58 லட்சத்து 47 ஆயிரத்து 212 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை 20 லட்சத்து 7 ஆயிரத்து 665 பேர் தடுப்பூசியின் முதல் தவணையையும், 5 ஆயிரத்து 265 பேர் இரண்டாம் தவணையையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

முன்களப் பணியாளர்களுக்கு உணவு வாங்கியதில் அதிமுக ஆட்சியில் முறைகேடு

அதிமுக ஆட்சியில், கொரோனா சிகிச்சை மையங்களில் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு உணவு வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். மேலும், தற்போது அவர்களுக்குக் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 23:00 (IST) 11 Jun 2021
    சமூக வலைதளங்களில் நான் இல்லை - நடிகர் சார்லி

    நடிகர் சார்லி பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு இருப்பதாக வெளியான தகவலை அடுத்து இது குறித்து விளக்கம் அளித்துள்ள சார்லி, "என் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு உள்ளது சமூக வலைதளங்களில் நான் இல்லை" என்று கூறி காவல்துறையில் புகார் அளித்துள்ளாா.


  • 18:58 (IST) 11 Jun 2021
    டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவு

    தமிழகததில் கொரோன ஊரடங்கு உத்தரவு வரும் 14-ந் தேதிக்கு பிறகு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், 27 மாவடடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டு்ளளது.


  • 18:35 (IST) 11 Jun 2021
    பாலியல் வழக்கில் தடகள பயிற்சியாளருக்கு ஜாமீன் மறுப்பு

    தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பயிற்சியாளர் நாகராஜனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், *நாகராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 18:33 (IST) 11 Jun 2021
    சென்னை வந்தடைந்த கோரோனா தடுபபூசிகள்

    மகாராஷ்டிராவின் புனேவில் இருந்து 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன


  • 18:29 (IST) 11 Jun 2021
    சேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

    உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில் மனு அளித்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் மனு அளித்தவர்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


  • 18:28 (IST) 11 Jun 2021
    எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான முயற்சிகளில் முதல்வர் - உதயநதி

    விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான அனைத்து முயற்சிகளிலும் முதல்வர் ஈடுபடுவார் எனறு சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.


  • 17:23 (IST) 11 Jun 2021
    யோகா அறிவியல் படிப்பில் சேர தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

    தேசிய திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் படிப்பில் சேர தகுதியில்லை என்ற விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 4 வாரங்களில் இது தொடர்பாக தமிழக அரசும் மருத்துவ பல்கலைகழகமும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


  • 17:20 (IST) 11 Jun 2021
    வங்கி கடனை திரும்ப செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் - சரத்குமார்

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வங்கி கடனை திரும்ப செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


  • 16:56 (IST) 11 Jun 2021
    மங்களூரில் 38 இலங்கை மக்கள் கைது

    கர்நாடக மாநிலம் மங்களூருவில் சட்டத்திற்கு விரோதமாக தங்கியிருந்த 38 இலங்கை பிரஜைகளை கைது செய்தது கர்நாடக அரசு


  • 16:55 (IST) 11 Jun 2021
    திரிணாமுல் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் முகுல் ராய்

    கடந்த 2017ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முகுல் ராய் பாஜகவில் இணைந்தார். பொதுத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்காக பணியாற்றிய அவர் சட்டமன்ற தோல்விக்கு பிறகு மீண்டும் திரிணாமுல் காங்கிரஸில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


  • 16:53 (IST) 11 Jun 2021
    விவசாயத்திற்கான கடன்கள் வசூலிக்க தடை

    தேசிய வங்கிகள்,மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்காக வழங்கப்பட்ட கடன்களை வங்கிகள் வசூலிக்க இரண்டு வருடம் தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. ரிசர்வ் வங்கி, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 15:39 (IST) 11 Jun 2021
    கொரோனா நிவாரணம் வரும் 15ம் தேதி முதல்...!

    கொரோனா நிவாரணம் 2வது தவணையாக 2,000 ரூபாய் வழங்க டோக்கன் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 வகை மளிகைப் பொருட்களும் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.


  • 15:34 (IST) 11 Jun 2021
    'கொரோனாவை தடுக்க தமிழ்நாடு அரசு மின்னல் வேகத்தில் செயல்படுகிறது' - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    'கொரோனாவை தடுக்க தமிழ்நாடு அரசு மின்னல் வேகத்தில் செயல்படுகிறது; எனினும் தடுப்பூசி பற்றாக்குறையை தீர்த்து கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க வேண்டும்' என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.


  • 15:32 (IST) 11 Jun 2021
    தங்கம் விலை ஏற்றம்...!

    சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ஒரு கிராம் அபரணத் தங்கம் ரூ.4,635 க்கும் சவரன் ரூ.37,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


  • 15:15 (IST) 11 Jun 2021
    ஓட்டுநர் உரிமம் பெற புதிய நடைமுறை - மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

    ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் ஓட்டுனர் பயிற்சியை முடித்தவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். RTO அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இனி இல்லை. மேலும் இந்த புதிய நடைமுறை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.


  • 14:53 (IST) 11 Jun 2021
    கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணி - முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

    கொடிங்கால் வாய்க்கால் தூர் வாரும் பணி ரூ.29.70 லட்சத்தில் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    திருச்சியில் 63.162 கி.மீ தூரத்திற்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 589 பணிகளுக்கு ரூ.62.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


  • 14:50 (IST) 11 Jun 2021
    கர்நாடகா மாநிலத்தில் வரும் 21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

    கர்நாடகா மாநிலத்தில் வரும் 21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


  • 14:46 (IST) 11 Jun 2021
    'மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்' - பாஜக தலைவர் முருகன்...!

    தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்து நிரந்தரமாக மூட முன்வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.


  • 14:06 (IST) 11 Jun 2021
    ஃபேமிலி_மேன்_2க்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம்!

    ஃபேமிலி_மேன்_2க்கு வெப் தொடருக்கு கண்டனம் தெரிவித்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன், "முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கான நீதிக்குரல்கள் உலக அரங்கில் வலுப்பெற்றுவரும் சூழலில், ஈழவிடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியுள்ள ஃபேமிலி_மேன்_2 . தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். அமேஸான், உடனே அதனை தனது தளத்திலிருந்து அகற்றவேண்டும்." என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


  • 14:03 (IST) 11 Jun 2021
    பெட்ரோல் விலை உயர்வு - விஜயகாந்த் கண்டனம்

    "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதாக, மத்திய அரசு கூறுவதை தற்போதைய சூழலில் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், டில்லி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல்.

    விலை 100 ரூபாயை கடந்துவிட்ட நிலையில், தமிழகத்திலும் 100 ரூபாய் எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    அவ்வாறு விலை உயர்ந்தால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும், வாகனங்களின் வாடகை கட்டணமும் மேலும் உயரம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி, பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


  • 13:11 (IST) 11 Jun 2021
    பத்ம விருதுகளுக்கான பரிந்துரை: இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்

    பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்.15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. www.padmaawards.govt.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.


  • 12:59 (IST) 11 Jun 2021
    ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு

    நடிகையும், திரைப்பட ஆர்வலருமான ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சத்தீவு விவகாரத்தில் பிரபுஃல் கோடா படேலை மத்திய அரசு 'பயோ ஆயுதம்' ஆக பயன்படுத்துகிறது என கருத்து தெரிவித்திருந்தார்.


  • 12:26 (IST) 11 Jun 2021
    கொரோனா மரணம் -இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு

    கொரோனா காலத்தில் இணை நோயால் இறந்தவர்களின் சான்றிதழ்களை நிபுணர் குழு கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா மரணம் முறையாக பதிவு செய்யப்படவில்லை எனவும் மரணம் குறித்த பதிவுகள் தெளிவாக இருந்தால்தான் நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.


  • 11:58 (IST) 11 Jun 2021
    7 பேர் விடுதலை குறித்து வலியுறுத்த வேண்டும்

    பேரறிவாளன் கைதாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 7 பேர் விடுதலை குறித்து ஆளுனரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.


  • 11:55 (IST) 11 Jun 2021
    ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க மட்டுமே நிவாரணநிதி

    தென்சென்னையில் மருத்துவ கட்டமைப்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், எல்லா கொரோனா நோயாளிகளுக்கு மத்திய, மாநில அரசு நிதி வழங்கவில்லை என்றும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க மட்டுமே நிவாரணநிதி வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.


  • 10:31 (IST) 11 Jun 2021
    90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 50 கோடி பைசர் தடுப்பூசி

    90-க்கும் மேற்பட்ட குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சுமார் 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


  • 10:29 (IST) 11 Jun 2021
    இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர்

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக தொடக்க வீரர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.


  • 09:25 (IST) 11 Jun 2021
    கொரோனாவால் 17.56 கோடி பேர் பாதிப்பு

    உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 17.56 கோடி பேர் பாதிப்படைந்திருக்கின்றனர். இதிலிருந்து 15.91 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 37.88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.


  • 09:24 (IST) 11 Jun 2021
    சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.97.19-க்கும், டீசல் விலை 27 காசுகள் அதிகரித்து ரூ.91.42-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.


Covid 19 Vaccine Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment