Advertisment

Tamil News Today : சென்னை மாநகராட்சி பகுதியில் இன்று, நாளை கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம்

Latest Tamil News : குடிமக்களுக்குத் தடுப்பூசி கிடைத்ததை உறுதிப்படுத்தக் கடுமையாக உழைக்கும் அனைத்து முன் களப்பணியாளர்களுக்கும், தடுப்பூசி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி

author-image
WebDesk
New Update
Tamil News Today : சென்னை மாநகராட்சி பகுதியில் இன்று, நாளை கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம்

மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல்

Advertisment

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். இதில், நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், காளியண்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ccவாழ்த்து

இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "சாதனை படைத்திருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் சுன்னிக்காய் மகிழ்ச்சியளிக்கின்றது. COVID-19- ஐ எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி நம் வலிமையான ஆயுதமாக உள்ளது. குடிமக்களுக்குத் தடுப்பூசி கிடைத்ததை உறுதிப்படுத்தக் கடுமையாக உழைக்கும் அனைத்து முன் களப்பணியாளர்களுக்கும், தடுப்பூசி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்" என்று மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கனமழை பெய்யும்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உட்பட மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.98.65-க்கும், டீசல் லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து ரூ.92.83-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 20:16 (IST) 22 Jun 2021
    முதல்வர் நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்துள்ளது : மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையினால் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக மக்கள் நால்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தவுடன் அம்மா கிளீனிக் செயல்பாட்டிற்கு வரும் என்று கூறிய அவர், மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் உறுதியான தீர்வு எட்டப்படும் என தெரிவித்துள்ளார்.


  • 20:13 (IST) 22 Jun 2021
    சென்னை மாநகராட்சியில் கோவாக்சின் தடுப்பூசி முகாம்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சியில் நாளை மற்றும் நாளை மறுநாள் கோவாக்சின் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், கோவாக்சின் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 19:03 (IST) 22 Jun 2021
    பள்ளி மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

    மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, ஐஜிசிஎஸ்இ மற்றும் ஐபி பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்விக்கட்டணம் 75% சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், பேருந்து சீருடை உள்ளிட்ட இதர கட்டணங்களை வசூலிக்க கூடாது என்றும், 75% சதவீத கல்விக்கட்டண விபரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


  • 18:03 (IST) 22 Jun 2021
    சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

    சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும் மதிப்பெண் கணக்கீட்டுக்கு முறைக்கு எதிராகவும் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, மத்திய அரசு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. அதையடுத்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    அதன்படி, 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல, தனித் தேர்வர்களும், தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்களுக்கும் மீண்டும் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். கொரோனா சூழல் சீரடைந்த பிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது. இந்த முறைக்குக் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.


  • 17:38 (IST) 22 Jun 2021
    இந்தியாவில் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட வாய்ப்பில்லை - நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால்

    இந்தியாவில் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட வாய்ப்பில்லை; தொற்று கட்டுப்படுத்தப்படுவதோடு தடுப்பூசி செலுத்தப்படும் பணியும் துரிதப்பட வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.


  • 17:36 (IST) 22 Jun 2021
    தமிழ்நாட்டில் வெளி வெளிமாநிலத்தவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது குறித்து ஆய்வு - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    தமிழகத்தில் எதன் அடிப்படையில் வெளிமாநிலத்தினருக்கு வேலைவாய்ப்பு

    வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


  • 16:43 (IST) 22 Jun 2021
    சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.25 குறைப்பு: சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

    தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை மிகவும் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.25 குறைக்கப்படுவதாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


  • 15:26 (IST) 22 Jun 2021
    பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை

    தமிழர்களை தவிர பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


  • 15:25 (IST) 22 Jun 2021
    பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை

    தமிழர்களை தவிர பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


  • 15:25 (IST) 22 Jun 2021
    பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை

    தமிழர்களை தவிர பிற மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவதை ஆய்வு செய்து அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


  • 14:39 (IST) 22 Jun 2021
    நடிகர் விஜய்க்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து

    தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் -கமல்ஹாசன்.


  • 14:25 (IST) 22 Jun 2021
    83 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலைக்கு முறைகேடாக நிலம் பெற்ற விவகாரம் தொடர்பாக 83 பேரின் வங்கி கணக்குகளை முடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


  • 13:34 (IST) 22 Jun 2021
    ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு தமிழகத்தில் இடம் இல்லை

    தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்துள்ளார்


  • 13:28 (IST) 22 Jun 2021
    துறைமுகங்கள் மசோதா தொடர்பாக மற்ற மாநில முதல்வர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம்

    குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுக்கு துறைமுகங்கள் மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


  • 13:25 (IST) 22 Jun 2021
    சென்னை ஏ.டி.எம்.களில் கொள்ளை

    சென்னையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ரூ. 15 லட்சம் நூதனமாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க எஸ்.பி.ஐ. தென் மண்டல தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.


  • 13:21 (IST) 22 Jun 2021
    சாத்தான்குளத்தில் கனிமொழி

    சாத்தான்குளத்தில் சிறை சித்திரவதையில் மரணம் அடைந்த ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று தூத்துக்குடியில் கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இருவரையும் இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி

    மீளாத்துயரில் வற்றாத கண்ணீரில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளையும் வைராகியத்தோடு எதிர்கொள்ளும் தாய்களை சந்தித்து ஆறுதலும் உறுதியும் சொன்னேன். pic.twitter.com/NkVTuq1RLg
    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 22, 2021

  • 13:07 (IST) 22 Jun 2021
    மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்வர்

    சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசி வரும் முக ஸ்டாலின், 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 12:59 (IST) 22 Jun 2021
    அரியலூர், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு


  • 12:43 (IST) 22 Jun 2021
    மணிகண்டனின் உதவியாளர் முன்ஜாமீன் கேட்டு மனு

    பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர் பரணிதரன் முன் ஜாமீன் மனு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். காவல்துறை பதிலளிக்க அவகாசம் அளித்து விசாரணை 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  • 12:34 (IST) 22 Jun 2021
    மூன்றாவது அலை வந்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது - அமைச்சர் சுப்பிரமணியன்

    தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பும் இருந்தால், நாள் ஒன்றுக்கு 7 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும். மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


  • 12:16 (IST) 22 Jun 2021
    வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - ராகுல் காந்தி

    கொரோனா தொட்டர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அதனால் தான் வருகின்ற அலைகளில் மனித உயிர்கள் காப்பாற்றப்படும். நாட்டின் நலனுக்காக இந்திய அரசு செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி ட்வீட்

    The idea behind our White Paper report on covid19 is to provide insights & information so that avoidable deaths can be prevented in the coming waves.

    GOI must work on our constructive inputs in the interest of the country.
    — Rahul Gandhi (@RahulGandhi) June 22, 2021

  • 12:08 (IST) 22 Jun 2021
    3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

    கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 12:06 (IST) 22 Jun 2021
    செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் - உச்ச நீதிமன்றம்

    நகர்ப்புற மற்றும் புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த 6 மாத காலம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது மாநில தேர்தல் ஆணையம். அதனை மறுத்த உச்ச நீதிமன்றம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 12:06 (IST) 22 Jun 2021
    3-வது அலையை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் அவசியம்

    கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 11:59 (IST) 22 Jun 2021
    50,000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியே 99 லட்சத்து 77 ஆயிரத்து 861 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 11:47 (IST) 22 Jun 2021
    கொரோனா பெருந்தொற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுக்கு பாராட்டு

    ஆளுநர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை முக்கியமாக பார்ப்பதாக ஆளுநர் உரை மீதான விவாத‌த்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் பகிர்ந்துகொண்டார்.


  • 11:05 (IST) 22 Jun 2021
    கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

    சென்னையில் தற்காப்பு பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பயிற்சிக்கு வந்த பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக மின்னஞ்சல் மூலம் சி.பி.சி.ஐ.டி.யிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்குப்பதிவு.


  • 11:03 (IST) 22 Jun 2021
    ஜெயராஜ் பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம்

    சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் திமுக எம்.பி கனிமொழி.


  • 11:02 (IST) 22 Jun 2021
    2 லட்சத்து 21 ஆயிரத்தி 90 கோவாக்சின் தடுப்பூசிகள்

    தமிழகத்திற்கு 2 லட்சத்து 21 ஆயிரத்தி 90 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றை விரைவில் மாவட்டங்களுக்கு பிரித்து அளிக்கப்பட உள்ளது.


  • 09:30 (IST) 22 Jun 2021
    பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம் இன்று ரத்து

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம் இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 2,000 தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே கையிருப்பு உள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.


Covid 19 Vaccine Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment