/indian-express-tamil/media/media_files/VOJGEV2qyUaSAoEG9aaZ.jpg)
Tamil news today
Tamil News Live Updates 20 September - Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.20) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21 முதல் 25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Sep 20, 2024 21:12 IST
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: ராகுல்காந்தி கவலை
திருப்பதி கோயில் பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் என கூறியுள்ளார்.
-
Sep 20, 2024 20:16 IST
கர்நாடக கோயில்களில் நந்தினி நெய்: அறநிலையத்துறை உத்தரவு
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கோயில்களில் பிரசாதம் மற்றும் விளக்குகளுக்குஅரசின் நந்தினி நெய்யை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்துமாறு சுற்றறிக்கைகர்நாடக அரசு சார்பாக நந்தினி பால்நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக திருப்பதி லட்டுக்கும் கர்நாடகாவின் நந்தினி நெய் அனுப்பப்பட்டு வந்த நிலையில், மாதமாக திருப்பதி தேவஸ்தானம் நிறுத்தியது
-
Sep 20, 2024 19:46 IST
மகாவிஷ்ணுவின் ஜாமின் மனு தள்ளுபடி
மகாவிஷ்ணுவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு. மீண்டும் 14 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு
-
Sep 20, 2024 18:45 IST
வண்டலூரில் யானை தந்தம் திருட்டு: பூங்கா இயக்குனர் விளக்கம்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என்று பூங்கா இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு கிலோ எடை கொண்ட இரண்டு துண்டுகள் மட்டும் ஒப்பந்த பணியாளரால் திருடப்பட்டதாகவும், பிறகு அது மீட்கப்பட்டதாகவும் பூங்கா இயக்குனர் விளக்கம் அளித்தார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைத் தந்தங்களை கணக்கிட்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 2ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
Sep 20, 2024 18:41 IST
குரூப் 4 தேர்வுகளில் பணியிடங்கள் அதிகரிக்கப்பு
குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களை விட, பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 பேருக்கும், தனியார் நிறுவனங்களில் 5.08 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
Sep 20, 2024 18:37 IST
மீண்டும் கொடியேற்றிய திருமா
மதுரையில் காவல்துறை அகற்றிய கொடியை மீண்டும் ஏற்றி வைத்தார் விசிக தலைவர் திருமாவளவன்
"நமது கட்சி கொடியை ஏற்றுவது கூட பெரிய யுத்தமாக இருக்கிறது. அறவழியில் போராடி அங்குலம் அங்குலமாக விசிக முன்னேறி நிற்கிறது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
Sep 20, 2024 18:35 IST
வங்கி கணக்குகள் முடக்கம் - உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவு
சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு முன், விதிகளை வகுத்து அதை பின்பற்ற கோரிய வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனை நடந்ததாக வங்கி கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னையை சேர்ந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சைபர் குற்றங்களில் வங்கி கணக்குகளை முடக்கும் முன், விதிகளை வகுத்து அதை அனைத்து மாநில காவல்துறையும் பின்பற்ற உத்தரவிட கோரி மனு அளித்தார்.
-
Sep 20, 2024 18:33 IST
திருப்பதி லட்டு சர்ச்சை - சீமான் கருத்து
"திருப்பதி லட்டு சாப்பிட்ட அனைவரும் உயிரோடு தான் இருக்கிறார்கள். இனி இது போல் நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம். நாட்டு மக்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன" என்று நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
Sep 20, 2024 17:30 IST
திருப்பதி லட்டு சர்ச்சை - ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு
திருப்பதி கோயில் பிரசாத லட்டில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்திருக்கும் நிலையில், லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பட்டு வாரிய செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Sep 20, 2024 17:03 IST
`கூல் லிப்' வழக்கு - நீதிமன்றம் வேதனை
"ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்றதாக இருக்கும் "கூலிப்" வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும் என தெரியவில்லை?. தெரிந்தே தவறு செய்பவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும், ஆனால் குழந்தைகளை பாதுகாப்பது நமது கடமை.
கூல் லிப்' போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் அதற்கு பழகிவிடுவதால், அதைவிட மோசமான போதை பொருட்களை தேடிச் செல்லும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு பள்ளி வளாகத்திலும் போதைப்பொருள் தொடர்பான பொருட்கள் கிடக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
Sep 20, 2024 16:15 IST
திருப்பதி லட்டு சர்ச்சை: ஆந்திர மாநில அரசிடம் அறிக்கை கேட்டது மத்திய அரசு - ஜே.பி. நட்டா
திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக, மத்திய அரச ஆந்திர மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. உணவு பாதுகாப்பு தரத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
-
Sep 20, 2024 16:13 IST
திருப்பதி லட்டு சர்ச்சை: சோயா பீன்ஸ் எண்ணெயில் கலப்படம் - தேவஸ்தான அதிகாரி விளக்கம்
“சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயில் கலப்படம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சட்டரீதியான நடவடிக்கைகள் நடந்து வருகிறது, எதிர்காலத்தில் இதுபோல் நடக்கக்கூடாது என்பதே விருப்பம். பரிசோதனைக்காக நெய்யை குஜராத்தில் உள்ள என்.டி.பி ஆய்வகத்திற்கு அனுப்பினோம். நெய்யில் தரம் இல்லை, 100% பதிலாக 20% மட்டுமே தரம் உள்ளது கண்டறியப்பட்டது. தரமற்ற நெய் விநியோகம் செய்த ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் கூறினார்.
-
Sep 20, 2024 16:04 IST
கூல் லிப் வேறு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானது? ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி
கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக் கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி, மத்திய அரசு மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். “ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப் பொருளாக அறிவிக்கப்படும் கூல் லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள், வேறொரு மாநிலத்தில் எப்படி பாதுகாப்பானதாகும்? தெரிந்தே தவறு செய்பவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும்” என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
Sep 20, 2024 15:38 IST
ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை திசை திருப்பவே எங்கள் மீது குற்றச்சாட்டு - ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதனை திசை திருப்ப எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சந்திரபாயு நாயுடு அரசு பொய் வழக்குகளை பதிவு செய்கிறது என்று திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
Sep 20, 2024 14:59 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் பா.ஜ.க முன்னாள் நிர்வாகி அஞ்சலை, அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி மலர்கொடி உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
Sep 20, 2024 14:49 IST
லட்டு விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை அளிக்க சந்திரபாபு நாயுடு உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதம் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இன்று மாலைக்குள் முழுமையான அறிக்கை அளிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சந்திரபாபு நாயுடு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
-
Sep 20, 2024 14:27 IST
கடலூரில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி
கடலூரில் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடலூர் உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்ததன் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைலாஷ் குமார் தலைமையிலான குழு சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு செய்தனர். உணவகத்தின் சமையல் கூடத்தில் இருந்து காலாவதியான மசாலா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.
-
Sep 20, 2024 14:20 IST
வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் - அமைச்சர் சாமிநாதன்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன்: “பெரும்பாலான வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகையை மாற்றாமல் உள்ளன; நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் மாற்றும் சூழலை விரைவில் ஏற்படுத்துவோம்” என்று கூறினார்.
-
Sep 20, 2024 14:18 IST
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கோரி மனு; தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கில் செப்டம்பர் 24-ம் தேதிக்குள் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயதசமியையொட்டி, அக்டோபர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் மனு தாக்கல் செய்திருந்தது.
-
Sep 20, 2024 14:01 IST
சந்திரபாபு நாயுடுவின் கருத்துகள், இந்துத்துவா உணர்வுகளை புண்படுத்தியுள்ளது - ஆந்திர பா.ஜ.க.
சந்திரபாபு நாயுடுவின் கருத்துகள், இந்துத்துவா உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது இந்துக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என ஆந்திர பா.ஜ.க தெரிவித்துள்ளது. மத்தியில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க, லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து வருவது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
Sep 20, 2024 13:46 IST
திருப்பதி பிரசாத விவகாரம் ஒரு சதித்திட்டம் - ராமஜென்மபூமி தலைமை பூசாரி
திருப்பதி லட்டு, அயோத்தி ராமர் கோயில் நிகழ்வின்போது விநியோகிக்கப்பட்டதால் புனிதம் கெட்டுள்ளது என வழக்கறிஞர் வினீத் கூறியுள்ள நிலையில், திருப்பதி பிரசாத விவகாரம் ஒரு சதித்திட்டம் என ராமஜென்மபூமி தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் கூறியுள்ளார்
-
Sep 20, 2024 13:20 IST
வரும் 21ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வரும் 21ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 23ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் கணித்துள்ளது
-
Sep 20, 2024 13:16 IST
ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் செய்ய பயன்படுத்தப்பட்ட பிரசாதங்களிலும் கலப்படம் - முன்னாள் தலைமை அர்ச்சகர்
