Tamil News : தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், தொற்று பாதிப்பு குறையாததையடுத்து, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மேலும், இந்த ஊரடங்கு வருகிற 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஊரடங்கில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமலா ஹாரிஸ் - நரேந்திர மோடி உரையாடல்
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதற்கான வாஷிங்டனின் திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேற்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார். "கமலா ஹாரிஸ் அவர்களுடன் சிறிது நேரத்திற்கு முன்பு பேசினேன். உலகளாவிய தடுப்பூசி பகிர்வுக்கான அமெரிக்க வியூகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான உத்தரவாதத்தை நான் மிகவும் பாராட்டுகிறேன். அமெரிக்க அரசு, வணிகங்கள் மற்றும் இந்திய புலம்பெயர்ந்தோருக்கான ஆதரவளித்ததுக்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன். இந்தியா-அமெரிக்க தடுப்பூசி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும், கோவிட் பிந்தைய உலக சுகாதாரம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு பங்களிப்பதற்கான எங்கள் கூட்டாண்மைக்கான சாத்தியங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருக்கிறார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய நடால்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கேட் ஆகியோர் மோதினர். இதில், 12 முறை சாம்பியனான நடால் 6-0, 7-5, 6-2 என்ற நேர் செட்களில் கேஸ்கேட்டை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெட்ரோல் - டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் 24 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.96.23-க்கும் , டீசல் 26 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.90.38-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 22:20 (IST) 04 Jun 2021கொரோனா தடுப்புப் பணிகளை ஈ.பி.எஸ் புரியாமல் குற்றம்சாட்டுகிறார் - அமைச்சர் மா.சு விமர்சனம்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் கொரோனா தடுப்பு பணிகளை ஓ.பி.எஸ் உள்பட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாராட்டி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புரியாமல் குற்றம்சாட்டி வருகிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் விமர்சனம் செய்துள்ளார்.
- 21:44 (IST) 04 Jun 2021சென்னை விமான நிலையத்தில், ரூ.70 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்; 2 ஆப்பிரிக்க பெண்கள் கைது
சென்னை விமான நிலையத்தில், ரூ.70 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்; 2 ஆப்பிரிக்க பெண்கள் கைது
சென்னை விமான நிலையத்தில், 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ 870 கிராம் ஹெராயின் போதை பொருளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தென் ஆப்பிரிக்காவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட இந்த போதை பொருள் சூட்கேசில் ரகசிய அறைகளில் அடைத்து கொண்டுவந்த 2 ஆப்பிரிக்க பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- 20:42 (IST) 04 Jun 2021COWIN இணையதளத்தில் 2 நாட்களில் தமிழ் மொழி இடம்பெறும்
கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் COWIN இணையதளத்தில் 2 நாட்களில் தமிழ் மொழி இடம்பெறும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. COWIN இணையதளத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட 9 மொழிகளில் தமிழ் மொழி இடம்பெறாததற்கு கண்டம எழுந்ததைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 19:49 (IST) 04 Jun 2021தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா; 463 பேர் பலி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் இன்று மட்டும் 463 பேர் உயிரிழந்ததாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- 18:46 (IST) 04 Jun 202112ம் வகுப்பு தேர்வு குறித்து முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் - அமைச்சர் அன்பில் பொய்யாமொழி
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான ஆலோசனைக்கு பின், சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். “அனைத்து தரப்பினர் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். 12ம் வகுப்பு தேர்வு குறித்து முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார். ஆன்லைன் கல்விக்கான வழிமுறைகள் தயாராகி வருகிறது. அதை விரைவில் முதல்வரிடம் வழங்குவோம். சட்டமன்ற கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
- 18:09 (IST) 04 Jun 2021ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை நேரில் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காவிரி பாசன பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை நேரில் திறந்து வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18:07 (IST) 04 Jun 2021சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
- 18:06 (IST) 04 Jun 2021சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவெடுக்க குழு அமைப்பு
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த முறையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்க கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விபின் குமார் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
- 15:56 (IST) 04 Jun 2021சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் உலர் பொருட்கள்
சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் உலர் பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 15:38 (IST) 04 Jun 2021ஆசிரியர் ராஜகோபாலனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், ஆசிரியர் ராஜகோபாலனின் நீதிமன்ற காவலை 8ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 15:26 (IST) 04 Jun 2021ஓபிஎஸ் உடன் கருத்து வேறுபாடு இல்லை -எடப்பாடி பழனிச்சாமி
சென்னையில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்து காரணத்தால் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என்றும், இருவருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- 15:23 (IST) 04 Jun 2021ஆசிரியர் மீதான பாலியல் புகார் -மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு
சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 15:20 (IST) 04 Jun 2021கொரோனா -பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க குழு
கொரோனா பாதிப்பு நிலவரங்களை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பூர்ணலிங்கம் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 14:15 (IST) 04 Jun 2021கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த வேண்டும் - இபிஎஸ்
சற்று முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் கே. பழனிச்சாமி, கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தி கொரோனா பரிசோதனை முடிவை தாமதமாக அறிவிக்கக் கூடாது என்றும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசுதான் என்றும், கோதாவரி-காவிரி திட்டம் குறித்து ஆந்திர அரசுடன் அப்போதைய அமைச்சர்கள் பேசினார்கள் *கோதாவரி-காவிரி திட்டத்தை பரிசீலிப்பதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது
- 14:11 (IST) 04 Jun 2021அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை - இபிஎஸ்
சசிகலா தொண்டர்களுடன் பேசிய ஆடியோ குறித்து கருத்து தெரிவித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை. அரசியலில் இருந்து விலகியதாக ஊடகங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார். சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோதான் வெளியானது. அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை என்று கூறியுள்ளார்.
