புதுச்சேரியில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றி தொடங்கி வைக்கிறார்.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
இந்திய அணி அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், அஸ்வின், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் பி அணியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 10வது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் சிந்த்ரோவுக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா தனது 77வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
காமன்வெல்த் 2022
பர்மிங்ஹாம் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் கடைசி நாளில் இந்தியா 4 தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. இதன்மூலம், மொத்தம் 22 தங்கம் உள்பட 61 பதக்கங்களுடன் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா 67 தங்கத்துடன் முதலிடத்தையும், போட்டியை நடத்திய இங்கிலாந்து 57 தங்கத்துடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம்
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். கிராம சபை கூட்டத்தின் அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:05 (IST) 09 Aug 2022தமிழ்நாட்டில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- 21:45 (IST) 09 Aug 2022கியூபிக்களால் செய்யப்பட்ட கருணாநிதி படம்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கியூபிக்களால் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது
- 20:55 (IST) 09 Aug 2022செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா; இந்திய வீரர் குகேஷுக்கு தங்க பதக்கம்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், ஓபன் பிரிவில், முதல் போர்டில் விளையாடிய இந்திய வீரர் குகேஷுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது
- 20:39 (IST) 09 Aug 2022பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாள் - அமைச்சர் மெய்யநாதன்
கடந்த 2 வாரங்கள் தமிழகத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாட்களாக இருக்கும். விளையாட்டு வீரர்களாக வந்து தமிழ்நாட்டின் உறுப்பினர்களாக மாறியுள்ளீர்கள். செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
- 20:20 (IST) 09 Aug 2022செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா – விருது வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், சிறந்த உடை அணிந்த அணிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்
- 20:10 (IST) 09 Aug 2022இந்தியாவின் செஸ் வீரராக நிற்பதில் பெருமை அடைகிறேன் - விஸ்வநாதன் ஆனந்த்
இந்தியாவின் செஸ் வீரராக இங்கு நிற்பதில் பெருமை அடைகிறேன். செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தியதற்கு முதல்வருக்கு நன்றி என விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்
- 19:04 (IST) 09 Aug 2022செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா; தமிழகத்தின் நூற்றாண்டு பழமையான விளையாட்டுகள் கலைநிகழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா; தமிழகத்தின் நூற்றாண்டு விழாவில், பழமையான விளையாட்டுகள் கலைநிகழ்ச்சி மூலம் காட்சிப் பதிவாக செய்யப்பட்டது.
- 18:54 (IST) 09 Aug 2022செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் டிரம்ஸ் வாசித்து அசத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. நிறைவு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.
- 18:21 (IST) 09 Aug 2022செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா
சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா சுட்டிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இவ்விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
- 18:19 (IST) 09 Aug 2022ஆகஸ்ட் 31 கோப்ரா வெளியீடு
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது.
- 17:38 (IST) 09 Aug 2022பெரும்பான்மையை நிரூபிப்பாரா நிதிஷ் குமார்?
பிகாரில் ஆட்சியமைக்க 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
இதில் அதிகப்பட்சமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு 79 உறுப்பினர்களும், பாரதிய ஜனதா கட்சிக்கு 77 உறுப்பினர்களும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 உறுப்பினர்களும், காங்கிரஸ்; மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு முறையே 19, 15 உறுப்பினர்களும் இதர கட்சி உறுப்பினர்கள் 7 பேரும் உள்ளனர்.
இந்த நிலையில் நிதிஷ் குமாருக்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்டோரின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
நிதிஷ் குமார் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ்வுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.
- 17:24 (IST) 09 Aug 2022பதவி விலகிய ஒரு மணி நேரத்தில் மீண்டும் முதல் அமைச்சரான நிதிஷ் குமார்!
பிகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொண்டு ஐக்கிய ஐனதா தளத்தின் தலைவரும் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக தேர்வானார். அவருக்கு இடதுசாரிகள் உள்பட 160 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
- 17:04 (IST) 09 Aug 2022செஸ் ஒலிம்பியாட்; தங்கம் வென்றார் குகேஷ்
சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்றுவரும் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் குகேஷ் தங்கம் வென்றார்.
- 16:52 (IST) 09 Aug 2022இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்வு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக முத்தரசன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருப்பூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பாதுகாப்பு மற்றும் மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 16:41 (IST) 09 Aug 2022மதுரை ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
மதுரை வைகை ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர். ஆற்று சுழலில் சிக்கி மாயமான 4 பேரை தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
சடலமாக மீட்கப்பட்ட இருவர், மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகியோர் ஆவார்கள்.
- 16:35 (IST) 09 Aug 2022மதுரை ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
மதுரை வைகை ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர். ஆற்று சுழலில் சிக்கி மாயமான 4 பேரை தேடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
சடலமாக மீட்கப்பட்ட இருவர், மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தைச் சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகியோர் ஆவார்கள்.
- 16:27 (IST) 09 Aug 2022செஸ் ஒலிம்பியாட் : மகளிர் பிரிவில் உக்ரைன் அணிக்கு தங்கம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப் பதக்கத்தையும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது. இந்திய மகளிர் ஏ அணி 17 புள்ளிகளுடன் வெண்கலம் வென்று அசத்தல்
- 16:26 (IST) 09 Aug 2022செஸ் ஒலிம்பியாட் : மகளிர் பிரிவில் உக்ரைன் அணிக்கு தங்கம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப் பதக்கத்தையும், ஜார்ஜியா அணி வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியது. இந்திய மகளிர் ஏ அணி 17 புள்ளிகளுடன் வெண்கலம் வென்று அசத்தல்
- 16:25 (IST) 09 Aug 2022முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முன்னாள் எம்.பி. மாயத்தேவர் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில். முதன் முதலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாயத்தேவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
- 16:20 (IST) 09 Aug 2022ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய நிதிஷ் குமார்
ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய பின் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே அனைத்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஒருமித்த கருத்து என்று கூறியுள்ளார்
- 14:55 (IST) 09 Aug 2022சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு... 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ள வானிலை மையம் தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
- 14:53 (IST) 09 Aug 2022செஸ் ஒலிம்பியாட் : தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் ஏ அணி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அமெரிக்கா உடனான ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி 1-3 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது
- 14:51 (IST) 09 Aug 2022சென்னை, புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- 14:23 (IST) 09 Aug 2022பிரதமருடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடி உடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். புதுச்சேரியில் ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது
- 14:10 (IST) 09 Aug 2022கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம்
முல்லை பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கடிதம்
- 14:05 (IST) 09 Aug 2022பீகார் ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் நிதிஷ் குமார்!
பீகார் ஆளுநரை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் நிதிஷ் குமார்.
ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக தகவல்.
பாஜக உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநரை சந்திக்கிறார்.
- 13:29 (IST) 09 Aug 2022செஸ் ஒலிம்பியாட்: ப்ரீத்திஷா போடா, திவ்யா தேஷ்முக் வெற்றி!
செஸ் ஒலிம்பியாட் இறுதி சுற்று - இந்திய மகளிர் சி அணியில் ப்ரீத்திஷா போடா வெற்றி. கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி ப்ரீத்திஷா போடா வெற்றி.
அதேபோல் இந்திய மகளிர் பி அணியில் திவ்யா தேஷ்முக் வெற்றி. ஸ்லோவாகியா நாட்டு வீராங்கனையை வீழ்த்தினார் திவ்யா தேஷ்முக்
- 12:46 (IST) 09 Aug 2022ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.60 லட்சம் கன அடியாக உயர்வு.
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகளின் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 31 நாட்களாக தடை நீடிக்கிறது.
- 12:43 (IST) 09 Aug 202213 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் விபத்து: தந்தை கைது
கடலூர்: 13 வயது சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் மோதி 3 வயது சிறுமி உயிரிழப்பு. விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு வாகனம் வழங்கிய தந்தை கைது.
- 12:43 (IST) 09 Aug 2022சாட்சி கூற பொதுமக்கள் முன்வருவதில்லை: நீதிமன்றம் வேதனை!
குற்ற வழக்குளில் புலன் விசாரணைக்கு சாட்சிகளாக பொதுமக்கள் முன்வருவதில்லை.
பொதுநலனில் ஆர்வம் கொண்ட சிலர் மட்டுமே சாட்சியளிக்கின்றனர். 2006ம் ஆண்டில் மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நீதிமன்றம் வேதனை.
- 12:00 (IST) 09 Aug 2022ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று முக்கிய ஆலோசனை
சென்னை, ஆழ்வார்பேட்டையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை.
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் ஆலோசனை.
சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் சென்னைக்கு வருகை
- 11:41 (IST) 09 Aug 2022தேசிய கட்சி அந்தஸ்து பெரும் ஆம் ஆத்மி?
கோவா மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக ஆம் ஆத்மியை அறிவித்தது தலைமை தேர்தல் ஆணையம்.
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து கோவாவிலும் மாநில கட்சி அந்தஸ்து. மேலும் ஒரு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்டால் ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து பெறும் என்று கூறப்படுகிறது.
- 11:28 (IST) 09 Aug 2022மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று விரிவாக்கம்!
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம்
பாஜக சார்பில் 9 பேரும் சிவசேனா சார்பில் 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
- 11:01 (IST) 09 Aug 2022சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில், 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.
- 10:40 (IST) 09 Aug 2022தங்கம் விலை அதிரடி உயர்வு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரித்து ரூ.39,040 ஆகவும், ஒரு கிராம் தங்கம் 4880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1.50 அதிகரித்து ரூ. 64.50 காசுகளாக உள்ளது.
- 09:59 (IST) 09 Aug 2022இந்தியாவில் மேலும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 16,412 பேர் வைரஸ் பாதிப்பில் குணமடைந்தனர். நாடு முழுவதும் 1.31 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர்.
- 09:32 (IST) 09 Aug 2022சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை
சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இன்று முதல் வரும் 12ம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
- 08:51 (IST) 09 Aug 2022மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.44 லட்சம் கன அடியாக இருக்கும் நிலையில், அணையி இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் - 120.05 அடி, நீர் இருப்பு - 95.55 டிஎம்சியாகவும் உள்ளது.
- 08:10 (IST) 09 Aug 2022இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. இதில், மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கலந்து கொள்கிறார். விழாவில், 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
- 08:10 (IST) 09 Aug 2022மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் மாணவிகள் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்க ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.