Live

Tamil News Today : அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு; தூத்துக்குடி மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

Latest Tamil News பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Tamil News Live : கொரோனவை எதிர்த்து நாட்டில் பல்வேறு மையங்களில் பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டாலும், மூன்றாவது அலையிலிருந்து தப்பிக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் என பல்வேறு விதமான சவால்களை சந்தித்த இரண்டாவது அலையின் தொடர்ச்சி, மூன்றாவது அலையிலும் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரபல டிக் டாக் பதிவர்கள் மீது புகார்

டிக் டாக் செயலியைத் தடை செய்த போதிலும் அதை வைத்துப் பிரபலமான சிலரின் பதிவுகள் முகம் சுளிக்க வைப்பதாகவும் இந்தச் சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாகவும் இருக்கிறது என்றுகூறி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் பிரபல காணொளி பதிவர்கள் மீது புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து, ஜிபி முத்து, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 கிலோ வெடிமருந்துடன் தீவிரவாதி கைது

ஜம்மு காஷ்மீர் விமான நிலைய தொழில்நுட்ப பகுதியில் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 5 கிலோ வெடிமருந்துடன் தீவிரவாதி கைது செய்யப்பட்டிருக்கிறார். வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள், பாதுகாப்பு படை வீரர்கள் மேலும் சோதனைசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Live Updates
9:24 (IST) 27 Jun 2021
அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு; தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை கட்சியில் இருந்து நீக்கியதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7:52 (IST) 27 Jun 2021
தமிழ்நாட்டில் இன்று 5,000ஆக குறைந்தது கொரோனா; 91 பேர் பலி

தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 27) ஒரே நாளில் 5,127 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 91 பேர் உயிரிழந்தனர் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 5,000ஆக குறைந்துள்ளது.

6:34 (IST) 27 Jun 2021
உத்திரமேரூர் அருகே ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 44 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5:14 (IST) 27 Jun 2021
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் 3 நாள் நாடு தழுவிய போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நாளை (ஜூன் 28) முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

3:45 (IST) 27 Jun 2021
புதுச்சேரியில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

பாஜக எம்.எல்.ஏக்கள் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன்அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர். என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்

2:57 (IST) 27 Jun 2021
புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழா

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

2:47 (IST) 27 Jun 2021
திமுகவின் 100 நாட்களில் தீர்வு என்பது என்ன ஆனது – சீமான் கேள்வி

தமிழகத்தின் அத்தனை பிரச்சினைகளுக்கும் ஆட்சியமைந்த 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என்றது திமுக , 50 நாட்களில் மக்களின் பிரச்சினைகளை கடிதங்களாய் பெற்ற பெட்டிகளின் சாவி தொலைந்து விட்டதா? அல்லது பெட்டியே தொலைந்துவிட்டதா? என சீமான் விமர்சனம்

2:44 (IST) 27 Jun 2021
பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டாஸ் சட்டம்

பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

1:30 (IST) 27 Jun 2021
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் காற்றின் திசைமாறுபாடு காரணமாக கனமழைக்கு வாய்ப்பு

12:50 (IST) 27 Jun 2021
பவானி தேவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

12:49 (IST) 27 Jun 2021
2021 – 2022-ம் ஆண்டிற்கான பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு

2021 – 2022-ம் ஆண்டிற்கான பாமக சார்பில் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திட்டத்துக்கு ரூ.15,000 கோடி, தஞ்சையில் நெல் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

11:59 (IST) 27 Jun 2021
தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் – மோடி

“உலகத்திலேயே பழமையான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான். மிகவும் தொன்மையான மொழி இந்தியாவில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமை. தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது. தமிழ் மொழி குறித்து எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது” என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

10:30 (IST) 27 Jun 2021
தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து

தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் 9,333 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. மேலும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

10:23 (IST) 27 Jun 2021
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தகுதி

டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் நீச்சல் பிரிவில் பங்கேற்க நெய்வேலியைச் சேர்ந்த வீரர் சஜன் பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

10:18 (IST) 27 Jun 2021
புதுச்சேரியில் 50 நாட்களுக்குப் பிறகு அமைச்சரவை இன்று பதவியேற்பு

புதுச்சேரியில் புதிய ஆட்சி அமைந்து 50 நாட்களுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. 40 ஆண்டுகளுக்குப் பின் பெண் எம்எல்ஏ ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

10:12 (IST) 27 Jun 2021
நாகராஜன் மீது குண்டர் சட்டம்

சென்னையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. தீவிரமாக விசாரிக்க வேண்டுமென காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

10:08 (IST) 27 Jun 2021
கொரோனா பாதிப்பு விகிதம் 2.82%

இந்தியாவில் தற்போது 5,86,403 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 2.82% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

10:06 (IST) 27 Jun 2021
அச்சம் போன பின் பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும்

கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகுதான், பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Web Title: Tamil news today live chennai tamil nadu stalin tiktok fame corona vaccine

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com