Tamil News Live : கொரோனா பரவல் காரணமாக முன்கள மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட சென்னை புறநகர் ரயில் சேவை, இன்று முதல் பொதுமக்களும் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த அனுமதி. பெண் பயணிகள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள் எல்லா நேரமும் ரயில் சேவையைப் பயன்படுத்தலாம். கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே ஆண் பயணிகள் பயன்படுத்த முடியும். மாஸ்க் அணியாமல் இருந்தால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
தமிழகத்திற்கு 3 லட்சத்து 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு கூடுதலாகத் தமிழகத்திற்குத் தடுப்பூசி அனுப்பி வருகிறது. அந்த வரிசையில் பூனேவிலிருந்து தமிழகத்திற்கு இன்று 3 லட்சத்து 12 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவிருக்கின்றன. கடந்த புதன் கிழமையன்று 6 லட்சத்து 72 ஆயிரம் தடுப்பூசிகளும், நேற்று 3 லட்சத்து 21 ஆயிரத்து 300 தடுப்பூசிகளை வந்தடைந்தன.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ.98.88-க்கும், டீசல் விலை மாற்றமின்றி லிட்டர் ரூ.92.89-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் ஜூலை 5-ந் தேதி வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பெறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசை ஒன்றிய என்று அழைத்து வருகிறது. ஏன் அவ்வாறு அழைக்கிறோம் என்பது குறித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு என்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தரப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க சென்னை அமர்வு நீதிமன்றம் மறுத்துள்ள = நிலையில், அவரது உதவியாளர் பரணிதரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிகளிடம் பாலியல் சர்ச்சையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ சாதனங்கள் வாங்குவதற்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு infosys நிறுவனம் ரூபாய் 6 கோடி வழங்கியுள்ளது.
இந்தியாவில் 48 பேருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏடிஎம்களில் நடைபெற்ற தொடர் கொள்ளை தொடர்பாக ஹரியானாவில் கைது செய்யப்பட்டார் அமீர் அர்ஷ்யை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற போலீசார் தரப்பு கோரிக்கையை ஏற்ற பூந்தமல்லி நீதிமன்றம் 5 நாள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உருவெடுத்துள்ள கொரோனா 2வது அலையில் நாடு முழுவதும் இதுவரை 776 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பீகாரில் 115 பேரும், டெல்லியில் 109 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 50 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில், மேலும் 3,24,000 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.
லட்ச தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோட்ட படேல் குறித்து கடுமையாக விமர்சித்த புகாரில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது கேரள உயர்நீதிமன்றம்.
துணை நடிகை அளித்த புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான 33.19 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தற்போது டெல்டா பிளஸ் நோய் தொற்று பரவி வருகிறது. இதில் தமிழகத்தில் இதுவரை 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது சட்டசப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்து்ளளார்.
“தனியார் கல்லூரிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸை பரிசோதனை செய்யும் மையத்தை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
பெண் ஊடகவியலாளர்கள் குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறாக எழுதி வந்த கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு மாதந்தோறும் தர வேண்டிய நீரை தொடர்ந்து தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் வலியுறுத்தல்
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாது அணை பிரச்சனையை எழுப்பிய நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் பணிகளை கர்நாடக அரசு துவங்க கூடாது என்று தமிழக அரசு சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எவ்வித ஆயுதமின்றி போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டோர், வரலாற்று வலியில் இருந்து ஆறுதல் பெற மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூகநீதிக் காவலர்' #vpsingh பிறந்தநாள் இன்று என முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவரின் பிறந்த நாள் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.
சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டோர், வரலாற்று வலியில் இருந்து ஆறுதல் பெற மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூகநீதிக் காவலர்' #vpsingh பிறந்தநாள் இன்று!சமூகநீதி அரசியலில் வெளிச்சம் பாய்ச்சிய அவரை நினைவுகூர்வோம்!#reservationisourright pic.twitter.com/dxBAVxUqza— M.K.Stalin (@mkstalin) June 25, 2021சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்பில் சேர 12ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தை பொன்முடி துவங்கி வைத்து இதனை அறிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டம் துவங்கியது. ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 51, 667 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 1329 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
சென்னை காசிமேடு பகுதியில் துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகிலேயே இந்தியாவில் தான் கருப்பு பூஞ்சையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் இந்த கருப்பு பூஞ்சை தொற்று உருமாற்றம் அடையாது என்று சிறப்பு குழு உறுப்பினர் மோகன் காமேஸ்வரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு குறித்து சிறப்பு குழுவினர், இடைக்கால அறிக்கையை மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்துள்ளனர்.
மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் தமிழ்நாட்டிற்கான ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை வழங்க தாமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை சென்னை, நந்தனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த அமைச்சர் சேகர் பாபு, திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை 044-2833999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.35,480-க்கும், ஒரு கிராம் ரூ.4,435க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 64,527 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 1,329 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.