News In Tamil : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக படு தோல்வியை கண்டது சி.எஸ்.கே. இதன் மூலமாக அடுத்த சுற்றான பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. 3 முறை சாம்பியனான சி.எஸ்.கே அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல், நடையைக் கட்டுவது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை. அடுத்த 3 போட்டிகளில் வென்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைக்காது. இடையில் இரு தொடர்களில் சூதாட்டப் பிரச்னை காரணமாக சி.எஸ்.கே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டு விவகாரத்தில், ஒரு மாதமாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை. இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு மாதம் காலம் அவகாசம் தேவை என்று ஆளுநர் கூறியிருப்பது, தமிழ்நாடு அரசியல் காட்சிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநரின் இந்த பதில் உள் இட ஒதுக்கீடு மசோதாவையே நீர்த்துப் போகச் செய்யும் என்பதனால் நாளை காலை 10 மணி அளவில் ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டனப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று, வடதமிழகப் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான வரையிலான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் புதிய சோதனை ஒன்றை வடிவமைத்துள்ளது ஐ.ஐ.டி. காரக்பூர். உயர்தர மூலக்கூறு ஆய்வில் ஒரு மாற்றத்தை இந்த கருவி கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்த சோதனை முறையின் செயல்திறனை உறுதிப்படுத்தியுள்ளது என்று ஐ.ஐ.ஐ.கே.ஜி.பி. அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியானது. இதில், சுமார் 13,415 இடங்கள் நிரப்பப்பட்டதாக கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
பீகார் தேர்தலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பாஜக தேர்தல் அறிக்கையில் பீகார் மக்களுக்கு இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதி பீகார் தேர்தலில் 11 உறுதிமொழிகளில் முதல் வாக்குறுதியாக இடம்பெற்றுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Latest Tamil News : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், சிஎஸ்கே இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய சி.எஸ்.கே-வை சாம் கர்ரன் தனது அதிரடியான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீட்டார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசமை, மதுரை மாவட்டம் முருகனேரி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளார்.
மருத்துவ உள் ஒதுக்கீடு, கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாய அரசியல் செய்கிறார் என்று முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “அரசுக்கு ஆதரவு அமோகமாக பெருகிவருகிறதே என்று ஸ்டாலினுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை அறிமுகம் செய்து மாணவர்களுக்கு துரோகம் இழைத்த கட்சிகள் திமுக காங்கிரஸ் கட்சிக்கள். மருத்துவ உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை என்று கூற ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகமெங்கும் மனு சாஸ்திரத்தைத் தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். எல்லா பெரியாரிய அம்பேத்கரிய தோழர்களுக்கும் உடன்பாடான உவப்பான ஒரு போராட்டம் தான் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அண்மையில் பாஜகவில் இணைந்த குஷ்பு இன்று தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக வாய்திறக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
பீகாரில் பாகல்பூரில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “தேசியவாதி என அழைத்திடும் பிரதமர் மோடி, 6 ஆண்டில் நாட்டை வலுவிழக்கச் செய்துள்ளார். விவசாயிகள், சிறுகுறு தொழிலாளர்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டார். பொருளாதாரம் நடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
”எஸ்.பி.ஐ. வங்கிப் பணி தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு குறைவான கட்ஆப் மதிப்பெண்கள் வழங்குவதா? மத்திய அரசின் ஆயில் இந்தியா லிமிடெட் பணிகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முன்னேறிய வகுப்பினருக்கு கட்டணமில்லை எனக்கூறுவது சமூகஅநீதி" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என உத்தரவிட்ட போது எதிர்க்கட்சிகள் எதிராக நின்றனர். தேசிய நலனுக்கு எதிராக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அவை எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர். பீகாரை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்ல தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம். தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று பீகார் மக்கள் முடிவு செய்துள்ளனர் என பிரதமர் மோடி பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு
வட தமிழகத்தில் இயல்பாகவும், தென் தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் பருவமழை இருக்கும் என கணிப்பு. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிந்ததும் வடகிழக்கு பருவமழை துவங்கும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.28 முதல் தொடங்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி. அப்போது, "இருட்டிலிருந்து மீண்டு வந்த பீகார் மக்கள் மீண்டும் இருட்டிற்குள் செல்லமாட்டார்கள். இங்கு முந்தைய இருந்த அரசுகள் ஊழல் செய்துகொண்டிருந்தன. நிதிஷ்குமார் ஆட்சி, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போது, இந்தியாவின் வளர்ச்சியில் பீகார் முன்னணியில் உள்ளது. பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராகச் சிலர் வதந்திகளைப் பரப்பி, தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது பலிக்காது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்" என்று தன் உரையில் குறிப்பிட்டிருந்தார் மோடி.
கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களுக்குத் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழகத்தில் புதிதாகத் தொடங்கவுள்ள 9 தொழில் நிறுவனங்களுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
திரையரங்குகள் திறக்கப்படும்போது, அந்தச் சூழலைப் பொறுத்துக் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்றும் நடிகர்களின் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிட முடியாது, இதில் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் விநியோகஸ்தர்கள்தான் கலந்து பேசி நிலையான முடிவு எடுக்கவேண்டும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மண்டல வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகின்றன. நேற்று நடைபெற்ற கொங்கு மண்டல ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, இன்று தென்மண்டல நிர்வாகிகளுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார் ஸ்டாலின்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்துத் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனைத் தொடர்ந்து, "ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா? என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை? கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை? வடிகால்கள் வாரப்படவில்லை? குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள்" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கமல்ஹாசன்.
பாலியல் குற்றம் தொடர்பான வழக்குகளில் தண்டனை வழங்க இனி பாதிக்கப்பட்டவரின் சாட்சியம் போதுமானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களில் மற்றவர்களைப்போல் சந்தேகிக்க வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு குறிப்பிட்டிருக்கிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு, சங்கீதா, திருநங்கைகளால் முழுமையாக இயக்கப்படும், ‘கோவை டிரான்ஸ் கிச்சன்’ என்ற உணவகத்தை திறந்தார். செப்டம்பர் மாதம் indianexpress.com க்கு அளித்த பேட்டியில், தொற்றுநோயால் வேலை இழந்த தனது சமூக உறுப்பினர்களுக்கு உதவ விரும்புவதாக கூறினார். மேலும் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக, இரண்டாவது பிரிவை விரைவில் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights