Tamil News Today : நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், காணொளி மூலம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், புதிய வேளாண் சட்டம் எந்த வகையிலும் விவசாயிகளுக்கு நன்மை அளிக்காது என்றும் இந்தச் சட்டத்தினால் வேளாண் துறை சிதைந்து போகும் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு தொழில்துறை வளர்ச்சி பின்னடைவைத்தான் சந்தித்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுப் பேசினார். தமிழக முதலமைச்சர் தன்னை விவசாயி விவசாயி என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது, விவசாயிகளுக்காகக் கவலைப்படவேண்டும் என்று ஸ்டாலின் விமர்சித்தார்.
சென்னையில், 24-வது நாளாக விலையில் எந்தவிதம் மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டர் ரூ.84.14-க்கும், டீசல் லிட்டர் ரூ.75.95 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா லாக்டவுன் காலகட்டம் என்பதால், சனிக்கிழமை உட்பட வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. மேலும், அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கையில் பாதி ஊழியர்களை மட்டுமே கொண்டு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு கொண்டிருந்தன. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், முழு அளவிலான பணியாளர்கள் அலுவலகங்களில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, இனி 100 சதவிகித ஊழியர்களுடன் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசு தற்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மத்திய கண்காணிப்பு ஆணையம் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்கிறது. ஒவ்வொரு வருடமும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை (அக்டோபர் 31) முன்னிட்டு இந்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது. குடிமக்களின் பங்களிப்புடன் நேர்மை மற்றும் நாணயத் தன்மையை இந்த மாநாடு உறுதி செய்கிறது.
மத்திய புலனாய்வுப் பிரிவு நடத்தும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த தேசிய மாநாட்டை வரும் 27ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
எல்லைப் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்களை கவுரவிக்கும் வகையில் இந்தப் பண்டிகைக் காலத்தில் நாட்டுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அகில இந்திய வானொலியில் இன்று ஒலிபரப்பான பேசும் மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.
I have tested COVID-19 positive. Asymptomatic.Feeling very much alright.Have alerted those who came in contact in recent days.Will continue to work from isolation. Work in RBI will go on normally. I am in touch with all Dy. Govs and other officers through VC and telephone.
— Shaktikanta Das (@DasShaktikanta) October 25, 2020
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று.
மிளகு, இஞ்சி, பழங்கள், கீரை வகைகள், பேரீச்சம்பழம் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் 'சி' நிறைந்த உணவு வகைகள் உட்கொள்வது மிகவும் சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவு மிகவும் அவசியம் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,09,005 ஆக அதிகரித்துள்ளது.
திருமாவளவன் மனு ஸ்மிரிதியில் உள்ள பெண்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறியதற்கு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கே.எஸ்.அழகிரி, “மனு தர்மத்தில் பெண்கள் குறித்து உள்ளதைத்தான் திருமாவளவன் கூறியுள்ளார். திருமாவளவன் பெண்களைப் பற்றி தவறாக எதையும் கூறவில்லை. அவர் கூறியதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டு என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவனின் கருத்தை கண்டித்து வரும் 27-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக பாஜக மகளிரணியினரின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மேலும், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு காலதாமதமின்றி ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று பிற்பகல் 3.15 மணிக்கு சந்திக்கிறார் என்ற தகவல் வெளியாக உள்ளது. இந்த சந்திப்பின்போது, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன்; இப்போது அது பற்றி எதுவும் சொல்ல முடியாது - வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், பாஜகவில் இணைவது தொடர்பாக நானே அறிவிப்பேன்; இப்போது அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ளது. யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள்” என்று கூறினார்.
அக்டோபர் 14ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக, மூச்சுத் திணறல் காரணமாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு பின், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அமைச்சரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு எக்மோ கருவி மூலம் தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
"தமிழக மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் அளவுக்கு பெரும் சிக்கலை மத்திய அரசு மாணவர்கள் மீது திணித்துள்ளது. நீட் தேர்வு ஆணையம், மாநிலவாரி மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல் தாமதப்படுத்துவதால்,தமிழக மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் அல்லலுற்று வருகின்றனர்.
இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தமிழக முதல்வர் தமிழகத்தை வஞ்சித்து பாஜகவுக்குத் துதிபாடிக் கொண்டிருப்பார்?" என்று கேள்விகேட்டு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
மாற்றுக் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரை தங்களுடைய கட்சியில் இணைத்து வருகிறது பாஜக. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விடுபட்டு நடிகை குழ்பு பாஜகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல சர்ச்சைகளுக்குள்ளாகி வந்த நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியில் இணைந்த பிறகு அவருக்கான பொறுப்புகள் வழங்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுபற்றி வனிதா விஜயகுமார் தரப்பில் எந்த ஒரு தகவலும் இல்லை.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் வழங்கும் உள் ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநரைக் கண்டித்து, ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்திய காரணத்திற்காக ஸ்டாலின் உட்பட திமுகவினர் 3500 மீது கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று சென்னையில் மனு தர்ம நூலை எரித்து போராட்டம் நடத்தியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்பட 250 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசு உத்தரவு மீறல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்? என்று பா. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights