/tamil-ie/media/media_files/uploads/2022/08/Prag.jpg)
Tamil News Headlines LIVE
செஸ் ஒலிம்பியாட் 10ம் சுற்று ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தி தமிழகத்தின் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் 9ம் சுற்றில், அஜர்பைஜான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரனவ்
தமிழகத்தைச் சேர்ந்த16 வயது இளம் செஸ் வீரர் பிரனவ் வெங்கடேஷ் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று உள்ளார். இதன்மூலம், இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டர், தமிழகத்தின் 27வது கிராண்ட் மாஸ்டர் என்ற அந்தஸ்தை பிரனவ் வெங்கடேஷ் பெற்று உள்ளார்.
இந்திய அணி அசத்தல் வெற்றி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. 189 ரன்கள் இலக்குடன் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 15 ஓவர் முடிவில் 100 ரன்கள் எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாத்வ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4க்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:08 (IST) 08 Aug 2022ஆசிய கோப்பை கிரிக்கெட்; இந்திய அணி அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்
- 21:53 (IST) 08 Aug 2022கலைஞர் குறித்து புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் - துரைமுருகன்
கலைஞர் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் என்னிடம் பகிர்ந்த அந்தரங்க விஷயங்களை எல்லாம் எழுத இயலாது. 53 ஆண்டுகள் அவரோடு பழகி இருக்கிறேன், என் அளவிற்கு அவரோடு நெருக்கமாக பழகியவர்கள் யாரும் இல்லை என கலைஞர் கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சியில் துரைமுருகன் பேச்சு
- 20:31 (IST) 08 Aug 2022ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் முன்ஜாமின் கோரி மனு
பெரியார் சிலை குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக பதிவான வழக்கில், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
- 20:30 (IST) 08 Aug 2022ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் முன்ஜாமின் கோரி மனு
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், பெரியார் சிலை குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக பதிவான வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- 20:19 (IST) 08 Aug 2022மேட்டூர் அணையில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
- 20:03 (IST) 08 Aug 2022‘செஸ் ஒலிம்பியாட்’ இந்திய ஓபன் 'பி' அணி வீரர் பிரக்ஞானந்தா வெற்றி
இன்றைய ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவை 77வது நகர்வில் வீழ்த்தினார்.
- 19:33 (IST) 08 Aug 2022மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு
மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
- 19:19 (IST) 08 Aug 2022கள்ளக் குறிச்சி கலவரம்- நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் பள்ளி பேருந்துக்கு தீ வைத்தல் உள்ளிட்ட கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 22ஆம் தேதிவரை நீதிமன்றம் நீடித்துள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில், தனியார் புலனாய்வுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 19:07 (IST) 08 Aug 2022காமன்வெல்த்தில் வெள்ளி வென்றது இந்திய ஹாக்கி அணி
காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 7-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
- 18:53 (IST) 08 Aug 2022தங்கம் வென்றார் சரத் கமல்
காமன்வெல்த் ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாடு வீரர் சரத் கமல் தங்கம் வென்று அசத்தினார்.
இவர் தன்னை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச் ஃபோர்ட்டை 4-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
- 18:46 (IST) 08 Aug 2022மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்; ரூ.698 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு
அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்தது. மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- 18:33 (IST) 08 Aug 2022காமன்வெல்த்தில் தங்கம் வென்ற இந்திய ஜோடி
பிர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் காமன்வெல்த்தில் ஆடவருக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றனர்.
இவர்கள் இங்கிலாந்தின் வான் பென், ஷான் வெண்டி இணையை 21-12, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வென்றனர்.
- 18:04 (IST) 08 Aug 2022காமன்வெல்த்; பதக்க பட்டியலில் 4ஆம் இடத்தில் இந்தியா!
காமன்வெல்த் போட்டிகளில் பதக்க பட்டியலில் இந்தியா 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா இதுவரை 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலத்துடன் புள்ளி பட்டியலில் 4ஆம் இடம் வகிக்கிறது.
66 தங்கத்துடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 56 தங்கத்துடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும், 26 தங்கத்துடன் கனடா 3ஆம் இடத்திலும் உள்ளது.
- 17:51 (IST) 08 Aug 2022காமன்வெல்த்; தங்கம் வென்றார் லக்ஷயா சென்
காமன்வெல்த் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் தங்கம் வென்று அசத்தினார்.
இவர் தன்னை எதிர்த்து விளையாடிய மலேசிய வீரர் சே யங்கை 19-21, 21-19, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
- 17:43 (IST) 08 Aug 2022வெண்கலம் வென்றார் சத்யன்
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்.
இவர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் டிரிங் ஹாவை 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
- 17:42 (IST) 08 Aug 2022வீடுதோறும் தேசியக் கொடி- ஆளுநர் ஆர்.என். ரவி
நாட்டின் 75ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை அனைத்து இல்லங்களிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 17:40 (IST) 08 Aug 2022வெண்கலம் வென்றார் சத்யன்
காமன்வெல்த் டேபிஸ் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்.
இவர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் டிரிங் ஹாவை 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
- 17:39 (IST) 08 Aug 2022வெண்கலம் வென்றார் சத்யன்
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்.
இவர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் டிரிங் ஹாவை 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
- 17:10 (IST) 08 Aug 2022மின்சார சட்ட திருத்த மசோதா தமிழக அரசு எதிர்ப்பு
மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “இந்த மசோதா ஏழைகளை பாதிக்கும் என்பதால் எதிர்க்கிறோம்” என்றார்.
மேலும், 'இது 100 யூனிட் இலவச மின்சார பயனாளிகளையும் பாதிக்கும்' என்றார்.
- 16:31 (IST) 08 Aug 2022வழிகாட்டி பலகை மோதி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரணம்
சென்னை, ஆலந்தூரில் பேருந்து மோதி வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₨3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 16:30 (IST) 08 Aug 2022தஞ்சை சாஸ்திரா பல்கலை. நீர்நிலையில் அமைந்துள்ளதா? - உயர்நீதிமன்றம் கேள்வி
தஞ்சை சாஸ்திரா பல்கலை. நீர்நிலையில் அமைந்துள்ளதால் மாற்று இடம் வழங்க அனுமதிக்கும் அரசாணை சாஸ்திராவுக்கு பொருந்தாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், அப்பல்கலைகழகம் நீர்நிலையில் அமைந்துள்ளதா? என்பத குறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுஃ
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றச் செல்லும் போது முதலில் சாஸ்திரா மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
- 15:58 (IST) 08 Aug 2022காமன்வெல்த் விளையாட்டு : பதக்க பட்டியலில் இந்தியா 4வது இடம்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் நிலையில், பதக்க பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியது. தற்போதுவரை இந்தியா 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என 56 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
- 15:55 (IST) 08 Aug 2022காமன்வெல்த் பேட்மிண்டன் : தங்கம் வென்றார் பி.வி.சிந்து
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் நிலையில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில்இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
- 14:48 (IST) 08 Aug 2022புதுச்சேரியில் நாளை விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரியில் மொஹரம் பண்டிகையையொட்டி நாளை அனைத்து அரசு அலுவலங்களுக்கும் விடுமுறை. விடுமுறையை ஈடுசெய்ய வரும் 20ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என புதுச்சேரி அரசு அறிவிப்பு
- 14:31 (IST) 08 Aug 2022சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!
சென்னையில் நாளை மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு.
மதியம் 1 மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
- 13:55 (IST) 08 Aug 2022சஞ்சய் ராவத்திற்கு 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்.
நில மோசடி வழக்கில் மும்பை நீதிமன்றம் உத்தரவு
- 13:22 (IST) 08 Aug 2022மின்சார திருத்த சட்டம் -போராட்டம் அறிவிப்பு
- 13:20 (IST) 08 Aug 2022பணிநியமன ஆணையை வழங்கினார் முதல்வர்
டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.
- 13:19 (IST) 08 Aug 2022நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
இமாச்சலப் பிரதேசம்: பாவ்நகர் அருகே திடீரென நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு
- 13:19 (IST) 08 Aug 2022ஆளுநருடன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு- ரஜினி
அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை - நடிகர் ரஜினி மரியாதை நிமித்தமாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் ரஜினி பேட்டி
- 12:01 (IST) 08 Aug 2022"எத்தனை பள்ளிகளில் மைதானம் உள்ளது?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளுடன் உள்ளன? தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- 12:00 (IST) 08 Aug 2022வெங்கையா நாயுடுவுக்கு பிரிவு உபசார விழா
மாநிலங்களவையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பிரிவு உபசார விழா. மாநிலங்களவை எம்.பி.க்கள் சார்பில் நடைபெறும் பிரிவு உபசார விழாவில் பிரதமர் மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
- 11:17 (IST) 08 Aug 2022மதுரையில் கைதி தற்கொலை முயற்சி மதுரை
மத்திய சிறையில் 7 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதி தற்கொலை முயற்சி - போலீசார் விசாரணை
- 10:42 (IST) 08 Aug 2022காவலர் குடியிருப்புக்கள் திறப்பு
சென்னை ஆயிரம் விளக்கில் ரூ.186.51 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1,036 காவலர்கள் குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- 10:03 (IST) 08 Aug 2022மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர் வரத்து 1.30 லட்சம் கன அடியில் இருந்து 1.40 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
- 09:48 (IST) 08 Aug 202255 பதக்கங்கள், 5வது இடத்தில் இந்தியா
பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது.
- 09:48 (IST) 08 Aug 2022281 சவரன் நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி அருகே, புக்கிரவாரி புதூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 281 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுகுறித்து மாவட்ட எஸ்பி தலைமையிலான குழு சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
- 09:11 (IST) 08 Aug 2022கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசல்
ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் உள்ள காட்டு ஷியாம்ஜி கோவில் திருவிழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
- 08:46 (IST) 08 Aug 2022பவானிசாகர் அணை நீர்மட்டம்
பவானி சாகர் அணை நீர்மட்டம் 102 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 12,200 கன அடியாக இருக்கும் நிலையில், அணையிலிருந்து 12,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
- 08:10 (IST) 08 Aug 2022காமன்வெல்த்.. இந்தியாவுக்கு தங்கம்
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சரத்கமல் அணி, மலேசியா அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி, தங்கம் வென்றது.
காமன்வெல்த் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில், 162 ரன்கள் இழக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 152 ரன்கள் எடுத்தது. 9 ரன்கள் வித்தியாசத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணி வெள்ளி வென்றது.
- 08:10 (IST) 08 Aug 2022அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 08:09 (IST) 08 Aug 2022ரயில் 3 மணி நேரம் தாமதம்
நெல்லை, மதுரை, திண்டுக்கல், கரூர் வழியாக மும்பைக்கு இயக்கப்படும் ரயில் இன்று நாகர்கோவிலில் இருந்து காலை 9 மணிக்கு மூன்று மணி நேரம் காலதாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.