ஏழுமலையானுக்கு நெய்வேத்தியம் செய்ய பயன்படுத்தப்பட்ட பிரசாதங்களிலும் கலப்படம் இருந்தது. ஐந்தாண்டு காலம் கலப்பட நெய் மூலமே நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்யப்பட்டுள்ளது என முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமணா தெரிவித்துள்ளார்
-
Sep 20, 2024 13:00 IST
வேலூர் அரசு பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு நடப்பது போல ரீல்ஸ்; வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வேலூர் அரசு பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு நடப்பது போல ரீல்ஸ் விவகாரத்தில் அரசு பள்ளி வகுப்பாசிரியர் சாமூண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
-
Sep 20, 2024 12:52 IST
புதுக்கோட்டை கோட்டாட்சியர் சென்ற அரசு கார் - டூவிலர் மோதி விபத்து; இருவர் மரணம்
புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் சென்ற அரசு கார் - இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கார் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அபிராமத்தில் இருந்து வந்த இரு சக்கர வாகனம், சாலையின் நடுவே திடீரென திரும்பியதால், எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது
-
Sep 20, 2024 12:25 IST
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஸ்டாலின் ஆலோசனை
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை நதிகள் சீரமைப்பு தொடர்பாகவும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்
-
Sep 20, 2024 12:08 IST
ஹேக் செய்யப்பட்டது உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம்
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் அடையாளம் தெரியாத நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒளிப்பரப்படும் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிப்பரப்பாகி வருகிறது
-
Sep 20, 2024 11:45 IST
திருப்பதி லட்டு பிரசாத விவகாரம்; பவன் கல்யாண் வேதனை
திருப்பதி லட்டு பிரசாத விவகாரம் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், எந்த வகையிலும் சனாதன தர்மம் அவமதிக்கப்படுவதை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொணடார். இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளித்த பவன் கல்யாண், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இதுபோன்ற பிரச்சனைகளை ஆய்வு செய்ய, தேசிய அளவில் சனாதன தர்ம ரக்ஷணா வாரியம் அமைப்பதற்கான நேரம் இது என்றும் குறிப்பிட்டார்.
-
Sep 20, 2024 11:33 IST
அமைச்சர் ரகுபதி பேட்டி
தமிழ்நாட்டில் பாழடைந்து, மூடப்பட்டுள்ள சிறைச்சாலைகளை புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வருவோம்.
எந்தெந்த சிறைகள் மிகவும் மோசமான, பழுதடைந்த நிலையில் சிறைவாசிகளை வைக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறதோ. அவற்றை புதுப்பித்து சிறைவாசிகள் தங்குவதற்கான வசதிகளை உருவாக்கி தருவோம்”
- சென்னையில் அமைச்சர் ரகுபதி பேட்டி
-
Sep 20, 2024 11:23 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக குற்ற்ம்சாட்டி ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச்செயலாளர் கடிதம்
-
Sep 20, 2024 10:49 IST
மீண்டும் எகிறிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,885க்கும் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55,080க்கும் விற்பனை
-
Sep 20, 2024 10:23 IST
விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி த.வெ.க. முதல் மாநாடு
அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் தவெகவின் முதல் மாநாடு நடைபெறும்
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவிப்பு
-
Sep 20, 2024 09:43 IST
பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து
விருதுநகர் மாவட்டம் குகன்பாறையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்ட லட்சுமி பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவு.
-
Sep 20, 2024 09:14 IST
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகியுள்ள தேவநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் ஆனந்த் ஆகிய 3 பேரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை செய்து வருகின்றனர்.
மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி இருந்தது.
-
Sep 20, 2024 08:42 IST
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் வாங்க குவிந்த கூட்டம்
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
டெல்லி சாகேட்டில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
#WATCH | Long queues seen outside the Apple store in Delhi's Saket
— ANI (@ANI) September 20, 2024
Apple started its iPhone 16 series sale in India today. pic.twitter.com/hBboHFic9o -
Sep 20, 2024 07:59 IST
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இன்று முதல் இந்தியாவில் விற்பனை
ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
மகாராஷ்டிரா: இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரான மும்பை BKC-யில் உள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே திரண்ட கூட்டம்
#WATCH | Maharashtra: A huge crowd gathered outside Apple store at Mumbai's BKC - India's first Apple store.
— ANI (@ANI) September 20, 2024
Apple's iPhone 16 series to go on sale in India from today. pic.twitter.com/RbmfFrR4pI -
Sep 20, 2024 07:39 IST
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு இன்று தொடக்கம்
ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது.
சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் 650 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
-
Sep 20, 2024 07:39 IST
காலாண்டுத் தோ்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தோ்வு வெள்ளிக்கிழமை (செப்.20) முதல் நடைபெறவுள்ளது.
செப்.28 முதல் அக்.2-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என பள்ளிக் கல்வியின் ஆண்டு நாள்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.