- 13:50 (IST) 04 Jun 2021தமிழகத்தில் ஊரடங்கை நீடிக்க பரிந்துரை
தமழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மேலும் நீடிக்க மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவெ மே 31-ந் தேதி வரை இருந்த ஊரடங்கு உத்தரவு வரும் 7-ந தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 13:36 (IST) 04 Jun 2021வெளியானது சசிகலா ஆடியோ - தீவிர ஆலோசனையில் இபிஎஸ்
சசிகலா தொண்டர்களுடன் பேசிய ஆடியோ வெளியான நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
- 12:55 (IST) 04 Jun 2021போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வுதிய பலன்கள்
போக்குவரத்து பணியாளர்கள் 2,454 பேருக்கு ₨472.92 கோடி ஓய்வூதிய பயன்கள் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன், ஓபிஎஸ் கூறியதால் இதை வழங்கவில்லை திமுக அரசு என்றும் தொழிலாளர் நலன் மீது அக்கறை கொண்ட அரசு என்று கூறியுள்ளார்.
- 12:54 (IST) 04 Jun 202112-ம் வகுப்பு தேர்வு குறித்து அமைச்சர்கள் ஆலோசனை
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று மாலை 4 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
- 12:48 (IST) 04 Jun 2021நிவாரண நிதி இரண்டாவது தவணை டோக்கன் வழங்கும் பணி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நிவாரணமாக 4000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக 2000 ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
- 11:49 (IST) 04 Jun 20217 பேர் விடுதலை குறித்து பேசினோம் - சீமான்
"7 பேர் விடுதலை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேசி உள்ளோம். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கை பொறுத்து முடிவு எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
- 11:48 (IST) 04 Jun 2021கோவில்களின் பத்திரங்களை இணையத்தில் பதிவேற்றம்
இந்து அறநிலையத்துறை கோவில்களின் பத்திரங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றும் பணி 6 மாதங்களில் முடிவடையும் என்றும் இணையத்தில் பதிவேற்றிய பிறகு பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
- 11:35 (IST) 04 Jun 2021ரிப்பன் மாளிகையில் மீண்டும் நிறுவப்பட்ட 'தமிழ் வாழ்க' பெயர் பலகை
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, 'தமிழ் வாழ்க, தமிழ் வளர்க' என்ற பெயர் பலகைகள் மீண்டும் நிறுவப்பட்டு திறக்கப்பட்டன.
- 10:19 (IST) 04 Jun 2021இன்றுடன் ஓய்வுப்பெறுகிறது ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல்
இந்திய கடற்படையில் 40 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த ஐஎன்எஸ் சந்தயக் போர் கப்பல் இன்றுடன் ஓய்வு பெறுகிறது. கடற்படை பயன்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் கடந்த 1981-ம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- 10:15 (IST) 04 Jun 2021டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு தடுப்பூசி
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும் 49 நாட்களே உள்ள நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
- 10:14 (IST) 04 Jun 2021அமீரகத்தில் ஐபிஎல் டி20
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளை 25 நாள்கள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் 4 நாள்களுக்கு ஒரே நாளில் இரண்டு போட்டிகளை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.