Tamil News : தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் உகந்ததாக இருக்காது என்றும் மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறி இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, “மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். நீட் தேர்வு ஒரே ஒரு நாள் நடைபெறும் தேர்வு என்றாலும், அன்றைய தினத்தில் மாணவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்துப் போராடுவோம்” என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.நீட் இல்லாத தமிழகத்தை திமுக உருவாக்கும்; கனிமொழி உறுதி
Tamil News Live : தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் உகந்ததாக இருக்காது என்றும் மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறி இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, “மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். நீட் தேர்வு ஒரே ஒரு நாள் நடைபெறும் தேர்வு என்றாலும், அன்றைய தினத்தில் மாணவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்துப் போராடுவோம்” என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இந்தியாவில் மோசமான மொழி ‘கன்னடம்’ – மன்னிப்பு கோரிய கூகுள்</strong>
கூகுள் தேடலில், ‘What is the ugliest language in India’ (இந்தியாவின் மோசமான மொழி எது) என்ற தேடலுக்கு, கன்னட மொழி என்று பதில் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர், கூகுள் நிறுவனத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், கூகுள் நிறுவனம் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இதுதொடர்பாக கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கன்னட மொழி வளர்ச்சி அமைச்சர் அரவிந்த் லிம்பவலி எச்சரித்தார். இந்நிலையில், ‘கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் கூகுள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது’ என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னட மொழி தொடர்பாக கூகுள் தேடுதல் தளத்தில் வெளியான தவறான பதிவுகளையும் கூகுள் நீக்கியது.
வண்டலூரில் சிங்கம் உயிரிழப்பு எதிரொலி
வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா தொற்றால் சிங்கம் உயிரிழந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்குத் தொற்று பரவாமல் இருக்கப் பல முன்னெச்சரிக்கை பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள யானைகளைத் தனித் தனியாக வரவழைத்து உணவு வழங்கப்படுவது உள்ளிட்ட சமூக இடைவெளி வழிமுறைகளைப் பின்பற்றி, யானைகளுக்குத் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. கிருமிநாசினி தெளிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன.
பெட்ரோல்-டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.96.47-க்கும் , டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.90.66-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கொரோனா தொற்று அறிகுறிகளுக்காக மருந்து வாங்குவோரின் விவரங்களை தினமும் அனுப்பி வைக்க மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளுக்காக 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உதவி பேராசிரியர் பணியிடங்களில் சேருவதற்கான செட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 7ஆம் தேதி வரை http://tnsetau.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 12 நகரங்களில் செட் தேர்வு நடைபெறுகிறது. கொரோனா பரவல் குறையாதபட்சத்தில் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு 20,421 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 434 பேர் உயிரிழந்தனர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களே ஊழல் உகார் எழுப்பிய நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, “கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார்” என்று பேட்டி அளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டி: “கோயம்பேடு சந்தை வியாபாரிகளுக்கு 10 நாட்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வியாபாரிகள் தடுப்பூசி போடாவிட்டால் அனுமதி மறுக்கப்படும்” என தெரிவித்தார்.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும், மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறுகிறது.
2019-20 ஆம் ஆண்டுக்கான கல்வி செயல்திறன் தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். பள்ளிக் கல்விக்கான தரவரிசை குறியீட்டில் தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக தரவரிசை பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்ட, ஹிமாச்சல பிரதேச பாஜக எம்.எல்.ஏ நரிந்தர் பிரக்தா திடீர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிச்சயமாக நீட் தேர்வு இல்லாத ஒரு சூழ்நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவாக்குவார் என கோவில்பட்டி அருகே திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது!
கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்களை மேலும் குழப்பமால் தமிழக அரசு பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ததை வரவேற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 847 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது
சென்னை, வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வண்டலூர் பூங்காவில் தற்போது 8 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஆய்வு நடைபெறுகிறது
தமிழ் மொழியை இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி அலுவல் மொழியாக்க தமிழக அரசு உறுதியுடன் பாடுபடும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழி, இன போராட்ட சாதனைகளில் ஒன்று தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க செய்ததாகும்.
அட்டவணை மொழிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் ஆட்சி மற்றும் அலுவல் மொழியாகிட திமுக பாடுபடும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கில் கார், ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு பெற இணையதளத்தில் புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அமைக்கவுள்ள குழு மிகத் துள்ளியமாக மதிப்பெண்களை மதிப்பிட்டு, மாணவர்களின் வருங்காலக் கனவை நினைவாக்க உத்திரவாதம் அளிக்கும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் பாதிப்புகளைவிட அந்நோய்க்கு சிகிச்சை பெறுவோர் மூலம் சேரும் மருத்துவக் கழிவுகளால் ஏற்படும் தீங்கு மிக அதிகம் என்றும் தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அகற்ற கூடுதல் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 89 ஆயிரத்து 232 பேர் குணமடைந்துள்ளனர். 2,677 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.